Thursday, April 29, 2010

வாழ்கிறது.

இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் பல தொடக்க நிலை பள்ளிகளில் படிக்கும்(5ம் வகுப்பு) மாணவர்களுக்கு 2வது பாட தமிழ் படிக்க தெரியவில்லை என்ற செய்தி போட்டிருந்தார்கள்,இதற்கான ஆதார காரணம் ஒரு பக்கம் போதிக்கும் ஆசிரியர்களை நோக்கி விரல் நீட்டினாலும் பெற்றோர்களில் பங்கு இதில் இல்லாமல் இல்லை.நிலமை இப்படியே போனால் தமிழை கீழே உள்ள சுவற்றில் உள்ள மாதிரி தான் காணநேரிடுமோ என்று தோனுகிறது.

இப்படம் நேற்று ஒரு வீட்டு விஷேத்துக்கு போன போது சுமார் 1.2 மீட்டர் உயரத்தில் சுவரில் யாரோ எழுதி பார்த்திருக்கிறார்கள்.


எதற்கு இது?

பல மாதங்களாக அலுவலக கண்ணாடி வழியாக இந்தபடிகளை பார்த்திருந்தாலும் பெரிதாக ஒரு எண்ணமும் வரவில்லை ஆனால் ஒரு நாள் ஒருவர் கையில் ஏதோ கருவிகளை வைத்துக்கொண்டு அந்த மொட்டை மாடியில் இருந்து சுவர் வழியாக காலை மாற்றிப்போட்டு இந்த படிகளை உபயோகித்து கிழிறங்கி வந்தார்,அதன் பிறகு தான் எதற்கு இப்படிப்பட்ட ஒரு மாடிப்படி என்ற யோஜனை வந்தது. உங்களுக்கு ஏதாவது தோனுதா?

Wednesday, April 21, 2010

மூன்று மணி நேர சொர்க்கம்.

நேற்று மஸ்கட்டில் இருந்து துபாய் வந்து சென்னைக்கு திரும்பும் நேரத்தில் இச்செய்தியை கல்ப் நீயூஸில் படிக்க நேர்ந்தது.இதே மாதிரி செய்திகள் பல முறை செய்திதாள்களில் வந்திருந்தாலும் இது சமீபத்தியது என்பதில் உள்ள ஆர்வம் அவ்வளவு தான்.மூன்று வயது குழந்தை இவ்வளவு பேசுமா? எனபதெல்லாம் லண்டனுக்கு தான் போய் விஜாரிக்கனும்.:-)

மூன்று மணிநேரம் இதய துடிப்பு இல்லாமல் மூளைக்கு எப்படி இரத்தம் போயிருக்கும்? இரத்தம் இல்லாமல் மூளை எப்படி உயிர் பிழைத்திருந்தது? போன்ற கேள்விகள் எழத்தான் செய்கிறது.



நன்றி:கல்ப் நியூஸ்