Wednesday, December 27, 2006

காகிநாடா (L&T-ECC )மேட்டூரில் வேலை முடிந்து சின்ன சின்ன வேலைகளையும் முடித்துவிட்டு அடுத்த இடத்துக்காக காத்திருக்கும் நேரத்தில் வந்தது வேலை மாற்றம் "காகிநாடாவிற்கு".

திரும்பவும் ஆந்திரா பக்கம்.

நாங்கள் எந்த புது பிராஜக்ட்க்கு போனாலும் முதலில் யார் அங்கு ரெசிடன்ட் இன்ஜினியர் என்று தான் பார்ப்போம்.ஏனென்றால் சிலர் தலைவலி,திருகுவலி எல்லாம் கொடுப்பவர்கள்.புதியவர்கள் என்றால் திரும்ப நம்மை நிரூபிக்கவேண்டுமே!

இந்த வேலை இடத்தில், அப்போது இருந்தவர் திரு ஞானசேகர் என்பவர்,இப்போதும் ஹைதராபாத் விமானநிலைய சைட்டில் வேலை செய்துகொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.முதன்முதலில் ECC யில் வேலை ஆரம்பிக்கும் போது இவர் தலைமையில் கீழ் வேலை பார்த்தேன் பிறகு மறைமலை நகர் சைட்டிலும் வேலை பார்த்தேன்.மறைமலைநகர் சைட்டில் எங்கள் இருவருக்கும் இடையில் அவ்வளவு நல்லுறவு இல்லாததால் எங்கே இங்கேயும் பிரச்சனை வருமோ? என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

அது நடந்து பல வருடங்கள் ஓடிவிட்டதால் அதெல்லாம் அவர் மனதில் வைத்துக்கொண்டிருக்கமாட்டார் என்று நினைத்திருந்தேன்.ஆனால் அப்படி நடக்கவில்லை என்பது வேறு விஷயம்.அதற்கு பிறகு வருகிறேன்.

காக்கிநாடா என்றவுடனே வீட்டை காலி பண்ண ஆரம்பித்துவிட்டேன்.மனைவி பிறந்தகம் போய்விட்டதால் அவர்களுக்கு தேவையானவை எனக்கு தேவையில்லாதாக தோன்றுபவை அனைத்தையும் வெளியில் கொண்டு போட்டேன்.அப்படி போட்டவற்றில் சில எங்கள் கல்யாணத்திற்கு வந்தவை.அதில் அவர்களுக்கு கொஞ்சம் வருத்தம்,அதிலிருந்து வேலை இட மாற்றம் என்றால் வீட்டை காலி பண்ண என்னை விட மாட்டார்கள்.

தேதி குறித்து மேட்டூரிலிருந்து காகிநாடா போக தேவையானவற்றை எடுத்துக்கொண்டு,பெரிய பெட்டிகளை இங்கிருந்து அந்த சைட்டுக்கு போகும் கம்பெனி சாமன்கள் கூட அனுப்பிவிட்டேன்.கட்டுமானத்துறையில் இது ஒரு அனுகூலம்.வெளியிடங்கள் மூலம் அனுப்பினாலும் (ABT பார்சல்.. ) தேவையான பணம் பெற்றுக்கொள்ளலாம் என்றாலும் கம்பெனி மூலம் அனுப்பும் போது பாதுகாப்பாகவும் விரைவாகவும் மற்றும் சேதமில்லாமலும் போய்விடும்.

போகும் வழியில் மனைவியை பார்த்துவிட்டு சென்னை வந்து அங்கிருந்து காகிநாடா போகும் ஒரே புகைவண்டி "சர்கார் எக்ஸ்பிரஸ்"யில் முன்பதிவு செய்தேன்.காகிநாடாவும் கிட்டத்தட்ட குண்டூர் மாதிரி தான்.மெயின் லயின் பாதையில் இருந்து பிரிந்து கொஞ்சம் உள்ளே போகவேண்டும்.

அவசரமில்லாத பயணம் மற்றும் வேறு வண்டிகளில் முன்பதிவு கிடைக்காத நேரத்தில் சர்காரில் பயணம் செய்யலாம்.நேர விரயம் ஆகும்.அதற்கு பதிலாக பல சமயம் நாங்கள் சென்னையில் இருந்து ராஜமுந்திரி வந்து அங்கிருந்து காகிநாடாவுக்கு 1மணி முப்பது நிமிடங்களுக்குள் பேருந்துவில் வந்துவிடுவோம்.

சென்னையில் இருந்து ராஜமுந்திரிக்கு பல வண்டிகள் இருக்கும்.முடிந்தவரை இரவில் பயணத்தை வைத்துக்கொண்டு காலை வேலைக்கு போய்விடுவோம்.


இந்த பிராஜக்ட் நாகர்சுனா உரத்தொழிற்சாலை கட்ட தேவையான சில கட்டங்களை கட்டவேண்டும்.அதில் இரண்டு சைலோ,ஒரு சிமினி மற்றும் மெக்கானிகல் எரக்ஷன் வேலைகள்.

வந்த முதல் நாள், ராஜமுந்திரி இறங்கி பேருந்து மூலம் காக்கிநாடா வந்து இறங்கினேன்.நகர பஸ் நிலையம் வரை போகாமல் நடுவிலேயே இறங்கி அங்கிருந்து ரிக்ஷா மூலம் எங்கள் குடியிருப்புக்கு போனேன்.முதலில் கண்ணில் பட்டது மெஸ் தான்.அதைச்சுற்றி பல வீடுகளை கம்பெனி வாடகைக்கு எடுத்திருந்தது.

மெஸ்ஸில் நான் முதன் முதலில் இந்த கம்பெனியில் வேலை பார்த்தபோது உதவியாளராக சேர்ந்த "திரு.சின்னையா" இப்போது குக் ஆக பதவி உயர்வு பெற்று அங்கு இருந்தார்.இடைப்பட்ட வருடங்களில் நல்ல தேர்ச்சி பெற்று நல்ல பெயருடன் இருந்தார்.ஒரு காலத்தில் சின்ன வயதில் வந்து வேலைக்கு சேர்ந்து பிறகு படிப்படியாக உயர்ந்து இந்த நிலைக்கு வந்திருந்தார்.

மெஸ்ஸிலேயே எல்லா சாமான்களை வைத்துவிட்டு குளித்து,சாப்பிட்டுவிட்டு ஜீப்புக்காக காத்திருந்தேன்.வேலை இடம் மெஸ்ஸில் இருந்து 7 KM தள்ளி இருந்தது.

பல பழைய முகங்களை பார்க்கப்போகிறோம் என்ற ஆவல் இருந்தாலும்,முதல் நாள் அந்த ரெசிடென்ட் இன்ஜினியரை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற கவலையும் வந்தது.ஏனென்றால் மனிதர் அந்த மாதிரி.

சுமார் மதியம் 12 மணிக்கு சைட் உள்ளே போனேன்.அலுவலகத்தில் முகத்தை காண்பித்துவிட்டு ரெசிடென்ட் இன்ஜினியரை பார்க்கலாம் என்று பார்த்தால் அவர் சைட்க்கு போய் இருப்பதாகவும், இன்னும் வரவில்லை என்றார்கள்.

மணி 1 ஆகியும் வரவில்லை,சரி நாமே தேடிப்போய் முகமன் செய்துவிடுவோம் என்று கிளம்பி சைட் உள்ளே போனேன்.

மீதி அடுத்த பதிவில்..

Monday, December 18, 2006

இணைய வலை (2)

நமது நண்பர் அன்று உபயோகப்படுத்திய விபரம்.
19.11.06 விடியற்காலை 3.49 வரை உபயோகப்படுத்தியுள்ளார்.
கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

Photobucket - Video and Image Hosting

வீட்டு ஓனர் பேசிய தொனியில் இருந்தே பிரச்சனை கொஞ்சம் பெரிது என்று கண்டுகொண்டேன்.

கொஞ்சம் படபடப்பு மனிதர் என்பதால் அவர் சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன்.இந்த மாதிரி படபடப்பு ஆசாமிகளிடம் பழகும் போது அவர்கள் சொல்வதை முழுவதும் கேட்டபிறகு,ஆதாவது அவர்களை டிரைன் அவுட் செய்தபிறகு நீங்கள் சொன்னீர்கள் என்றால் கேட்பார்கள்.அவர்கள் படும் அவசரத்துடன் நீங்களும் சேர்ந்துகொண்டால் நீங்கள் சொல்வது அங்கு சுத்தமாக கேட்கப்படாது.வீணான பிரச்சனை தான் வரும்.

ஏங்க நீங்க 19ம் தேதி அமெரிக்காவுக்கு தொலைபேசினார்களா?

இல்லீங்களே,எனக்கு தெரிந்து என்னுடைய உறவினர்களோ,நண்பர்களோ இல்லையே என்றேன்.எத்தனை மணிக்கு என்று போட்டிருக்கா?

விடியல் காலை 4 மணிக்கு.

என்னது! விடியல் காலை 4 மணிக்கா? நான் நன்றாக தூங்கிக்கொண்டிருந்திருப்பேன்.அந்த சமயத்தில் நான் பண்ணவில்லையே,என்றேன்.

19ம் தேதி என்ன கிழமை வருகிறது? என்றார்.

பார்த்தால் ""ஞாயிற்றுக்கிழமை"

கொஞ்ச நேரத்தில் புரிந்தது நமது நண்பருக்கு இரவல் கொடுத்த இணைய இணைப்பின் மகிமை என்று.

அதைச்சொன்னவுடன் அவருக்கு இன்னும் கோபம் அதிகமாகியது.என்னிடம் கேட்காமல் ஏன் கொடுத்தீர்கள்.பிறகாவது என்னிடம் சொல்லியிருக்க வேண்டாமா? என்றார்.

சட்டென புரிந்தது,நமது நண்பர் என் காலை வாரிவிட்டது.

வீட்டு ஓனரிடம் நான் சொல்லச்சொன்னதையும் அவர் சொல்லாததையும் சொல்லி மன்னிப்பு கேட்டேன்.சரி அதனால் என்ன பிரச்சனை என்றேன்.

அவருடைய டெலிபோன் பில்லுக்கு 93 வெள்ளி அதிகமாக வந்திருந்ததால் தொலைபேசி கம்பெனியே வெளிநாட்டு அழைப்புகளை நிறுத்திவிட்டனர்.இதன் காரணமாகத்தான் அவரால் ஆஸ்திரேலியாவுக்கு அழைக்கமுடியவில்லை.இந்த மாதிரி தொல்லைகள் இணையம் ஆரம்பித்த காலங்களில் தேவையில்லாத இடங்களுக்கு போய் தட்டிக்கொண்டிருந்தவர்கள் இழந்ததால் பட்டென்று கட் செய்துவிட்டார்கள்.

இப்போது புரிந்தது அன்று நான் சொல்லியும் நமது நண்பர் நான் சொல்லியும் தொலைபேசி கேபிளை திரும்ப இணைக்காமல் விட்டார் என்று.

ஓனரை ஓரளவு சாமாதானப்படுத்தி நான் வீட்டுக்கு வந்தபிறகு அந்த பில்லை பார்த்து முடிவுசெய்யலாம்,அப்படி அந்த பையன் பண்ணவில்லை என்றால் நான் செய்த தவறுக்கு நானே அந்த பணத்தை கொடுக்கிறேன் என்றேன்.

அதில் கொஞ்சம் சமாதானம் அடைந்தார்.

வீட்டுக்கு போய் பில்லை பார்த்தேன்.

எல்லாமே விடிகாலை அழைப்புகள்.

அன்று இரவு நமது நண்பர் வெகுநேரம் கழித்து வந்ததால் பேச முடியவில்லை.
மறு நாள் காலை அலுவலகம் கிளம்பும் முன் வெளியே வந்த போது இது பற்றி கேட்ட போது தனக்கு எதுவும் தெரியாது என்றும்.நான் விடியற்காலை 4 மணிவரை இணையத்தை உபயோகித்தேன் என்றார்.

அப்படி என்றால் யார் 4 மணிக்கு அமெரிக்காவிற்கு தொலைபேசியது? இது ஓனர்.
சில சமயம் இணையத்திருடர்கள் இந்த மாதிரி செய்வார்கள் என்று சால்ஜாப்புகள் சொல்ல ஆரம்பித்தான்.

