Showing posts with label மின் தூக்கி மேம்பாடு. Show all posts
Showing posts with label மின் தூக்கி மேம்பாடு. Show all posts

Wednesday, November 15, 2006

மின் தூக்கி மேம்பாடு (9)

போனபதிவில் சுற்றுச்சுவர் மேலே போவதுபற்றி பார்த்தோம்.

தொடருவோம்.

Photobucket - Video and Image Hosting

இப்படி போகும் போதே மேலே உள்ளவர்களுக்கும் பாரம்தூக்கியை இயக்குவற்க்கும் வாக்கி டாக்கி மூலம் பேச்சு வார்தை நடந்துகொண்டிருக்கும்.அதன் மூலம் பாரம்தூக்கியை எவ்வளவு ,எப்படி எங்கு நகர்த்தவேண்டும் என்ற கட்டளைகள் கொடுக்கப்படும்.

சரியான தூரம் மற்றும் உயரம் போனதும்,வேலை ஆட்களின் உதவியுடன் பிடித்து நிறுத்தி சரியாக பொருத்துவார்கள்.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

இதெல்லாம் முடிந்தபிறகு ஒன்றை மற்றொன்றுடன் இணைக்க தேவையான வேலைகளை ஆரம்பிப்பார்கள்.அதனை படமெடுக்க முடியாததால் இங்கு போடமுடியவில்லை என்பதை பலரின் சார்பாக சந்தோஷமாக சொல்கிறேன்.:-))

இது வரை கட்டிடம் சார்ந்த வேலைகளை பார்த்தோம்.
இதற்குப்பிறகு மின் தூக்கி மற்றும் அதன் சார்ந்த பணிகள் உள்ளே நடைபெற்று, பயண்பாட்டுக்கு திறந்துவிடுவார்கள்.

கடைசியாக..

பணம் கட்டணும் தெரியுமில்ல.

இதுவரை சும்மா செமத்தியா அனுபவிச்சீங்களா?:-((

இதற்கு நான் பொருப்பள்ள.பிளாக்ஸ்பாட் தான்.

நன்றி.

Thursday, November 09, 2006

மின்தூக்கி மேம்பாடு (8)

போன பதிவு

தூக்கிவைக்கவேண்டிய சுவர் டிரைலரில் வந்து கீழே இறக்கிவைத்தவுடன் பாரம் தூக்கியை ஒரு முறை எல்லாவற்றையும் சோதித்துவிட்டு அந்த சுவரை மேலே தூக்க ஆயத்த வேலைகளில் இறங்குவார்கள்.

இந்த படத்தில் உள்ள சிவப்பு வார் தொங்கிக்கொண்டிருக்கும் இரும்புக்கு பேர் "Strong Back".

Photobucket - Video and Image Hosting

Erection வேலையில் இதன் பங்கு மிக அதிகம்.பாரம் தூக்குவதற்கென்று கான்கிரீட்டில் ஊக்கு வைத்திருப்பார்கள்.அதன் மூலம் தான் தூக்கவேண்டும்.தக்க பொறியாளர் உதவியுடன் இதன் இடத்தையும்,அந்த கம்பியின் தடிமனையும் நிர்மானித்திருப்பார்கள்.

ஆமாம் இந்த Strong Backயின் பணி என்ன?

நீங்கள் தூக்கும் பாரத்தையும் பாரம் தூக்கிக்கும் ஒரே ஒயரை போட்டால் அதன் கோணம் குறுகியதாக இருக்கும், அது கான்கிரீட்டில் உள்ள கம்பிக்கு அதிக லோடை கொடுக்கும்.அதை குறைக்கவே இந்த Strong Back.

தூக்க தயாராக இருக்கிறது.இங்கும் பாதுகாப்பு குறைவு.
ஏற இறங்க வழி எங்கே??(May be hidden)

Photobucket - Video and Image Hosting

லேசா தூக்கி

Photobucket - Video and Image Hosting

இன்னும் கொஞ்சம் மேலே தூக்கி

Photobucket - Video and Image Hosting

அதற்குள்.இது வைக்கவேண்டிய இடத்துக்கு கண்டோலா போய் பாதுக்காப்பை உறுதிசெய்கிறார்கள்

Photobucket - Video and Image Hosting

இன்னும் கொஞ்சம்தான் பாக்கியிருக்கு.

Photobucket - Video and Image Hosting

ரொம்ப நீளமாக போயிடுத்து.

வாங்க அடுத்த பதிவுக்கு.

Tuesday, November 07, 2006

மின்தூக்கி மேம்பாடு (7)

போன பதிவு

இந்த பதிவில் மின்தூக்கியின் சுற்றுச்சுவர்கள் Pre-cast முறையில் வேறு இடத்தில் இதை உருவாக்கி டிரைலர் மூலம் கொண்டுவரப்பட்டு..

Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting

கீழே இறக்கி வைத்து..

