Wednesday, April 29, 2009

பசுமையும் வறட்சியும்.

ஏழு மாதங்கள் கழித்து சிங்கை வந்ததும் வெளியில் போன போது கண்ட முதல் காட்சிநான் போவதற்கு முன்பு மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிவந்த வேலை இப்போது இப்படி காட்சி அளிக்கிறது.பெரிதான காரணம் ஒன்றும் இல்லை...உலகையே ஆட்டிப்படைக்கும் நிதிச்சுணக்கம் தான்.இங்கிருந்த 13 ஆண்டுகளில் முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட வேலை நிற்பதை இப்போது தான் காண்கிறேன்.


காலை பின்னேரத்தில் பெய்த மழை மரங்களை நன்றாக கழுவிவிட்டு சென்றிருந்தது.

Friday, April 24, 2009

Mall of Emirates - அடுத்த பகுதி

ஒரு வழியாக சாலையை கடந்து வந்து உள் நுழையும் வழியை தேடிக்கொண்டு ஒவ்வொரு இடமாக போய்கொண்டிருந்தேன்.உள் நுழையும் வழி சரியாக இல்லாத்தால் அங்குள்ள காவலாளியிடம் கேட்டு மகிழுந்து போகும் பாதையிலேயே போய் கடைத்தொகுதி உள் போகும் வழியை அடைந்தேன்.இங்கும் சில கடைகள் மூடப்பட்டிருந்தனவா அல்லது மேம்பாட்டு பணிகள் நடந்துகொண்டிருந்தனவா என்று சரியாக தெரியவில்லை.

உள்ளே நுழைந்ததும் அன்னாந்து பார்க்க வைத்தது அதன் கூரை அமைப்பு தான்.முழுவதும் கண்ணாடி அமைத்து வெளி வெளிச்சம் முழுவதுமாக தொகுதிக்குள் வரும்படி அமைத்திருக்கிறார்கள்.தரையின் பள பளப்பு மற்றும் உள் அலங்காரங்கள் அனைத்தும் அருமையாக இருந்தாலும் துபாய் மால் போலவே இருப்பது போல் இருக்கிறது.உலகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட பல நிறுவனங்களின் பெயர்கள் கண்ணில்பட்டது ஆனால் வருகையாளர்களின் கூட்டம் தான் அவ்வளவாக இல்லாதது போல் தோன்றியது.

Ski Bubai என்று அழைக்கப்படும் பனி சறுக்கு அரங்கம் தான் இதன் முக்கியமான இடம்.குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரும் வகையில் பல விளையாட்டுகளை வைத்துள்ளார்கள்.கட்டணமும் அதற்கு தகுந்தாற் போல் இருந்தது.பெரியவர்களுக்கு ஆரம்ப கட்டணம் 80 திராம் மற்றும் குழந்தைகளுக்கு 45 திராம்.மற்ற கட்டணங்களுக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.கொடுக்கும் கட்டணம் 2 மணி நேரத்துக்கு என்று நினைக்கிறேன்.கட்டணத்துக்கு வெளி ஆடையும் காலணியும் கொடுக்கிறார்கள்.சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனுபவிக்கும் விதம் பல விதமான விளையாட்டுகளை வைத்துள்ளார்கள்.மேலும் சில படங்கள் அதன் தொடர்பில்.இனி வருபவை கட்டிடக்கலையின் கை வண்ணங்கள்.விளக்குகளை தக்க இடத்தில் வைத்து இன்னும் மெருகேற்றியிருக்கிறார்கள்.

சுமார் 2.30 மணி நேரம் சுற்றிய பிறகு வந்த வழியாகவே ஜாக்கிரதையாக சாலையை கடந்து பேருந்து பிடித்து வீட்டுக்கு வந்தேன்.

Wednesday, April 22, 2009

Mall of Emirates

என்னுடன் வேலை பார்க்கும் பாக்கிஸ்தானி ஓட்டுனர் இதைப் பற்றி பிரமாதமாக சொன்னதால் இருக்கும் கொஞ்ச காலத்துக்குள் அதையும் போய் பார்த்துவிட்டு வரலாம் என்று முடிவெடுத்தேன்.இதே இடத்தில் தான் SKI Dubai என்று சொல்லப்படுகிற பனி சறுக்கு விளையாட்டு மைதானம் உள்ளது என்பது கூடுதல் தகவல்.

என்னிடம் தான் நினைத்தவுடன் போகக்கூடிய மகிழுந்து இல்லை என்பதால் ஓரிடம் செல்லவேண்டும் என்றால் பலரிடம் தகவல்கள் பெற்று பொதுப்பேருந்து இருக்கிறது என்று தகவல் இருந்தால் மட்டுமே செல்ல வேண்டிய கட்டாயம்.இங்கு செல்ல தடம் எண் 10 இருக்கிறது என்று பொதுபோக்கு வரத்து கழகத்தின் தகவல் அட்டை சொன்னாலும் நான் Al Quoz சென்று திரும்பிய போது எப்படி இவ்விடம் என் கண்ணில் படாமல் போனது என்று குழம்பியிருந்தேன்,அதையும் அந்த பாக்கிஸ்தானி ஓட்டுனரே நிறைவு செய்தார்.ஆதாவது தடம் எண் 10 Al Quaz சென்று திரும்பும் வழியைச்சொல்லி அதில் எத்தனையாவது நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்று சொன்னார்.அது அவ்வளவு திருப்தியாக பட்சத்தில் கூகிள் Earth மூலம் அவ்விடத்தை மனதில் நிறுத்திக்கொண்டேன்.

