Showing posts with label புத்தகங்கள். Show all posts
Showing posts with label புத்தகங்கள். Show all posts

Wednesday, September 30, 2009

வடுவூர் துரைசாமி அய்யங்கார்

இவர் என்ன தான் என் அம்மா வழி ஊரில் பக்கத்துவீட்டில் இருந்தாலும் இவரை பற்றி குறைந்த அளவே தெரிந்துவைத்திருந்தேன்.இவர் எழுதிய எந்த புத்தகத்தையும் படித்ததில்லை.இம்முறை ஊருக்கு போன போது என்னுடைய மாமாவிடம் இவரைப் பற்றி கேட்ட போது இவர் எழுத்தைப் பற்றி அவ்வளவாக சொல்லாவிட்டாலும் நமது பக்கத்து வீட்டில் தான் அவர் இருந்ததாகவும் பிறகு சென்னை சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டதாகவும் சொன்னர்.அதில் ஓரளவு உண்மை என்பது கிழ்கண்ட புத்தகம் உறுதிப்படுத்தியது.இப்புத்தகத்தை படிக்கும் போது இவரின் எழுத்து அப்படியே “தேவனின்” எழுத்து போலவே இருந்தது.சிரிக்க சிரிக்க நிறுத்தவே முடியாத அளவுக்கு இருக்கு.



Long Missing Links என்னும் ஆங்கில புத்தகத்தை தன் சொந்த செலவிலேயே வெளியிட முயன்று அது சரிவர போகாமல் திரும்ப ஊருக்கே போனதாக சொல்லப்படுகிறது.இவருடைய பல நாவல்கள் ஆங்கில மூலத்தில் இருந்தே தழுவி எடுக்கப்பட்டதாக அவரே ஒத்துக்கொண்டிருக்கிறார்,இவருடைய கதை “மேனகா” & “மைனர் ராஜாமணி” திரைப்படங்களாகவும் வந்துள்ளது.

இவர் எடுத்துக்கொண்ட இந்த ஆங்கில புத்தகத்தின் கருத்தை அறிய கூகிளிடம் போட்ட போது எதேச்சையாக இந்த வலைப் பதிவு விழுந்தது.அய்யையோ!! என்ன மாதிரி அலசல்/விபரங்கள்!! முதல் பத்தியில் உள்ளதை டிஸ்கியாக எடுத்து படித்துப்பாருங்கள்.நமது சரித்திரத்தையை எப்படியெல்லாம் மாற்றி நம்மை நம்பவைத்துள்ளார்கள் என்று ஆச்சரியமாக இருக்கு.

நிஜத்தை பார்க்க இங்கு அழுத்தவும்.

மறுபடியும்....இச்சுட்டி யாரையும் புண்படுத்தும் எண்ணத்தில் அல்ல.

அப்பதிவை எழுதியவரே அந்த பக்கம் வருவதில்லை போலும்,அனுமதி கேட்டும் பதில் இல்லை.மௌனம் சம்மதிற்கு அறிகுறி என்று எடுத்துக்கொண்டு வெளியிடுகிறேன்.

Monday, August 31, 2009

திரு பா.ராகவன்

ச‌ரித்திர‌ம் என்று சொல்லும் போதோ அல்லது அந்த‌ வார்த்த‌யை பார்க்கும் போதோ என‌க்கு என் ப‌ள்ளி ஞாப‌க‌ம் தான் அதிக‌மாக‌ வ‌ரும்.இதிலென்ன‌ ப‌ல‌ருக்கும் அது தானே வ‌ரும் என்கிறீர்க‌ளா? ஓர‌ள‌வு உண்மை தான் ஆனாலும் அவ‌ர‌வ‌ர் அதை எதிர்கொண்ட‌ வித‌த்தில் மாறுபாடு இருக்கும் அல்ல‌வா?