நீ இல்லை என்றால் நான் இன்றே காவல்நிலையத்தில் புகார் செய்வேன் என்றார். தவறு உன் பக்கத்தில் இருந்தால் உன் நிரந்தரவாசத்தகுதியை கூட இழக்க நேரிடும் என்றார்.
இதற்கு எப்படி நான் மட்டும் பொறுப்பாக முடியும்?என்னை காண்பித்து, இவரும் தான் உபயோகிக்கிறார் அதனால் 50- 50 பகிர்ந்துகொள்ளலாம் என்றான்.

எனக்கோ செம கோபம் வந்தது."வேலியில் போற ஓணானை.."

அதற்குள் ஓனர் "அவர் 5 நாட்களாக உபயோகிக்கிறார்,அப்போதெல்லாம் வராத பிரச்சனை நீ உபயோகிக்கும் போது ஏன் வந்தது?" என்றார்.

பதில் சொல்ல முடியாத கேள்வி,அதற்குள் எனக்கு வேலைக்கு நேரமானதால் கிளம்பிவிட்டேன்.

கடைசியாக வேறு வழியில்லாமல் முழு பணத்தையும் தருவதாகச்சொல்லி அப்போதே தந்துவிட்டான்.

அவன் எங்கு போனான்?,எதை தட்டினான்?,எதைப்பார்த்தான்?எதுவும் எனக்கு தெரியாது.

அவனால் நான் இழந்தது வீட்டு ஓனர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை.
நண்மை செய்யப்போய் மாட்டிக்கொண்டேன்.

டையல் அப்பில் இருக்கும் நண்பர்களே உங்களுக்கே தெரியாமல் எதையும் கவனிக்காமல் எண்டர் பட்டனை அமுக்கிக்கொண்டிருந்தால் இந்த மாதிரி கஷ்டத்தில் மாட்டிக்கொள்ளலாம்.

இங்குள்ள தொலைபேசி நிறுவனம் முன்கூட்டியே தெரிந்துகொண்டு இந்த மாதிரி அழைப்புகள் நேரும் போது துண்டித்துவிட்டு அந்தந்த நபரிடம் தெரிவிக்கிறார்கள்.இதுவே சிறுவர்கள் செய்து அப்படியே விட்டுவிட்டார்கள் என்றால் அவர்களது தொலைப்பேசி கட்டணம் எகிறியிருக்கும்.

ஜாக்கிரதை!!

இனி வரும் பதிவுகள் கொஞ்ச நாட்களுக்கு முன்பு மேட்டூர் வரை வந்து, விட்டதில் இருந்து தொடங்கும்.

Friday, December 15, 2006

இணையம் ஒரு வலை (1)

வலை எனபது பலருக்கும் தெரியும்,ஆனால் இந்த வலையை கொஞ்சம் பாருங்க.வித்தியாசமாக இருக்கும்.

இப்போது இருக்கும் வீட்டில் நான் ஒரு அறையில்,உத்ராஞ்சலில் இருந்து வந்து இங்கு வேலை பார்க்கும் ஒரு பையனும் இருந்தோம்.இந்த பையன் காலி செய்ததும் நான் அந்த அறைக்கு போகவேண்டும்.

இணைய இணைப்புக்கு வீட்டின் ஹாலில் இருந்து கேபிள் போட்டு என்னுடைய அறைக்கு இழுக்கவேண்டும்.அதனாலேயே அது வீட்டின் குறுக்கே போய் கொண்டிருந்தது.

அந்த பையன் இணையத்தை வீட்டில் உபயோகப்படுத்தாததால் அவனுக்கு தொலைபேசி இணைப்பு தேவைப்படாததாக இருந்தது.

நான் வந்தபிறகு இணையத்தை உபயோகப்படுத்துவதை பார்த்ததும் அவனுக்கும் ஆசை வந்தது போலும்.

ஒரு சனிக்கிழமை இரவு நான் வலையில் மேய்ந்துகொண்டிருக்கும் போது

அங்கிள் நான் இணையத்தை உபயோகப்படுத்த முடியுமா? என்றான்.

உனக்கு அக்கவுண்ட் இருக்கா?

இல்லை!

எவ்வளவு செலவாகும்?

இது டையல் அப் என்பதால்,தொலைபேசிக்கு எவ்வளவு ஆகுமோ அவ்வளவு தான் கும்.ஆதாவது Off Peak சமயத்தில் 1 மணி நேரத்துக்கு சுமார் 40 காசு,அதில்லாமல் நீ இணைய விரும்பும் ஸர்வீஸ் கொடுப்பவர்களுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டும் என்றேன்.

அது எவ்வளவு? என்றான்

மாதத்திற்கு 15.75 வெள்ளி என்றேன்.

முதலில் வீட்டு ஓனரிடம் அனுமதிபெற்றுக்கொள்,அப்படி கிடைத்தால் எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை என்றேன்.

வீட்டு ஓனர் வீட்டில் இல்லாததால் இன்று ஒரு நாள் கொடுங்கள் அவர் வந்ததும் அனுமதி வாங்கிக்கொள்கிறேன் என்றான்.

அப்படியென்றால் "Free to Surf" என்ற வசதி ஸ்டார் ஹப் நிறுவனத்தினர் கொடுக்கிறார்கள்.அங்கு போய் பதிந்துகொண்டு நீ இணையலாம் என்று அதற்கு வேண்டிய வட்டையையும் கொடுத்தேன்.3 வருடங்களுக்கு முன்பு இதை நான் உபயோகித்துக்கொண்டிருந்த போது கிடைத்தவட்டு அது. ஆனால் அதை நிறுத்தியது எனக்கு அப்போது தெரியாது.

அதை வாங்கிக்கொண்டு போய்விட்டு,சரியாக வரவில்லை அங்கிள்,டையலிங் சத்தம் வரவில்லை என்றான்.

பிறகு அவன் அறைக்குப்போய் மோடம் கார்டில் இரண்டு ஸ்லாட் இருக்கும் பார், அதில் ஒன்று சுவற்றில் இருந்து வரும் கேபிளுக்கு மற்றொன்று தேவையானால் இன்னொரு தொலைபேசிக்கு அதனால் கேபிளை மாற்றிப்போட்டு முயற்சி செய் என்றேன்.

மாற்றியபிறகு டையலிங் சத்தம் வந்தது ஆனால் இணையத்துள் இணைய முடியவில்லை.

கொஞ்ச நேரத்துக்குப்பிறகு தான் தெரிந்தது அந்த சர்வீசை வெகு நாட்களுக்கு முன்பே நிறுத்தியிருந்ததை.

சரி என்னுடைய அக்கவுண்டை பயண்படுத்தி பார்கலாம் என்று நினைத்து என்னுடைய விபரங்களை கொடுத்தவுடன் இணையத்தின் உள் போகமுடிந்தது.கணினியில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்று தெரிந்துகொண்டபிறகு,அவனிடம்

உன் உபயோகத்துக்கு தகுந்தமாதிரி வீட்டு ஓனரிடம் பணம் கொடுத்துவிடு அதோடில்லாமல் பயண்படுத்தி முடித்தபிறகு மறக்காமல் அவர்களின் தொலைபேசி இணைப்பை திரும்ப பொருத்திவிடு என்றேன்.

சரி என்றான்.

இதெல்லாம் நடக்கும் போது இரவு மணி சுமார் 10.30.

மறுநாள் ஞாயிறு காலை எழுந்து ஹால் பக்கம் போன போது தொலைபேசி மற்றும் இணையத்துக்கு போட்டிருந்த கேபிளும் தரையில் கிடந்தது.நான் சொன்ன மாதிரி தொலைபேசி கேபிளை பொருத்தாது பார்த்து கோபமாக வந்தது.

நானே எடுத்து பொருத்திவிட்டு போனேன்.

அன்று மாலை வந்த வீட்டு ஓனர் ஆஸ்திரேலியாவுக்கு தொலைபேச முற்பட்ட போது தொடர்பு கிடைக்கவில்லை.சரி வேறெங்கோ பிரச்சனை என்று நினைத்து சும்மா இருந்துவிட்டார்கள்.

மறுநாள் திங்கட்கிழமை,அவரால் வெளிநாட்டுக்கு தொலைபேச முடியவில்லை.நான் சாயங்காலம் போனவுடன் தொலைபேசி நிறுவனத்துக்கு பேசி பிரச்சனை எங்கு என்று கேட்கச்சொன்னார்.

கேட்டபோது அவர்கள் சோதித்துப்பார்பதாக சொன்னார்கள்,ஆனால் இரவு 9.30 மணிவரை எந்த பதிலும் இல்லை.அதற்குப்பிறகு வந்த அழைப்பில் ஏதோ சொன்னதாக வீட்டின் உரிமையாளர் சொன்னார்கள். அவரால் சரியாக விளக்கமுடியவில்லை.

மறுநாள் செவ்வாய்கிழமை அவர் வேலை பார்க்கும் அலுவலகத்திக்கு பக்கத்தில் தான் தொலைபேசி நிறுவனத்தின் அலுவலகம் இருந்ததால்,போய் விஜாரித்து வரலாம் என்று சென்று கேட்ட போது..

அவர்கள் சொன்ன பதிலில் அவர் உறைந்து போய் தேவையான நடவடிக்கைகளில் மேற்கொண்டு விட்டு வீட்டுக்கு வந்து செம கோபத்துடன் எனக்கு தொலைபேசினார்கள்.

என்னவாயிற்று??

அடுத்த பதிவில்.

Thursday, December 14, 2006

வாடகை அறை (2)

வீட்டின் அறை பிடித்திருந்தது,வேறு பிரச்சனை எதுவும் இல்லாததால்,கொஞ்சம் யோசித்துவிட்டு..

நாளை முடிவை சொல்கிறேன் என்றவுடன் வீட்டு முதலாளியின் முகம் லேசாக மாறியது.

அதற்கு வீட்டின் ஓனர்,உங்களுக்கு பிடிக்கும் பட்சத்தில் ஒப்பந்ததில் இன்றே கையெழுத்து போட்டுவிடலாம் என்றும் மேலும் சிலர் இங்கு வர ஆயத்தமாக இருப்பதால் நம் இருவர்க்கும் நல்லது என்றார்.

இது பலரும் போடும் கொக்கி தான்.இல்லாத ஒருவர் வருவதாகவும் இப்போதே முடித்துவிடலாம் என்று உதார் விடுவார்கள்.

வீடும் ஓரளவு பிடித்திருந்ததாலும் நானும் சரி என்று சொல்லிவிட்டு ஒப்பந்ததில் கையெழுத்து போட்டேன்.

மறுநாள் ஒரு மாத வாடகை,ஒரு மாத முன்பணம் கொடுக்கவேண்டும்.அதற்கு தகுந்தார்போல் மாலை 7 மணிக்கு சந்திப்பதாக ஏற்பாடு செய்திருந்தோம்.

மறுநாள் காலை அலுவலகத்தில் இருந்த போது திடிரென்று ஞாபகம் வந்தது.இணைய தொடர்பு கொடுப்பவர்களிடம் இதைப்பற்றி விஜாரித்தால் என்ன? என்று.தொடர்பு கொண்டவுடன், அவர்கள் "நீங்கள் நாங்கள் சொன்ன ஹார்ட்வேர் உபயோகிக்கும் பட்சத்தில்,தேவையான உதவிகள் செய்வோம் மற்ற உபகரணங்களுக்கு நாங்கள் பொறுப்பள்ள" என்று.

புதிய சோதனை ஆரம்பித்தது.அவர்கள் சொல்லும் உபகரணத்தை வாங்க தனிசெலவு கும்.கணக்கு போட்டுப்பார்த்து,இது சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்து,முகவரை கூப்பிட்டு விபரத்தை சொன்னேன்.

சரி சாயங்காலம் பேசலாம் என்றார்.

சாயங்காலம் போனபோது வீட்டின் ஓனர் இல்லை,பணிப்பெண்ணுக்கு வீட்டின் உள்ளே வர/உட்காரச்சொல்ல அனுமதியில்லை.

