Friday, January 29, 2010

படியில் ஒரு நிலா.

வியாழக்கிழமை விடுமுறையை எப்படியோ டிவி மற்றும் கடற்கரைக்கு போய் ஓட்டியாகிவிட்டது.காலை 10 மணிக்கு பார்த்த அதே டெண்டுல்கர் மாலை 4 மணிக்கு வந்து வெறுப்பேத்தினார்.டேப்பை நேரத்து Programme பண்ணிவிட்டு விட்டு போய்விடுவார்கள் போலும்.
மாலை 4.30 மணிக்கு கிளம்பி கடற்கரை பக்கம் போனேன்.வழக்கத்து மாறாக அலை அதிகமாக இருந்தது தெரிந்தது அதோடு ஏறு அலையாக இருந்ததால் தண்ணீரும் கரை வரை வரும் போல் இருந்தது.மறு நாள் வெள்ளி, சாயங்காலம் வரை வீட்டிலேயே பொழுது போக்கிவிட்டு வெளியில் போனால் சூரிய பகவான் இப்படி வரவேற்றார்.அப்படியே மெதுவாக Qurm பூங்கா வரை போய்விட்டு அங்கிருந்து பார்த்தால் நம் சந்திர பகவான் அழகாக மேலெழும்பி காட்சி தந்தார்.அதை பார்த்ததும் இளையராஜா,வைரமுத்து மற்றும் ரகுமானும் வந்து போனார்கள்.அப்படியே மேலும் கொஞ்ச தூரம் சுற்றிவிட்டு அங்கிருக்கும் அரங்கத்து படிகளில் ஏறினால் நிலா பெண் இப்படி காட்சி கொடுத்தாள்.நல்ல கேமிராவாக இருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.

Friday, January 15, 2010

இதுவரை யாருமே போடாத....

கூகிளில் “மஸ்கட்” என்று தட்டச்சு போட்டு தேடினால் பதிவர்கள் ஓரிருவர் மட்டுமே மாட்டினார்கள் அதுவும் ஒரு வருடத்துக்கு முன்பு எழுதிய பதிவுடன்.இதுவரை எவ்வளவோ படம் போட்டிருந்தாலும் எனக்கு தெரிந்த வரை இதை கண்டுபிடித்து வலை ஏற்றியது முதன் முதலாக நானாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். :-)

உலக நிலையில் வழக்கொழிந்து போய்கொண்டிருக்கும் இப்பெட்டி ஒரு மூலையில் இருந்தது அத்துடன் இது லெட்டர் பாக்ஸ் என்று எழுதியிருந்ததை பார்த்தவுடன் தான் இதை வேறு வேலைக்கும் மக்கள் உபயோகித்திருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

தேடினாலும் கிடைக்காத படம் (இனி கிடைக்கும்)

Qurm பூங்கா

வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்கா- ரோஸ் கார்டன் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.எப்போது போனாலும் மத்திய பகுதியில் ஏரி மாதிரி இருக்கும் இடத்தை சுற்றி முடிந்ததும் கொஞ்சம் இளைப்பாறி விட்டு வந்துவிடுவேன்.போன வாரம் போன போது எப்போது போகும் வழியை விட்டுவிட்டு வெளிப்பக்கம் போகலாம் என்று நினைத்து வழி மாறினேன்.உள்ளழகு ஒரு விதம் என்றால் வெளியழகு வேறு விதம்.பல இடங்களில் புல் வெளிகள் மனதை கொள்ளைகொள்கின்றன.அப்படியே மேலும் கொஞ்ச தூரம் நடந்தால் செயற்கையாக ஒரு அரண் அமைத்து அதிலிருந்து நீர் வீழ்ச்சி மாதிரி அமைத்துள்ளார்கள்.கீழே விழும் தண்ணீரில் பெருமளவு நுரை காணப்பட்டது ஏனென்று தெரியவில்லை.இப்போது கொஞ்சம் குளிர் இருப்பதால் அதற்கேற்றவாறு பல மலர்களை வைத்து மேலும் அழகூட்டியுள்ளார்கள்.

மற்றவைகளை படங்கள் பேசட்டும்.

