Thursday, November 23, 2006

வீட்டு முகவர்கள்(1)

போன பதிவில் வெளிநாட்டவர்கள் இங்கு (சிங்கையில்) வீடு வாங்கும் போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று சொல்லியிருந்தேன்.
மேலே பார்ப்போம்.

வீடு வாங்குவது என்று முடிவுசெய்தபிறகு,எங்கு வாங்க போகிறீர்கள் என்றும் முடிவுசெய்திருப்பீர்கள்.அந்த இடத்தில் வீடு விற்பனைக்கு உள்ளதா? என்று எப்படி தெரிந்துகொள்வது?

பல ஊர்களில் உள்ளது போல் "விற்பனைக்காக" என்ற விளம்பர பலகை இந்த வீவக வீடுகளில் தொங்கவிடப்படாது.அதை தொங்கவிட்டு காற்றில் எதன் மேலாவது விழுந்து அதற்கு இழப்பீடு கட்டவேண்டிய நிலமையில் கொண்டுவிட்டு விடும் என்பதால் பலர் அதை செய்வதில்லை.

அதற்கு பதிலாக,வீட்டு முகவர்களையே பார்க்க வேண்டியிருக்கும்.பல நாளிதழ்களில் இவர்கள் கொடுக்கும் வரி விளம்பரத்தை வைத்து கேட்கலாம்.அல்லது வீட்டு போஸ்ட் பாக்ஸில் வந்து விழும் துண்டுச்சீட்டிலும் இவர்கள் விவரம் இருக்கும்.புது வருடம் சமயத்தில் சின்ன நாட்காட்டியுடன் உள்ள அட்டையை கொடுப்பார்கள்,அதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

90% முகவர்கள் மற்ற முகவர்களுடன் சேர்ந்து தங்களிடம் இருக்கும் வீடுகளை Co-broke முறைப்படி விற்க/வாங்க முயற்சிப்பார்கள்.இது தான் பலரின் ஆதார வருமானம் என்பதால் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு வாழ்கையை ஓட்டுகின்றனர்.

பலர் ஏதோ ஒரு நிறுவனத்தின் கீழே வேலை பார்க்கிறார்கள்.வரும் வருமானத்தில் அவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் கிடைக்கும்.

முகவர்களின் வருமானம் வீட்டின் விற்பனையில் குறிப்பிட்ட சதவீதம்.
விற்பவர்களிடம் இருந்து வீட்டின் விலையில் 2%
வாங்குபவர்களிடம் இருந்து 1%

பல வீடுகளுக்கு வாங்குபவர்களுக்கு ஒரு முகவரும் விற்பவர்களுக்கு வேறொரு முகவரும் இருப்பார்கள்.

மேல் சொன்ன விகிதாச்சாரம் நடைமுறையில் உள்ளது.யாரும் கட்டாயப்படுத்த முடியாது.அதனால் Exclusive ·பார்ம் கையெழுத்து போடும் போதே நீங்கள் அதில் எழுதிவிடலாம்.பிறகு பிரச்சனை எழாமல் இருக்கும்.

முகவர் போடும் இந்த ஒப்பந்தம் கால வரைமுறைக்குட்பட்டது.உங்கள் வீட்டின் மதிப்பு வெறும் 3 மாதங்களுக்கு மட்டும் தான் செல்லுபடியாகும் என்பதால் நீங்களும் 3 மாதங்களுக்கு மட்டும் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளலாம்.பிறகு தேவையென்றால் வாய் மொழி நீட்டிப்பு செய்துகொள்ளலாம்.ஒரு முகவரிடம் ஒப்பந்தம் போட்ட பிறகு வேறு யாருடன் ஒப்பந்தம் செய்துகொள்ள இயலாது.அதையும் மீறி செய்துதான் ஆகவேண்டும் என்றால் அதற்கு தகுந்த பணத்தை அந்த முகவருக்கு கொடுக்க நேரிடும்.

முகவர் போடும் ஒப்பந்தத்தில் நீங்கள் வீட்டை எந்த விலைக்கு விற்க முற்படுகிறீர்கள் என்பதையும் தெரிவித்துவிடவேண்டும்.வீட்டை விற்கவேண்டாம் என்று திடீரென்று முடிவெடுத்தால் அப்போது இவ்வாறு குறிப்பிடுவது ஓரளவு அனுகூலமாக இருக்கும்.

வீட்டை விற்பதற்கு முயலும் நபரும்/முகவரும் என்ன செய்யவேண்டும் என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

4 comments:

 1. 'பள பள' போட்டோக்களுடன் கொறைஞ்சது 120 பக்கம் கொண்ட புத்தகம்
  இந்த ரியல் எஸ்டேட்டுக்குன்னே வாராவாரம் இலவசமா இங்கே கிடைக்குது.

  அதுலே நம்ம வீடு இருக்குன்னு வச்சுக்குங்க, அதுலே போட்டுருக்கற வர்ணனைகளையும்,
  அந்தப் படங்களையும் பார்த்தால் நமக்கே நம்ம வீடு ரொம்பப் பிடிச்சுப்போயிரும்:-)))

  இங்கே ஏஜண்டா ஆகறதுக்கு ஒரு கோர்ஸ் செய்யணும். முழுநேர வேலையாவும்
  பலபேர் இதைச் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.

  ReplyDelete
 2. வாங்க துளசி,
  இந்த முகவர் வேலை சிலர் முழுநேரமாகவும் செய்து வருகிறார்கள்.பல வீடுகள் காலையில் பூட்டிவிட்டு சாயங்காலம் தான் திறக்கிறர்கள்.அதனால் மாலையில் வேலை செய்தால் போதும் என்பதால் பலரும் பகுதி நேர வேலையாக செய்கிறார்கள்.

  ReplyDelete
 3. குமார்,

  இதைப் படிக்கும் போது எண்பதுகளில் ஆனந்த விகடனில் மதன் வரைந்த 'வீட்டு புரோக்கர் புண்ணிய கோடி' நினைவுக்கு வருது.

  ரங்கா.

  ReplyDelete
 4. வாங்க திரு ரெங்கா
  மதன் எழுதியது அவ்வளவாக ஞாபகம் இல்லை.
  வருகைக்கு நன்றி

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?