Monday, December 31, 2007

சிங்கையில் புத்தாண்டு

இன்னும் சில மணித்துளிகளில் பிறக்கப்போகும் புத்தாண்டுக்காக மெரினா பேயில் தயாராக இருக்கும் மக்களும் அவர்கள் பேட்டியும்.

சிங்கை அழகையும் கண்டுகளியுங்கள் மக்களே.இன்னும் இங்கு வராதவர்களுக்கு இது கொஞ்சம் ஆறுதல்.நன்றி:வசந்தம் சென்ரல்.

ஜீவன் பேட்டி

சற்று முன் தொலைக்காட்சியில் இங்கு காண்பிக்கப்பட்டது,அது உங்கள் பார்வைக்காக.

வளர்ந்து வரும் இளம் கலைஞருக்கு நம் வாழ்த்துக்கள்.நன்றி:வசந்தம் சென்ரல்.

ஐம்பது வெள்ளி லஞ்சம்

இதன் தலைப்பை "இது தான்டா சிங்கப்பூர்" என்று வைக்கலாம் என்று நினைத்தேன் பிறகு மாற்றிவிட்டேன்.

கீழே படத்தில் உள்ள மாதிரி செய்தி அடிக்கடி வராவிட்டாலும் அவ்வப்போது தலைக்காட்டும் அதுவும் நேர்மையான போலீஸ் அதிகாரியை உற்சாகப்படுத்துவதற்காக மட்டும் அல்லாமல் இனி கொடுக்க நினைக்கும் ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கும்.

இந்த ஓட்டுனர் கொடுக்க நினைத்த 50 வெள்ளி அவரை ஆறு வாரம் சிறையில் போடவைத்துவிட்டது.

அப்படி என்றால் எல்லா அதிகாரியும் புணிதரா? என்றால் இல்லை என்று தான் பதில் வரும் ஏனென்றால் அங்கொன்றும் இங்கொன்றுமாம் தவறு செய்து மாட்டிக்கொண்டவர்களை பற்றியும் அவ்வப்போது செய்தி வரும்.அது எதுக்கு நமக்கு?? நல்லதை பார்ப்போம்/பாராட்டுவோம்.

நன்றி: சனிக்கிழமை டுடே.

Saturday, December 29, 2007

மிமிக்ரி

இந்த அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் அவ்வப்போது சிலரின் படைப்புகள் அட போட வைக்கும் அந்த வரிசையில் இவரை பாருங்கள்.

தன் குரலை பல நடிகர்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி அவர்கள் உடலசைப்பையும் வைத்து அசத்துகிறார்.

திரு.சத்தியராஜ்;திரு.உசிலை மணி:திரு.பாக்கியராஜ்:
நன்றி: சன் தொலைக்காட்சி.

பட்டம் விடும் கப்பல்

இயற்கையின் உதவி நமக்கு பல விதங்களில் தேவைப்படுகிறது.ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு போக மின்சாரம்,எண்ணை & காற்று போன்றவைகளை உபயோகப்படுத்துகிறோம்.

பழைய காலத்தில் பல் வேறு இடங்களை கடக்க காற்றை உபயோகிக்கும் பாய்மரக்கப்பல்களை உபயோகப்படுத்தியிருக்கோம்.கீழே உள்ள சலனப்படத்தை பார்க்கவும்,பட்டத்தை உபயோகித்து ஓரளவு எண்ணை உபயோகிப்பதை குறைக்க முயன்றிருக்கிறார்கள்.


நன்றி: வசந்தம் சென்ரல்.

Thursday, December 27, 2007

கண்ணா கருமை நிறக்கண்ணா..

சில நாட்களுக்கு முன்பு கண்ணன் பாட்டுப்பதிவில் கோவியாரை பார்த்ததும் ஆச்சரியப்பட்டேன்.அவர் இளவயதில் பாடியதும் அதை விளக்கியதும் அருமையாக இருந்தது.

அந்த சமயத்தில் எனக்கும் ஒரு கண்ணன் பாட்டு ஞாபகம் வந்தது அது கீழேரொம்ப நாட்களாக தேடிக்கொண்டு இருந்த போது இன்று யூ டியூபில் கிடைத்த ஒரே பாடல் உங்கள் பார்வைக்காக இங்கு.

என்னை கவர்ந்த பல பழைய பாடல்களில் இதுவும் ஒன்று. இதில் உள்ள சோகம் அப்படியே என்னை அழுத்திவிடும்.

Monday, December 24, 2007

வைரமுத்து

இரண்டு நாட்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் பேனியன் அமைப்புக்காக ஒரு நிகழ்ச்சியை இதில் ஒளிபரப்பினார்கள்.இது புது நிகழ்ச்சியா? பழைய நிகழ்ச்சியா? என்று தெரியாது.பார்க்க நேர்ந்த போது பிடித்து வைத்தது.

இதில் கலந்துகொண்ட பல திரைப்பட நடிகர்களில் கமலஹாசனை பெருமைப்படுத்தும் நிகழ்ச்சியாக போய்விட்டதை அவரே சொல்லியிருந்தார்.அப்போது திரு.வைரமுத்துவின் ஒரு கவிதைக்கு இசை அமைத்து அனைவரும் பாடினார்கள்.அதற்கு முன் அவர் பேசிய சலனப்படத்தை கீழே பாருங்கள்.

எனக்கென்னவோ விவேக்கின் "வெள்ளை தான் எனக்கு பிடிச்ச கலர்" என்ற பாட்டை அவரே பாடியது வெகுவாக கவர்ந்தது.நன்றி: விஜய் தொலைக்காட்சி.

ரோபோட்

வரும் காலங்களில் இந்த ரோபோக்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் போல் என்பதற்கான ஆதாரம் கீழே.

வீட்டின் உள்ளே நுழையும் முன்பே கட்டளைகளை பெற்று நமக்கு வேண்டியதை தயார் பண்ணி வைத்துவிடும் போல் இருக்கு.இன்னும் என்னென்ன செய்யப்போகிறதோ??

கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்,எவ்வளவு அழகாக வயலின் வாசிக்கிறது.யார் வயலினில் என்ன பாட்டு வேணும் என்று நிரல் ஏற்றிவிட்டால் போதும் போல் இருக்கிறது.

என்ன வேண்டுமானால் பண்ணிக்கொள்ளட்டு ஆனால் நேரில் வரும் மனிதனின் எண்ணங்களுக்கு ஏற்ற மாதிரி செயல்படாமல் இருந்தால் போதும். :-))நன்றி: வசந்தம் சென்ரல்

Saturday, December 22, 2007

தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு

கீழே உள்ள சலனப்படம் சிங்கை தொலைக்காட்சியில் சில நாட்களுக்கு முன்பு வந்தது.

தமிழ் எழுத்தாளர்களை சிங்கை அரசாங்கம் எப்படி ஊக்குவிக்கிறது என்பதை பற்றியும் தங்கப்பேனா விருதை வித்தியாசமான முறையில் தேர்ந்தெடுப்பதைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள்.

திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் சிறப்புரையும் கருத்தும் இருக்கிறது, பாருங்கள்.

நன்றி: வசந்தம் சென்ரல்.

இவர் ஞாபகம் இப்படி!!

சில நாட்களுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் "அசத்தப்போவது யாரு?" என்ற நிகழ்ச்சியில் சிவகங்கை சிவக்குமார் என்பவர் அசத்தியதின் ஒரு பகுதி கீழே உள்ளது. எனக்குப்பிடித்திருந்தது,உங்களுக்கு?

அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவரும் இவர் தான் .பார்க்காதவர்களுக்காக...

ஒரு சில பகுதி wife(o)logy கொடுத்த நம் பதிவர் "பினாத்தல் சுரேஷ்" க்கு சமர்ப்பணம்.

நன்றி: சன் தொலைக்காட்சி

Friday, December 21, 2007

இப்படி ஒரு அர்த்தமா?

கொஞ்ச நாட்களுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு? என்ற நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது.அதில் சீனுவும் மகேஷும் அசத்தியது பார்க்க நன்றாக இருந்தது.

இரு பாடல்களை எவ்வளவு வித்தியாசமாக சிந்தித்திருக்கிறார்கள் பாருங்கள்.

எது உண்மையோ பொய்யோ,அந்த பாடலை எழுதியவர்களே இந்த மாதிரி சிந்தித்து பார்த்திருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.நன்றி: சன் தொலைக்காட்சி.

Tuesday, December 18, 2007

சத்தம்

சப்தம்-சங்கீதம்,இது இசையாகவும் இருக்கலாம் இரைச்சலாகவும் இருக்கலாம்.இதைத்தான் இளையராஜா சொல்லப்போய்
தவறாக புரிந்துகொள்ளப்பட்டது.

இப்ப அது மேட்டர் அல்ல.

இங்கு, சிங்கப்பூரில் வெளிப்புறத்தை மட்டும் சுத்தமாக வைக்க முயலவில்லை எங்கெங்கு உலக நியதிக்கு மாறுபட்டு இருக்கோ அங்கெல்லாம்
சரி செய்துகொண்டு இருக்கிறார்கள்.அதில் ஒன்று தான் இந்த சத்தம் சார்ந்த பிரச்சனை.பெரும்பாலும் இது கட்டுமானத்துரையில் இருந்து
தான் வருகிறது.அதுவும் ஏதாவது கட்டுமான வேலை நடந்துகொண்டிருக்கும் இடத்துக்கு பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள்
பெரும் தொல்லைக்கு ஆளாவர்கள்.காலை நேரத்தில் பலர் வேலைக்கு சென்றுவிடுவதால் இந்த பிரச்சனையை பலர் உணர்வதில்லை.
மாலை இரவு நேரங்களில் பாரம் தூக்கி,வைபிரேட்டர்,கான்கிரீட் மற்றும் சாரம் அடிக்கும் வேலைகள் மூலம் பெரும் சத்தம் உருவாகிறது.
இதை கட்டுப்படுத்துவது சற்று சிரமமான காரியம் என்றாலும் மக்கள் நலன் என்று வரும் போது அதை செயற்படுத்த தயங்குவதில்லை.இந்தந்த
நேரங்களில் இவ்வளவு தான் இருக்கவேண்டும் என்று சட்டம் போட்டுள்ளது இங்குள்ள அரசாங்கம்.ஏற்கனவே இருந்தது அதன் அளவு கொஞ்சம் அதிகமாக இருந்ததால் அதை மாற்றி
திருத்தியுள்ளார்கள்

எவ்வளவு இருக்க வேண்டும்?

சின்ன பட்டியல் இங்கு

வார நாட்களில் (இரவு 10- 7 காலை)

முன்பு 60 dBa இப்போது 55 dBa தான் இருக்க வேண்டுமாம்.

விடுமுறை நாட்களில் (காலை 7-இரவு 7)

முன்பு 90 இப்போது 75 தான்.

இரவு 7 மணியில் இருந்து 10 மணிவரை

முன்பு 70 இப்போது 65 dBa தான் இருக்கனுமா?

ஆமாம் இதெல்லாம் எப்படி கண்டுபிடிப்பார்கள்.கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கும் போதே 150 மீட்டர் சுற்றில் உள்ள
சில கட்டிடங்களில் ஒரு சிறிய இயந்திரத்தை நிறுவிவிடுவார்கள்.பிறகு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அதை எடுத்து அதில் பதிவானதை உரிய அலுவலகத்துக்கு
அனுப்பவேண்டும். மீறினால் தண்டனை உண்டு. எவ்வளவு?

முதலில் 10000 வெள்ளியாக இருந்தது போன அக்டோபரில் இருந்து அது 40000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அதே தவறை மறுபடியும் செய்பவர்களுக்கு
500-1000 வெள்ளி வரை அபராதம் ஏறிக்கொண்டே இருக்கும்.

சரி,இதை குறை கூறி அழைப்பு எப்பாவது வந்திருக்கா?

2005 ஆம் ஆண்டு 4953
2006 ஆம் ஆண்டு 6160

இதில் சுமார் 90 விழுக்காடு அழைப்புகள் சரியானவையில்லை என்ரு நிரூபணமாகியிருக்கிறதாம்.ஆமாம் இதெல்லாம் எங்கிருக்கிறது என்கிறீர்களா?

இங்கு.

Friday, December 14, 2007

சுரங்கம்

இந்த கட்டுமானத்துறையில் நிலத்துக்கீழே வேலை செய்பவது என்பது ஒரு புது விதமான அனுபவம்.ரொம்ப சிம்பிளாக சொல்லுவது என்றால் எலி வலை தோண்டுவதை பார்த்திருக்கிறீர்களா?
அவ்வளவு தான்.
நம் வேலைகளில் மேற்படி வேலைகள் நிறைய இருக்கும்.ஒவ்வொன்றாக எழுத வேண்டும் என்றால் இந்த பதிவு இப்போது முடியாது.இந்த எண்ணத்துடன் யூடியூபில் தேடிய போது கிடைத்தது இது.