மஸ்கட்டில் இருந்து யாருமே இல்லையா?

கடந்த 4 ஆண்டுகலாக பல பதிவுகளை பல நாடுகளில் இருந்து எழுதியவர்களை படித்திருக்கேன் ஆனால் இன்று வரை மஸ்கட்டில் இருந்து வந்த எந்த பதிவையும் படித்த ஞாபகம் இல்லை.சரி இங்கு தமிழரே இல்லையோ என்னவோ என்று அபத்தமாக நினைக்கவில்லை.Ruwi பக்கம் போனால் சிங்கை சிரங்கூன் சாலை போல் தமிழ் வார்த்தைகளை கேட்கமுடியும் மற்றபடி எங்காவது கூட்டம் இருந்தால் தமிழ் வார்த்தைகளை கேட்கமுடியும்.

நேற்று பொங்கலுக்கு எங்கு போவது என்று தெரியவில்லை.MTR Ready to eat பொங்கல் வேறு அடிக்கடி கண்ணில்பட்டுக் கொண்டிருந்தது இருந்தாலும் அதை பண்ணி சாப்பிடுவதில் அவ்வளவு இஷ்டம் இல்லை.எப்படியோ சாயங்காலம் வரை வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்துவிட்டு பிறகு கிளம்பி கடற்கரை பக்கம் போனேன்.வழக்கத்தை விட கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது தண்ணீரும் மேல் எழும்பி வந்துகொண்டிருந்தது.ஒவ்வொரு குடும்பமும் காற்றாடியை வைத்துக்கொண்டு அவற்றை மேலெழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

மஸ்கட்டில் பொங்கல் சிறப்பு கீழே உள்ள படம் தான்.
சூரியன் மறையும் அழகு

Thursday, January 14, 2010

இதெல்லாம் படமா?

என்னுடைய பல பதிவுகளில் மஸ்கட்டின் அழகான கடற்கரையும் சாலைகளையும் படம் பிடித்து போட்டுள்ளேன் ஆனால் ஓமனின் பெரும் பகுதிகள் எப்படி இருக்கும் தெரியுமா?கீழே பாருங்கள்.என்னுடைய நண்பர் ஒருவர் மஸ்கட்டில் இருந்து சலாலா (நம் பதிவர் மின்னல் ) இருக்கும் இடத்துக்கு போகும் வழியில் எடுத்தது.இவ்வளவு இடம் அனாமத்தா கிடைக்கும் போது துபாய் மாதிரி வானத்தை தொடும் அளவுக்கு கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது இவர்களுக்கு.இன்றும் மஸ்கட்டில் மிக உயரமான மாடி 10 மாடிகள் தான் என்றால் நம்ம முடியுமா?

சிறிய வகை செடிகள் மட்டுமே வளருகிறது.பெரும்பாலான நிலப்பகுதி இப்படி தான் இருக்கு.அங்கங்கு தென்படும் “தனிமையான” வீடுகள்.கடற்கரையில் இருக்கும் Seagulls.மீனவர் பிடித்து போட்டிருக்கும் துருகை

Wednesday, January 13, 2010

காலை வேளை மஸ்கட்.

பலருக்கு காலை வேளையில் தூங்குவது என்பது பிடித்தமான பழக்கங்களில் ஒன்று ஆனால் எனக்கு அப்படியில்லை.வேலைக்கு என்று வெளியில் வந்தாலும் படித்துக்கொண்டு இருக்கும் காலத்திலும் அப்பாவின் கண்டிப்பில் 6 மணிக்கு எழுந்திருப்பது ஒரு கட்டாய பாடமாக இருந்தது.உடம்பு ஒரு குறிப்பிட்ட நேரத்து பழக்கப்படுத்திவிட்டால் அவ்வளவு தான் மனம்/மூளை சரியாக விழிப்பு ஏற்படுத்திவிடுகிறது.வயது ஏற ஏற தூக்கம் வேறு குறைவதால் இன்னும் முன்பே முழிப்பு வந்துவிடுகிறது.இங்கு வார விடுமுறை வியாழன் மற்றும் வெள்ளி என்பதால் இவ்விரு நாட்களும் காலை எழுந்திருக்கும் போதே இன்று வேறு என்னென்ன வேலைகள் செய்யலாம் என்று மனது பட்டியல் போட ஆரம்பித்துவிடுகிறது அதில் ஒன்று தான் சுமார் 2-3 கிமீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரைக்கு போய் வருவது.காலை 8 மணிக்கு கிளம்பினால் திரும்ப வரும் போது மணி 10 ஆகிவிடும்.வீட்டுக்கு வந்து என்ன செய்யப்போகிறோம் என்ற அலுப்பிலேயே பீச்சில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவேன்.இப்போது குளிர் காலம் என்பதால் மதிய வெய்யில் கூட உடம்பில் உறைப்பதில்லை.

