கனவுத் தொழிற்சாலையை என்கிற சினிமா தொழிலைப்பற்றி தான் அப்படி சொல்லியிருக்கார்.
படிக்க.. படிக்க.. அதன் நீள,அகல மற்றும் உயரங்களை திரு பிஸ்மி என்பவர் உரித்துக்காண்பித்துள்ளார். சினிமா தொழிலில் உள்ள கயமைத்தனங்களை அப்படியே சொல்லியுள்ளார்.இவரே ஒரு தயாரிப்பாளர் போலும்,தார்மீக கோபம் சில இடங்களில் கொப்பளித்து எரிமலை குழம்பு போல் ஓடுகிறது.அதே சமயத்தில் நல்லவர்களை பெயருடன் குறிப்பிட்டு அடையாளம் காண்பித்திருக்கார்.


பாதி புத்தகமே முடித்திருக்கும் நிலையில் இன்னும் என்னென்ன சொல்லியிருபாரோ? என்ற பயம் இருந்தாலும்,திரையுலக துறையில் இருப்பவர்கள் மற்றும் நுழைய இருப்பவர்களும் கட்டாயம் ஒரு முறையாவது படிக்க வேண்டிய புத்தகம் இது.
அத்துறையில் நான் இல்லாமல் இருக்கும் போதே அதன் நாற்றத்தை உணர என்னால் முடியும் போது அதனுள் இருப்பவர்கள் தங்களை சுய பரிசோதனைக்கு செய்துகொள்ள இந்த புத்தகம் உதவும் என்று நினைக்கிறேன்.
3 comments:
இந்த புத்தகம் இங்க சிங்கப்பூர்ல கிடைக்குதா?
கிஷோர்
சோ சு காங்க் நூலகத்தில் இருக்கு,வேறு சில நூலகங்களில் கூட கிடைக்க வாய்ப்புள்ளது.
கடைகளில் நான் பார்த்ததில்லை.
நன்றி தல
Post a Comment