முகவர் அவரை தொலைபேசியில் கூப்பிட்டபோது "நீங்கள் வீட்டின் உள்ளே உட்காருங்கள்,நான் பணிப்பெண்ணிடம் சொல்கிறேன்" என்றார்.ஆனால் என்ன நடந்ததோ எங்களை வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை.அப்போதே முடிவெடுத்துவிட்டேன்.இது சரிப்பட்டு வராது,எப்படியாவது ஒப்பந்ததை முறித்துவிடவேண்டும்,என்று.சரியான நேரத்துக்கு வராமல் வீடு தேடி வந்தவர்களை மதிக்ககூட தெரியாத மனிதர்களை என்னவென்று சொல்வது.

வீட்டின் ஓனர் வந்தவுடன் தேவையானவற்றை சொல்லி,ஒப்பந்ததை கிழித்துப்போட்டுவிட்டு வந்துவிட்டோம்.

இதற்கிடையில் மற்றொரு முகவர் ஈசூன் பக்கத்தில் ஒரு அறை காலியாக இருப்பதாகச்சொல்லி வீட்டின் முகவரியை குறுஞ்செய்தி செய்திருந்தார்.சரி அதையும் பார்த்துவிடலாம் என்று எண்ணி,அந்த முகவரை கூப்பிட்டு நான் அந்த பாக்கத்தில் நிற்கிறேன்,நீங்கள் வந்தால் பார்த்துவிடலாம் என்றேன்.அவரும் சரி ஒரு 10 நிமிடங்கள் காத்திருக்கவும் என்றார்.

கடந்தன நிமிடங்கள், முகவர் வரும் செய்தியும் இல்லை.

சரி,நாமே மேலே போய் அறிமுகப்படுத்திக்கொண்டு வீட்டை பார்கலாம் என்று நினைத்துக்கொண்டு அங்கு சென்றேன்.

நல்ல வேளை அவர் தமிழ் பெண்மணி சற்று வயதானவர்.மலாய்/சிங்களம் கலந்த தமிழில் பேசினார்.

நான் தங்க வேண்டிய அறை காலியாக இன்னும் சில தினங்கள் ஆகும் என்பதால்,மற்றொரு அறையில் தங்குமாறும் அதன் பிறகு மாற்றிக்கொள்ளலாம் என்றார்.

எனக்கும் அவசரமாக தேவைப்பட்டதால்,ஒத்துக்கொண்டு வெறும் 100 வெள்ளி முன்பனம் வாங்கிக்கொண்டு மீதியை வீட்டிற்க்கு வரும் போது கொடுத்தால் போதும் என்று சொன்னார்.மிகவும் ஞாயமாக இருந்ததால் OK சொல்லி இங்கு வந்துவிட்டேன்.

நான் தங்கவேண்டிய அறை இன்னும் காலியாக பட்சத்தில் என்னுடைய தொலைபேசி இணைப்பை கொடுக்கமுடியாததாலும்,அவர்கள் தொலைபேசி இணைப்பை பயண்படுத்திக்கொள்ள அனுமதி வாங்கியிருந்தேன்.தினமும் இரவு 1 மணி நேரம் உபயோகிப்பேன் என்று முன்கூட்டியே சொல்லியிருந்தேன்.

பரவாயில்லை,ஒன்றும் பிரச்சனையில்லை.உபயோகிப்பதற்கு தகுந்த பணம் மாத்திரம் கொடுத்துவிடுங்கள் என்றார்.

அப்படி வாங்கி, என்னை சந்தேகப்படவைத்த பதிவு அடுத்ததாக வரும்.

Monday, December 11, 2006

வாடகை அறை (1)

வரும் இரு பதிவுகளில் சிங்கையில் வாடகை அறை எடுக்க நான் பட்ட அனுபவங்களை படிக்கலாம்.

வீடு விற்பனை முடியும் முன்பே அடுத்து தங்குவதற்கு அறை பார்க்க ஆரம்பித்தேன்.சில நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் சொல்லி ஏதாவது கேள்விப்பட்டால் சொல்லுங்கள் என்றேன்.

அதே சமயத்தில் இங்கு வரும் தமிழ் பத்திரிக்கையில்(தமிழ் முரசு) வரும் வரிவிளம்பரங்களில் பிடித்த பெயர் உள்ள சிலரை தொடர்புகொண்டு விபரங்களை சொன்னேன்.சிலர் "Yee Tee" யா அது எங்க இருக்கு? என்று கிசு கிசு மூட்டினார்கள்.

அதோடில்லாமல் இணையத்தில் துழாவிக்கொண்டிருந்த போது கிடைத்தவர்களிடமும் சொன்னேன்.

தோராயமாக இவர்கள் எப்படி செய்கிறார்கள் என்று பார்ப்போம்.
முதலில் நீங்கள் என்ன அனுமதியில் இங்கு இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள்,தாவது work permit or permanent Residence என்று.

நமது பெயரை வைத்து அதற்கு தகுந்தார் போல் உள்ள வீட்டை பார்ப்பார்கள்.பிற சமூகத்துடன் போய் வாழும் போது காலாச்சார முறையில் சில கஷ்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதால் வீட்டின் முதலாளிகளும் வாடகைதாரர்களும் அவரவர் சமூகத்திலியே அறை பார்ப்பார்கள்.

அறையில் எவ்வளவு பேர் தங்குவீர்கள்,குளிர்சாதனம் வேண்டுமா?(என்னை பொறுத்தவரை,சிங்கையில் குளிர்சாதனத்துக்கு அவசியம் இல்லை.)
சமைப்பீர்களா,எவ்வளவு முறை சமைப்பீர்கள் போன்ற கேள்விகள் வரும்.சாப்பாட்டுக்கடைகள் பக்கத்தில் உள்ளதா?

MRT எனப்படும் ரயில் சேவை பக்கத்தில் உள்ளதா? என்று பார்க்கப்படும் சிங்கையில் ரயில் மற்றும் பஸ் சேவைகள் முடிந்த அளவில் பக்கத்திலேயே இருக்கும். MRT பக்கத்தில் வீடு இருந்தால் நல்லதா / கெட்டதா? அதை கடைசியில் சொல்கிறேன்.

தமிழ்முரசு பத்திரிக்கையில் இருந்து கிடைத்த எந்த முகவரும் அவர்கள் கூட வந்து வீட்டை காண்பிக்கவில்லை.போனில் கூப்பிட்டு அங்கு போய் பாருங்கள்,இங்கே போய் பாருங்கள், பிடித்தால் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்கள்.ஏதோ ஒரு வீடு பிடித்திருந்தால் அவர் நமக்காக ஒரு ஒப்பந்தம் போடுவார்கள்,பிறகு அரை மாத கமிஷன் வாங்கிக்கொண்டு போய்விடுவார்.வாடிக்கையாளர் நலம் ஜீரோ.

இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு தமிழ் முகவர் கூப்பிட்டு ஒரு வீட்டில் காலி அறை இருக்கிறது என்றார்.வீட்டின் ஓனர் நம்பர் கொடுக்க முடியுமா என்று கேட்டதற்கு,முடியாது என்றார்.

முதல் விசிட்: முகவர் கூப்பிட்டு யூடியில் (Yew Tee) ஓரறை காலியாக இருக்கிறது ஞாயிறு இரவு 8.30 மணிக்கு போய் பாருங்கள் என்றார்.சுமார் 8.20 க்கு அந்த வீட்டின் முன் நின்று கொண்டு கதவை தட்டினேன்,அழைப்பானை அழுத்தினேன்.அழைப்பான் சத்தம் காதில் விழுத்த மாதிரி தெரியவில்லை.சுமார் 5 நிமிடங்கள் சென்றதும் அங்கே இருக்க விருப்பம் இல்லாமல் கீழே வந்து முகவருக்கு போன் போட்டு விபரம் சொன்னேன்.அவரும் வீட்டுக்காரருக்கு போன் போட்டு விஜாரித்துவிட்டு திரும்ப அழைப்பதாக சொன்னார்.நேரம் கடந்ததே தவிர அழைப்பு வரவில்லை.வெறுப்புடன் வீடு திரும்பலாம் என்று மின்வண்டி ஏறியவுடன் முகவரிடம் இருந்து அழைப்பு வந்தது.அவர்கள் வீட்டில் தான் இருப்பதாகவும்,அழைப்பான் சத்தம் கேட்கவில்லை என்றும் சொன்னதாக சொன்னார்.

சரி,ஏதோ தவறு என்று நினைத்து மறுநாள் மாலை 6.30 மணிக்கு முன் ஒப்பந்தம் செய்துகொண்டு செல்லலாம் என்றிருந்தேன்.அதற்கிடையில் அந்த வீட்டின் முதலாளியே அழைத்து இன்று உங்களுக்காக வீட்டில் காத்திருக்கிறேன் என்றார்.

2வது முறையாக அந்த வீட்டின் முன்பு,அதே மாதிரி அழைப்பான் அழுத்தல்,கதவை தட்டுதல் நடந்துகொண்டிருக்க யாரும் வரவில்லை திறக்கவில்லை மாறாக நாய் ஒன்று குலைக்கும் சத்தம் மாத்திரம் கேட்டுக்கொண்டிருந்தது.

ஏமாற்றம் இரண்டாவது முறையாக. I dumb that agent.

இன்னொரு முகவர்:தமிழில் பேசும் முதிய பெண்மணி.இவரும் வீட்டின் விலாசத்தை சொல்வதோடு சரி.கூட வருவதில்லை.இங்கேயும் விடு ஜூட்.

இணையத்தில் கிடைத்த முகவர்: திரு பீட்டர், அழைத்து காதீப் (இடத்தின் பெயர்) யில் ஒரு அறை வாடைகைக்கு உள்ளது பார்கலாமா? என்று கூப்பிட்டு அழைத்துப்போனார்.

மிகப்பெரிய வீடு ஆனால் மஹா மோசமாக பராமரிக்கப்பட்டிருந்தது.அவர் காட்டிய அறையில் ஒரே ஒரு Wardrope தவிர வேறு எதுவும் இல்லை.வாடகை 275 வெள்ளி என்றார்.அறையும் மிகவும் சிறியதாக இருந்தது.சமைக்க அனுமதி தந்தார்.வீட்டின் மற்றொரு அறையை வாடகைக்கு விட்டிருந்தார்.நாங்கள் போன போது சிகரெட் புகையும் ஹாலில் தீர்த்தவாரிக்கு தேவைப்படும் சாமான்கள் தயாராக இருந்தன.தண்ணீர் அருந்துவது என்பது என்னை அவ்வளவாக பாதிக்கப்போவதால் நான் கவலைப்படவில்லை,ஆனால் சிகரெட்?

அப்போதே முடிவெடுத்துவிட்டேன் இது வேண்டாம் என்று,இருந்தாலும் முகவரிடம் இதை கடைசி Option க வைத்துக்கொள்ளலாம் என்றேன்.

அடுத்து செம்பவாங் என்னும் இடத்தில் உள்ள ஒரறை பார்க்கபோனோம்.வீடு சூப்பராக இருந்தது.அறையின் உள்ளே எதுவும் இல்லை.light Cooking செய்யலாம் என்றார். எதிர் பக்கம் உள்ள அறையில் இன்னொரு தம்பதிகள் வாடகைக்கு இருக்கிறார்கள் என்றார்.குளியல் அறை,சமையல் அறைக்கு பக்கத்திலேயே இருந்தது.எனக்கு தேவையான தொலைபேசி இணைப்புக்கு வழியில்லாமல் இருந்தது.அதுவும் நான் தினமும் பயணிக்கக்கூடிய ரயில் நிலையத்துக்கு மிதிவண்டியில் போனால் கூட 20 நிமிடங்கள் கும் போல உள்ளடங்கியிருந்தது.இங்கும் சிகரெட் வாசம்.வேண்டாம் என்றேன்.

அடுத்து மீண்டும் காதீப் பக்கம்.இது தமிழ் மக்கள் இருக்கும் வீடு.அறை சுமாராக இருந்தது.Warrope,படுக்கை இருந்தது.குளிர்சாதன வசதி கொடுக்கப்பட்டிருந்தது.சமையல் அறையில் உள்ள Tiles எப்போது விழுவது என்று நல்லகாலம் பார்த்துக்கொண்டிருந்தது.அறையில் தொலைபேசி இணைப்பு இல்லாததால் அதை போட்டுக்கொள்ள அனுமதித்தார்கள்.வாடகை 400 வெள்ளி என்றும் சமைத்தால் மேலும் 50 வெள்ளி கொடுக்கவேண்டும் என்றார்கள்.அகலக்கட்டை இணைய இணைப்பு இருக்கிறது என்றும்,அவர்கள் கணினியில் ஏதோ பிராப்ளம் என்பதால் நாங்கள் உபயோகித்தால் அதற்கு பணம் முழுவதுமாக கட்டவேண்டும் என்றார்கள்.வீட்டின் நிலைமை மற்றும் வாடகைக்கட்டணம் மிக அதிகமாக இருந்ததால் இதையும் நிராகரித்தேன்.