எவனோ கத்துக்குட்டி விடியோகிராபர் போலும்,ஒவ்வொரு நொடியையும் சுட்டுத்தள்ளியிருக்கிறார்.அவர் போன தூரம் பார்க்கும் போது சிஙகப்பூரில் இருந்து மலேசியா எல்லைக்கு மேற்பட்டு போகக்கூடிய தூரம் இருக்கும் போல் இருக்கு.
அவ்வப்போது சுரங்கம் உள்ளே ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சனைகளை அழகாக விளக்கியுள்ளார்கள்.

பாதுகாப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அங்கெங்கே பளிச்சிடுகிறது.

ஆர்வம் உள்ளவர்கள் பார்த்து மகிழுங்கள்.

Thursday, December 13, 2007

நீயா? நானா?

யாருக்கு ஞாபகசக்தி அதிகம் மனிதனுக்கா? குரங்குக்கா?
கீழே இருக்கும் படத்தை பாருங்க...
மானத்தை வாங்குகிறீர்களே! மக்களே!நன்றி: சன் தொலைக்காட்சி.

Monday, December 10, 2007

இதுவும் Design தான்.

இந்த இடம் சிங்கையில் சோ சு காங்க் என்ற இடத்தில் உள்ளது.தினமும் இந்த இடத்தை கடக்கும் போது எரிச்சலாக வரும்.ஏதோ ஒரு கத்துக்குட்டி கொடுத்த Design ஐ கண்ணை மூடிக்கொண்டு அமல்படுத்தியிருக்கிறார்கள்.

மிதி வண்டியை இப்போது பலர் உபயோகப்படுத்துவதால் ரயில் மற்றும் பேருந்து சேரும் இடத்திலும் அவர்களுக்கு என்று ஓரிடம் ஒதுக்கி அங்கு அதை செயின் போட்டு கட்டுவதற்கான வசதி செய்துகொடுத்திருக்கிறார்கள்.அது எப்போதும் நிரம்பி வழியும்.காலையில் முதலில் சென்றால் நிறுத்த இடம் கிடைக்கும் இல்லாவிட்டால் கஷ்டம் தான்.மேலே உள்ள படத்தை பாருங்கள்.(பெரிதாக்கி பார்க்க அதன் மேல் சொடுக்குங்கள்)

முதலில் 2 மிதிவண்டிகள் எதிரெதிரே வைக்கமுடியாது.

இரண்டாவது எல்லா இடங்களில் மிதிவண்டி இருந்தால் உள்ளே வைத்திருக்கும் வண்டியை முதலில் வந்தால் எடுக்கமுடியாது.

Design என்பது எப்படி இருக்ககூடாது என்பதற்கான சிறந்த உதாரணம் இது.

என்ன அந்தூரிலும் இப்படியா? என்கிறீர்களா?

இங்கும் மனிதர்கள் தானே இருக்கிறார்கள்.இதை இவ்வளவு நாள் எப்படி விட்டு வைத்திருக்கிறார்கள் என்பது தான் புரியவில்லை.

தவறு என்று தெரிந்தவுடனே மாற்றுபவர்கள் இவர்கள்.

Sunday, December 09, 2007

S.Ve சேகரோட பணமா?

போன திங்கட்கிழமை அரை நாள் விடுப்பு போட்டு ஒரு முக்கியமான வேலை பார்க்க வேண்டியிருந்தது.அதற்கு முதல் நாளே, மறுநாள் நிச்சயம் மருத்துவரை பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.திங்கட்கிழமை செய்ய வேண்டிய வேலை சீக்கிரமே முடிந்துவிட்டது, அதற்கு பிறகு மாலையில் சென்று பார்க்கவேண்டிய மருத்துவர் வேலை என்ன காரணத்தினால் சுத்தமாக மறந்துவிட்டது.அன்று இரவு வெளியில் செல்லும் போது தான் ஞாபகம் வந்தது.சரி நாளை செவ்வாய்கிழமை செல்லலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.

செவ்வாய் அலுவலகம் சென்று வந்து அன்றிரவுக்கு வேண்டியவற்றை தயாரித்தபிறகு மருத்துவரிடம் சென்றேன். நல்ல வேளை என்னுடைய நம்பர் இரண்டாம் இடத்தில் இருந்தது.சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்தபின் மருத்துவரிடம் சென்று தேவையான விபரங்கள் வாங்கிக்கொண்டு வெளியில் வந்து மருந்துகள் வாங்க காத்திருந்தேன். இந்த கிளினிக்கில் மருந்துகொடுக்கவே 15 நிமிடங்களுக்கு மேல் ஆகும் என்பதால் சில மளிகை மற்றும் பால் சாமான்கள் வாங்க NTUC (இங்குள்ள சிறிய அங்காடி) போய்வந்துவிடலாம் என்று நினைத்து கிளினிக்கில் உள்ள பெண்ணிடம் சொல்லிவிட்டு சென்றேன்.

படிக்கும் போது அவ்வளவு பாக்கெட் பைசா இல்லாததால் பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லாதிருந்தது அடுத்து வேலைக்கு வந்த போது சென்னையில் பர்ஸ் வைத்திருப்பவர்கள் எளிதாக பிக்பாக்கெட்டிடம் பணம் பறிகொடுக்கிறார்கள் என்பதால் அந்த எண்ணத்தையே விட்டுவிட்டேன்.அதே பழக்கம் இங்கும் தொற்றிக்கொண்டுவிட்டது.இங்கு தேவையும் இல்லை.

இந்த நிலையில் பையில் சுமார் 70 வெள்ளி வைத்துக்கொண்டு அந்த கடைத்தொகுதியில் தேவையானதை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்கும் இடத்துக்கு வந்து பில் போடும் போது அதை செய்பவர் நான் வாங்கிய தக்காளி பாக்கெட்டில் விலை வில்லை இல்லை வேறு எடுத்துவாருங்கள் என்றார்.இந்த மாதிரி சமயங்களில் அங்கேயே எடைபோடும் இயந்திரம் இருக்கும் அதனால் நம்மை திருப்பி அனுப்பமாட்டார்கள்.அன்று அது இல்லை என்பதால் நான் போய் எடுத்துவரவேண்டியிருந்தது.திரும்ப வரிசையில் நின்று பணத்தை கட்டிவிட்டு கிளினிக் பக்கம் வந்தேன்.அப்போதும் மருந்து தயாராகவில்லை.கொஞ்ச நேரம் அங்குள்ள தொலைக்காட்சியை பார்த்துவிட்டு மருந்து வாங்கிக்கொண்டேன். பில் வந்தது 77 வெள்ளி என்றார்கள்.பையில் காசு குறைவாக இருந்ததால் வங்கி அட்டையை கொடுத்து கழித்துக்கொள்ளச்சொன்னேன்.

மேலே சொன்னது நடந்தது செவ்வாய்கிழமை.புதன் வேலைக்கு போய்விட்டு சாயங்காலம் வீடு திரும்பி Exercise செய்ய போகலாம் அப்படியே ஏதேனும் பழம் வாங்கிவரலாம் என்று நினைத்து பணத்தை தேடினால்... "காணும்!!". காக்கா ஊ ஊ தூக்கிட்டு போயிடுத்து.

கடந்த 2 நாட்களாக தேடாத இடம் இல்லை ,ஹூகும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சரி,நாம் தான் பணம் எடுக்கும் போது தவற விட்டுவிடோம் என்று இன்று காலை தான் மனதை தேற்றிக்கொண்டேன்.

இன்று மெனுப்படி காலை நீச்சல் போய்வந்தாகிவிட்டது மாலை நூலகம் போகனும்.காலையில் இருந்தே மழை விட்டு விட்டு பெய்துகொண்டிருக்கிறது. மிதிவண்டியில் நூலகம் போகமுடியுமா என்று யோசித்து சுமார் 2.30 மணிக்கு தூரல் சற்று நின்றிருக்கும் சமயம் பார்த்து கிளம்பி நூலகம் சென்றேன்.

திரும்பக்கொடுக்க போன வாரம் வாங்கிய ஒரு கவிதை புத்தகமும் & நாடக புத்தகமும் இருந்தது.இங்கு நூலகத்தில் எடுத்த புத்தகத்தை திரும்பச் செலுத்த ஒரு வாய் போன்ற அமைப்பில் ஒவ்வொரு புத்தகமாக போடவேண்டும்.ஒவ்வொரு புத்தகம் போடும் போது அதன் மீது உள்ள கணினி கோடு மூலம் நம் கணக்கில் இருந்து கழித்துவிடும்.இப்படி போட எததனிக்கும் போது அந்த நாடக புத்தகத்தில் போனவார நூலக ரசீது இருந்தது.அதயும் ஏன் போட வேண்டும் என்று நினைத்து அதை எடுக்கும் போது மற்றொரு பக்கம் குப் என்று வீங்கி இருந்தது.

என்ன? இது இப்படி இருக்கே என்று அங்கு பார்த்தால் நான் காணாமற்போய்விட்டதாக எண்ணிய அத்தனை பணமும் அங்கு இருந்தது.இது எப்படி இங்கு வந்தது என்று யோசிக்கும் போது ஞாபகம் வந்தது.மீதி பணத்தை அன்று அலுவலக பையில் போட்டு இருக்கேன் அது அப்படியே நம்து S.Ve சேகர் எழுதிய புத்தகத்தில் உள்ளே உட்கார்ந்துவிட்டது.அந்த புத்தகம் படித்து முடித்துவிட்டதால் எடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டேன்.பணமும் காணாமற்போய்விட்டது.

இதை படிக்க நேர்ந்தால் அந்த பணத்தை திரு.சேகர் கேட்கமாட்டார் என்று நம்புகிறேன். :-))

Saturday, December 08, 2007

சிங்கையில் நம் கலைஞர்கள்.

உள்ளூர் நாடகத்தில் நடிக்க நம் திரை/சின்னத்திரை நடிகர்கள் இங்கு வந்துள்ளார்கள்.
அவர்கள் திரு. டெல்லி கனேஷ் மற்றும் ஸ்ரீ மதி மனோரமா.

இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்களை பேட்டி எடுத்ததை தொலைக்காட்சியில் போட்டார்கள்,அது இங்கே.

பார்த்து மகிழுங்கள்.நன்றி: வசந்தம் சென்ரல்

Friday, December 07, 2007

இது கொடுமை

தமிழ் செய்திகள் பார்த்துக்கொண்டு இருக்கும் போது இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை போட்டார்கள்.இதை பார்த்தவுடன் சின்னக்குட்டி போட்ட கொடுமை வீடியோ தான் ஞாபகம் வந்தது.

சின்ன வேண்டுகோள்... சிறுவர்கள் இருக்கும் போது பார்க்கவேண்டாம்.
நன்றி: சன் டீவிக்கு (சொல்லமுடியவில்லை).

இப்படி செய்ய ஆயிரம் ஞாயங்கள் இருக்ககூடும் ஆனால் இது தான் ஒரே வழி அல்ல. :-(

Thursday, December 06, 2007

இயற்கையின் அதிசியம்

அவ்வப்போது தினசரி மற்றும் ஊடகங்களில் இயற்கைக்கு முரனாக நாய்,பூனை குட்டிக்கு பால் கொடுப்பது,நாயும் குரங்கும் நண்பர்களாக இருப்பது என்று நம்மை அதிசியத்தில் ஆழ்த்தும்.

அதே வரிசையில் 2 நாட்களுக்கு முன்பு செய்தியில் இந்த படத்தை போட்டிருந்தார்கள்,அது உங்கள் பார்வைக்கு.நன்றி: வசந்தம் சென்ரல்

Wednesday, December 05, 2007

துணை பிரதமர்

இங்குள்ள பல மக்களுக்கு தேநீர் கடை மற்றும் சாப்பாட்டுக்கடையில் தான் பெரும் பாலும் பார்க்க முடியும் அதுவும் வேலை முடியும்/ஆரம்பிக்கும் நேரத்துக்கு பின்பு/முன்பு.

அதானாலே என்னவோ பல நகர்பகுதியில் அந்தந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் உதவி பிரதமர் மற்றும் பிரதமர்களை பெரும்பாலும் பார்க்கமுடியும்.அதுவும் தேர்தல் சமயத்தில் ஒரு 20 பேர் சூழ ஆர்குட் மாலையுடன் பவனி வருவார்கள்.மற்றபடி எந்தவிதமான ஆடம்பரமும் இருக்காது.பக்கத்து வீட்டு ஆளுடன் பேசுவது போல் பேசலாம்.