நான் ப‌டித்த‌ நாகப்பட்டினம் தென்னிந்திய‌ திருச்ச‌பை உய‌ர்நிலைப் ப‌ள்ளியில் ச‌ரித்திர‌ வ‌குப்புக‌ள் எப்போதும் ம‌திய‌ம் அதுவும் சாப்பாட்டுக்கு பிற‌கு இருக்கும்.என்ன‌ தான் ப‌ழ‌ங்கால‌ க‌தை என்றாலும் சாப்பாட்டுக்குப் பிற‌கு எந்த‌ வ‌குப்பாக‌ இருந்தால் என்ன‌? க‌ண்க‌ள் த‌ன்னால் இழுக்க‌ ஆர‌ம்பித்துவிடும்.ப‌ல‌ரை மிர‌ட்டியே எழுப்பும் வேலை ஆசிரிய‌ருக்கு வ‌ந்துவிடும்,பாவம்.நான் 7 வ‌து ப‌டிக்கும் போகும் வ‌ந்த‌ ச‌ரித்திர‌ ஆசிரிய‌ர் கொஞ்ச‌ம் வித்தியாச‌மான‌வ‌ர் (பெய‌ர் ட‌பாலென்று ஞாப‌க‌ம் வ‌ர‌மாட்டேன் என்கிற‌து),நெடிய‌ உய‌ர‌ம், ப‌ழைய‌ கால‌த்து ம‌னித‌ர்க‌ள் உழைத்த‌ கை போல் ந‌ர‌ம்புக‌ள் வெளி தெரிய‌ கொஞ்ச‌ம் முர‌ட்டுத்த‌ன‌மாக‌ தோற்ற‌ம‌ளிப்ப‌வ‌ர்.வ‌ந்து இருக்கையில் உட்கார்ந்தால் பிரிய‌ட் முடியும் வ‌ரை எழுந்திருக்க‌மாட்டார்,கையில் க‌டிகார‌ம் இருக்காது ஆனால் அவ்வ‌ப்போது ச‌ரியான‌ நேர‌ம் சொல்லி அச‌த்துவார்.பாப‌ர்,அசோக‌ர் என்று சொல்லி அதை நாங்க‌ளும் ம‌னப்பாட‌ம் செய்து தேறிவிட்டோம்.இப்ப‌டிப் ப‌ட்ட‌ ஞாப‌க‌ங்க‌ள் ச‌மீப‌த்தில் த‌ண்ணீர் குமிழி போல் வெளிவ‌ந்த‌து அத‌ற்கு கார‌ண‌ம் நான் ப‌டித்த‌ ஒரு ச‌ரித்திர‌ தொட‌ர்.

செய்திக‌ள் கேட்ப‌து என்ப‌து என் வேலை நாட்க‌ளில் ஒரு தொட‌ர் நிக‌ழ்வு.தொலைக்காட்சி வ‌ந்திராத‌ நாட்க‌ள்,நக‌‌ர‌ங்க‌ளை விட்டு வெகு தொலைவில் வேலைக‌ள் என்ப‌தால் நாட்டு ந‌ட‌ப்புக்கு வானொலி செய்திக‌ளே ஒரே ஆதார‌ம்,அப்ப‌டி கேட்டுகொண்டிருந்த‌ நாட்க‌ளில் யூத‌ர்,பால‌ஸ்தினிய‌ர்,அர‌பிய‌ர்க‌ள்,அர‌பாத்,ஃபாதா & இஸ்ரேல்‍‍ ச‌ண்டை என்ப‌து காதில் விழும்.இது அத்த‌னையும் என்னை பாதிக்காத‌ நிக‌ழ்வுக‌ள் அத‌னால் இத‌ன் ஆதார‌த்தை தேடிப்போக‌வில்லை.யாரையும் கேட்டும் தெரிந்துகொள்ள‌வில்லை.


அர‌பாத் இற‌ந்த‌ போது கூட‌ இவ‌ருக்கும் இஸ்ரேலுக்கும் என்ன‌ ச‌ண்டை,இஸ்ரேல் எத‌ற்கு த‌ன்னை த‌னிதேச‌மாக‌ ஆத‌ரிக்க‌வேண்டும் என்று இவ‌ர்க‌ளிட‌ம் கேட்கிற‌து? அமெரிக்காவுக்கும் இவ‌ர்க‌ளுக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்,பால‌ஸ்தீனிய‌ர்க‌ளை கொசு மாதிரி ஏவுக‌ணை போட்டு கொன்றாலும் ஏன் திரும்ப‌ திரும்ப‌ அவ‌ர்க‌ள் ம‌னித‌ வெடிகுண்டுக‌ளாக‌ இஸ்ரேலுக்குள் போய் சாகிறார்க‌ள் என்று புரியாம‌ல் இருந்த‌து.ஜெருச‌லேம் என்ற‌ இட‌த்தை ஏன் கைப்ப‌ற்ற‌ இரு குழுக்க‌ளும் இப்ப‌டி பாடாய்ப‌டுத்துகிறார்க‌ள்? கேள்வி கேள்வி எல்லாமே கேள்வியாக‌ இருந்த‌து இர‌ண்டு வார‌த்துக்கு முன்பு வ‌ரை.