Photobucket - Video and Image Hosting

கான்கிரீட் முனைகள் உடையாமல் இருக்க உட்காரும் இடத்தில் சிறிது தண்ணீர் அடிக்கிறார்கள்.இந்த மாதிரி சின்னச்சின்ன விஷயங்களை இப்படித்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.இதெல்லாம் கல்லூரியில் கற்றுக்கொள்ளமுடியாது.

Photobucket - Video and Image Hosting

பாருங்கள், இங்கு பாதுக்காப்பு முறை கொஞ்சம் மீறப்படுகிறது. எந்தவித சாமான்கள் தொங்கிக்கொண்டிருக்கும் போது கீழே போகக்கூடாது என்ற விதி இருக்கிறது.

இப்படி செய்வது தவறு என்று வேலைசெய்யும் தொழிலாளிக்கும் தெரியும்.இருந்தும் மீறப்படுவது தான் கட்டுமானத்துறையில் நடக்கும் தினசரி நிகழ்ச்சி.இதைப்பற்றி தனி ஒரு பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Friday, November 03, 2006

மின் தூக்கி மேம்பாடு (6)

ஒன்று

ஃபவுன்டேசன் முடிந்த கையோடு..

அதன் மேல் ஒரு சிறிய உயரத்துக்கு சுவர் போடுவார்கள்.இதன் உயரம் இடத்துக்கு இடம் மாறும்.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

குட்டை சுவர் போட்டு முடித்தவுடன்,பழைய கட்டிடத்துக்கும், வரப்போகும் கட்டிடத்துக்கும் பிடிப்பு ஏற்படுத்த தேவையான கம்பிகள் மற்றும் பிளேட்டுகள் வைப்பார்கள்.இவையாவும் ஹில்டி என்ற கம்பெனியின் கெமிகல் அல்லது ஆங்கர் முறையில் உள்ள போல்ட்டை பயன்படுத்தி முடுக்குவார்கள்.

Photobucket - Video and Image Hosting

கன்டோலாவில் வேலை

Photobucket - Video and Image Hosting

இதன் மேல் தான்,சுற்றுச்சுவர்- Pre-Cast என்ற வகையில் வேறெங்கோ கான்கிரீட் போடப்பட்டு இங்கு எடுத்துவந்து வைக்கப்படும்.

அதன் படங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Monday, October 30, 2006

மின்தூக்கி மேம்பாடு 5

Piling முடிந்தபிறகு அது நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு எடையை தாங்குமா என்று பார்க்கவேண்டும்.அதற்காக ஒரு Foundation யில் 10 Pile இருந்தால் அத்தனையும் இவ்வாறு Test செய்யவேண்டிய அவசியம் இல்லை.பொறியாளரை கலந்தாலோசித்து செயல்படலாம்.

இந்த Pile Testing ஐ இங்கு பாருங்கள்.இந்த jackக்கு கீழே உள்ளது தான் "pile" என்பது.சிறிய கட்டிடம் என்பதால் அளவில் சிறியதாக குச்சி குச்சியாக இருக்கும்.

Photobucket - Video and Image Hosting

Piling முடிந்தவுடன்,தேவையான அளவுக்கு மண்ணை தோண்டி,அனாவசியாமான Piling உயரத்தை அளந்து வெட்டிவிடுவார்கள்.
பிறகு Foundation கம்பி கட்டுவதற்காக தரம் கம்மியான கான்கிரீட் ஒன்றை போட்டு,அதன் மீது கம்பி கட்டி,சாரம் அடித்து திரும்ப Foundation கான்கிரீட் போடுவார்கள்.

Photobucket - Video and Image Hosting


கீழே உள்ளது மற்றொறு கோணத்தில் Pile டெஸ்ட்.

Photobucket - Video and Image Hosting

Foundation கான்கிரீட் முடிந்தபிறகு அதன் மீது மின்தூக்கியின் சுவர் ஒரு குறிப்பிட்ட அளவு கட்டுவார்கள்.இதற்கு மேல்தான் முன்னமே தயாரிக்கப்பட்ட (Pre-Cast) சுற்றுச்சுவரை அடுக்குவார்கள்.

Photobucket - Video and Image Hosting

பவுண்டேசன் முதல் கட்ட பணி முடிந்திருக்கும் படம்

Photobucket - Video and Image Hosting

இன்னும் இருக்கு..

Friday, October 27, 2006

வாடகை வீடு- 4

"வாடகைக்கு அறை"

அந்த வீட்டுக்கு போய் அந்த ஓரறை பார்த்தேன்.

கட்டில்,ஒரு மேஜை & ஷெல்ப் அவ்வளவு தான்.மாத வாடகை 600 வெள்ளி.
சமைத்துகொள்ளலாம்.ஏனென்றால் அவர்கள் சமைப்பதில்லை.