முக்கியமாக பெண்கள் கால் மேல் கால் போட்டு அவருடன் உட்கார்ந்த நிலையில் கை குலுக்கலாம்.தேவையில்லாத மரியாதைகளை யாரும் எதிர்பார்பதில்லை.சலனப்படத்தின் கடைசியில் ஒரு மந்திரியுடன் மக்கள் எப்படி கை குலுக்குகிறார்கள் பாருங்கள்,அதற்காக அவர் பழிவாங்கப்பட மாட்டார். :-))

மிச்சம் சலனப்படத்தில்நன்றி: வசந்தம் சென்ரல்

ஜாபர் இரட்டை சதம்

நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் ஜாபரின் ஆட்டத்தை கீழே காணலாம்.
நன்றி: சன் தொலைக்காட்சி.

Tuesday, December 04, 2007

வாலிபால்

பல விளையாட்டுகளுக்கு உலகக்கோப்பை இருக்கும் போது வாலிபாலுக்கு மட்டும் என்ன குறைச்சல்? அதுவும் நடந்துகொன்டிருக்கிறது ஆனால் வெளிச்சம் தான் கிடைக்கவில்லை.

நான் இருந்த நாகை மடவிளாகத்தில் கோடை விடுமுறையில் தெருவின் குறுக்கே வலை கட்டி எங்கள் சீனியர்கள் இந்த விளையாட்டை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.விவரமாக பின்னொரு பதிவில் சொல்கிறேன்.

அப்போது நாங்கள் ஆடிய ஆட்டத்துக்கும் இப்போது ஆடடுகிற ஆட்டத்துக்கும் நிறைய முன்னேற்றம் வந்துவிட்டது. சர்வீஸ் ஒன்றே போதும் .கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்.ஒரு காலத்தில் நாகையில் இருந்து "சலீம்" என்பவர் தமிழகத்துக்காக இவ்விளையாட்டில் ஒரு முத்திரை பதித்தவர்.

நன்றி: வச்ந்தம் சென்ரல்

முரளிதரனுக்கு வாழ்த்துக்கள்

நம்ம முத்தையா முரளிதரன் இதுவரைக்கும் 710 விக்கெட் எடுத்து உலகிலேயே அதிக விக்கெட் எடுத்த பந்து வீச்சாளர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.

அவர் பந்து வீசும் முறை பல தடவை கண்டனத்துக்கு உள்ளாகி இருந்தாலும் குற்றம் நிரூபிக்க முடியாமல் போய் பலர் வயிற்றில் புளியை கரைக்கிறார்.

அப்படிப்பட்ட உலக சாதனை நிகழ்த்திய முரளிக்கு,தமிழ் வலைப்பதிவர்கள் சார்பில் வாழ்த்துக்களும் கீழே உள்ள விடியோவும் வழங்கப்படுகிறது.

கூடிய விரைவில் 1000 விக்கெட்டை எடுத்து சாதனை புரிய ஆண்டவன் அருள்புரியட்டும்.

விடியோ உதவி: வசந்தம் சென்ரல்.

கலக்கல் அலுவலகம்

மேலே சொன்ன மாதிரி ஒரு விளம்பரம் விஜய் தொலைக்காட்சியில் வந்துகொண்டிருக்கிறது.
2 நாட்களுக்கு முன்பு நமது பதிவர் ஒருவர் இதில் வருபவர் "லக்கி லுக்" என்றார்.
அது யார் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை....
முடிந்தால் நீங்கள் முயற்சிக்கவும்.நன்றி: விஜய் தொலைக்காட்சி.

போன இரு பதிவுகளில் சொன்னது போல் இதிலும் குரல் இல்லை,பொருத்துக்கொள்ளவும்.

Monday, December 03, 2007

கொல்கத்தா டெஸ்ட்

தற்போது கொல்கத்தாவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போட்டியில் நம் ஆட்கள் காட்டும் கை வரிசையை பாருங்கள்.

இதிலும் கோப்பை மாற்றும் போது ஆடியோ காணாமல் போய்விட்டது.ஸ்கோர் திரையின் கீழ் வருகிறது.நன்றி: சன் தொலைக்காட்சி

விரைவுப் படகு

கடந்த வாரம் தோஹாவில் நடந்த விரைவுப்படகு போட்டியில் நடந்த விபத்து இது.
அதிரிஷ்டவசமாக சொற்ப காயங்களுடன் அதன் ஓட்டுனர்கள் தப்பித்தனர்.

படகுக்கு என்ன ஆசையோ? விமானம் போல் பறக்க ஆசைப்படுகிறது போலும்.

DVD வட்டில் இருந்து விஸ்டாவில் உள்ள மீவி எடிட்டர் மூலம் .wmv கோப்புக்கு மாற்றும் போது குரல் காணமற் போய்விட்டது.நன்றி: வசந்தம் சென்ரல் தொலைக்காட்சி

Wednesday, November 28, 2007

மலேசியா கிருஷ்ணர்

குழந்தைகள் விளையாட்டை ரசிப்பது என்பது எவ்வளவு விலை கொடுத்தாலும் கிடைக்காதது.

நான் பல தடவை வெளியில் சுற்றும் போது பேருந்து அல்லது ரயிலில் போகும் போது குழந்தகளையே ரசித்து பார்த்துக்கொண்டிருப்பேன். என்னதான் அவர்கள் உலகம் தனி என்றாலும் நம்மையும் சேர்த்துக்கொள்ள மாட்டார்களா? என்ற ஆதங்கம் தாம் வரும்.பெரும்பாலான சமயங்களில் நம்மை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.அப்படிப்பட்ட சமயங்களில் தூர நின்றுகொண்டு அவர்கள் நடை உடை,சிரிப்பு & அழுகையை ரசித்துக்கொண்டு இருப்பேன்.

இப்படியெல்லாம் ரசிக்கும் குழந்தையை இப்படி பார்க்க நேர்ந்தால்.......

கொடுமை தான். இது நடந்தது மலேசியாவாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது.இதை வீடியோ எடுக்க முன்னேற்பாட்டுடன் வந்தார்களா? அல்லது சும்ம்மா எடுத்தார்களா? என்று அவர்கள் தான் விளக்கவேண்டும்.

Tuesday, November 27, 2007

வாசிப்பை நேசிப்போம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கையில் தமிழ் வாசிப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊக்கப்படுத்த வேண்டி கல்வி அமைச்சு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த்திருந்தார்கள்.

அதை தமிழ் செய்தியில் ஒளிபரப்பிய போது பிடித்தது.

பார்த்து மகிழுங்கள்.

அடுத்த ஐஸ்வரியா சிங்கையில் இருந்தா??நன்றி: வசந்தம் சென்ரல்

சிங்கை வடிவேலு

உலகத்தில் நகைச்சுவை நடிகை/நடிகர்களுக்கு எப்பவுமே மவுசு தான்.

தமிழ்நாட்டில் இப்போது கொடி கட்டி பறக்கும் திரு வடிவேலு/திரு விவேக் மாதிரி இங்கும் சிலர் இருக்கின்றனர்.தமிழில் அவ்வப்போது வந்து கிசு கிசு மூட்டும் வடிவேலன் மற்றும் சிலர் இருந்தாலும் ஆங்கில தொலைக்காட்சியில் இவரை அடிச்சிக்க ஆள் இல்லை என்று தான் நினைக்கிறேன்.

இவர் தொலைக்காட்சியில் வர ஆரம்பிக்கும் போது ஒரு நிகழ்ச்சியை நடத்தச்சொன்னார்களாம் அதை நடத்தும் போதே தான் நடத்துவது பிடிக்காமல் தயாரிப்பாளிடரிடம் போய் இதை வேறு யாராவது நடத்தினால் நன்றாக இருக்கும் என்று சொல்லி தப்பிக்க பார்த்திருக்கிறார்.தயாரிப்பாளார் விடாமல் தொடர்ந்து நடத்தச்சொல்லி ஒரு நல்ல நகைச்சுவை நடிகரை அடையாளம் காட்டியுள்ளார்.

இவருடைய இயர் பெயர் குர்மீட் சிங்,சிங்கையில் இவ்ரை போ சு காங் என்றால் எல்லா மத்ததினருக்கும் தெரியும்.போ சு காங் என்ற தொடரில் இவர் ஒரு கட்டுமான நிறுவனத்தின் முதலாளியாக வருகிறார் அதுவும் ஸ்பெசல் உடை/காலணி என்று.சலனப்படத்தை பார்க்கவும்.உள்ளூர் மொழி பேச்சு வழக்கில் பேசுவதால் எல்லோருக்கும் பிடித்துப்போய்விட்டது.

எந்த அளவுக்கு.. என்றால் பிரதம மந்திரியே தேசிய நாள் பேச்சின் போது சொல்லும் வரைக்கும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த சலனப்படம்.

நன்றி: மீடியா கார்ப் தொலைக்காட்சி.

Sunday, November 25, 2007

இந்திய பாக்கிஸ்தான் கிரிக்கெட்

முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டம் பற்றி சன் செய்திகளில்..

உங்கள் பார்வைக்காக.நன்றி: சன் தொலைக்காட்சி.

Friday, November 23, 2007

கண் புரை(றை)?

சற்று நேரத்துக்கு முன்பு யூ டியூபில் இந்த சலனப்படம் பார்த்தேன்.. அது உங்கள் பார்வைக்கு

கண்ணில் உள்ள புரையை எப்படி எடுக்கிறார்கள் என்று காண்பிக்கிறார்கள்.படத்தெளிவுக்காகவே பார்க்கலாம்.

Monday, November 19, 2007

இந்தியா-பாகிஸ்தான்.

இது நான்காவது ஒரு நாள் போட்டியின் சில காட்சிகள்.
டெண்டுல்கர் ஆட்டமும் யுவராஜ் ஆட்டமும் அருமையாக இருந்தது.நன்றி: மக்கள் தொலைகாட்சி

கத்திப்பாரா பாலம்.

நேற்று இரவு ஊருக்கு கிளம்பும் முன்பு மனைவிவீட்டாரிடம் சொல்லிவிட்டு பெற்றோர் இருக்கும் இடம் பார்த்து வண்டி ஓட்டிக்கொண்டு இருந்தேன்.

போரூரில் இருந்து வந்தாலும் அல்லது வடபழனியில் இருந்து வந்தாலும் சரி இந்த கத்திப்பாரா சந்திப்பு வந்தால் ஒரு அழற்சி வந்துவிடுகிறது.எந்த வண்டி எங்கு திரும்புமோ நாம் யார் மீது வண்டியை மோதப்போகிறமோ என்ற பயத்துடன் சந்திக்கவேண்டிய சந்திப்பு இது.இப்படிப்பட்ட சந்திப்பில் இவ்வளவு நாள் விபத்து இல்லாமல் இருக்கிறது ஒரு அறிவிப்பு பலகை போட்டு நெடுஞ்சாலைத்துறை காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.

சென்னையில் வண்டியுடன் வண்டி முத்தமிட்டுக்கொண்டால் ஒருவர் மற்றொருவருக்கு கை அசைத்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் போய்கொண்டிருக்கிறார்கள்.அந்த அளவுக்கு மக்களிடையே ஒத்திசைவு.இல்லாவிட்டால் இந்த மாதிரி ஒரு சந்திப்பில் போக்குவரத்து விளக்குகள் இல்லாமலேயே அவரவர் பாதையில் வேகமாக போகமுடிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

வெளிநாட்டில் வண்டி ஓட்டிவிட்டு இங்கு யாராவது வண்டி ஓட்ட முயன்றால் நிச்சயமாக மாரடைப்பு வருவது நிச்சயம் அல்லது ஓராயிரம் S*** இல்லை வசவுகள் பலவும் சகஜமாக வந்து விழும்.

மேலே சொன்ன அத்தனையும் ஓரளவு குறைய வேண்டுமானல் கீழே உள்ள பால வேலை முடியவேண்டும்.

ஆறு மாதத்திற்கு பிறகு பார்க்கிறேன் ஓரளவு முன்னேற்றம் தெரிகிறது.விமானநிலையம் அருகிலும் பணி கொஞ்சம் துரிதமாக நடைபெருவது போல் தோன்றுகிறது.

பழைய தொழிற்நுட்பத்தை கடைபிடிப்பதால் ஆறு மாத காலத்துக்கு இவ்வளவு தான் காட்டமுடியும்.

படத்தை பார்த்தாவது ஆறுதல் அடையுங்கள்.மேலே உள்ள கார் என்னுடையது அல்ல.ரோட்டின் நடுவே இப்படி காரை நிறுத்தி நம்மூரில் படம் எடுக்க முடியுமா? முடியும் என்றே எனக்கு தோன்றுகிறது. :-)மேலே உள்ள படத்தில் பாருங்கள் யாரோ கட்சிக்கார அம்மணி நின்று வேலை நிலையை ஆராய்கிறார் போலும்.