பீட்டரின் நாலாவது வீடு,இது நான் அப்போது இருந்த வீட்டுக்கு வெகு அருகாமையில் இருந்தது.இந்திய குடும்பம்- கணவன்,மனைவி ஒரு 5 வயது குழந்தை மற்றும் பணிப்பெண்.வாசலில் ஒரு கிளி- பார்த்தவுடன் நம் கால்கரி சிவாவின் பதிவு ஞாபகம் வந்தது.

இந்த வீட்டின் வசதிகள் போறுமானதாக இருந்தது.தொலை பேசி இணைப்பு இல்லை என்பதால் நான் அவர்கள் இணைய இணைப்பை பகிர்ந்துகொள்ள முடியுமா என்று கேட்டேன்.வரும் பில்லில் சம்மாக பகிர்ந்துகொள்ளலாம் என்றார்.அரை மனதுடன் சரி என்றேன்.
என்னுடைய கணினியில் wireless dongle இல்லாததால் எப்படி இணையத்துடன் இணைவது என்ற குழப்பம் வந்தது.பிறகு விசாரித்துக்கொள்ளலாம் என்றிருந்தேன்.

சமைக்க அனுமதி கிடைத்தது.இவருக்கு போன வாடகைதாரருடன் என்ன பிரச்சனையோ இவர் வீட்டில் உபயோகிக்கும் Piped Gas உபயோகம் பற்றியே அதிகம் கவலைப்பட்டார்.

30 வெள்ளிக்கு நான் உபயோகித்த சிலிண்டர் எனக்கு 7 மாதம் வரும்,அந்த அளவு தான் என்னுடைய பயண்பாடு என்று சொன்ன பிறகும் அவர் சமாதனம் அடையவில்லை. இவர் போட்ட சில கண்டீஷன்கள்.

வீட்டிற்கு உள்ளே வரும் போது காலை கழுவவேண்டும்.(ஆதாவது காலை கழுவாமல் ஹால் வழியாக சமையல் அறையில் நுழைந்து அங்குள்ள குளியல் அறையில் காலை கழுவிவிட்டு எனது அறைக்கு போகவேண்டும்).எனக்கென்ன தண்ணீர் செலவு அவுங்க தானே.

பிரதி செவ்வாய் கிழமை சாம்பிரானி போடுவோம்.அதனால் வீடு புகையாக இருக்கும்.

வாரத்துக்கு ஒரு முறை தான் வாஷிங் மிசின் போடவேண்டும்.

குளிக்க வெண்ணீர் போடலாம்,குளித்தபின் அணைத்துவிடவேண்டும்.

எல்லாம் பேசி முடித்த பிறகு,சரி நாளை என் முடிவை சொல்கிறேன் என்றேன்.

வாங்க அடுத்த வீட்டுக்கு.

Wednesday, December 06, 2006

கதாவிலாசம்

எஸ்.ராமகிருஷ்ணன்.

இவரை, தமிழ் எழுத்துலகம் அதுவும் ஆனந்தவிகடன் புத்தகம் படிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும் & பரிச்சயமானவர்.இவருடைய தேசாந்திரி தொடர் படிப்பவர்களுக்கு இவருடைய எழுத்தைப்பற்றி தெரிந்திருக்கும்.

முதலில் நானும் இந்த தொடரை பார்த்தபோது,அதில் வரும் படங்கள் அவ்வளவாக பிடிக்காததால் "பாஸ்" செய்துகொண்டிருந்த போது ஒரு நாள் ஏதோ கோயில் படம் போட்டு எழுதியிருந்தார்.சும்மா அட்டகாசமாக இருந்தது.அதிலிருந்து அவரையும் படிக்க ஆரம்பித்தேன்.
கடந்த வாரம் நூலகம் போனபோது தற்செயலாக அவர் எழுதி "விகடனார்" வெளியிட்ட "கதாவிலாசம்" என்ற புத்தகம் கிடைத்தது.

சும்மா அட்டகாசமான"லே அவுட்" உடன் வந்திருக்கிறது.ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு எழுத்தாளருடன் பின்னிப்பிணைந்திருக்கிறார்.

தமிழ்மணத்தில் வரும் பல பதிவுகளை ஒன்று திரட்டிப்போட்டது போல் உள்ளது சில நிகழ்வுகள்.

இவருடைய பல நிகழ்வுகளை ஆனந்தவிகடன் மூலம் படித்திருந்ததால் அதையெல்லாம் மேலோட்டமாக பார்த்துவிட்டு படிக்காதது மட்டும் படித்தேன்.

ஊர் சுற்றுவதில் உள்ள சுகம்,ஒரு எழுத்தாளனை சந்திக்கும் போது என்ன நேர்கிறது என்று ஒரு சின்ன உலகத்தையே படைத்திருக்கிறார்.

நம் சக வலைபதிவாளர்களுக்காக அட்டைப்படம் இங்கே.

Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting

பெண் சுதந்திரம்,அவர்களின் வலி,குடும்ப கட்டுக்கோப்பு,போலீஸ்காரரின் விநாயகர் கண்ணாடி என்று ஒரு வரைமுறைக்குள் கொண்டுவரமுடியாதபடி எழுதியுள்ளார்.

பலரும் படித்து பயனைடைய வேண்டிய நூல் என்பதால் இந்த பதிவு.

அதுவும் இளம் எழுத்தாளர்களுக்கு.

ஆமாம் இதென்ன கடைசியில் பாரதியார்?
Photobucket - Video and Image Hosting

இதை படித்தால் யாரவது பிரொபைல் ஞாபகத்துக்கு வருதா?

எனக்கு வந்தது.

கண்டுபிடிச்சுக்குங்க.

ஒரே ஒரு க்குளு- இவர் சென்னையில் இருப்பவர்.

படங்கள்:நன்றி:விகடனார் அவர்களே.

Friday, December 01, 2006

அப்பாடி!!

வீடு பார்த்த மறுநாள் மாலை 7 மணிக்கு என் வீட்டுக்கு வந்து முறையான ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம் என்று என் முகவர் கூறியிருந்தார்.இந்த ஒப்பந்தம் எனக்கும் வீடு வாங்குபவருக்கும் இடையே உள்ளது.

இப்படி ஒப்பந்தம் போடுவதற்கென்றே சில விதிமுறைகள் உள்ளது.அவற்றில் சில வற்றை பார்ப்போம்.

இந்த ஒப்பந்தத்துக்கு "Option to Purchase"என்று பேர்.வீடு வாங்குவது என்று முடிவெடுத்த பிறகு வாங்குபவர் ஒரு தொகை கொடுத்து முன் பதிவு செய்து கொள்வது போல்.இதனால் மற்றொருவர் வந்து நான் இன்னும் அதிகமாக கொடுக்கிறேன் என்றாலும் ஒத்துக்கொள்ளமுடியாது.

படம் கீழே.

Photobucket - Video and Image Hosting


என்னுடைய வீடு ஏற்கனவே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதால் வீடு வாங்கப்போகிற விலை தோராயமாக தெரியும் அப்படியில்லாவிட்டால்,மதிப்பீடு வந்த பிறகு தான் இதை வீவக யிடம் கொடுக்கமுடியும்.

எங்களுடைய முகவர்கள் அவரவருக்கு வேண்டிய விவரங்களை சொல்லியபிறகு, வீடு விற்கும் விலையை போடும் போது வாங்குபவர் "நான் ஏற்கனவே செய்யப்பட்ட மதிப்பீடு காலாவதியாகிவிட்டதால்,நான் ஒத்துக்கொள்ளமுடியாது" என்றார்.

புது தலைவலியா? என்று நினைத்துக்கொண்டேன்.

அப்படியென்றால் புதிதாக மதிப்பீடு செய்ய விண்ணப்பம் செய்யவேண்டும்,அதற்குப்பிறகு வந்து மதிப்பீடு செய்து எல்லாம் முடிவதற்கு மேலும் 1~2 மாதங்கள் ஆகலாம்.

வேறு வழி தெரியாததால் ஒத்துக்கொண்டேன்.

மேல் சொன்ன பேப்பரில் கையெழுத்து போட்டபிறகு அவர்கள் சென்றபிறகு நானும் எனது முகவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.அப்போது நான் சொன்னேன்.அவர்கள் தவறாக மறுமதிப்பீடு கேட்கிறார்கள்,ஏற்கனவே வந்த மதிப்பீடை விட அதிகமாகப்போகிறது என்றேன்.இது ஒரு மாதிரியான சூதாட்ட விளையாட்டு தான்.மதிப்பீட்டாளர்கள் பலர் இருப்பதால் அவரவர் கண்ணோட்டத்தில் விலை மதிப்பிடுவார்கள்.அதனால் சில சமயம் ஏறும் / இறங்கும். என் பேச்சை என் முகவரும் ஒத்துக்கொள்ளவில்லை.ஏற்கனவே செய்யப்பட்டதை விட குறையும் என்றார்.

மறுபடி மதிப்பீடு வந்தது.

நான் முதலில் கேட்ட வீட்டின் விலைக்கு மேல் 2K என்பதை யாரோ ஞாபகம் வைத்துக்கொண்டு 162K க்கு மறுமதிப்பீட்டு போட்டு வந்தது.அனாமத்தாக 2K வந்ததில் கொஞ்சம் சந்தோஷம் தான்.

இது நடந்துகொண்டிருக்கும் போது எனது முகவர் கூப்பிட்டு,என்னுடைய முகவர் பணிக்கு உண்டான தொகைக்கும் ஒரு ஒப்பந்தம் போட்டுவிடலாம்,இருவருக்கும் பிரச்சனை இருக்காது என்றார்.

நல்லது ஆனால் என்னால் 2% கொடுக்கமுடியாது.வீடு விற்பதில் நான் லாபம் பார்க்கவில்லை அதனால் என்னால் S$2500 தான் கொடுக்கமுடியும் என்றேன்.எனக்கு நன்றாக தெரியும்,வீட்டு விற்பனை இந்த அளவுக்கு வந்த பிறகு எந்த முகவரும் கிடைப்பதுவரை லாபம் என்ற நோக்கில் தான் இருப்பார்கள் என்பதால் அவ்வாறு சொன்னேன்.முதலில் இருந்தே இந்த முகவரின் சேவை அவ்வளவு தரமாக இல்லாததாலும் சில நூறு வெள்ளியை இழந்திருந்தாலும் அவரிடம் பேரம் பேசினேன்.

அதென்ன கணக்கு 2500?

வீடு விற்பது 162K, முறையாக கொடுக்கவேண்டிய 2% வெள்ளி 3140 வருகிறது.முதல் தடவை மதிப்பீடு செய்து அதற்குள் வாங்குபவரை பிடிக்காததால் எனக்கு இழப்பு சுமார் 180 வெள்ளி,அதையும் அவர் தலையில் கட்டினேன்.இணையத்தில் பார்க்கும் போது பலரும் 1.5% கொடுக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு 2500 வெள்ளி என்றேன்.3000 க கொடுங்கள் என்றார் முகவர்.

முடியாது என்று சொன்னதால் வேறு வழியின்று ஒத்துக்கொண்டார்.ஒப்பந்தம் போடும் போது 5% GST-பொருள் சேவை வரி தனியாக கொடுக்கவேண்டும் என்றார்.(பாருங்கள் எங்கெங்கு சுரண்டமுடியுமோ அங்கெங்கு சுரண்டிப்பார்கிறார்கள்)அதற்கும் முடியாது என்றேன்.நான் பேசியது மொத்த தொகை அதுவும் நமது கடைசி Appointment முடிந்த கையோடு கொடுத்துவிடுவேன் என்றேன்.

ஒத்துக்கொண்டார்.அவருக்கும் வேறு வழியில்லை.வந்த வரை லாபம் தானே.