இது எல்லாவ‌ற்றையும் தெளிவுப‌டுத்த‌ ஒரே ஒரு க‌ட்டுரை அதுவும் த‌மிழில் ப‌டித்த‌ போது சொல்ல‌வொன்னா துய‌ர‌த்துட‌ன் முடிக்க‌வேண்டியிருந்த‌து.என்னை மாதிரி உங்க‌ளும் ச‌ந்தேக‌ம் இருந்தால் இங்கு போய் ப‌டித்துப் பாருங்க‌ள்.


திரு பா.ராக‌வ‌னின் "நில‌மெல்லாம் ர‌த்த‌ம்" தொட‌ர் 2005 யில் ரிப்போர்ட‌ரில் எழுதியிருந்தது.ப‌டிக்கும் போதே,க‌ண்முன் காட்சி சொல்லாம‌ல் விரிகிற‌து.ப‌ட‌ப‌ட‌க்கும் இதய‌த்துட‌னே ஒவ்வொரு நாளும் முடிக்க‌ வேண்டிவ‌ரும்.எவ்வளவு உயிர்கள்! அதன் மதிபே இல்லாமல் சும்மா வாழை மரத்தை வெட்டுவது போல் வீசி சாகடிக்கிறார்கள்,அதெல்லாம் விட விஷவாயு மூலம் ஓரினத்தை அழிக்கும் ஹிட்லர் என்று சோகத்தை மொத்தமாக படிக்கும் போது கையெல்லாம் நம்மை கேட்காமலே ஆடுது!! சில வருடங்களுக்கு முன்பு ஸ்கேண்டலர்’ லிஸ்ட் படம் பார்க்கும் போது கூட அதன் பின்புல விபரீதங்கள் புரிபடவில்லை.இத் தொடரை படிக்கும் போது தான் அதன் வீரியம் புரிந்தது.எழுத்துக்க‌ளுக்கிடையே ப‌ட‌மே இல்லாவிட்டாலும் எழுத்துக‌ளிலேயே அதை கொடுத்துவிடுவ‌தால் கொஞ்ச‌ம் கூட‌ அய‌ர்சியே தெரியாம‌ல் செய்துவிடுகிற‌து,இவ‌ரின் எழுத்து ந‌டை.

முழுவ‌தும் ப‌டித்து முடித்துவிட்டாலும் இன்று வ‌ரை அப்பிர‌ச்ச‌னைக்கு விடிவு வ‌ர‌வில்லையே என்ற‌ ஆத‌ங்க‌த்துட‌ன் முடிக்க‌வேண்டியுள்ள‌து என்ப‌து நித‌ர்ச‌ன‌ம்.ச‌ரித்திர‌த்தை மொத்த‌மாக‌ மூடி ம‌றைத்து புதிதாக‌ எழுதி அத‌ற்கு விலையாக‌ இன்றும் ம‌னித‌ உயிர்க‌ள் செத்துக்கொண்டிருக்கிறார்க‌ள் என்ப‌து தான் உண்மை.

Saturday, May 30, 2009

சுஜாதாவுக்கு மரியாதை.

சுஜாதாவுக்கு உலகெங்கும் ரசிகர் இருப்பது ஒன்றும் பெரிதல்ல இருந்தாலும் சிங்கை நூலகம் இவரை பெருமைப்படுத்தும் விதமாக வருடா வருடம் நடைபெரும் “வாசிப்போம் நேசிப்போம்” என்ற நிகழ்வுக்காக கீழ்கண்ட புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

சிங்கையில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை மக்களிடையே பிரபலப்படுத்த ஒவ்வொரு வருடமும் பல நல்ல நிகழ்சிகளை அறிமுகப்படுத்தி மக்களை படிக்கவைக்கிறார்கள்.

குபுக் குபுக் என்ற சிரிப்பை வர வழைக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து போட்டுள்ளது.

Tuesday, May 12, 2009

SQL பற்றி

இந்த SQL பற்றி போன வருடம் வரை எதுவுமே தெரியாது.சில வருடங்களுக்கு முன்பு நண்பர் மா.சிவக்குமாரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது Data Base பற்றி பேச்சு வந்தது,பேசி முடித்ததும் ஓரளவு தான் புரிந்த மாதிரி இருந்தது பிறகு அந்த நினைப்பும் போய்விட்டது.