இதெல்லாம் இருக்கட்டும்... எப்ப நாங்க இதன் மேல் வண்டி ஓட்டுவது????

இப்போது இதை கட்டிக்கொண்டிருக்கும் குத்தகைகாரர்க்கு அடுத்த வேலை கிடைத்தவுடன். :-))

Saturday, November 17, 2007

முட்டி வலியா? கொசுவா?

நேற்று இரவு சென்னையில் தொலைக்காட்சி நிகழ்சிகளை பார்த்துக்கொண்டு இருக்கும் போது கமல்,பாலசுப்பிரமணியம் மற்றும் ரமேஷ் அரவிந்த் சேர்ந்து நிகழ்த்தும் ஒரு நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் நடைப்பெற்றது.

கமலின் நகைச்சுவையும் பாலாவின் கலாய்ப்பும் & ரமேஷின் பங்களிப்பும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டுபோய் கொண்டிருக்கும் வேளையில் கமலில் கை கால் பக்கம் போய் "பிடில்" வாசிக்க தொடங்கியதை தொலைக்காட்சியில் காணும் போது என்னவோ செய்தது.ஸ்டுடியோவில் கொசு தொல்லை தாங்க முடியவில்லை போலும் அடுத்து நமது S.P.Balasubramaniam யும் தொடங்கினார்.ஏனோ ரமேஷையை மட்டும் கொசு தொடவே இல்லை அல்லது நமக்கு தெரியவில்லையா என்று தெரியவில்லை.

பல லட்சக்கணமான மக்கள் பார்க்கும் ஒரு தொலைக்காட்சி அரங்கில் இவ்வளவு கொசு தொல்லையா? அதை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்று தெரியவில்லை.வரப்போகும் நிகழ்சிகளிலாவது இம்மாதிரி சொறியலை காண்பிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

கீழே இருக்கும் சலனப்படத்தை பாருங்கள் அதில் ஒரு துளி உங்கள் பார்வைக்காக...நன்றி: ஜெயா தொலைக்காட்சி

அதிருதில்ல..!!

தலைப்பு பழையதாகி போனாலும் கீழே உள்ள படத்தை பார்க்கும் போது இப்படித்தான் தோனுகிறது.

இந்திய விஞ்ஞானிகளின் உழைப்பை பாராட்டுவோம்.

கூடியவிரைவில் திரு ஜெயபாரதன் விரிவாக இதைப்பற்றி பதிவு போடுவார் என்று எதிர்பார்க்கலாம்.நன்றி:தினமலர்.

கட்டுமானத்துறை நிலவரம்.

இன்று காலை தி ஹிண்டு பத்திரிக்கையில் வந்த கட்டுமானத்துறையில் நிலவும் விலைப் பட்டியல்கள் உங்கள் பார்வைக்கு.

உள்ளூர்/வெளி நாட்டு மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வழக்கம் போல் படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்த்துக்கொள்ளவும்.நன்றி : தி ஹிண்டு.

இதெப்படி சாத்தியமாகிறது?

இன்று காலை தினமலர் பத்திரிக்கையை படித்துக்கொண்டு இருக்கும் போது கண்ணில்பட்டது...
உங்கள் பார்வைக்காக.

நன்றி: தினமலர்.

Wednesday, November 14, 2007

படத்தை பார்க்காதே

இந்த படம் நேற்று மதியம் வின் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருக்கும் போது எடுத்தது.

நம்ம தலைவர் MGR ம் கே.ஆர்.விஜயாவும் பாட்டுக்கு ஆடிக்கொண்டு இருந்தார்கள்.

இது மேட்டர் இல்லை...

படத்துக்கு கீழே ஓடும் பிளாஸ் நியூஸ் சொல்லும் செய்தியை படிக்கவும்.

இரண்டாவது ஒரு நாள்

சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்திய பாக்கிஸ்தானுக்கு இடையே நடந்த இரண்டாவது ஒரு நாள் பந்தயத்தின் முக்கியமான நிகழ்வுகளை செய்தியில் போடும் போது பிடித்தவை.

உங்கள் பார்வைக்காக...நன்றி: சன் தொலைக்காட்சி

Saturday, November 10, 2007

தோட்டப் பூச்சிகள்.

கையில் புகைப்பட கருவியை வைத்துக்கொண்டு தோட்டத்தில் அலைந்து கொண்டி இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

இவையெல்லாம் சென்னை பூச்சிகள்.

Friday, November 09, 2007

இந்திய மருத்துவர்களின் சாதனை

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சன் தொலைக்காட்சியிலும் மற்ற தொலைக்காட்சியிலும் இந்த செய்தி ஒளிபரப்பப்பட்டது.

ஆதாவது பீஹாரில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்த குழந்தைக்கு நான்கு கைகளும் நான்கு கால்களும் இருந்தன.

கருப்பையில் இருந்திருக்கும் காலத்தில் உடன் பிறந்திருக்கவேண்டிய இன்னொரு சிசு ஏதோ காரணத்தினால் வளராமல் பாதியுடன் நின்று போய் மற்ற குழந்தையுடன் ஒட்டிக்கொண்டு இருந்துவிட்டதால் வந்த வினை இது.

இதை கேள்வியுற்ற இந்திய மருத்துவர்கள் துணிகரமான முயற்சியை மேற்கொண்டு அக்குழந்தையை காப்பாற்றியுள்ளார்கள்.

அதை தொலைக்காட்சியில் காட்டி விவரித்ததை உங்கள் பார்வைக்காக கீழே..

நன்றி: சன் தொலைக்காட்சி.

நம் மருத்துவர்களின் இச்சாதனையை மனமார வாழ்த்துவோம்.

Tuesday, November 06, 2007

இந்தியா வெற்றி

நடந்து முடிந்த ஒருநாள் பந்தயத்தை காணமுடியாதவர்களுக்காக கீழே சலனப்படம் இணைத்துள்ளேன்.

பார்த்து மகிழுங்கள்.நன்றி: சன் டிவி.

Monday, November 05, 2007

சென்னை விஜயம்

சிங்கையில் இருந்து சென்னைக்கு மலிவுச்சேவை பயணம் ஆரம்பித்தவுடனே இந்த தீபாவளிக்கு இவ்வகை விமானத்தில் இப்பயணம் மேற்கொள்ளலாம் என்று நினைத்து சுமார் 2 மாதங்களுக்கு முன்பு டைகர் விமானச்சேவை மூலம் முன்பதிவு செய்துக்கொண்டேன்.இணையம் மூலம் செய்வது சுலபமாக இருந்ததால் போன 2ம் தேதி இரவுப்பயணத்துக்கு முன் பதிவு செய்துக்கொண்டேன்.

ஆரம்ப கட்டணம் என்னவோ குறைவாக இருந்தாலும் வரி/சேவை/பயண இருக்கை/காப்பீடு என்று பல வைகளில் டாலர் மேல் டாலர் போட்டு 586 வெள்ளியில் வந்து முடிந்தது.(போக வர)

இப்படி முன் பதிவு செய்த போதே கோவியாரிடம் சாட் செய்துகொண்டிருக்கும் போது சொன்னேன் அதற்கு அவர் பயணத்தின் போது ஒரு பாட்டில் தண்ணீர் கூட கொடுக்கமாட்டார்கள்,எல்லாவற்றிற்க்கும் பணம் வசூலிப்பார்கள் என்றார்.
நான் நம்பவில்லை அவர் பயணம் செய்யும் நேரம் குறைவாக இருந்திருக்கும் அதனால் மலிவு விலை விமானங்களில் அப்படி சேவை இருந்திருக்கலாம் என்று நினைத்திருந்தேன்.

கிளம்பும் நாள் வந்தது.இப்போது தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளரே தன்னுடைய வண்டியின் மூலம் என்னை பட்ஜெட் விமான முனையத்துக்கு சுமார் 40 நிமிடங்களில் கொண்டு வந்து விட்டார்.

புதிய முனையம்,இன்னும் அதிகமாக உபயோகப்படுத்தப்படவில்லை என்பது அனைத்திலும் தெரிந்தது.குளிர் வசதி கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே இருந்து நடுங்கவைத்தது.நுழைவாயிலிலேயே எடை பார்க்க ஒரு மிஷின் வைக்கப்பட்டிருந்தது. வந்திருந்த பலரும் தங்கள் பேக்கேஜின் எடைகளை பார்த்து பெரு மூச்சுடன் எப்படி சமாளிக்கப்போகிறோம்? என்ற நினைப்புடன் வரிசையில் நிற்க ஆரம்பித்தேன்.

இந்நிலையை முன்னமே எதிர்பார்த்து கொடுக்கப்பட்டிருந்த 15 கிலோ எடைக்கு மேல் இன்னும் ஒரு 5 கிலோவுக்கு பணம் கட்டி டிக்கெட் எடுத்த்திருந்தேன்.அதெல்லாம் எந்த மூலைக்கு எனபது போல் மேலும் 5 கிலோ அதிகமாக இருந்தது.வருவது வரட்டும் என்று வரிசை பிடித்து நின்றிருந்தேன்.எனக்கு பின்னால் நின்ற ஒருவர் என்னிடம் 20 கிலோ அதிகம் என்றார்.எப்படித்தான் இவ்வளவு ஏறுகிறதோ என்ற அங்கலாய்ப்புடன் எல்லோரும் நகர்ந்தோம்.

என் நிலை வந்தபோது விமான சிப்பந்தி எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் Tag போட்டு அனுப்பிவிட்டார்,எனக்கு பின்னால் வந்தவர்களுக்கும் இதே நிலை தான்.புதிதாக விமானச்சேவை துவங்கியிருப்பதால் அவ்வளவு கட்டுப்பாடு காட்டாமல் அனுப்பிவிட்டிருந்தார்கள்.இது போதாதா நம் மக்களுக்கு!!!
அவர்கள் கொண்டுவந்த Hand Luggage ஐ பார்த்து விமான கேப்டனே எச்சரிக்கை விடுத்து சிலருடைய பைகளை வலுக்கட்டாயமாக இறக்கி பைகள் இருக்கும் அறைக்கு மாற்றினார்.இதனால் சுமார் 30 நிமிடங்கள் கால தாமதமாக விமானம் கிளம்ப ஆரம்பித்தது.

சிங்கை- சென்னைக்கு 3.5 மணி நேரம் போதுமானது என்றாலும் இவர்கள் 4 மணி நேரம் ஆகும் என்று முதலில் சொல்லியிருந்தார்கள்.அதனால் MD Player மூலம் பாடல்களை கேட்டுக்கொண்டு பொழுது போக்கினேன்.முதலில் சாப்பாட்டுக்கான ஆர்டர்களை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.மரக்கறி உணவுக்கு 16 வெள்ளியாம்.விமானத்தில் கொடுக்கப்படடவதால் சுமார் 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக தோன்றியது.அதற்குப் பிறகு Duty Free சாமான்கள் விற்பனை தொடங்கியது.இப்படியே சுமார் 2.5 மணித்துளிகள் ஓடிவிட்டன.பிரகாசமான விளக்குகளால் சரியாக தூங்கமுடியாத நிலை.கடைசி ஒரு மணி நேரம் தான் விளக்குகள் அணைக்கப்பட்டன.

சென்னையை அடைய இன்னும் 15~ 20 நிமிடங்கள் இருக்கும் போதே இன்னும் சில நிமிடங்களில் தரை இறங்கப்போகிறோம் என்று சொன்னது ஏன் என்று தெரியவில்லை.ஜன்னல் பக்க இருக்கை என்பதால் சென்னையை நெருங்குகிறோம் என்று தெரியும் ஆரஞ்சு விளக்குகள் மூலம் தெரிந்தாலும் மிக மிக மெதுவாக விமானம் சென்னையை வலம் வர தொடங்கியது.அப்படியே அதில் ஒரு 20 நிமிடம் ஓடியது. தரையில் இட பற்றாக்குறையோ என்னவோ? இறங்க சிறிது நேரம் ஆனது.கடைசியாக தரை இறங்கி திரும்பி நிற்கும் போது பார்த்தால் இறங்குவதற்கு தயராக 2 விமானங்களின் வெளிச்சம் தெரிந்த்து.விமான போக்குவரத்து அதிகமானதின் காரனமாகவே எங்கள் விமானம் தரை இறங்க முடியாமல் போயிருப்பது தெளிவானது.

இந்த முறை குடியேற்றத்தில் நிறைய அலுவலர்கள் இருந்ததால் 10 நிமிடங்களுக்கு முன்பாகவே immigration வேலை முடிந்தது.போன தடவை வந்திருந்த போது போட்டுக்கொண்டிருந்த தரை வேலைகள் முடிந்து நன்றாக இருந்தது ஆனால் அந்த வழ வழப்பு தான் இன்னும் உருத்திக்கொண்டி இருக்கிறது.வழுக்கி விழ அதிகமாகவே வாய்ப்புகள் உள்ளது.