இது நடந்த பிறகு ஒரு வழியாக "வீவக" விடம் எங்களது விண்ணப்பம் போய் அதை அவர்கள் சோதித்துவிட்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அப்பாயின்மென்ட் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவுசெய்து அன்று போய் அந்த வேலையை முடித்தோம்.அன்றே கடைசி அப்பாயின்மென்ட்க்கும் தேதி குறித்துவிடலாம்.

வீவக அதிகாரி கேட்டவுடன்,வாங்குபவர்களிடம் கலந்தாலோசித்து நவம்பர் 16 என்று முடிவுசெய்துவிட்டோம்.வீடு கையை விட்டு போனால் சரி என்பதால் எனக்கென்று எந்த வித கட்டுப்பாடு இல்லாமல் சரி என்று சொன்னேன்.

ஒரு வழியாக நவம்பர் 16ம் தேதி கட்டுப்பாடில்லாமல் சுதந்திரமனிதனாக ஆனேன்.

இழந்தது எவ்வளவு?
கீழே பார்த்து நீங்களே கணக்கு போட்டுக்குங்க!
:-))

Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting

இனி தங்குவதற்கு வாடகை வீடு பார்க்கவேண்டும்.இதில் பார்த்த வீடுகளும் அதன் அனுபவங்களும் தொடரும்.

Wednesday, November 29, 2006

மதிப்பீடு

மதிப்பீட்டார்கள் வந்து மதிப்பீடு செய்து முடித்து சுமார் 2 வார காலத்துக்குள் அவர்களின் report வந்துவிடும்.மொத்தமே 5 அல்லது 6 பக்கங்களுக்குள் அடங்கிவிடகூடிய சிறிய புத்தகமாக இருக்கும்.வீட்டில் எடுத்த படங்கள் அதனுள் பொருத்தப்பட்டு இருக்கும்.படங்களை பார்க்கும் போது இது நமது வீடு தானா என்று சந்தேகமாக இருக்கும்.

3 மாதத்தில் காலாவதியாகக்கூடிய report உங்கள் கைக்கு வரும் போதே 15 நாட்கள் காலியாகிவிடும்.அதற்குப்பிறகு முகவர் அவரிடம் மற்றும் நண்பர்களிடம் விஜாரித்து பலரை கூட்டி வருவார்கள்.சிலருக்கு வீட்டை சுற்றி பார்க்க 5 நிமிடம் ஆகும், சிலர் மறுமுறை வந்துகூட பார்ப்பார்கள்.வீட்டை திறந்துவிட்டு விட்டு நம்வேலையை பார்க்க ஆரம்பிக்கலாம்.பேச்சு வார்த்தைகள் அனைத்தும் முகவருக்கும் அவர்களுக்கும் இடையே தான்.

வந்த அனைவரும் "ஏன் வீட்டை விற்கிறீர்கள்?" என்ற கேள்வியை கேட்காமல் இருப்பது இல்லை.எவ்வளவு பேர் உண்மையை சொல்வார்கள் என்று தெரியவில்லை.

வீட்டின் விலை மீது பேச்சுவார்த்தை நடத்தும் போது தான் வீட்டின் உரிமையாளர் நுழைவார்.

என் வீட்டை பார்க்க கிட்டத்தட்ட 25 பேர் வந்தார்கள்.பலர் 5 நிமிடங்களுக்கும் குறைவாக பார்த்துவிட்டு போனார்கள்

வீட்டை விற்க முடிவெடுத்த சமயத்தில் வீட்டின் மேல் 10K வைத்து விற்பனை செய்யுமாறு முகவரை பணித்திருந்தேன்.நான் கேட்பது இப்போது உள்ள நிலமையில் அதிகம் என்று தெரிந்தே சொன்னேன்.அப்போது தான் கொஞ்சமாவது கொடுப்பார்கள் என்று நினைதேன்.நான் இந்த வீட்டை வாங்கும் போது 20K சொல்லிவிட்டு 11K க்கு வந்தார்கள்.

மாதம் ஆக ஆக என்னுடைய எதிர்பார்ப்பை குறைத்துக்கொண்டு கடைசியில் 2K வில் வந்து நின்றேன்.

இதற்கிடையில் 3 மாதங்கள் கடந்தது, எனக்கும் முகவருக்கும் இருந்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில்,பயம் தொற்றிக்கொண்டது.சேற்றில் காலைவிட்ட கதையாகிவிட்டதே என்று நினைத்துகொண்டிருந்தேன்.பேசாமல் நம்முடைய குடியுரிமையை மாற்றிவிடலாமா? என்ற எண்ணம் வந்தது.

குடியுரிமையை மாற்றினால் வீட்டின் விலையில் சுமார் 35K தள்ளுபடி கிடைக்கும்.மின் தூக்கிக்காக சுமார் 1K (மாதத்திற்கு 11 வெள்ளி) கட்டினால் போதும்.வேலை பிரச்சனையும் ஒரளவு தீரும்.
இவ்வளவு சலுகைகள் இருந்தாலும்,பணத்துக்காக குடியுரிமையை மாற்றவேண்டுமா? பிறகு எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே எதிர்பார்க்கும் எண்ணம் வந்துவிடுமோ என்ற எண்ணத்தில் இருந்தேன்.

குடியுரிமை மாற்ற நமது தேசத்துக்கு 31 வெள்ளி கொடுத்தால் போதும்.:-((

ஒப்பந்தம் முடிந்தபிறகு அந்த முகவரே வந்து மீண்டும் நம் ஒப்பந்தத்தை புதுப்பிக்கலாமா? என்றார்.

வேண்டாம் என்று சொல்லிவிட்டு,வேண்டுமானால் உங்களிடம் வாங்குபவர்கள் யாரும் வந்தால் அழைத்து வாருங்கள்,பேரம் படிந்தால் ஒப்பந்தம் இல்லாமல் முடித்துக்கொள்ளலாம் என்றேன்.

அவரும் சரி என்று பார்க்கத்தொடங்கினார்.

இதற்கிடையில் இன்னும் சில முகவரை அழைத்து இந்த மாதிரி வீடு விற்பனைக்கு உள்ளது வேண்டுமானல் வாங்குபவர்களை அழைத்துவாங்கள்-ஒப்பந்தம் வேண்டாம் என்றேன்.

சிலர் ஒத்துக்கொண்டு பிறகு ஒன்றும் செய்யவில்லை.பலர் தொலைபேசியில் பேசியதோடு சரி.

பலரில் ஒருவர் மாத்திரம் சிலரை கூட்டி வந்தார்.சிலர் இஷ்டப்பட்டாலும் அவர்கள் தங்கள் வீட்டை விற்காமல் இதை வாங்கமுடியாது என்பதால் கை நழுவிப்போனது.

இப்படியாக செப்டம்பர் 2005 இல் ஆரம்பித்து செப்டம்பர் 2006 வரை இழுத்துக்கொண்டிருந்தது.கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழக்க ஆரம்பித்த நேரத்தில்,ஒரு நாள் இரவு, வீடு பார்க்க கணவனும் மனைவியுமாக இருவர் வந்திருந்தார்கள்.வரவேற்று விட்டு கணினியில் ஏதோ நிறுவிக்கொண்டிருந்ததால் அங்கு போய்விட்டேன்.

கொஞ்ச நேரம் சுற்றிப்பார்த்துவிட்டு போய்விட்டார்கள்.பிறகு கொஞ்ச நேரத்தில் என் முகவர் என்னிடம் வந்து,அவர்களுக்கு வீடு பிடித்துள்ளதாகவும் ஆனால் மதிப்பீட்டுக்கு மேல் எதுவும் காசு கொடுக்கமுடியாது என்றார்கள்.

நான் என் இடத்தில் இருந்து இறங்க முடியாமல், விலைக்கு மேல் 2K கொடுத்தால் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன்.

அப்போது இருந்த மதிப்பீடு கீழே படத்துடன்.

Photobucket - Video and Image Hosting


மறு நாள் திரும்பவும் முகவரிடம் இருந்து அழைப்பு.திரும்பவும் அதே கதை தான்.

இத்தனை மாதங்களாக இழுத்தடித்த வேதனை,பலத்த சேதாரத்துடன் விற்கும் நிலமை என்று எல்லாம் சேர்ந்தது.

இதற்கு மேலும் இதை தொடரக்கூடாது என்ற எண்ணத்தில் முகவரிடம் மேற்கொண்டு ஆக வேண்டிய பணிகளை தொடருமாறு கூறினேன்.

அன்று இரவே வீட்டைவாங்குபவரும், வீட்டைவாங்குபவர்களின் முகவரும்,என் முகவரும் வந்தார்கள்.

மேற்கொண்டு நடந்ததை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Monday, November 27, 2006

முகவர் பணி (2)

வீட்டின் முகவருக்கும் உங்களுக்கும் உள்ள ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அதற்கு தேவையான நடவடிக்கைகளில் இறங்குவார் முகவர்.

முதன் முதலில் வீட்டை மதிப்பீடு செய்வதற்கு apply செய்யவேண்டும்.இது வீட்டின் உரிமையாளர் செய்யவேண்டும்.நம் முகவரிடம் நாம் ஒப்பந்தம் வைத்துள்ளாததாலும் அதற்கு தேவையான ஆவணங்கள் அவரிடம் இருக்கும் ஆதலால்,அதில் கையெழுத்து போட்டு கொடுத்து சுமார் 180 வெள்ளி கொடுத்துவிட்டால் போதும் அதற்கு தேவையானவற்றை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.

இதிலும் ஏமாற்று வேலை உண்டு.ஆதாவது போஸ்ட் மூலம் apply செய்தால் 180 வெள்ளி,இணையம் மூலம் செய்தால் 167 வெள்ளிதான்.உங்களிடம் 180 வெள்ளி வாங்கிக்கொண்டு இணையம் மூலம் apply செய்து அதிலும் 13 வெள்ளி சம்பாதித்து விடுவார்கள்.

அடுத்து இந்த மதிப்பீடு வீட்டை வாங்குபவர்கள் தங்கள் கடனுக்காக உபயோகிக்கப்போவதால் அதற்கான செலவை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.அப்படியில்லாமல் நீங்கள் பணம் கட்டி செய்த valuation expiry தேதிக்குள் வீடு விற்கமுடியாவிட்டால் அதற்கு செலவு செய்த பணம் விரயம் தான்.இந்த 180 வெள்ளிக்காக முதல் அடியை நாம் எடுத்து வைக்காவிட்டால் எங்கும் போக முடியாது.நமக்கு அதிஷ்டம் இருந்தால் முதல் Valuation யிலே வேலை முடியும்.

நான் முதலில் ஒரு முகவரை கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்தியபோது"நான் உங்களிடம் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள விருப்பம் இல்லை,உங்களிடம் வாங்குபவர் இருந்தால் கூப்பிட்டு வாருங்கள்,பேசுவோம்" என்றேன்.
அவரும் 3 மாதங்கள் முயற்சித்து பார்த்துவிட்டு,"ஒன்றும் சரியாகவில்லை" என்று விட்டுக்கொடுத்துவிட்டார்.

அடுத்து ஒருவர்,இவர் ஒரு பெரிய முகவர் நிறுவனத்தை சேர்ந்தவர் என்பதால் கூப்பிட்டு பேசினேன்.பல விஷயங்களை பேசிய பிறகு, இந்த முறை ஒப்பந்தத்துடன் முயலுவோம் என்று சொல்லி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுக்கொடுத்தேன்.

அடுத்து,உள்ளூர் தினசரிகளில் மற்றும் இணையத்திலும் நமது வீட்டு விவரங்களை மேம்போக்காக வெளியிடுவார்கள் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.தினசரியில் வரும் விளம்பரங்களில் இந்த பாக்கத்தில் இந்த டைப் வீடுகள் விற்பனைக்கு உள்ளது என்று தான் வரும்.எந்த மட்டத்தில் மற்றும் வீட்டின் எண் நீங்கள் தனிப்பட்ட முறையில் விஜாரிக்கும் போது தெரியவரும்.இந்த 3 மாதங்கள் தான் முகவரின் முழு வேலைகள்.வீட்டு முதலாளி தேவைப்படும் போது வீட்டை திறந்துவிட்டால் போதும்.

பலர் வேலை முடிந்துதான் வீட்டை பார்க்க இரவு தான் வருவார்கள்.

வாங்குபவர்களின் கேள்விகளுக்கு முகவரே பதில் சொல்லிவிடுவார்.

வீடு விற்பனையில் இருக்கும் போது வீட்டின் உள்ளே எவ்விதமான மேம்பாட்டு பணிகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.