போன வருடம் நம் பதிவர் தமிழ் நெஞ்சம் கொஞ்சம் விலாவாரியாக எழுதியதும் ஆர்வம் பிறந்து என் கணினியில் நிறுவி (கொஞ்சம் அவஸ்தைபட வேண்டியிருந்தது) முயன்று பார்த்தேன்.மென்பொருள் தயார் அதை முயன்று பார்த்ததில் என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்தது அதை அப்படியே தொடரலாம் என்று பார்த்தால் என்னிடம் அவ்வளவாக Data இல்லாதது புரிந்தது.இது நிறுவனங்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும் போல் இருக்கு.

சிங்கை வந்த பிறகு நூலகம் போகும் பழக்கம் தொடருகிறது அப்படி இருக்கும் நேரத்தில் ஞாயிறு Choa Chu Kang நூலகம் போயிருந்தேன்.புது இடத்தில் நிறைய வசதிகளுடன் இருந்தது.நுழைவாயிலிலேயே புது வரவுகள் என்று போட்டு கீழ்கண்ட புத்தகம் கண்ணில் பட்டது.ஏற்கனவே அனுபவம் இருந்ததால் புரிவதில் கஷ்டம் இல்லாமல் இருந்தது.மிகவும் எளிமையாக கொடுத்துள்ளார் ஆசிரியர்.



இந்த ஆசிரியர் எங்கோ கேட்ட மாதிரி இருக்கே என்ற எண்ணத்துடன் பழைய படங்களை துழாவிக்கொண்டு இருந்த போது சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு இப்படி ஒரு புத்தகம் படித்தது ஞாபகம் வந்தது.



மேற்கண்ட நூலில் பேசிக்கை மிக அழகாக புரியும்படி சொல்லியிருப்பார்.புதியவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Tuesday, November 11, 2008

சோ!!

இந்த புத்தகம் கண்ணில் பட்டதும் இதை படிப்பதா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்துடன் இருந்தேன். தெரிந்த கதை ஏற்கனவே பல புத்தகங்களில் படித்தது நிறைய கதாகாலட்ஷேபத்தில் கேட்டதையே திரும்பவும் படிக்கனுமா என்ற நிலையில் பொழுது போக்குவதற்காக படித்தேன்.

தலைக்கு வைத்தால் நிச்சயம் தலைகாணி தேவைப்படாது என்பது போன்ற அளவு நிச்சயம் தூங்கத்தான் போகிறோம்(தூங்காம இருக்கத்தான் இந்த படிக்கும் வேலையே!!) என்று நினைத்தேன்.



படிக்கப்படிக்க ஒவ்வொரு பக்கமும் ஒரு சரித்திரமாக இருக்கு.புரிதல்கள் மற்றும் விளக்கங்களும் கணக்கிடமுடியாத காலகட்டத்தில் என்ன மாதிரி எண்ணங்கள் இருந்திருக்கின்றன என்று யோசிக்கும் போது வியக்காமல் இருக்கமுடியவில்லை.

ஆத்திகர்/நாத்திகர் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒரு முறையாவது படித்து பயன்பெற வேண்டும்/சுயசோதனை செய்துகொள்ளவேண்டிய அவசியம்.

சோ, மொட்டை தலையன், சொட்டை தலையன்,பார்பன அடிவருடி என்ற எண்ணத்துடன் படித்தால் இழப்பு அவருக்கல்ல.

Wednesday, September 03, 2008

காதல் ----> காட்டாளானது

திரு.ராகி ரங்கராஜனுடைய கதைகளை அவ்வளவாக படித்த ஞாபகம் இல்லாததாலும் அட்டை பக்கம் புதிதாக இருந்ததாலும் நூலகத்தில் இருந்து எடுத்துவந்தேன்.செம விருந்து.


ஒவ்வோரு கதையிலும் நகைச்சுவை இழைந்தோடியிருக்கு அதில் ஒரு கதையில்,சில வருடங்களுக்கு முன்பு திருப்பதி பஸ் நிலையத்தில் ஒரு இளம் பெண் தெலுங்கில் ஏதோ சொல்லிச் சொல்லி சிரித்துக்கொண்டிருப்பதை பார்த்து, அவள் பேசும் பாஷை புரியாததால் ஏற்பட்ட உசுப்பேத்தலில் சுமார் 8 மொழிகள் கற்றுக்கொள்கிறாராம்.சில வருடங்களுக்கு பிறகு ஒரு சமயத்தில் அந்த பெண்ணை குடும்பப்பெண்ணாக சந்திக்க நேரும் போது அன்று எதற்காக அப்படி சிரித்தாய் என்று தெலுங்கிலேயே கேட்கிறார்.

