தொடருவோம்.

இப்படி போகும் போதே மேலே உள்ளவர்களுக்கும் பாரம்தூக்கியை இயக்குவற்க்கும் வாக்கி டாக்கி மூலம் பேச்சு வார்தை நடந்துகொண்டிருக்கும்.அதன் மூலம் பாரம்தூக்கியை எவ்வளவு ,எப்படி எங்கு நகர்த்தவேண்டும் என்ற கட்டளைகள் கொடுக்கப்படும்.
சரியான தூரம் மற்றும் உயரம் போனதும்,வேலை ஆட்களின் உதவியுடன் பிடித்து நிறுத்தி சரியாக பொருத்துவார்கள்.



இதெல்லாம் முடிந்தபிறகு ஒன்றை மற்றொன்றுடன் இணைக்க தேவையான வேலைகளை ஆரம்பிப்பார்கள்.அதனை படமெடுக்க முடியாததால் இங்கு போடமுடியவில்லை என்பதை பலரின் சார்பாக சந்தோஷமாக சொல்கிறேன்.:-))
இது வரை கட்டிடம் சார்ந்த வேலைகளை பார்த்தோம்.
இதற்குப்பிறகு மின் தூக்கி மற்றும் அதன் சார்ந்த பணிகள் உள்ளே நடைபெற்று, பயண்பாட்டுக்கு திறந்துவிடுவார்கள்.
கடைசியாக..
பணம் கட்டணும் தெரியுமில்ல.
இதுவரை சும்மா செமத்தியா அனுபவிச்சீங்களா?:-((
இதற்கு நான் பொருப்பள்ள.பிளாக்ஸ்பாட் தான்.
நன்றி.
4 comments:
குமார்,
எனக்கு ஒரு சந்தேகம், படத்தைப் பார்த்துத்தான்.
ஒண்ணுமேலே ஒண்ணா அடுக்கி இருக்கும் சுற்றுச்சுவர்
படத்துலே கரெக்ட்டா இடைவெளி இல்லாம அடங்குனது
மாதிரி இல்லையே. அவ்வளவு கனத்தை எப்படி ஒரே
ஒழுங்குலே ஆக்க முடியும்?
ஒருவேளை உள்பக்கத்துச்சுவர் வழுவழுப்பாப் பொருந்திருமோ?
ஞாயமான சந்தேகம் தான்.
இந்த மாதிரி மின் தூக்கிக்கு உட்சுவர் அலைன்மென்ட் மிக முக்கியம் அதனால் உட்பக்கம் அதற்கு தகுந்தார் போல் முட்டு கொடுப்பார்கள்.
என் முந்தய படங்களில் பார்த்தால் ஒவ்வொரு பகுதியின் மேல் ஒரு சிறு கம்பி நீட்டிக்கொண்டிருப்பது தெரியும்.கீழே உள்ள சுவற்றில் கம்பி இருந்தால் மேலே வரும் சுவற்றில் அந்த கம்பி நுழையும் அளவுக்கு சற்று அதிகமாக ஒரு ஓட்டை இருக்கும்.அப்படியே நுழைக்கவேண்டியது தான்.
இது முதல் வகை அலைன்மென்ட் மற்றது நான் முதலில் சொல்லியமாதிரி முட்டு உள் பக்கம் இருக்கும்.
கொழப்பலேயே??
இந்த கட்டுரை December TAMIL BUILDERS LINE பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. மிக்க நன்றி.
திரு கிருஷ்ணப்பிரசாத்
மிக்க நன்றி.
Post a Comment