வீட்டுக்கு பக்கத்திலேயே அந்த 10ம் எண் பேருந்து வருகிறது.வெள்ளி மதிய உணவுக்கு பிறகு கூரையில்லாத Muragabath Police Station நிறுத்தத்தில் அடுத்த 10 நிமிடத்தில் அந்த பேருந்து கிடைத்தது.சுமார் 40 நிமிடத்தில் Al Quoz வந்துசேர்ந்தது.Al Quoz தொழிலாளர்கள் தங்கும் இடம் என்பதால் ஒவ்வொரு பேருந்துக்கும் பலர் அடித்துப்பிடித்து ஏற முயற்சிப்பார்கள் அது என் பேருந்திலும் நடந்தது.அங்கிருந்து கிளம்பி கொஞ்ச தூரம் வந்ததும் பேருந்துவில் இருந்தவரிடம் ஹிந்தியில் மால் ஆப் எமிரேட்க்கு எங்கு இறங்கனும் என்று கேட்ட போது நான் முழிப்பதை விட அவர் அதிகமாக முழித்தார்.நான் சரியான நிறுத்ததில் இறங்காவிட்டால் வெகு தூரத்தில் இருக்கும் அடுத்த நிறுத்ததில் இறங்கவேண்டி வரும் திரும்ப இந்த இடத்துக்கு வரவேண்டும் என்றால் தலையை சுற்றி மூக்கை தொடுவது போல் தொடவேண்டும்.இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று நினைத்து ஓட்டுனரிடமே கேட்டேன் “அடுத்த நிறுத்தம் தான் அது என்றார்”,கூடவே Public Announce Systemயில் சொன்னார்.

நிறுத்தத்தில் இறங்கியவுடன் ஒரு பிலிபினோகாரரிடம் இந்த கடைத்தொகுதி எங்கு இருக்கிறது என்று வினவினேன்.சாலையின் எதிர் திசையில் கையை காட்டி ஒரு பெரிய கட்டிடத்தை அடையாளம் சொல்லி அதனருகில் இருப்பதாக சொன்னார்.இந்த சாலை என்பது ஏதோ 2 சாரி மட்டும் இருக்கும் என்று கற்பனை பண்ணிவிடாதீர்கள்.ஒவ்வொரு பக்கமும் ஐந்து தடங்கள்.மகிழுந்துகளின் வேகம் 120 கி.மீட்டர்.மாட்டினா சதுர் தேங்காய் தான்.ஒரு நல்ல கடைத்தொகுதியை அடைய பாதசாரிகளுக்கு தகுந்த வழியில்லாதது அங்குள்ளவர்களின் வாழ்கை முறையை காண்பித்தது.அங்குள்ள வழிகள் ஒன்று கார் Parking ஐ நோக்கியோ அல்லது வாடகை மகிழுந்து வரும் வழியில் தான் இருக்கு.பாத சாரிகளுக்கு என்று பிரத்யோக வழி கிடையாது.

கடைதொகுதியை நோக்கி நடக்கும் போதே உலகத்தின் 7 ஸ்டார் தகுதியுடன் உள்ள ஹோட்டல் தூசி மூட்டத்தின் ஊடே தெரிந்தது.படத்தின் மீது சொடுக்கி பெரிது பண்ணி பார்க்கவும்.

இன்னும் அருமையான படங்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

Tuesday, April 14, 2009

துபாய் விளையாட்டரங்கம்.

வேலையென்னவோ இந்த சுணக்கம் வருவதற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கும்,திறக்கும் நேரத்தில் நிலமை இப்படி இருக்கு!!

படங்கள் உதவி : திரு அன்பு.

சில விபரங்கள்: 25000 பேர்கள் உட்காரும் வசதி,2000 Lux உடன் கூடிய வெளிச்ச வசதி & 73 மீட்டர் ஆரம்.

ஆடுதளத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் கீழே.


நன்றி: கல்ப் நியூஸ்.

Thursday, April 09, 2009

வாலி பால்

முன்பெல்லாம் கிடைக்கும் சிறு இடத்தில் தொழிலாளர்கள் தங்களுக்கு விளையாட்டை விளையாடுவார்கள் அதுவும் வெள்ளிக்கிழமை மதியத்திலிருந்து.இரண்டு நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது இந்த விளையாட்டை காணமுடிந்தது,அதை நீங்களும் பார்க்க....வேலையில்லாவிட்டாலும் உற்சாகமாக நேரத்தை விளையாட்டில் செலவிடுகின்றனர் போலும்.

Wednesday, April 08, 2009

திண்ணை காலி.

சுமார் 170 மீட்டர்(கூகிள் எர்த் 178 மீட்டர் சொல்கிறார்) நீளம் இருக்கும் இந்த விளம்பர பலகை,இதில் விளம்பரம் பண்ண ஆள் தேவையாம்.


சில நாட்களுக்கு முன்பு ஒரு கடைத்தொகுதியின் முன்புறம் இப்படி.திரும்பிய இடமெல்லாம் இது தான்.நிலை மாற இன்னும் எத்தனை காலமாகுமோ!!!

Monday, April 06, 2009

சிங்கப்பூரின் கவலை!!

சிங்கப்பூரின் கவலைகள் பட்டியலில் புதிதாக(பழையது தான்) ஒன்றும் சேர்ந்திருக்காம்...

After saying that one-third of men and women in Singapore were single "and quite comfortable with their lives", the Minister Mentor said: "My daughter is one of them. What can I do?"...


இப்படி சொன்னது யார்? என்று நினைக்கிறீர்கள்.

திரு லீ குவான் யூ (சிங்கப்பூரின் சிற்பி)

முழுவதும் படிக்க இங்கே சொடுக்குங்கள்.