அதற்கு அந்த பெண் “உங்க சட்டையின் முதுகில் ஒரு பெரிய ஓட்டை இருந்தது,அது கூட தெரியாமல் ஸ்டைலாக அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தீர்கள்” என்று போட்டு உடைக்கிறார்.

அவர் எழுதிய கதையில் தான் நகைச்சுவை என்று பார்த்தால்... கீழே நூலகத்தில் கொடுக்கும் Receipt யில் ஆங்கிலப் படுத்தியிருக்கிறார்கள்.

இங்கே பார் “சிரி”. :-))

Sunday, April 06, 2008

சதுரகிரி

சந்திரபுரியில் கோரக்க சித்தர்

போன வாரம் முழுவதும் இந்த புத்தகம் தான் படித்துக்கொண்டிருந்தேன்.பேரை பார்த்தாலே ஒரு மாதிரியா இருக்கே புரியுமோ புரியோதோ என்று தான் எடுத்துவந்தேன்.

இதை எழுதியவர் திரு கமலக்கண்ணன் என்று போட்டிருந்தது,சரி நம் பதிவர்களில் இவர் பெயர் கொண்டவர் ஒருவர் இருக்கிறாரே அவராக இருக்குமோ என்று நினைத்தேன்.முழுவதும் படித்த பிறகு தான் தெரிந்தது இவர் 79 வயதுக்காரர் என்று.

இந்த ஊர் "வத்திராய்பு" என்ற ஊருக்கு பக்கத்தில் இருக்கிறதாம்.நம்மில் சில பதிவர்கள் இந்தூரில் இருந்து வந்தவர்கள்.

இந்நூலில் ஒரு பகுதியில் வானில் பறப்பது எப்படி என்று சொல்லியிருப்பதை படிக்கும் போது கொஞ்ச நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் சித்தர் வானில் பறந்தார் என்ற வீடியோ நினைப்புக்கு வந்தது.அந்த வீடியோ பார்த்தபோது எனக்கும் சந்தேகமாகத்தான் இருந்தது,இப்படியெல்லாம் நடக்குமா? என்று.

கீழே உள்ள படத்தை பாருங்கள்.



அது மட்டுமா? மறைந்து போவது எப்படி இன்று கீழே பாருங்கள்..



இந்த நூலில் பல வகையான மருந்துகள் மற்றும் மூலிகைகள் என்று பழைய நூல்களில் இருந்து எடுத்துப்போட்டு அசத்தியிருக்கார்




முடிந்தால் படித்து பயன்பெறுங்கள்.

Wednesday, February 20, 2008

எஸ்.ராமகிருஷ்ணன்

எழுதுவது ஏன்?

இப்படிப்பட்ட கேள்வி வாசகனுக்கோ எழுதுபவர்களுக்கோ ஏற்பட்டால்...


இங்கு



போய் பார்க்கவும்.

திரு ராமாகிருஷ்ணனின் எழுத்து எனக்கு ஆனந்தவிகடன் மூலம் தற்செயலாக அறிமுகமானது.நான் விரும்பி படிக்கும் பாலகுமாரனுக்கு அடுத்து இவர் புத்தகங்களை தான் தேடுவேன்.என்ன எழுதினாலும் நம்மையும் அவருடனே கட்டி இழுத்துக்கொண்டு போகும் கலையை அவர் எழுத்தை படிப்பதன் மூலம் அனுபவிக்கலாம்.

மேலே கொடுத்த சுட்டியில் போய் பாருங்கள் பல முத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன.

பி.குறிப்பு: பயர் பாக்ஸில் எழுத்து படிக்க முடியாத அளவுக்கு இருக்கு அதனால் IE மூலம் படிக்கவும.்

Thursday, February 14, 2008

களவு தொழிற்சாலையாம்!!

முதலில் இப்புத்தகத்தை பார்க்கும் போது, தலைப்பில் ஏதோ தவறா? என்று எண்ணத்தோணியது.

கனவுத் தொழிற்சாலையை என்கிற சினிமா தொழிலைப்பற்றி தான் அப்படி சொல்லியிருக்கார்.

