Tuesday, November 14, 2006

வீடு விற்பவர்களுக்கு (சிங்கையில்)

போன பதிவு இங்கே

வீடு வாங்கிய 5 வருடங்களுக்குள் விற்கமுடியாது.அப்படி விற்றே ஆகவேண்டும் என்றால் அதை திரும்ப "வீவக"விடம் கொடுக்க நினத்தால் அது ஒரு மிக பெரிய கஷ்டம்.மிகப்பெரிய நஷ்டத்தையும் எதிர்கொள்ளவேண்டும்.பல்லை கடித்துக்கொண்டு 5 வருடங்களை தள்ளிவிட்டோம்.

பொருளாதர சுணக்கம் ஏற்பட்டபோது வீட்டின் விலைகள் தாறுமாறாக போய்(கீழே) சுமார் 25% காலியாகிவிட்டது.தாவது உண்மையான தற்போது இல்லாத விலைக்கு நான் வட்டி மற்றும் முதலை கட்டிக்கொண்டிருந்தேன்.(முதலையை கட்டிக்கொண்டிருந்தீர்களா?- என்று துளசி அவர்கள் பின்னூட்டம் போடுவார்கள்.:-)))

Photobucket - Video and Image Hosting


எப்படியோ இந்த கஷ்டங்களில் ஒவ்வொரு முறை வேலை போய் வேலை கிடைத்து புது முதலாளியிடம் நம் திறமையை காட்டுவதற்குள் "அந்த வேலை காலியாகிவிடும்"

இந்த மாதிரி சமயங்களில் தான் உண்மை புலப்பட தொடங்கியது.நான் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்துக்கொண்டிருக்கிறேன் என்று.

இந்த சமயத்தில்தான் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் வந்தது.

எப்படி??

வீடு விஷயத்தில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்.

பாதி குடும்ப விஷயம்,பாதி வேலையை சார்ந்தது.

குடும்ப விஷயத்தில் முடிவெடுத்த பிறகு,வேலை ஓரளவு நிலைபடுவது போல் தெரிந்தது.நல்ல கம்பெனி.தற்போது அவ்வளவு பிரச்சனையில்லை என்று தோன்றியபோது மற்றொறு இடி.

தங்கப்பதக்கம்-வசனத்தை சொல்லி பார்த்துக்குங்க.

அது என்ன?

அதாங்க மின் தூக்கி மேம்பாடு.அதைப்பற்றி இங்கேயே சொல்லிவிட்டதால்,படிக்க விட்டவங்க இங்கே சொடுக்குங்க.

நான் நிரந்தரவாசி என்பதால் சுமார் 13000 வெள்ளி கட்டவேண்டும் என்ற நிர்பந்தம் எழுந்தபோது,கொஞ்சம் கூட தாமதிக்காமல் முடிவெடுத்துவிட்டேன்.

வாங்கிய வீட்டை விற்பது என்று.

அதிலும் பாருங்க எவ்வளவு பிரச்சனை.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு,ஏதோ ஒரு ஆனந்தவிகடனில் திரு ஞானி தன்னுடைய வீட்டை 45 லட்சத்துக்கு விளம்பரம் போட்டு 45 நிமிடத்தில் வீட்டில் ஆள் நின்றதாக போட்டிருந்தார்.ஏக்கத்துடன் படித்தேன்.

அதை நாம் வாங்க முடியவில்லை என்ற ஏக்கம் இல்லை.இங்குள்ள வீட்டை விற்க போன நவம்பரில் இருந்து முயன்றுகொண்டிருக்கிறேன்.

எதுவும் சரியாகவில்லை.வருபவர்களும் ஒன்றும் சொல்லாமல் போனது மனதில் வலியை ஏற்படுத்தியது.எங்கே இதை விற்கமுடியாமல் 13000 வெள்ளி கட்டவேண்டி வருமோ என்று.ஏற்கனவே வீட்டின் விலை 25% போனது அத்துடன் இந்த 13K போனால் எப்போது அந்த அளவுக்கு விலை ஏறி..

Photobucket - Video and Image Hosting

நன்றி:வீவக(வீட்டு வசதிக்கழகம்)

நான் எப்போது விற்பது.

நம்பிக்கையே போய்விட்டது.

Photobucket - Video and Image Hosting

முதலில் பார்த்த முகவர் என்னிடம் நைச்சியமாக பேசி வீட்டின் வேல்யுவேசனுக்கு என்னிடம் பணம் வாங்கிவிட்டார்.பின்னர் தெரிய வந்தபோது அதை வேறு விதமாக கழித்துவிட்டேன்.

இந்த வேல்யுவேசன் மதிப்பு வெறும் 3 மாதங்கள் தான் அதற்குப்பிறகு அது குப்பை தான்.வேண்டும் என்றால் இந்த மாதத்தில் இவ்வளவு என்று சொல்லிக்கொள்ளலாம்.

பலர் வந்தார்கள்,பார்த்தார்கள்.. போனார்கள்.

ஆனால் நடந்தது என்ன?

அடுத்த பதிவில்.

2 comments:

துளசி கோபால் said...

//முதலையை கட்டிக்கொண்டிருந்தீர்களா?-
என்று துளசி அவர்கள் பின்னூட்டம் போடுவார்கள்.:-)))//

போடலை. இதுக்கு முதல் வரியில் கன்ஃபர்ம்டாச் சொல்லிட்டீங்களே:-))))

இதுபோல நஷ்டத்தை நான் வேற முறையில் சந்திச்சு இருக்கேன். நாங்க ஃபிஜியில்
இருந்தப்ப அங்கெ ப்ராவிடண்ட் ஃபண்ட் மாதிரி ஒரு அரசாங்க சேமிப்பு இருந்துச்சு.
அங்கெ ராணுவப்புரட்சி வந்தபின் உள்ளூர் காசை மதிப்பை 20% குறைச்சாங்க.
அதுலே போட்டு வச்ச காசெல்லாம் 20 % போச்சேன்னு மனசுக்குள்ளே குமுறிக்கிட்டு
இருந்தப்ப ஆறே மாசத்துலே இன்னும் 20% குறைச்சாங்க. குரங்கு அப்பம் பிட்ட
கதையா இங்கே வந்தப்ப மொத்தம் 36% போச்சு(-:

வடுவூர் குமார் said...

அப்போதிலிருந்தே நாணய "புரட்சி" ஆரம்பமாகி விட்டது போல்.!!