அதுவும் அந்த வீட்டின் குடும்பதலைவர் நமது ஊரில் இருந்து இந்தூர் பெண்மனியை மணம் முடித்தவர்.அதனால் அவ்வளவு பிரச்சனையில்லாமல் வீடு கொடுக்க முன்வந்தார்.

சில சமயம் எங்களுக்கு சமைக்கும் உணவிலேயே அவர்களும் எடுத்துக்கொள்வார்கள்.ஆரம்பத்தில் அவ்வளவாக நாங்கள் கண்டுக்கொள்ளாததால் கொஞ்ச நாட்களில் தொந்தரவு ஆரம்பித்தது.அவர்களுக்கும் சேர்த்து சமைத்து கொடுக்கச்சொல்லி.

சின்ன சின்ன உரசல்கள் ஆரம்பித்தது.

அதே சமயத்தில் அந்த வீட்டு அம்மனியின் புதல்வர் வீட்டு முகவராக இருக்கிறார்,நீங்கள் வீடு வாங்க வேண்டுமானால் அவரிடம் சொல்கிறேன்.குறைந்த விலையில் முடித்துக்கொடுப்பார் என்ற பில்டப் எல்லாம் என் மனைவியிடம் கொடுத்திருந்தார்கள்.

என் மனைவியும் அதையே என்னிடம் சொன்னார்.

"இங்க பாரு,இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது அப்படியே வந்தாலும் முதலில் நம்மிடம் பணம் கிடையாது" என்றேன்.

பிறகு வந்த சில மாதங்களுக்கு இந்த பேச்சு அவ்வப்போது வந்து போய்கொண்டிருந்தது.ஆனாலும் பிடி கொடுக்கவில்லை.

இந்த சமயத்தில் வீட்டு ownerஉடன் உரசல்கள் பெரிதாக தொடங்கியவுடன் வேறு இடம் பார்க்கதொடங்கினேன்.

நல்ல வேளையாக 1 மாதத்திற்குள் பக்கத்திலேயே இன்னொறு வீடு கிடைத்தது.

இது ஒரு தனி வீடு.

Photobucket - Video and Image Hosting

அந்த வீட்டில் அப்படி பிரச்சனை அப்படியென்றால் இங்கு வேற மாதிரி.. பிரச்சனை காத்துக்கொண்டிருந்தது.

அது அடுத்தது

Thursday, October 26, 2006

மின்தூக்கி மேம்பாடு (4)

இதுவரை பார்த்தவையெல்லாம் முன்னேற்பாட்டு வேலைகள்.

இனி வருபவை நாம் பார்க்கப்போகும் கட்டுமானத்துறை வேலைகள்.

அதற்கு முன்பு

இதன் Design எப்படியிருக்கும் என் பார்த்திடுவோமா?

ஏற்கனவே பிளாக்குகள் இருப்பதால் இந்த மின்தூக்கியை பழைய கட்டிடத்துடன் இணைக்கவேண்டும்.அப்படி இணைக்கும் போது பிற்காலத்தில் புது மற்றும் பழைய கட்டிடங்களுக்கு இடையே விரிசல் வரக்கூடாது.அதனால் புது கட்டிடம் அதன் சொந்த கால்களில் நிற்பதாகவே இருக்கட்டும் என்று முடிவெடுத்து,அப்படியே அதை Design செய்வார்கள்.

ஆதாவது மண்ணில் Piling வகையில் தூண்களை நிறுத்தி அதன் மேல் கட்டிடம் தாங்குமாதிரி ஏற்பாடு செய்வார்கள்.

மேலும் எந்தெந்த வகையில் பழைய கட்டிடத்துடன் இணைக்க முடியுமோ அப்படியெல்லாம் இணைத்துவிடுவார்கள்.இந்த மாதிரி இணைப்புகள் எல்லாம் "Factor Of Safety" என்ற மேல்பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துவிடுவார்கள். பிடிப்புக்கும் உதவும்.

வேலை ஆரம்பிப்பதற்கு முன்பு,வேலை செய்யப்போகும் இடத்தை சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்துவிடுவார்கள்.இது இங்கு செய்யும் சிறிய/பெரிய அவ்வளவு வேலைக்கும் பொருந்தும். அத்துடன் எச்சரிக்கை அட்டையையும் வைத்துவிடுவார்கள்.அதுவும் 4 மொழியில்.

Photobucket - Video and Image Hosting

தமிழை காண்க.(புள்ளி கொஞ்சம் இடம் மாறியிருக்கு)இதே வார்தைகள் 2 வருடங்களுக்கு முன்பு பார்திருந்தால் அர்த்தம் புரியாமல் திண்டாட வேண்டியிருக்கும்.யாரோ புண்ணியவான் மாற்றச்சொல்லியிருக்கிறார்.

சரி Piling போட ஆரம்பிப்பதை இங்கு பார்க்கவும்.

Photobucket - Video and Image Hosting

அடுத்து

அடுத்த பதிவில்