Baggage Collection- மிகப்பெரிய மாற்றங்கள் இங்கு தெரிவது கண்கூடு.பழைய டயர் மாடல் கன்வேயர்கள் போய் இரும்போ/அலுமினியமோ போன்ற பொருளில் 45 degree சாய்வில் நமது பெட்டிகள் அழகாக வருகின்றன.பெட்டிகள் பல முறை வலம் வருகின்றன.யாரும் கீழே எடுத்து வைப்பதில்லை எனபது ஒரு நல்ல செயலாகப் பட்டது.

என்னுடைய பெட்டிகளுக்காக சுமார் 20 நிமிடம் மட்டுமே காத்திருந்தேன்.

விமான நிலையம் உள்ளே மாத்திரம் அன்றி வெளியிலும் நல்ல மேம்பாடு கண்டுள்ளது.மக்கள் நின்று பார்க்க பெரிதாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நான் வருவது இம்முறையும் யாருக்கும் தெரியாது என்பதால் வெளியில் இருக்கும் டாக்ஸியை பிடித்து வீட்டுக்கு வரும் போது இரவு 12.30.

Monday, October 29, 2007

வீடியோவில் இருந்து படம் எடுக்க.

கொஞ்ச நாட்களாக பிரிசன் பிரேக் தொடர் பார்த்துக்கொண்டு இருந்தேன்.அதை நான் ரியல் பிளேயர் மூலம் பார்த்தேன்.அப்படி பார்த்துக்கொண்டு இருக்கும் போது சில காட்சிகளை படமாக்க மாற்ற இயலுமா என்று கீ போர்டில் உள்ள Print Screen அழுத்தி எடுக்கப்பார்த்தேன்.

முயற்சி தோல்வியில் முடிந்தது.

அதுக்கு வழியில்லாமலா போய் விடும் என்று கூகிளாண்டவரிடம் கேட்டேன்.நிறைய பதில் கொடுத்தார்.ஆனால் என்னுடைய விருப்பம் வேறு மாதிரி இருந்தது.எந்த மென்பொருளையும் நிறுவாமல், இருக்கும் மென்பொருளை வைத்தே ஒப்பேற்ற வேண்டும்.

அதற்கும் வழி சொல்லியிருந்தது இங்கே.

அப்படி எடுத்து, அதை கொஞ்சம் வெட்டி இங்கு போட்டுள்ளேன்.

பாருங்கள்.சரி,அங்கெல்லாம் போக எனக்கு நேரம் இல்லை என்கிறீர்களா??

இந்த செய்முறை W2K க்கு

வழி 1: உங்கள் வெறும் திரையில் எலிக்குட்டி மூலம் வலது சொடுக்கி Properties--->seettings--- Advanced---->Trouble Shooting--->Hardware Accelaration ஐ none பக்கம் கொண்டு வந்துவிடுங்கள்.

வழி 2: மேல் சொன்னதை செய்த பிறகு Real Player---->Tools--->Preference---->Hardware--->Video Card Compatability ஐ இடது பக்கத்துக்கு இழுத்துவிடுங்கள்.

அவ்வளவு தாங்க.

இப்ப Print Screen மூலம் வீடியோவில் உள்ளவற்றை படமாக சேமிக்க முடியும்.

Print Screen க்கு அப்புறம் எப்படி என்பதையும் சொல்லிடுங்களேன்,புதியவர்களுக்கு வசதியாக இருக்கும் என்கிறீர்களா?

இங்கு பார்க்கவும்.

இந்த திரைபிடித்தல் செய்ய மினிமம் உங்கள் வின்டோஸ் கணினியில் ஆபீஸ் மென்பொருள் இருந்தால் சுலபம்.
அதுவும் பவர் பாயிண்ட் இருந்தால் வசதி.
சரி மேட்டருக்கு வருவோம்.
நீங்கள் பிடிக்க நினைக்கும் திரையை திறந்து வைத்துக்கொள்ளவும்.
உங்கள் தட்டச்சில் F12 க்கு பக்கத்தில் பிரிண்ட் ஸ்கிரீன் என்ற கீ இருக்கும்,அதை ஒரு தட்டு தட்டிடீங்க.

இப்போது பவர் பாயிண்டை திறக்கவும்.


1.Blank Presentation.


2.Choose Layout-- கீழே உள்ள கடைசி கட்டத்தை தேர்வு செய்துகொள்ளவும்.(Blank)


3.அந்த வெள்ளைப்பகுதில் உங்கள் எலியை ரைட் கிளிக்கவும்,பேஸ்ட் Select செய்தால் அது அங்கே ஒட்டிக்கொண்டுவிடும்.


4.தேவையான அளவில் சுருக்கிக்கொண்டு பிறகு சேமிக்கும் போது அதை JPEG பைலில் சேமிக்க வேண்டும்.


அவ்வளவு தான்.

Sunday, October 28, 2007

சார்லி சாப்ளின்

என்னை கவர்ந்த பல நடிகர்களிடைய இவருக்கு தனியிடம் உண்டு.
அதே நினைவுடன் ஏதாவது சலனப்படம் இருக்கிறதா? என்று தேடிய போது சுமார் 70 வருடங்களுக்கு முன்பு அவர் பேசிய வசனம் இங்கே.

நாட்டின்/உலகத்தின் நிலைமை இன்னும் மாறாமல் இருப்பது தான் இதில் அதிசயம்.

சும்மா ஒவ்வொரு வரியும் சாட்டையை கொண்டு அடிப்பது போல் இருக்கிறது.

பார்த்து மகிழுங்கள்.

Chalie Chaplin Political Speech

Add to My Profile | More Videos

Wednesday, October 24, 2007

சீனக்குழந்தையின் பரத நாட்டியம்

இது போன வாரம் ஸ்ரீ சிவா கிருஷ்ணா கோவிலில் நடந்த நிகழ்ச்சியின் கடைசி சலனப்படம்.
இதில் ஆடியுள்ள சீனக்குழந்தைகளின் அபிநயத்தை பாருங்கள். So Cute.
மத்தியில் உட்கார்ந்திருக்கும் மீனாட்சி குழந்தையின் தேர்வும் நடிப்பும் அருமை.
அப்படியே ஒரு மாமியின் கை மிருதங்க ரசிப்பையும் & தட்டலையும் பாருங்கள்.அவர்கள் பையன் வாசிக்கிறான் போலும்.
பார்த்து மகிழுங்கள்.

Tuesday, October 23, 2007

குழந்தைகள் பரத நாட்டியம்.

சிங்கை ஸ்ரீ சிவா கிருஸ்ணா கோவிலில் போன வெள்ளி அன்று நடந்த நவராத்திரி கலை விழாவில் ஆடிய குழந்தைகளின் சலனப்படம் கீழே.
அடுத்த பகுதி பிறகு வரும்.

Monday, October 22, 2007

நவராத்திரி விழா- பாகம் 1

போன வெள்ளியன்று நடந்த நவராத்திரி கலை விழாவில் நடந்த சில சலனப்படங்கள் இங்கு உங்கள் பார்வைக்காக...

இப்போதைக்கு பாகம் 1 மாத்திரம்.

மற்றவை தொடரும்.

Saturday, October 20, 2007

நவராத்திரி விழா- சிங்கப்பூர்

நேற்று காலை நம்ம KRS பதிவை படித்தவுடன் தான் சிங்கையில் இருக்கும் துர்கா வீணை வாசிக்கப்போது எனக்கு தெரிந்தது. அப்போது அவர் கூகிள் டாக்கில் இருந்ததால் எங்கு என்ற விபரம் கேட்டு தெரிந்துகொண்டு,அதன் பிறகு வரைப்படம் மூலம் எங்கிருந்து போனால்
சுலபமாக இருக்கும் என்று பார்த்து முடிவு செய்தேன்.

பேசிக்கொண்டிருக்கும் போதே டீச்சரிடம் இருந்து மெயில்.. அப்பா நண்பர்களே நம்மில் ஒருவர் வீணை வாசிக்கிறார் போய் புகைப்படம் எடுத்து போடுங்கள் என்று.என்னிடம் கேமிரா உள்ளது..ஆனால் விடியோ கேமிரா இல்லை. கோவியார் வந்தால் அவரை படம் எடுக்கச்சொல்லலாம் என்று நினைத்திருந்தேன்.திடிரென்று ஒரு யோஜனை அலுவலகத்தில் உள்ள வீடியோ கேமிரா தூங்கிக்கொண்டு தானே இருக்கிறது அதை எடுத்துப்போகலாம் என்று முடிவு செய்து அதன் மின்கலங்களை மின்னேற்றம் செய்து வைக்க ஆரம்பித்தேன்.

நான் வேலை செய்யும் இடத்தில் இருந்தே நேரடி பேருந்து சேவை இருந்தும் நிறைய கால அவகாசம் இருப்பதால் வீட்டுக்குப் போய் அங்கிருந்து ரயில்/பேருந்து வழி போகலாம் என்று வீட்டுக்குப் போய்விட்டேன்.இதற்கிடையில் கோவியார் கூப்பிட்டு அவரால் வரமுடியாததை சொன்னார்.

சுமார் 7.20 க்கு கிளம்பி உட்லேண்ட்ஸ் போய் தடம் 178 மூலம் போய் சேர்ந்தேன்.சாலையில் கார்கள் வரிசை பிடித்து நிற்கும் போதே தெரிந்தது இங்கு தான் ஏதோ நிகழ்ச்சி என்று.நுழைவாயிலில் போகும் போதே குழந்தைகள் அழகழகான ஆடைகளுடன் முன் வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள்.நேராக போய் சாமி கும்பிட்டுவிட்டு மேடை பக்கம் வரவும் நிகழ்ச்சி ஆரம்பித்தது.

முதல் படம்இரண்டுமூன்றாவதுநான்காவதுஐந்தாவதுஆறாவது (தலைச்சுட்டி) அம்மாக்களுக்கு செம வேலை இருந்திருக்கும்.எல்லாம் ஒவ்வொரு "பூ".ஏழாவதுஎட்டாவதுபல சமயம் 2 கேமிராக்களை வைத்து படம் எடுக்க முடியாததால் படங்கள் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது.ஏதோ பார்த்து வையுங்கள்.

something is better nothing.

யோவ்! இதுல யாருயா துர்கா? அதைப்போடாமல் என்ன போட்டோ பதிவு எல்லாம்? என்று கேட்கிறீர்களா?

அவுங்க என்று நான் நினைத்திருக்கும் படங்களை அவருக்கு அனுப்பியுள்ளேன்.இஷ்டப்பட்டால் அவர் ஏற்றுவார்.

பின் குறிப்பு: குழந்தைகளை வரிசைகிரமமாக மேடைக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணி கேட்டார்... உங்கள் குழந்தை இங்கு பாடுகிறதா? என்று.அதற்கு நான்,எனக்கு தெரிந்தவர் ஒருவர் வீணை வாசிக்கிறார் அதை வீடியோ எடுக்க வந்துள்ளேன் என்றேன்.
என்னுடைய வீடியோவில் இருக்கும் LCD மூலம் என் பின்னால் இருந்து பார்த்துக்கொண்டிருப்பார் போலும்.

ஓரளவு துர்காவை அனுமானிக்க முடிந்தாலும்.பொது இடத்தில் பேச வேண்டாம் என்பதால் அவரை சந்திக்கவில்லை.அதனால் அவர் அப்பா/சகோதர்களை சந்திக்கும் வாய்ப்பையும் இழந்தேன்.

இன்னொரு வாய்ப்பு கிடைக்காமலா போகும்?

Thursday, October 18, 2007

சிங்கப்பூர் - வறுமை

ஆசியானில் சிங்கப்பூரை சுற்றி இருக்கும் நாடுகள் வறுமையில் உழன்று கொண்டு இருக்கும் போது எப்படி சிங்கப்பூர் மட்டும் தப்பிப்பிழைத்தது???

மதியுரை அமைச்சர் திரு லி க்யூவான் யூ பட்டியலிட்டு இருப்பதை இன்று (15/10/07) செய்திகளில் கேட்டேன்.. இதோ உங்களுக்காக

1.நல்ல திறமையான/ஊழலற்ற அரசாங்கம்.

2.நல்ல தலமைத்துவம்.

3.வாய்ப்புகளை நன்கு பயண்படுத்திக்கொள்ளும் தொழிலதிபர்கள்/சிங்கப்பூரர்கள்.

ஞாபாகத்திலாவது வைத்துக்கொள்வோம். ஹூம்!!