படிக்க.. படிக்க.. அதன் நீள,அகல மற்றும் உயரங்களை திரு பிஸ்மி என்பவர் உரித்துக்காண்பித்துள்ளார். சினிமா தொழிலில் உள்ள கயமைத்தனங்களை அப்படியே சொல்லியுள்ளார்.இவரே ஒரு தயாரிப்பாளர் போலும்,தார்மீக கோபம் சில இடங்களில் கொப்பளித்து எரிமலை குழம்பு போல் ஓடுகிறது.அதே சமயத்தில் நல்லவர்களை பெயருடன் குறிப்பிட்டு அடையாளம் காண்பித்திருக்கார்.






பாதி புத்தகமே முடித்திருக்கும் நிலையில் இன்னும் என்னென்ன சொல்லியிருபாரோ? என்ற பயம் இருந்தாலும்,திரையுலக துறையில் இருப்பவர்கள் மற்றும் நுழைய இருப்பவர்களும் கட்டாயம் ஒரு முறையாவது படிக்க வேண்டிய புத்தகம் இது.

அத்துறையில் நான் இல்லாமல் இருக்கும் போதே அதன் நாற்றத்தை உணர என்னால் முடியும் போது அதனுள் இருப்பவர்கள் தங்களை சுய பரிசோதனைக்கு செய்துகொள்ள இந்த புத்தகம் உதவும் என்று நினைக்கிறேன்.

Wednesday, December 06, 2006

கதாவிலாசம்

எஸ்.ராமகிருஷ்ணன்.

இவரை, தமிழ் எழுத்துலகம் அதுவும் ஆனந்தவிகடன் புத்தகம் படிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும் & பரிச்சயமானவர்.இவருடைய தேசாந்திரி தொடர் படிப்பவர்களுக்கு இவருடைய எழுத்தைப்பற்றி தெரிந்திருக்கும்.

முதலில் நானும் இந்த தொடரை பார்த்தபோது,அதில் வரும் படங்கள் அவ்வளவாக பிடிக்காததால் "பாஸ்" செய்துகொண்டிருந்த போது ஒரு நாள் ஏதோ கோயில் படம் போட்டு எழுதியிருந்தார்.சும்மா அட்டகாசமாக இருந்தது.அதிலிருந்து அவரையும் படிக்க ஆரம்பித்தேன்.
கடந்த வாரம் நூலகம் போனபோது தற்செயலாக அவர் எழுதி "விகடனார்" வெளியிட்ட "கதாவிலாசம்" என்ற புத்தகம் கிடைத்தது.

சும்மா அட்டகாசமான"லே அவுட்" உடன் வந்திருக்கிறது.ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு எழுத்தாளருடன் பின்னிப்பிணைந்திருக்கிறார்.

தமிழ்மணத்தில் வரும் பல பதிவுகளை ஒன்று திரட்டிப்போட்டது போல் உள்ளது சில நிகழ்வுகள்.

இவருடைய பல நிகழ்வுகளை ஆனந்தவிகடன் மூலம் படித்திருந்ததால் அதையெல்லாம் மேலோட்டமாக பார்த்துவிட்டு படிக்காதது மட்டும் படித்தேன்.

ஊர் சுற்றுவதில் உள்ள சுகம்,ஒரு எழுத்தாளனை சந்திக்கும் போது என்ன நேர்கிறது என்று ஒரு சின்ன உலகத்தையே படைத்திருக்கிறார்.

நம் சக வலைபதிவாளர்களுக்காக அட்டைப்படம் இங்கே.

Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting

பெண் சுதந்திரம்,அவர்களின் வலி,குடும்ப கட்டுக்கோப்பு,போலீஸ்காரரின் விநாயகர் கண்ணாடி என்று ஒரு வரைமுறைக்குள் கொண்டுவரமுடியாதபடி எழுதியுள்ளார்.

பலரும் படித்து பயனைடைய வேண்டிய நூல் என்பதால் இந்த பதிவு.

அதுவும் இளம் எழுத்தாளர்களுக்கு.

ஆமாம் இதென்ன கடைசியில் பாரதியார்?
Photobucket - Video and Image Hosting

இதை படித்தால் யாரவது பிரொபைல் ஞாபகத்துக்கு வருதா?

எனக்கு வந்தது.

கண்டுபிடிச்சுக்குங்க.

ஒரே ஒரு க்குளு- இவர் சென்னையில் இருப்பவர்.

படங்கள்:நன்றி:விகடனார் அவர்களே.