சில வாரங்களுக்கு முன்பு அப்படி மெது நடை போன போது எடுத்த சில படங்கள் கீழே.

வாகனங்கள் இல்லாத சாலை.கிரிக்கெட் விளையாடும் இந்திய/பங்களா மக்கள்.இந்த சாலையை வாகனங்களே இல்லாமல் இப்போது தான் பார்க்கமுடியும்.இரானுக்கும் ஓமனுக்கும் இடையில் நிற்கும் சில கப்பல்களும் அலையில்லாத கடலும்.கடற்கரை

அதது ஊருக்கு தகுந்த மாதிரி

நம்ம கண்ணுக்கு என்று இதெல்லாம் படுது பாருங்க அதை சொல்லனும்.இந்த மாதிரி வலைப்பதிவு இருக்கும் போது என்ன கவலை! பிடிச்சி போட்டா எப்போவாது உபயோகப்படும் பாருங்க.

இங்கு மஸ்கட்டில் கடந்த சில ஆண்டுகளாக மழைப்பொழிவு அதிகமாகி வருவதாக உள்ளூர் மக்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ஆனால் இந்த வாய்கால் முகப்பை பாருங்கள்,வித்தியாசமாக இல்லை?

ஒன்றும் இல்லை! இது மழைக்காலத்துக்கும் வெய்யில் காலத்துக்கும் ஏற்றவாறு இருகிய ரப்பர் கொண்டு மோல்ட் செய்து அப்படியே பொருத்திவிட்டார்கள்.சிமிண்ட் மற்றும் மண் எதுவும் கிடையாது.இப்படி கிடைப்பதன் மூலம் வேலையும் சுலபமாக முடியும் பணமும் மிச்சம் பிடிக்கமுடியும்.மழை தண்ணீர் போக்குவரத்து குறைவாக உள்ள நாடுகளுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.தண்ணீர் மூலம் அதன் அடிப்பகுதியில் அரிப்பு இருக்காது என்பதால் சாலை அமிழும் நிலை வராது.காலத்துக்கு ஏற்ப மாறுதல் ஏற்பட்டுகொண்டிருக்கும் பல துறைகளில் கட்டுமானத்துறையும் ஒன்று.

Wednesday, January 06, 2010

என்ன,இப்படி சொல்லிட்டாங்களே!!

சும்மா தானே இருக்கோம் இப்போ என்று நான் முன்பு வேலை செய்த பாலத்தின்(மலேசியாவில்) புதிய படம் ஏதாவது இருக்கா என்று கூகிளிடம் தேடிய போது ஒரு அருமையான படம் கிடைத்தது.

இங்கே

படுபாவி கேமிராமேன் இப்படி ஒரு கமெண்ட் போட்டு என்னவோ பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி மானத்தை வாங்கிட்டான்.அப்ப அவன் சொன்னது எல்லாம் பொய்யா?

இல்லை.

நிலத்தில் பார்க்கும் போது மண் தோண்டி அவ்வளவாக உபயோகிக்காமல் மனித வளத்தை அதிகமாக உபயோகித்து வேலை பார்த்தோம் அதை பார்த்திருப்பான் போல் இருக்கு அதை பொத்தாம் பொதுவாக சொல்லிட்டு போய்விட்டார்.ஊரில் இருந்து கொண்டு வந்த ஆட்களை சும்மா உட்கார்த்தி வைத்து சம்பளம் கொடுப்பார்களா?