சிங்கை "சியான்"

நம்மூரில் சியான் என்றால் பலருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் இங்கு??

ஆங்கிலத்தில் சொன்னால் பலரும் புரிந்துகொள்வார்கள்.அந்த விஷயத்துக்கு பிறகு வருவோம்.

நேற்று இரவு சிங்கைக்கு வந்து சேர்ந்தது A380 ரக விமானம்.இரட்டை அடுக்கு கொண்ட விமானம் 12 மணி நேர பிரயாணத்துக்குப் பிறகு ஃபிரான்ஸ்- டோலோஸ் நகரில் இருந்து சுமார் 6.40க்கு சிங்கை முனையம் 3 க்கு வந்து சேர்ந்தது.அதை வர வேற்க பிரதமர் உட்பட பலர் வந்திருந்தனர்.இதைப் போல இன்னும் 19 விமானங்கள் வாங்க இருக்கிறது சிங்கப்பூர் ஏர் லயன்ஸ். அதற்குப் பிறகு தன்னிடம் உள்ள சில 747 ரக விமானங்களை விற்க உள்ளது.யாருக்காவது வேண்டுமானால் அவர்களை தொடர்புகொள்ளவும். :-)இந்த விமானத்துக்காகவே கட்டப்பட்டது போல உள்ளது முனையம் மூன்று.இது சுமார் 1.9 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

இதன் வரவை ஒட்டி பேசிய முதல்வர் SIA வின் வெற்றிக்கு கடும் உழைப்பை காரணமாக சொல்லியுள்ளார். கவனிக்க "உழைப்பை".சுற்றி உள்ள பெரிய பெரிய தேசங்களால் இன்னும் முடியாததை சிங்கை செய்துகாட்டியுள்ளது பெருமைக்குரியது.சிங்கப்பூர் மகுடத்தில் இது இன்னொரு வைரக்கல்.

சியான் பற்றி வருவோம்.நம்மூரில் சியான் என்றால் ஒரு "தல" மாதிரி இமேஜ் தானே??

அப்படி என்றால்.. Mr. Lee Hsien Loong கூட சிங்கையின் தல தான்.இம்மாம் பெரிய விமானத்தை முதல் முதலில் கொண்டு வந்த "தல". அவர் தான் பிரதம மந்திரி.

சிங்கை சும்மா நிமிர்ந்து நிற்கிறது.

Wednesday, October 17, 2007

தலைவலியா?

நம்மில் பலர் மைக்ரேன் அல்லது வேறுவிதமான தலைவலிக்கு சும்மா அப்படியே ஒரு பெனடாலை போட்டு சரி பண்ணிக்கொள்கிறோம்.இதே போல் நானும் பல தடவை செய்துள்ளேன்.
சற்று முன் எனக்கு வந்த மின் அஞ்சலை இங்கு இணைத்துள்ளேன்.படித்து முயற்சித்து பார்க்கவும்.அதோடிலில்லாமல் பெனடால் பற்றி சொல்லியுள்ளதையும் கவனித்துக்கொள்ளவும்.இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

அந்த மின்னஞ்சல் இது தான்.

Try 100PLUS & WATER - NOT PANADOL

DON'T TAKE PANADOL AND PANADOL ACTI FAST AND PANADOL SOLUBLE especially if you have gastric problems FYI...

One real story from a friend....

My husband was working in a hospital as an IT engineer, as the hospital is planning to set up a database of its patient. And he knows some of the doctors quite well. The doctors used to tell him that whenever they have a headache, they are not willing to take PANADOL (PARACETMOL).

In fact, they will turn to Chinese Herbal Medicine or find other alternatives.This is because Panadol is toxic to the body, and it harms the liver. According to the doctor, Panadol will reside in the body for at least 5 years. And according to the doctor, there used to be an incident where an air stewardess consumes a lot of panadol during her menstrual as she needs to stand all the time. She's now in her early 30's, and she needs to wash her kidney (DIALYSIS) every Month.

As said by the doctor that whenever we have a headache, that's because it is due to the electron/Ion imbalance in the brain. As an alternative solution to cope with this matter, they suggested that we buy 1 or 2 cans of isotonic drink ( eg.100PLUS), and mix it with drinking water according to a ratio of 1:1 or 1:2 (simply, it means one cup 100plus, one cup water.or 2 cups water). I and my husband have tried this on several occasions, and it seems to work well.

Another method will be to submerge your feet in a basin of warm water so that it brings the blood pressure down from your throbbing head. As Panadol is a pain killer, the more Panadol you take, the lesser would be your threshold for pain (your endurance level for pain). We all will fall ill as we age, for woman, we would need to go through childbirth.. Imagine that we had spent our entire life popping quite a substantial amount of Panadol (Pain Killer) when you need to have a surgery or operation, you will need a much more amount of general anesthetic to numb your surgical pain than the average person who seldom or rarely takes Panadol .

If you have a very high intake of Panadol throughout your life (Migraine, Menstrual cramps) it is very likely that normal general anesthetic will have no effects on you as your body is pumped full with panadol and your body is so used to pain killer that you would need a much stronger pain killer, Morphine?? Value your life, THINK b4 you easily pop that familiar pill into your mouth again.

Please send this to people you care about.

Monday, October 15, 2007

கேட்கணும் ... பிடிக்கணும்

கொஞ்ச மாதங்களுக்கு முன்பு இணையத்தில் இருந்து எப்படி பாட்டு பிடிக்கனும் என்று சொல்லியிருந்தேன்.அது கொஞ்சம் வன்பொருட்கள் வாங்கி சொருக வேண்டிய விஷுயம்,இப்போ அது கூட தேவையில்லையாம்.

கீழே கொடுத்துள்ள "சுட்டி" யில் சொடுக்கவும்.

"சுட்டி"

இதை ஃபயர்பாக்ஸில் add-on ஆக நிறுவிக்கொள்ளவும்.கீழே உள்ள மாதிரி ஒரு டூல் பார் வந்து விடும்.கேட்கவேண்டிய பாடலை சொடுக்கவும் அப்படியே இந்த டூல் பாரில் உள்ள Record பட்டனை சொடுக்கினால் முடிந்தது.அப்படியே பாட்டை mp3 யாக மாற்றி கொடுத்துவிடுகிறது.


நாட்டுக்கட்டையை பிடிச்சி பார்த்தேன்... நல்லாத்தான் இருக்கு. :-))


Enjoy மக்கள்.

வசந்தம் - நட்சத்திரம்

பட உதவி: வசந்தம் சென்ரல்.

இங்கு சிங்கையில் உள்ள தொலைக்காட்சியில் தமிழை கேட்க வேண்டும் என்றால் இந்த சேனைலைத்தான் தேட வேண்டும்.கம்பி வடம் மூலம் சன்/விஜய் தொலக்காட்சிகள் வருகிறது என்றாலும் உள்ளூர் நிகழ்வுகளையும் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி அவர்கள் நிகழ்ச்சியை படைக்க்கும் ஒரே தொலைக்காட்சி "வசந்தம் சென்ரல்".வீடு என்னுடையது இல்லை என்றதும் நான் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்வுகள் மிகவும் சுருங்கிவிட்டன. செய்திகள் மட்டும் பார்ப்பேன் அதனூடே வரும் விளம்பரங்களில் இந்த வசந்தம் ஸ்டாரின் பாட்டுப்போட்டிகள் பற்றியும் வந்தது.அப்படி வந்த போது இந்த குரல்/வித்தியாசமான தமிழ் பாடும் முகம் கவர்நதது.ஒரே ஒரு தடவை தான் கேட்டேன் அப்படியே அசந்துவிட்டேன்.

நேற்று தான் கடைசி நான்கு பேர்களுக்குள் இடையே நடந்தது.இதைக்கான அமைச்சர் ஈஸ்வரன் வந்திருந்தார். அவர் தான் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

நடுவர்களின் முடிவும் SMS வாக்கும் சேர்ந்து எபி சங்கரா என்பவருக்கு முதல் பரிசை கொடுத்தது.இரண்டாம் நிலையில் வந்தவர் தான் நீதிபதிகளால் தேர்ந்தெடுக்கபட்டும் SMS முடிவுகள் நிலமையை இவர் பக்கம் சாய்த்துவிட்டது.

அவர் பாடும் ஒரு பாடல் இங்கு கிடைத்தது. பார்த்து மகிழுங்கள்.ஏற்றியவருக்கு மிக்க நன்றி.

பாடல் 1

பாடல் 2

எபி சங்கரா... மனமார வாழ்த்துகிறேன். கூடிய சீக்கிரம் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள்.சில வார்த்தைகள் பேசுவதற்குள் திணறிவிடுகிறீர்கள்.

யூ டியூபில் பார்க்கமுடியாதவர்களுக்காக...

W2K வும் தமிழும்

போன வாரம் என் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர் "கால் கடுதாசி" கொடுத்திட்டு போய்விட்டார்.அவர் உபயோகித்த கணினி W2K இயங்கு தளம் ஆனால் என்னுடையது Win98.என்னுடைய கணினியில் தமிழை கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றிருந்தது அதனால் அவருடைய W2K கணினியை உபயோகப்படுத்தலாம் என்று நினைத்து ஆரம்பித்தேன்.
வழக்கம் போல் தமிழ்மணம் போனால் "பல்லிலித்தது".
நமக்குத்தான் தெரியுமே என்ன செய்யனும் என்று..

Start--->control panel ---> Regional Option ----> select Indic font and apply அவ்வளவு தான்.

அந்த அப்ளை அனுப்பியவுடன் உங்க 2000 வட்டை கேட்க்கும். அங்கு தான் பிரச்சனை.பல அலுவலக கணினிகளின் வட்டு வேறு எங்கோ இருக்கும் இல்லை என்றால் இருக்கவே இருக்காது.இந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது அது என்னென்ன கோப்புகள் தேவைபடுகிறது என்று தெரிந்தால் அதை தறவிரக்கம் செய்து நிறுவிவிடலாம் என்று பட்டது.அப்படி முயற்சிக்கும் போது கிடைத்த கோப்புகள் இது. இவை அனைத்தும் இணையத்தில் கிடைக்கிறது.தேடி எடுத்துக்கொள்ளவும்.

என்னை மாதிரி அவஸ்தை படுபவர்களுக்காக கோப்புக்கள் விபரம் கீழே கொடுத்துள்ளேன்.

1.c_iscii.dll

2.kbdindev.dll

3.kbdintam.dll

4.kbdinmar.dll

5.kbdinhin.dll

6.mangal.ttf

7.latha.ttf.

கிடைக்காதவர்கள் சொல்லவும்...தனி மின் அஞ்சலில் அனுப்பிவைக்கிறேன்.

Tuesday, September 18, 2007

நீ ட்யூப் லைட்டா?

நீ எல்லாம் ட்யூப் லைட்டாடா?

இனி சற்று மந்தமாக நடந்துகொள்பவர்களை இப்படியெல்லாம் திட்ட முடியாது என்று நினைக்கிறேன்.

இந்த பழைய குழல் விளக்கில் பல நண்மைகள் உள்ளன.குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சம் கொடுக்கக்கூடியது,அவ்வளவாக நிழல் விழாது.. என்று பல.
அமெரிக்காவில் மட்டும் ஒரு வருடத்துக்கு அரை பில்லியன் குழல் விளக்குகள் தூக்கி எரியப்படுகின்றன என்றால் இதன் உபயோகத்தின் அளவு தெரிகிறது.

விலை மற்ற விளக்குகளை காட்டிலும் குறைவாக இருப்பதால் வசதி குறைந்த மக்களும் வாங்கும் நிலையில் உள்ளது,அதனாலே என்னவோ கோவிலுக்கும் உபயம் பண்ணமுடிகிறது.அப்படியே அதன் மேல் உபயதாரர் என்று பெயரையும் எழுத முடிகிறது.

இவ்வளவு முன்னுரை எதுக்கு தெரியுமா? இன்னும் கொஞ்ச வருடங்களில் இது இருந்த இடத்தை LED (Light Emitting Diaode) முறை சாப்பிட்டு ஏப்பம் விடபோகிறதாம்.

இப்படி வரப்போகிற விளக்கின் அருமை பெருமைகளை பார்ப்போமா?

10 வருட வாழ்கை
அளவு குறைந்த மின்சார உபயோகிப்பு
மறு சுழற்ச்சியில் வரும் பொருட்கள் மூலம் தயாரிப்பு.
குளிர் கால சூழ்நிலைக்கு ஏற்றது.
அதோடில்லாமல் இப்போது இருக்கும் குழல் விளக்கு இருக்கும் இடத்திலேயே பொருத்தக்கூடிய வசதி என்று பல காரணங்களை சொல்லியுள்ளார்கள்.

மேலாதிக்க விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும்.