வீட்டை முகவர் காண்பித்தாலும்,வாங்குபவர்கள் காலை வேளைகளில் அந்த சுற்றுப்புறம் எப்படியுள்ளது? சாதக பாதகங்களை ஆராயவேண்டும்.எந்த வீட்டையும் அவசரத்தில் "சரி" என்று உடனடியாக சொல்லக்கூடாது.பல வீடுகளை பார்த்து முடிவு செய்யவேண்டும்.
முகவரை மற்றும் நம்பாமல் வாங்கப்போகும் வீட்டை நீங்கள் வாங்கமுடியுமா என்று "வீவக" இணைய தளத்தில் சென்று பார்க்கவேண்டும்.

எல்லா பாக்கத்திலும் இன வாரியாக சதவீத அடிப்படையில் வசிக்க வேண்டியதால்,பிற இனத்தில் இருந்து வீடு வாங்கும் போது கவனமாக இருக்கவேண்டும்.இந்த விபரங்கள் "வீவக" இணையதளத்தில் உள்ளன.இங்கு எந்த வீவக அடுக்குமாடி கட்டிடத்திலும் ஒரே ஒரு இனம் அதிகமாக இருக்கமுடியாதபடி அரசாங்கம் அமைத்துள்ளது.

என்ன எண்ணம்!!

பல இனம் சேர்ந்து வசிக்கும் போது அவர்கள் பழக்க வழக்கங்கள் நமக்கும் தெரியவரும்.ஒருவரை ஒருவர் விரோதியாக பார்க்கும் எண்ணம் மறைந்துவிடும்.சீன லயன்ஸ் ஆட்டம் போது எழும் அபரீதமான சத்தம்,Ghost பண்டிகையின் போது எரிக்கும் காகித பணம் ஏற்படுத்தும் புகை மற்றும் காகித தூள்கள்,மலாய் மற்றும் இஸ்லாமிய நண்பர்கள் நடத்தும் கல்யாணத்தின் போது சுமார் 40~50 இருசக்கிர வண்டிகளின் சத்தம்,நம்மவர்களின் மணியோசனை,சத்தமான பாட்டு கேட்கும் பங்கு எல்லாம் சேர்ந்து ஒருவரை ஒருவருடன் புரிந்துகொள்ள உதவுகிறது.

என்ன மிஞ்சி மிஞ்சி போனால் கதவை அடைத்துவிட்டால் சத்தம் அவ்வளவாக வரப்போவதில்லை.அதுவும் கொஞ்ச நேரத்துக்கு.சில சமயம் கொடுக்கப்பட்ட நேரத்துக்கு மேல் சத்தம் எழுப்பினால்,ஒரு போன் கால் போதும் அடுத்த 10 நிமிடங்களுக்குள் "உள்ளூர் மாமா" இங்கு இருப்பார்.எது எப்படி இருந்தாலும் இரவு 10 மணிக்கு மேல் வசிக்கும் இடங்களில் சத்தம் போட அனுமதியில்லை.

வாங்க திரும்ப முகவரிடம் போவோம்.

எனது முகவர் Valuation க்கு apply செய்தவுடன், இரண்டு வாரங்கள் கழித்து ஒரு தேதியில் அதை செய்பவர்கள் வருவார்கள் என்று கடிதம் வந்தது.உங்கள் செளகரியபடி இந்த தேதியை மாற்றிக்கொள்ளலாம்.

Valuation செய்பவர்கள் வந்து வீட்டின் சில அறைகளை ·பிலிம் புகைப்பட கருவியின் மூலம் சுட்டுக்கொண்டு 5 நிமிடங்களுக்குள் வீட்டைவிட்டு வெளியேறிவிடுவார்கள்.வீட்டின் உள்ளே போடப்பட்டிருக்கும் கற்கள் வகை,பொதுவாக வீட்டின் நிலமையை கணக்கில் கொண்டு மதிப்பீடு செய்வார்கள்.வீட்டின் மட்டத்தை பொருத்தும் இந்த மதிப்பு மாறும்.மேலே ஏற ஏற மதிப்பும் ஏறும்.

மற்றவை வரும்..

Thursday, November 23, 2006

வீட்டு முகவர்கள்(1)

போன பதிவில் வெளிநாட்டவர்கள் இங்கு (சிங்கையில்) வீடு வாங்கும் போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று சொல்லியிருந்தேன்.
மேலே பார்ப்போம்.

வீடு வாங்குவது என்று முடிவுசெய்தபிறகு,எங்கு வாங்க போகிறீர்கள் என்றும் முடிவுசெய்திருப்பீர்கள்.அந்த இடத்தில் வீடு விற்பனைக்கு உள்ளதா? என்று எப்படி தெரிந்துகொள்வது?

பல ஊர்களில் உள்ளது போல் "விற்பனைக்காக" என்ற விளம்பர பலகை இந்த வீவக வீடுகளில் தொங்கவிடப்படாது.அதை தொங்கவிட்டு காற்றில் எதன் மேலாவது விழுந்து அதற்கு இழப்பீடு கட்டவேண்டிய நிலமையில் கொண்டுவிட்டு விடும் என்பதால் பலர் அதை செய்வதில்லை.

அதற்கு பதிலாக,வீட்டு முகவர்களையே பார்க்க வேண்டியிருக்கும்.பல நாளிதழ்களில் இவர்கள் கொடுக்கும் வரி விளம்பரத்தை வைத்து கேட்கலாம்.அல்லது வீட்டு போஸ்ட் பாக்ஸில் வந்து விழும் துண்டுச்சீட்டிலும் இவர்கள் விவரம் இருக்கும்.புது வருடம் சமயத்தில் சின்ன நாட்காட்டியுடன் உள்ள அட்டையை கொடுப்பார்கள்,அதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

90% முகவர்கள் மற்ற முகவர்களுடன் சேர்ந்து தங்களிடம் இருக்கும் வீடுகளை Co-broke முறைப்படி விற்க/வாங்க முயற்சிப்பார்கள்.இது தான் பலரின் ஆதார வருமானம் என்பதால் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு வாழ்கையை ஓட்டுகின்றனர்.

பலர் ஏதோ ஒரு நிறுவனத்தின் கீழே வேலை பார்க்கிறார்கள்.வரும் வருமானத்தில் அவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் கிடைக்கும்.

முகவர்களின் வருமானம் வீட்டின் விற்பனையில் குறிப்பிட்ட சதவீதம்.
விற்பவர்களிடம் இருந்து வீட்டின் விலையில் 2%
வாங்குபவர்களிடம் இருந்து 1%

பல வீடுகளுக்கு வாங்குபவர்களுக்கு ஒரு முகவரும் விற்பவர்களுக்கு வேறொரு முகவரும் இருப்பார்கள்.

மேல் சொன்ன விகிதாச்சாரம் நடைமுறையில் உள்ளது.யாரும் கட்டாயப்படுத்த முடியாது.அதனால் Exclusive ·பார்ம் கையெழுத்து போடும் போதே நீங்கள் அதில் எழுதிவிடலாம்.பிறகு பிரச்சனை எழாமல் இருக்கும்.

முகவர் போடும் இந்த ஒப்பந்தம் கால வரைமுறைக்குட்பட்டது.உங்கள் வீட்டின் மதிப்பு வெறும் 3 மாதங்களுக்கு மட்டும் தான் செல்லுபடியாகும் என்பதால் நீங்களும் 3 மாதங்களுக்கு மட்டும் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ளலாம்.பிறகு தேவையென்றால் வாய் மொழி நீட்டிப்பு செய்துகொள்ளலாம்.ஒரு முகவரிடம் ஒப்பந்தம் போட்ட பிறகு வேறு யாருடன் ஒப்பந்தம் செய்துகொள்ள இயலாது.அதையும் மீறி செய்துதான் ஆகவேண்டும் என்றால் அதற்கு தகுந்த பணத்தை அந்த முகவருக்கு கொடுக்க நேரிடும்.

முகவர் போடும் ஒப்பந்தத்தில் நீங்கள் வீட்டை எந்த விலைக்கு விற்க முற்படுகிறீர்கள் என்பதையும் தெரிவித்துவிடவேண்டும்.வீட்டை விற்கவேண்டாம் என்று திடீரென்று முடிவெடுத்தால் அப்போது இவ்வாறு குறிப்பிடுவது ஓரளவு அனுகூலமாக இருக்கும்.

வீட்டை விற்பதற்கு முயலும் நபரும்/முகவரும் என்ன செய்யவேண்டும் என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Monday, November 20, 2006

வெளிநாட்டவர்க்கு வீடு

இதற்கு முன்பு எழுதிய பகுதிகளில் சிங்கையில் மின் தூக்கி மேம்பாட்டு பணிகளை பற்றியும் மற்றும் வீடு வாங்குவதை பற்றியும் எழுதியிருந்தேன்.

அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் அதன் சாதக பாதகங்களை பற்றி பார்க்கலாமா?
இது முழுக்க முழுக்க உள் நாட்டு விஷயம் என்பதால் இங்குள்ளவர்களுக்கு சற்றேனும் உதவும் என்ற நோக்கத்தில் எழுதுகிறேன்.மற்றவர்களும் தெரிந்துகொள்ளலாம்.

புதியவர்கள் மற்றும் வெளிநாட்டவர் வீடு வாங்க/விற்க என்ன செய்யவேண்டும்,எதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதை எனக்கு தெரிந்த அளவில் எழுதுகிறேன்.தவறுகள் இருக்கலாம்,தெரிந்தவர்கள் குறிப்பிட்டால் திருத்திக்கொள்கிறேன்.
வெளிநாட்டவர் இங்கு வீடு வாங்கி தான் ஆக வேண்டுமா?வாடகைக்கு இருக்க முடியாதா?

கேள்விகள் பல...

சிலவற்றுக்கு மாத்திரம் பதில் காணலாம்.

முதன் முதலில் கவனத்தில் கொள்ளவேண்டியது, உங்கள் வேலை நிலவரம்.நீங்கள் பணக்காரரின் பிள்ளை அல்லது உங்கள் சுற்றம் உங்களுக்கு அவர்கள் நாட்டிலிருந்து பணம் அனுப்பி காப்பாற்ற முடியும் என்றாலே தவிர,உங்கள் வேலை தான் உங்கள் வரவு செலவுக்கு ஆதாரம்.

உங்கள் வேலை நிரந்தரமா? (அப்படி இந்த காலத்தில் ஏதேனும் வேலை இருக்கா?என்ன) 25 வருடங்களுக்கு இருக்கும் என்று வைத்துக்கொண்டால் தாராளமாக முயலலாம்.சம்பளம் சுமார் 2500 க்கு மேல் இருந்தால் நலம்.நீங்கள் 30 வயதின் வட்டத்துக்குள் இருந்தால் உங்களுக்கு வங்கியின் கடன், கடைசிவரை கிடைக்கும்.

அல்லது வீட்டை வாங்குவது 5 ~ 10 வருடத்திற்கு பிறகு விற்றுவிடுவது.இதுவும் ஓரளவு பாதுகாப்பான திட்டம் என்றாலும்,விற்கும் போது பிரச்சனை வந்தால் நீங்கள் நினைத்தது, உங்களை பாதாளத்தில் அழுத்திவிடும்.

அடுத்தது நல்ல இடத்தில் வீட்டை வாங்குவது,(கவனம்:வீட்டின் விலை இங்கு அதிகமாக இருக்கும்)பிறகு விற்றுவிடுவது.இதில் இருக்கும் ஒரு ஆதாயம்,வீட்டை எப்போது வேண்டுமானாலும் விற்க முடியும்.உங்களுக்கு அதிஷ்டம் இருந்தால் பொருளாதாரம் பிரகாசித்து உங்கள் வீட்டு விலையை உயர்த்தி உங்களுக்கு லாபம் சம்பாதித்து கொடுக்கக்கூடும்.

மேலே சொன்ன அவ்வளவுமே,உங்கள் வயது,வேலையை பொருத்தது.
இதை தவிர,நீங்கள் உங்கள் குடியுரிமையை மாற்றிக்கொள்ள உத்தேசமாக இருந்தால் நீங்கள் தைரியமாக வாங்கலாம்.ஏனென்றால் இந்த அரசாங்கம் உங்களை அவ்வளவு சீக்கிரம் கை விட்டு விடாது.உங்களை உழைக்கத்தூண்டும்,பணம் கட்டாமல் அந்த வீட்டில் இருக்கலாம் ஆனால் காலம் தாழ்ந்து கட்டச்சொல்லும்.

வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெற்றபிறகு அவர்கள் நடைமுறையில் நிறைய மாற்றங்கள் வரும்.அவற்றில் சில

பழைய வீட்டை விற்றுவிட்டு புதிய வீடு வாங்குவார்கள்.

20~30K கொடுத்து அட்டகாசமாக மேம்பணிகள் மேற்கொள்வார்கள்.கார் வாங்க அடிதளம் போடும் எண்ணம் வரும்.சிகப்பு கடவுச்சீட்டு கிடைத்தவுடன் நினைத்த நேரத்தில் விசா இல்லாமல் பக்கத்து நாடுகளுக்கு போகத்தூண்டும்.இது அத்தனையும் தவறு என்ற நோக்கத்துடன் சொல்லவில்லை.ஒரு சில மாற்றம் தெரியும் என்பதற்காக.

ஒரு தலைமுறை போனதும் வீட்டில் இருந்து தமிழும் போய்விடும்.

கொஞ்சம் தடம் மாறிவிட்டேன்.திரும்புவோம்.

வீடு வாங்குவதற்கு முன்பு,அந்த வீடு கட்டி எவ்வளவு வருஷம் ஆகிறது என்று பார்க்கவேண்டும்.ஏனென்றால் சுமார் 20 வருடங்கள் கழித்து மின் தூக்கி மேம்பாடு வரும்.30 ~ 35 வருடம் என்றால் மொத்த மேம்பாட்டு பணிகள் வரும். இப்போது கட்டப்படும் வீடுகளில் மின் தூக்கி எல்லா மட்டங்களிலும் நிற்குமாறு அமைக்கப்டுவதால் இந்த மேம்பாட்டு பணிகள் அங்கு இருக்காது.கொஞ்சம் துணிச்சலாக வாங்கலாம்.

நிரந்தரவாச தகுதியுடன் இருக்கும் நபர்கள் முறையே சுமார் 14K & 70K கட்டவேண்டிருக்கும். ஒருவரின் புலம்பலை இங்கு பார்க்கவும்,

When upgrading is a dirty word

மீதியை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Thursday, November 16, 2006

ஹே"ரேம்" & புது வருட பரிசு.

போன திங்கள் என்னுடைய ஜி மெயிலை பார்த்த போது திரு SK அவர்களிடம் இருந்து ஒரு பின்னூட்டம் "இது பின்னூட்டம் அல்ல" என்று வந்திருந்தது.திறந்தபோது அவர் சிங்கைக்கு வந்திருப்பதாகவும் முடிந்தால் நேரில் சந்திக்கலாம் என்று திரு.கோவி.கண்ணனுடைய தொலை பேசி எண்ணையையும் கொடுத்திருந்தார்.

அதற்கு முன்பு 2 நாட்களுக்கு முன்பு ஒரு வலைபதிவில் (திரு.சிவபாலன் என்று நினைக்கிறேன்) திரு SK சிங்கை வருவதாகவும் "அங் மோ கியோ"வில் உள்ள நூலகத்தில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை பார்க்கலாம் என்றும், சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம் என்று போடப்பட்டிருந்தது.இதை மனதில் வைத்துக்கொண்டு அந்த ஞாயிறு மாலை என்னை தயார்படுத்திக்கொண்டிருந்தேன்.நடுவில் என்ன நுழைந்ததோ!! சுத்தமாக மறந்துபோனேன்,மேல் சொன்ன மெயில் வரும் வரை.

உடனே தொலைபேசியில் கூப்பிட்டபோது அவருடன் பேசமுடியவில்லை.அவர்கள் திரும்ப கூப்பிட்டபோது நான் வெங்கட் ஆக இருந்ததால் பணியிடத்தில் என்னை பிடிக்கமுடியவில்லை.கொஞ்ச நேரம் கழித்து நான் கூப்பிட்டபோது கிடைத்தார்கள்,பேசினோம்.அவர்கள் "செந்தோஷா"போகப்போவதாகவும் மாலையில் சிரங்கூன் சாலையில் பார்க்கலாம் என்றார்.

இதற்கிடையில் என்னுடன் வேலை செய்யும் பணியிட நண்பர் திரு ராஜ் தனது மடி கணினியை மேம்படுத்த எண்ணி இன்று சாயங்காலம் "சிம் லிம் ஸ்கொயர்"(கணினி பொருட்கள் கிடைக்கும் இடம்) போகலாமா என்றார்.

திரு SK வை பார்க்க போகவேண்டும் என்பதாலும் சரி என்றேன்.

மாலை சுமார் 5.45க்கு கிளம்பி 6.50 சுமாருக்கு அங்கு போனோம்.வாங்க வேண்டியது 80GB (harddisk) வன்பொருள் மற்றும் தற்காலிக நினைவகம் (Ram)256MB.
முதலில் ஒரு சுற்று வந்து வன்பொருள் எந்தெந்த கிடைகளில் என்ன விலையில் கிடைக்கிறது என்று பார்த்தோம்.மொத்தமாக பார்க்கையில் 4 வெள்ளி மாத்திரம் வித்தியாசம் இருந்தது.நிரந்தரமாக அங்கு உள்ள கடையில் வாங்கினால் பிறகு பிரச்சனை என்று வரும் போது இலகுவாக இருக்கும் என்று நினைத்து மற்ற கடைகளின் விலையைவிட 4 வெள்ளி கூட கொடுத்து சீகேட் 114 வெள்ளிக்கு வாங்கினார்.

அடுத்து ரேம்,வன்பொருள் வாங்கிய கடையிலே வாங்கலாம் என்று 256- என்ன விலை என்றோம்.

"54 வெள்ளி"

நாங்கள் ஒரு P3 மடி கணினியையை மேம்படுத்துவதால் அதே மாதிரி தற்காலிக நினைவகம் வேண்டும் என்பதால் பழைய நினைவகத்தையும் எடுத்துக்கொண்டு போயிருந்தோம்.

சரி புதிய நினைவகத்தையும் இங்கே வாங்கிவிடலாம் என்று கொடுக்கச்சொல்லி கேட்டபோது தான் கடையில் அது தற்போது இல்லை என்று தெரிந்தது.512 வாங்கும் அளவுக்கு நிதிநிலமை இல்லாததால் அதை என் நண்பர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

இந்த கணினியின் தற்காலிக நினைவகம் PC100 வகையை சார்ந்ததால் கிடைப்பது கஷ்டமாக இருந்தது.பல கடைகளில் இதற்கு மாற்றாக PC133 வகையை உபயோகிக்கலாம் என்றார்கள்.வாங்கிய பிறகு உபயோகப்படுத்த முடியாவிட்டால்??.கொஞ்சம் Risk எடுப்போம் என்று நினைத்து PC133 வகையை தேட ஆரம்பித்தோம்

இப்படி கிடைக்காமல் செய்வதால் பயணாளர்கள் புதிய கணினிக்கு மாற்றவைப்பது திட்டமோ என்னவோ?திரு. சிவஞானம்ஜி சொன்ன கோயில் பூ கட்டுபவரின் பொருளாதார கொள்கையின் மறுபக்கம் மாதிரி தெரிந்தது.

சரி,அடுத்த கடையில் கேட்டால் அதே கொள்ளளவு நினைவகம் 72 வெள்ளி என்றார்கள்.

எங்கோ உதைத்தது!!

மூன்றாவது கடை- இது பிரத்யோகமாக மடிகணினிக்காக உள்ளது.அவர்களே பழைய கணினியையும் புதிப்பித்து தருகிறார்கள்.சரி இந்த மாதிரி கடையில் கேட்டால் தான் சரியான விபரம் கிடைக்கும் என்று நினைத்து கேட்டோம்.இவரும் பழைய நினைவகங்கள் இப்போது வருவதில்லை அதனால் நீங்கள் வாங்கும் இதன் விலை அதிகமாக இருக்கும் என்றார்.

256- எவ்வளவு?

154- வெள்ளி- மயக்கம் போட்டுட்டோம். என்னது 154 வெள்ளியா?என்றோம்.ஆமாம் என்று சொல்லி வேண்டும் என்றால் உங்களுக்காக கொஞ்சம் குறைத்து 127 வெள்ளிக்கு தருவதாக calculator உதவியுடன் கூறினார்.இவ்வளவு வருடம் இங்கு வாழ்ந்ததில் முதல் முறையாக ஒரு நினைவகம் விலைக்கு வாங்க Calculator உபயோகித்தை பார்த்தவுடன் சந்தேகம் வந்து "நாங்கள் கணினியை கொண்டு வந்து போட்டுப்பார்த்து வாங்கிக்கொள்கிறோம்" என்றோம்.

அப்படியும் விடாமல் திரும்ப நீங்கள் வருவதற்கு பேருந்து கட்டி பணத்தை எதற்கு அனாவசியாக செலவு செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

நாங்கள் இங்கு தான் வேலை பார்க்கிறோம்,எப்போது வேண்டுமானாலும் வரமுடியும் என்று பொய் சொல்லிவிட்டு தப்பித்தோம்.

மேலும் ஒரு கடையில் பார்த்ததில் அவர்களிடமும் 256 இல்லை.

என்னடா சோதனை என்று பார்த்துக்கொண்டு வந்ததில்,சின்னதாக ஒரு கடை,இளம் பையன்கள் தமிழில் பேசி கூப்பிட்டு "உதவி வேண்டுமா?" என்றார்கள்.

விபரம் சொன்னவுடன்,சரியாக எடுத்துக்கொடுத்தார்கள்.

விலை எவ்வளவு தெரியுமா?

51.30 வெள்ளி.

ஒரே கடை தொகுதிக்குள் (154~51.30) இவ்வளவு வித்தியாசம்.

ஆமாம் இதெல்லாம் வாங்கி அந்த மடிகணினியை ஓட்ட முடிந்ததா என்கிறீர்களா?

அது வேறு பதிவில்.

சாமான்கள் வாங்கிய பிறகு வெளியில் வந்து பார்த்தபோது மணி 7.35.சாப்பிட்டுவிடலாமா என்றார்.

நான் எப்போது 8 மணிக்கு சாப்பிடும் பழக்கம் உள்ளதால் கொஞ்சம் யோசித்தேன்.வீட்டில் உள்ள உணவு வேறு பாழாகிவிடுமே என்று.அது மட்டுமில்லாமல் திரு SK க்கு கொடுத்த குறுஞ்செய்திக்கு பதிலும் வரவில்லை.அவர்கள் எத்தனை மணிக்கு சிரங்கூன் சாலைக்கு வருகிறார்கள் என்று தெரியவில்லை என்பதாலும் சாப்பிட ஒத்துக்கொண்டேன்.

எங்கு போகலாம் என்று பார்த்து,ஆனந்தபவன் போகலாம் என்று முடியுசெய்தோம்.நான் கேட்ட விஜிடபிள் பிரியாணி கிடைக்காததால் சாப்பாடு சாப்பிடலாம் என்று நண்பர் செலவில் வாங்கிவந்தார்.

அந்த நேரத்தில் திரு.கோவி.கண்ணன் அழைத்து,அவருடைய தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டதால் தொடர்பு கொள்ளமுடியவில்லை என்பதையும்,புது தொலைபேசி வாங்கி அழைக்கிறேன் என்றார்.

நான் காத்திருப்பதாக சொன்ன இடத்துக்கு சுமார் 8.10 வந்தார்கள்.நாங்கள் யாரும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை.ஏன் நான் சந்தித்த இவர்கள் வலைபதிவில் இவர்கள் படங்கள் இல்லாததால் என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.

திரு.SKம் கோவி.கண்ணனும் கையை அசைத்தவுடன் தான் புரிந்தது.ஆமாம் இதில் யார், யார்?குழப்பத்துடன் ஒரு ஹலோ என்று சொல்லிவிட்டு கை குலுக்கினேன்.

நான் சங்கர் என்றார் திரு SK,புரிந்தது மற்றவை கோவி.கண்ணன் என்று.