வவ்வாலில் காற்றில் இருந்து தண்ணீருக்காக தேடும் போது கிடைத்தது.

Monday, September 17, 2007

பார்க்கலாமா? வேண்டாமா?

இன்று தமிழில் வலைப்பதியும் அன்பர்களில் பலர் இந்த ஆண்டில் பிறந்திருக்க வாய்ப்பில்லை,விதிவிலக்கு உள்ளது. அப்படியே பிறந்திருந்தாலும,இதெல்லாம் ஞாபகம் இருந்திருக்காது.்

கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்.நம் முன்னோர்கள்் வாழ்ந்த வாழ்கையை.

Saturday, September 15, 2007

தவிக்குது தயங்குது.

எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு ஆசை இருந்தது,ஆதாவது ஒரு திறந்த இதய அறுவை சிகிச்சை நேரடியாக பார்க்கவேண்டும் என்பது.

நமது VSK ஐயா இதைப்பற்றிய பதிவு போட்ட போது, இன்னும் ஆர்வம் அதிகமாயிற்று.இன்று மெகாவீடியோ வில் தேடு என்று போட்ட போது சிக்கிய வீடியோ இது.பார்த்து மகிழுங்கள்.

அதில் ஏதோ வெள்ளையாக வைக்கிறார்கள் என்னவென்று தெரியவில்லை.பேஸ் மேக்கராக இருக்கலாமோ என்னவோ?
இதை பார்க்கும் போது இளையராஜா இசை போட்ட ஒரு பாட்டு தான் ஞாபகத்துக்கு வந்தது.படத்துடன் இப்பாடலை கேட்டுப் பாருங்கள்.

தவிக்குது தயங்குது ஒரு மனது..
தினம் தினம் தூங்காமலே..

பாட்டு போடலாம் என்று பார்த்தால் கிடைக்கமாட்டேன் என்கிறது.

கானாபிரபா... இந்த பாடல் இருக்கா? (கொடுத்துவிட்டார்,கானாபிரபா- மிக்க நன்றி)

Get this widget | Share | Track details


இந்த இசையில் பாருங்கள் இதயம் துடிக்கும் ரிதம் இருக்கும்.அதான் இளையராஜா.

Thursday, September 13, 2007

உருட்டுப் பந்து

அதாங்க Bowling,

இது கிரிக்கெட் அல்ல, underarm bowling மாதிரி உள்ள விளையாட்டு.இதைப்பற்றி நான் முதலில் கேள்விப் பட்டது மலேசியாவில் தான்.அங்கிருந்த ஒரு கிளைன்ட் பொறியாளர் ஒரு நாள் என்னிடம் நாம் பௌளிங் விளையாட போகலாமா ? என்று கேட்டுவிட்டு, எப்படி பௌலிங் பண்ணுவது என்று தெரியுமா? என்று கேட்டு நிறுத்தினார்.

நான் கிரிக்கெட்டில் பௌலிங் போடுவது போல் செய்துகாண்பிக்க... சிரித்து மகிழ்ந்தார்கள்.
அப்போது போக முடியவில்லை,அதற்குப்பிறகும் அதை விளையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.அவ்வப்போது ஏதாவது படத்தில் காண்பிப்பார்கள்.அதோடு சரி என்னுடைய அறிவு இந்த விளையாட்டை பற்றி.

இந்த பின்னனியில் 3 மாதங்களுக்கு முன்பு எங்கள் கம்பெனியில் உருட்டுப்பந்து போட்டி வைக்கப்போகிறோம்,பெயர் கொடுப்பவர்கள் கொடுக்கலாம் என்று சொன்னார்கள்.பொதுவாகவே நான் இந்த மாதிரி எந்த விளையாட்டுக்கும் போவதில்லை.முதல் காரணம் இரவு வீடு திரும்ப வெகு நேரம் ஆவது அடுத்து மரக்கறி உணவு கிடைப்பதில் உள்ள பிரச்சனை.இவற்றை விட மறுநாள் காலை செய்யவேண்டிய வேலைகளில் சுணக்கம் ஏற்படுவது.என்னை மாதிரி பல பேர் செய்வதால் என்னவோ இம்முறை கட்டாயப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.வேறு வழியில்லாமல் என் பெயரும் கொடுக்கப்பட்டது.

நேற்று இரவு நடந்த போட்டிக்கு போகும் முன்பே இந்த விளையாட்டை பற்றிய ஒரு சில விஷயங்களை தெரிந்துகொண்டேன்.

அலுவலகத்தில்,பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நண்பரிடன் கார் இருந்ததால் போகும் போது என்னுடன் வந்து விடு என்றார்.அலுவலக கூட்டத்தில் சிக்காமல் இருக்க மாலை சுமார் 5.15 க்கும் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டோம்.அதற்கு முன் மனைவிக்கு தொலைபேசி இன்று இரவு சேட்டிங் வரமுடியாது என்று சொன்னேன்.இந்த மாதிரி ஏதோ ஒரு காரணம் சொல்லி சென்னை போனதை ஞாபகம் வைத்துக்கொண்டு அங்கு வரப்போகிறீர்களா என்று கேட்டார்.

நாங்கள் விளையாடப்போகும் இடம் புக்கிட் மேரா என்ற இடத்தில் உள்ள சாபரா கிளப்.சும்மா இழைத்து வைத்துள்ளார்கள்.தரைக்கு கீழே கார் நிறுத்தும் இடம்,முதல் மாடியில் நீச்சல் குளம்,இரண்டாம் மாடியில் பௌளிங் சென்டர் மற்றும் சில அறைகள,் பல பயண்பாட்டுக்காக இருந்தது.

பௌளிங் செனட்ரில் உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய வரவேற்பறை போல் இருந்தது.மொத்த இடமும் குளிரூட்டப் பட்டு இருந்தது. வேர்வை வரவே வாய்ப்பு இல்லை.என் நண்பர் ஒருவர் ரொம்ப குளிருதில்ல? என்றார். எனக்கு அப்படி தெரியவில்லை.

நான் போன போது ஒரு சிலர் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.எங்கள் நிறுவனத்துக்கு என்று ஒரு குறிப்பிட்ட லேன்கள் ஒதுக்கியிருந்தார்கள்.என் குழுவில் இருக்கவேண்டிய ஒருவர் வராததால் வேறு ஒருவரை போட்டிருந்தார்கள்.

எங்கள் நிறுவனத்தில் இருந்த ஒருவர் தாங்கள் விளையாட வேண்டிய இடத்தில் வெவ்வேறு கலரில் உள்ள பந்துகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்கள்."ஏன் அப்படி வைக்கிறார்கள்?" என்று ஒருவரிடம் கேட்ட போது,அந்த பந்தின் எடையும் அதன் துவாரம் கை விரல் அளவுக்கு தகுந்த மாதிரி இருப்பது நல்லது என்பதால் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி எடுத்து வைத்துக்கொன்டிருக்கிறார்கள் என்று விளக்கம் தந்தார்.என்னுடைய விரல்/எடை க்கு தேவையானதை எடுத்துவைத்துக்கொண்டிருக்கும் போது, பௌலின் போடும் இடத்துக்கு போவதற்கு முன்னால் அந்த கிளப்பில் உள்ள ஷூவை உபயோகபடுத்த வேண்டும் என்றார்கள்.இது தான் அந்த ஷூ.வழ வழப்பான தரைக்கு அது கொஞ்சம் பிடிப்பு கொடுக்கும் என்று நினைத்தேன்.அப்படி ஒன்றும் இல்லை.இந்த முன்னேற்பாடுகள் நடந்துகொன்டிருக்கும் போதே எங்கள் உயர் அதிகாரிகள் பக்கத்தில் உள்ள ஒரு லேனில் பயிற்சி செய்ய ஆரம்பித்தார்கள்.எனக்கும் ஆசை தொற்றிக்கொள்ள "நானும் முயலலாமா?" என்றேன்.

"தாராளமாக" என்றார்கள்.

முதல் பந்து வீசிய போது கையில் இருந்து கொஞ்சம் உயரத்தில் இருந்து விழுந்தது போல் சத்தம் கொடுத்து உருண்டோடி இடது பக்கத்தில் இருக்கும் பின்னை அடித்தது.போடுவதற்கு முன்பு கால் கொஞ்சம் வழுக்கியமாதிரி இருந்தது. சிறிது நேரத்தில் அதன் நேர்த்தி பிடிபட்டது. பந்தின் எடை அதிகமாக இருப்பதால் கையில் எங்கோ ஒருவித வலி ஏற்படுபவது போல் தோன்றியது ஆனால் சில நிமிடங்களில் காணாமல் போனது.

போட்டி ஆரம்பிக்கும் போது,ஆட்டம் ஓரளவு பிடிபட்டது.டிவி திறையில் யார் எந்த லேனில் விளையாடவேண்டும் எனபதையும் & ஆட்ட முடிவுகளையும் காண்பிக்கிறது.போட்ட பந்து திருப்ப நாம் இருக்கும் இடத்துக்கே வருகிறது.கை ஈரம் காய ஒருசின்ன துவாரம் வழியாக காற்று வந்துகொண்டிருக்கிறது. சிலர் பவுடர்களையும் கையில் போட்டுக் கொள்கிறார்கள்.

போட்ட பந்து இங்கு தான் திரும்பி வரும்.4 ஆட்டம்.2 வீச்சுக்குள் எல்லா பின்களையும் வீழ்ந்த முடிந்ததை பார்த்த எங்கள் தலைவர் "நிஜமாகவே சொல்லு! இது தான் முதல் தடவையா? " என்றார்.எப்படி முடிந்தது என்று கேட்கிறீர்களா? பதிலுக்கு கடைசி வரை வாருங்கள்.

4 பேர் உள்ள எங்கள் குழூ ஒவ்வொரு கேமில் முன்னேறி கடைசி கேமில் 573 பாயிண்ட்ஸ் எடுத்தோம்.கீழே எங்கள் குழு. என்னை படம் எடுக்கும் போதா மின்கலம் தீர்ந்துபோகவேண்டும்?வெளிர் பச்சை நிற சட்டையில் ் போடுபவரும் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்களும் தான் எங்கள் குழு.7.30 மணிக்கு ஆரம்பித்து 9.30 மணிக்கு முடித்தோம்.மற்றவர்கள் முடிக்க நேரம் ஆனதால் சிறிது நேரம் மற்றவர்களின் ஆட்டத்தை காணும் போது மேலும் சில விஷயங்கள் புரிபட்டது. அதுவும் பெண்கள் எடையில் சிறிய பந்துகள் மூலம் வேகம் குறைந்த அளவில் வீசி அத்தனை பின்களையும் வீழ்த்திய போது ஆச்சரியமாக இருந்தது.

அங்கிருந்து வீட்டுக்கு வர சுமார் 1.30 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் எனபதால் என் சக ஊழியரிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.வீடு வந்து சேரும் போது இரவு 11.

மறு நாள் காலை அலுவலகத்துக்கு வந்து மேசையின் மீது பையை வைக்கும் போது பார்த்தால் அழகான ஒரு பின்... கீழே உள்ள மாதிரி. ஆதாவது எங்கள் குழுவுக்கு மூன்றாவது பரிசாம்.

இந்த விளையாட்டு ஒன்றும் பெரிய விளையாட்டு அல்ல,நீங்கள் கோலி குண்டு ஆடியிருந்தால்.
நம்ம வலைப்பதிவர் ஹரிஹரன் எழுதிய(இதை அங்கு துழாவி கண்டுபிடிக்கவே வெகு நேரம் ஆனது-லாக் &போந்தா) பதிவு இங்கு.

பலர் ஆச்சரியப்பட்டு கேட்கும் போது நான் சொன்ன பதில் "I used to play marbles during my early days,I used that technic".

கிடைத்த பரிசு.

இதனால் சொல்வது என்னவென்றால் கோலி குண்டு விளையாட தெரிந்தால் உருட்டுப்பந்து விளையாடிவிடலாம்.கொஞ்சம் தெம்பாக இருப்பது நலம். என் நண்பரும் இதே மாதிரி முதல் தடவை வந்து உருட்டும் போது கொஞ்சம் பயந்துவிட்டேன் "எங்கே பந்து அவரையும் தூக்கிட்டு போயிட போகுதே!!" என்று.

Tuesday, September 04, 2007

முடிஞ்சா...

கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்

எப்படியெல்லாம் ஓட வேண்டியிருக்கிறது??

Monday, September 03, 2007

கனவுகள்

திருமதி வல்லி சிம்ஹன்,என்னுடைய கனவுகளை போடச்சொல்லி கேட்டிருந்தாங்க.அப்புறம் தான் தோனிற்று எனக்கு ஏதாவது கனவு இருக்கா? என்று.

இனிமேல் தான் யோசிக்கனும்.

என்னுடைய கனவுகள் எதுவே பெரிதானதாக இல்லை.நான் கிடைப்பதை வைத்து சந்தோஷப்படுவதால் பெரிதாக ஆசைப்படுவதுமில்லை.சின்ன வயதில் நல்ல ஆடை உடுத்த வேண்டும் பேண்டு போட வேண்டும் என்று ஆனால் அப்படி ஏதும் உடனடியாக நிகழாமல் போனதால் நாளடைவில் இருப்பதை கொண்டு வாழ கற்றுக்கொண்டேன்.

எனது கனவுகள் தூங்கும் போது வருவதில்லை,முழித்துகொண்டு இருக்கும் போதே இருக்கும்.

அவற்றில் சில.

முதலாவதாக கணினி மென்பொருள் பற்றி படித்து ஒரு பட்டப்படிப்பு வாங்க வேண்டும் என்பது.(தேவையா/முடியுமா என்பது பற்றிய கேள்விகள் இருக்கிறது)

இரண்டாவதாக கார் வாங்கவேண்டும். (அடையக்கூடியது தான் - ஊருக்கு போன பிறகு)

தொழில் செய்ய வேண்டும்- நேர்மையாக, எளியவர்களுக்கு குறைந்த விலையில் வீடு கட்டி தர வேண்டும்.(மா.சிவகுமாரின் வேண்டுகோள் இது)

80 வயது வரை உடல் நலத்துடன் இருக்கவேண்டும்.ஏனென்றால் அது வரை தான் வாழ்கைக்கு தேவையான பொருளாதாரத்தை சேர்க்க நினைத்துள்ளேன்.

நல்ல தகப்பன் - என்று என் மகன் சொல்ல வேண்டும்.

இவையெல்லாம் தான் தற்போது ஞாபகத்துக்கு வந்தது.

நான் அழைக்க விரும்பும் சிலர்

முடிந்த போது போடுங்கள், நண்பர்களே.

1.வவ்வால்

2.தென்றல்

3.கோவி.கண்ணன்

4.CVR

5.நா.கண்ணன்.

பல் மருத்துவர்

கொஞ்ச வருடங்களாக பல் மீது கரிசனத்தினால் ஒரு வருடத்துக்கு ஒரு முறையாவது போய் அவரை பார்த்துவிட்டு வருவது வழக்கம்.அதுவும் நிறுவனம் பணம் கொடுத்துவிடும் என்பதால் தவறாமல் போய் விடுவேன்.நிறுவனம் முழுவதும் கொடுக்காது வருடத்துக்கு 100 வெள்ளி மட்டும் தான் அதற்கு மேல் போனால் நாம் தான் கொடுக்கவேண்டும்.

போன வருடம் போன போது மருத்துவர் முதலில் பல்லைப் பார்த்துவிட்டு "ஏற்கனவே செய்த அடைப்பு நன்றாக இல்லை அதை எடுத்துவிட்டு புதிதாக போடலாமா?" என்றார்.

'தாராளமாக"

மேலும் பார்த்துவிட்டு வலது பக்கமும் சிறிதாக உள்ளது அதை இப்போதே அடைத்துவிட்டால் நல்லது என்றார்.

"சரி"

சுமார் 20~25 நிமிடங்கள் பல்லை சுத்தம் செய்து எங்கெங்கு அடைப்பு தேவைப்படுகிறதோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கும் போது

"மேலும் ஒரு ஓட்டை இருக்கு" அதையும் அடைத்திடவா? கூட ஒரு 50 வெள்ளி ஆகும். என்று கேட்டார்.

ஏற்கனவே வாயில் பைப் (தண்ணீரை உரிஞ்ச) பேச கூட முடியாததால் தலையை ஆட்டுவது மட்டுமே வழி என்பதால் தலையை ஆட்டினேன்.

எல்லாம் முடிந்த பிறகு பில் வந்த போது தான் உறைத்தது.மொத்தம் 170 வெள்ளி. இது ஒரு டெக்னிக்காக உபயோகப்படுத்துகிறார்கள் போலும்.சில பல் மருத்துவர்கள் உங்கள் நிறுவனம் ஆண்டுக்கு எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று கேட்டு சிகிச்சை செய்கிறார்கள்.அது நடந்தது போன ஆண்டு.இந்த ஆண்டு..

போன வாரம் ஆரம்பத்தில் இங்குள்ள ஒரு பல் மருத்துவமனையில் முன் பதிவு செய்துகொண்டேன்.சிகிச்சைக்கு 2 நாட்கள் முன்பும் சிகிச்சை அன்றும் மருத்துவமனையில் இருந்து கூப்பிட்டு ஞாபகப்படுத்தினார்கள்.

சிகிச்சை நாளில் மருத்துவர் பார்த்துவிட்டு,சுத்தப்படுத்திவிட்டு ,ஏதோ flourasent போடுகிறேன் என்றார்.

சரி என்றேன்.

வெறும் 10~15 நிமிடங்கள் தான்.பற்களின் சில இடங்களில் மட்டுமே சுத்தம் செய்து விட்டு ஏதோ ரப்பர் மாதிரி ஒன்றை கடிக்கச்சொன்னார் அதில் இருந்த ஃப்ளோரசன்ட் வாய் உள்ளே ஓடியது.சில நிமிடங்கள் வாயில் வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு துப்பிட சொன்னார்.

அவ்வளவு தான் சிகிச்சை.

பில்: 97 வெள்ளி.

நான் எதிர்பார்க்கவில்லை,இப்படியும், ஒரு பல் மருத்துவர் சேவை இருக்கும் என்று.

சின்னதாக சொன்னா


"சாயங்கால கொள்ளை"

Thursday, August 30, 2007

சிங்கை 2 சீனா

வருடம் 2015 யில் சிங்கையில் இருந்து சீனாவுக்கு ரயிலேயே போகலாம் போலிருக்கு. இது நேற்று செய்தித்தாளில் வெளியிடப்பட்டது.
இது போகும் இடங்கள் வருமாறு

1.சிங்கப்பூர்
2.கோலாலம்பூர் (மலேசிய தலைநகரம்)
3.பேங்காக் (தாய்லாந்தின் தலைநகரம்)
4.பூனம் பேன் (கம்போடியா தலைநகரம்)
5.ஹோ சி மின் (வியட்நாம் தலைநகர்)
6.குன் மிங் (சீனா)

இதில் கம்போடியா மற்றும் வியட்நாம் தலைநகருக்கு இடையில் இருக்கும் இடம் தான் கொஞ்சம் இடர் கொடுக்கிறதாம்,அது முடிந்துவிட்டால் மொத்தமும் தயாராகிவிடும் என்று சொல்லியுள்ளார்கள்.

இதற்கு ஆகும் செலவு 3 பில்லியனாம்,அதற்கு தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

மேல் விபரங்களுக்கு கீழ் உள்ள படத்தை பாருங்கள்/படியுங்கள்.

நன்றி: தி ஸ்டெரிய்ட்ஸ் டைம்ஸ்
Tuesday, August 28, 2007

புகைப்படத்தில் இருந்து வீடியோ

எனக்கு தெரிந்த நண்பர் இந்த மென்பொருளை சுட்டிக்காட்டி மிகவும் நன்றாக இருப்பதாக சொன்னார்,சரி நாமும் உபயோகப்படுத்தி பார்க்கலாம் என்று உபயோகித்த படம் கீழே ஊள்ளது.

எப்படி இருக்கிறது பாருங்கள்.

உங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கொடுத்தால் போதும் டிவிடி/விசிடி யாகவோ அதுவே மாற்றிக்கொடுத்துவிடும்.பின்புலத்தில் இசை வேண்டும் என்றாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
ஒரு புகைப்படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் மாறக்கூடிய Transition ஐயும் மாற்றிக்கொள்ளலாம்.

முயன்று பாருங்கள்.

இதோ என்னுடைய முயற்சிஇந்த மென்பொருளின் பெயர் : Memories on TV.

Monday, August 20, 2007

தேசிய தினம்

சிங்கப்பூர் தேசிய தினத்தை ஒட்டி பிரதமர் திரு லீ சியான் லூங் சொன்ன உரையின் தமிழாக்கத்தை திரு சண்முகம் சொல்ல கேட்கலாம்.

உதவி: ஒலி.96.8

பிரதமர் பேச்சு.mp3

Wednesday, August 15, 2007

ஃபயர் பாக்ஸில் பாட்டுப்பெட்டி

இன்னும் என்னை மாதிரி சில ஆட்கள் அலுவலகத்தில் வின்98 உபயோகப்படுத்தலாம்.
அப்படி உபயோகப்படுத்தும் போது சில வலைப்பக்கம்/வலைப்பூக்களில் பாடல்கள் பேச்சுக்கள் உள்ள பகுதிகளை கேட்க ஏதாவது ஒரு மீடியா பிளேயர் இருந்தாலும் அந்த ஆடியோ உள்ள இடத்தில் "Missing Plug-in" என்று காண்பிக்கும்.

சரி என்று அதை சொடுக்கினால் தேவையான பிளக் இன்னை தேடும் பிறகு மீடியா பிளேயர் 11/ஆப்பிள் பிளேயரை ஐ இறக்கச்சொல்லும்.

இந்த 11 Version வின்XP மற்றும் விஸ்டாவுக்குத்தான்,அதனால் வின்98 கணினியில் நிறுவமுடியாது.
இதற்கு வேறு வழியில்லையா என்று முயற்சிக்கும் போது தான் கிடைத்தது,ஆதாவது ஃபயர்பாக்ஸில் ஒரு நீட்சி (Add-on) அதை நிறுவிவிட்டால் போதும்,உலாவியில் கீழ்பக்கம் ஒரு கருப்பு அம்புக்குறி வந்துவிடும் அதனை Configure செய்தால்்,இனி எல்லா பாடல்களையும் கேட்கலாம்.

எலிக்குட்டியின் வலது பக்க சொடுக்கிலும் தேவையானவை வரும்.

முயலுங்கள் தேவையானவர்கள்.

மேல் விபரங்களுக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

Thursday, August 09, 2007

ஆகாய விமானம்

இது நம்மூர் ஏர் இந்தியா விமானி அறையில் இருந்து எடுத்ததாக சொல்கிறார்கள்.எதுக்கும் அடுத்த தடவை ஊருக்கு போகும் போது கொஞ்சம் மேலே கீழே பார்த்துக்குங்க.


Tuesday, August 07, 2007

Mr Bean யின் தம்பி?

Mr Bean ஐ விரும்பாதவர்கள் வெகு சிலரே,விரும்புகிறவர்களுக்கு..

அந்த வரிசையில் கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்..


Wednesday, August 01, 2007

இனிமேல் கேட்பாயாடா???

மவனே!! நீ கேட்டால் நாங்க கொடுத்துவிடனுமா?
சும்மா நச்சுன்னு இருக்கு கேட்டுப்பாருங்கள்,கீழே உள்ள ஆடியோவை.
சிரிப்பு வரா விட்டால் மருத்துவரை கட்டாயம் பார்க்க நேரிடும். :-))))

கேட்பாயா? நீ.mp3

Tuesday, July 31, 2007

சிங்கைத்தமிழ்

தமிழ் சிங்கப்பூரில் ஒரு அரசாங்க மொழி.
இங்குள்ள தமிழர்கள் வீடுகளில் அவ்வளவாக பேச்சுத்தமிழ் இல்லை என்றாலும்,பள்ளிகளிலும் மற்ற பொது இடங்களிலும் அதை மறக்காமல் இருக்க இங்குள்ள அரசாங்கம் பல பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
இங்குள்ள மக்களுக்கு தமிழ் மொழி மறந்து போகாமல் இருக்க வானொலியின் பங்கு மறக்க/மறுக்க முடியாதது.24 மணி நேரமும் ஒலி 96.8 பண்பலையில் தமிழ் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
வெளிநாட்டு தமிழர்களுக்கு இதைவிட்டால் தமிழை கேட்பதற்கு ஒரு நல்ல விடயம் கிடையாது.
பாட்டுக்கு பாட்டு,உலக நடப்புகள்,உள்ளூர் விஷயங்கள் என்று கலந்து கட்டி கொடுப்பதால் 400 வெள்ளி போட்டு ipod வாங்க வேண்டியதை தவிர்க்க முடிந்தது.
உலகத்திலேயே சிறந்த MP3 பிளேயர்- வானொலிதாங்க.
இப்படிப்பட்ட வானொலி "வெளிச்சம்" என்ற நிகழ்ச்சியில் தெள்ளத்தெளிவான தமிழை நாம் அருந்த கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.அதில் ஒன்றை இங்கே கேட்போம்.
இனங்களுக்கிடையே நல்லுறவு
நன்றி: ஒலி 96.8.

Get this widget | Share | Track details