கோவி.கண்ணை பற்றி யோசித்துவைத்திருந்த எண்ணம் தவிடு பொடியானது.கை தோள் வலி அதனால் வலைப்பூக்களில் எழுதுவதை தள்ளிபோடுகிறோம் போன்ற பதிவுகள் இவரை நான் ஒரு 60~65 வயதுடையவர் போலும் என்று கணித்திருந்தேன்.ஆனால் மிகவும் சாதரணமாக இருந்தார் இந்த இளைஞர்.இவரிடம் இருந்து இப்படிப்பட்ட கவிதைகளா?வியந்தேன்.அதைவிட இவரும் நாகப்பட்டினத்தார் என்பதைதான்.

அடுத்து திரு.சங்கர்

இவர் கை குலுக்கும் போதே ஒருவித சகோதரமனபான்மை தெரிந்தது.பழகிய சில நிமிடங்களில் இவருக்கு யாரும் நண்பர் ஆகிவிடுவார்கள்.அந்த மாதிரி பழகிவிடுவார்.

இவரை நான் கற்பனை பண்ணி வைத்திருந்தது எப்படி தெரியுமா?சுமார் 175 Cm உயரம்.கண்ணாடி போட்டிருப்பார்.சுமாரான தேகம்.முன்தலை வழுக்கையாக இருக்கும்.

ஏன் இப்படி என்று கேட்காதீர்கள்.கற்பனை தானே.

ஒரு நிகழ்வின் காரனமாக முடியிழந்திருந்தார்,கண்ணாடி போட்டிருந்தார்.

பலவற்றை பேசினோம்.பாலியல் கல்வி பிறந்த கதையை சொன்னார்.என்னுடைய பதிவுக்கு பின்னூட்டம் போட்டதையும் ஞாபகம் வைத்திருந்தார்.இவருடைய பல பதிவுகள் இன்னும் படிக்கப்படாமல் இருக்கிறது.

இவரை பார்த்தவுடன் இவர் முதலில் எழுதிய பதிவுகளையும் படித்துவிடவேண்டும் என்றுள்ளேன்.

ஏனென்றால், அவர் பழகிய விதத்தில் இருந்து இவரின் பதிவுகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொண்டேன்.

இவரின் "பாலியல் கல்வி-பெற்றோர்களுக்கு"- வலை பதிவாளர்களுக்கு முன்னமே கிடைத்த புது வருட பரிசு.

Wednesday, November 15, 2006

மின் தூக்கி மேம்பாடு (9)

போனபதிவில் சுற்றுச்சுவர் மேலே போவதுபற்றி பார்த்தோம்.

தொடருவோம்.

Photobucket - Video and Image Hosting

இப்படி போகும் போதே மேலே உள்ளவர்களுக்கும் பாரம்தூக்கியை இயக்குவற்க்கும் வாக்கி டாக்கி மூலம் பேச்சு வார்தை நடந்துகொண்டிருக்கும்.அதன் மூலம் பாரம்தூக்கியை எவ்வளவு ,எப்படி எங்கு நகர்த்தவேண்டும் என்ற கட்டளைகள் கொடுக்கப்படும்.

சரியான தூரம் மற்றும் உயரம் போனதும்,வேலை ஆட்களின் உதவியுடன் பிடித்து நிறுத்தி சரியாக பொருத்துவார்கள்.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

இதெல்லாம் முடிந்தபிறகு ஒன்றை மற்றொன்றுடன் இணைக்க தேவையான வேலைகளை ஆரம்பிப்பார்கள்.அதனை படமெடுக்க முடியாததால் இங்கு போடமுடியவில்லை என்பதை பலரின் சார்பாக சந்தோஷமாக சொல்கிறேன்.:-))

இது வரை கட்டிடம் சார்ந்த வேலைகளை பார்த்தோம்.
இதற்குப்பிறகு மின் தூக்கி மற்றும் அதன் சார்ந்த பணிகள் உள்ளே நடைபெற்று, பயண்பாட்டுக்கு திறந்துவிடுவார்கள்.

கடைசியாக..

பணம் கட்டணும் தெரியுமில்ல.

இதுவரை சும்மா செமத்தியா அனுபவிச்சீங்களா?:-((

இதற்கு நான் பொருப்பள்ள.பிளாக்ஸ்பாட் தான்.

நன்றி.

Tuesday, November 14, 2006

வீடு விற்பவர்களுக்கு (சிங்கையில்)

போன பதிவு இங்கே

வீடு வாங்கிய 5 வருடங்களுக்குள் விற்கமுடியாது.அப்படி விற்றே ஆகவேண்டும் என்றால் அதை திரும்ப "வீவக"விடம் கொடுக்க நினத்தால் அது ஒரு மிக பெரிய கஷ்டம்.மிகப்பெரிய நஷ்டத்தையும் எதிர்கொள்ளவேண்டும்.பல்லை கடித்துக்கொண்டு 5 வருடங்களை தள்ளிவிட்டோம்.

பொருளாதர சுணக்கம் ஏற்பட்டபோது வீட்டின் விலைகள் தாறுமாறாக போய்(கீழே) சுமார் 25% காலியாகிவிட்டது.தாவது உண்மையான தற்போது இல்லாத விலைக்கு நான் வட்டி மற்றும் முதலை கட்டிக்கொண்டிருந்தேன்.(முதலையை கட்டிக்கொண்டிருந்தீர்களா?- என்று துளசி அவர்கள் பின்னூட்டம் போடுவார்கள்.:-)))

Photobucket - Video and Image Hosting


எப்படியோ இந்த கஷ்டங்களில் ஒவ்வொரு முறை வேலை போய் வேலை கிடைத்து புது முதலாளியிடம் நம் திறமையை காட்டுவதற்குள் "அந்த வேலை காலியாகிவிடும்"

இந்த மாதிரி சமயங்களில் தான் உண்மை புலப்பட தொடங்கியது.நான் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்துக்கொண்டிருக்கிறேன் என்று.

இந்த சமயத்தில்தான் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் வந்தது.

எப்படி??

வீடு விஷயத்தில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்.

பாதி குடும்ப விஷயம்,பாதி வேலையை சார்ந்தது.

குடும்ப விஷயத்தில் முடிவெடுத்த பிறகு,வேலை ஓரளவு நிலைபடுவது போல் தெரிந்தது.நல்ல கம்பெனி.தற்போது அவ்வளவு பிரச்சனையில்லை என்று தோன்றியபோது மற்றொறு இடி.

தங்கப்பதக்கம்-வசனத்தை சொல்லி பார்த்துக்குங்க.

அது என்ன?

அதாங்க மின் தூக்கி மேம்பாடு.அதைப்பற்றி இங்கேயே சொல்லிவிட்டதால்,படிக்க விட்டவங்க இங்கே சொடுக்குங்க.

நான் நிரந்தரவாசி என்பதால் சுமார் 13000 வெள்ளி கட்டவேண்டும் என்ற நிர்பந்தம் எழுந்தபோது,கொஞ்சம் கூட தாமதிக்காமல் முடிவெடுத்துவிட்டேன்.

வாங்கிய வீட்டை விற்பது என்று.

அதிலும் பாருங்க எவ்வளவு பிரச்சனை.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு,ஏதோ ஒரு ஆனந்தவிகடனில் திரு ஞானி தன்னுடைய வீட்டை 45 லட்சத்துக்கு விளம்பரம் போட்டு 45 நிமிடத்தில் வீட்டில் ஆள் நின்றதாக போட்டிருந்தார்.ஏக்கத்துடன் படித்தேன்.

அதை நாம் வாங்க முடியவில்லை என்ற ஏக்கம் இல்லை.இங்குள்ள வீட்டை விற்க போன நவம்பரில் இருந்து முயன்றுகொண்டிருக்கிறேன்.

எதுவும் சரியாகவில்லை.வருபவர்களும் ஒன்றும் சொல்லாமல் போனது மனதில் வலியை ஏற்படுத்தியது.எங்கே இதை விற்கமுடியாமல் 13000 வெள்ளி கட்டவேண்டி வருமோ என்று.ஏற்கனவே வீட்டின் விலை 25% போனது அத்துடன் இந்த 13K போனால் எப்போது அந்த அளவுக்கு விலை ஏறி..

Photobucket - Video and Image Hosting

நன்றி:வீவக(வீட்டு வசதிக்கழகம்)

நான் எப்போது விற்பது.

நம்பிக்கையே போய்விட்டது.

Photobucket - Video and Image Hosting

முதலில் பார்த்த முகவர் என்னிடம் நைச்சியமாக பேசி வீட்டின் வேல்யுவேசனுக்கு என்னிடம் பணம் வாங்கிவிட்டார்.பின்னர் தெரிய வந்தபோது அதை வேறு விதமாக கழித்துவிட்டேன்.

இந்த வேல்யுவேசன் மதிப்பு வெறும் 3 மாதங்கள் தான் அதற்குப்பிறகு அது குப்பை தான்.வேண்டும் என்றால் இந்த மாதத்தில் இவ்வளவு என்று சொல்லிக்கொள்ளலாம்.

பலர் வந்தார்கள்,பார்த்தார்கள்.. போனார்கள்.

ஆனால் நடந்தது என்ன?

அடுத்த பதிவில்.

Monday, November 13, 2006

வீடு வாங்குபவர்களுக்கு..(சிங்கையில்)

இதற்கு முன்பு உள்ள பதிவுகள்
ஒன்று
இரண்டு
மூன்று

பொருளாதார சுணக்கம் வந்த பிறகு எந்த வேலையும் ஒரு வருடத்துக்கு மேல் இல்லை.இங்கு வாழ்வதில் உள்ள சிக்கல் ஓரளவு புரிந்தது.அதுவும் வீடு வாங்கிவிட்டால்,வேலை கிடைக்காத பட்சத்தில்,வெளியேற முடியாத நிலைக்கு நம்மை நாமே தள்ளிக்கொண்டது தெரிந்தது.உள்ளூர் மக்களுக்கே வேலை கிடைக்காத பட்சத்தில் வெளி ஆட்கள் வேலை தேடுவது குதிரைகொம்பாக இருந்தது.

இங்கு வரும் ஆங்கில நாளிதழ்களில்,அதுவும் சனிக்கிழமை அன்று வரும் வேலைக்கான பக்கங்கள் வெறும் 4ஆக மாறின.சாதாரணமாக 30~ 40 என்று வரும்.

சம்பளம் தடாரென்று 1000~1500 வெள்ளி வரை குறைத்து கொடுக்கப்பட்டது.வேணும் என்றால் வாங்கிக்க வேண்டாட்டி போய்கோ என்ற நிலமையில் இருந்தது.மனிதவள மேம்பாட்டு துறை மூலம் பதிந்துகொண்டு பலருக்கு வேலை தேடிக்கொடுக்கும் பணியையும் அரசாங்கம் ஏற்படுத்தியது.அப்படி எனக்கும் ஒரு வேலை தேடி வந்தது.அது பிளாஸ்டிக் இன்ஜெக்ஸன் துறையில்.கொஞ்சமும் சம்மந்தம் இல்லாததால்,வரவில்லை என்று சொல்லிவிட்டேன்.அவர்களும் புரிந்துகொண்டார்கள்.

பொருளாதார சுணக்கம் வந்து 8 மாதங்கள் அந்த கம்பெனியில் வேலை இருந்தது.

வேலை இல்லை என்று கடிதம் கொடுத்து 15 நாட்களில் எனது பெற்றோர் சிங்கப்பூரை சுற்றிப்பார்க்க வந்தார்கள்.அவர்கள் பயணம் பல நாடக்ளுக்கு முன்பே உறுதிப்படுத்திவிட்டதால் மாற்றமுடியவில்லை.வந்த கொஞ்ச நாட்களுக்கு பிறகு லேசாக கசியவிட்டேன்.

நான் சிங்கப்பூர் வருவதை விரும்பாத என் பெற்றோர்கள் வந்த போது நான் வேலையில்லாமல் வீடு வாங்கிக்கொண்டு குடும்பத்துடன் இருப்பதை பார்த்தால் எப்படியிருந்திருக்கும்?
கொடுமை தான்.

இதற்கிடையில் சில நேர்காணலுக்கு போனாலும் பலன் ஒன்றும் இல்லை.

ஒரு மாதம் வீட்டிலேயே இருந்து கொண்டு வேலை தேடிய எனக்கு கடைசி நாள் அன்று ஒரு கொரிய கம்பெனி அழைத்து மறுநாள் வேலைக்கு வரும்படி சொன்னது.

சம்பளம்..? இழப்பு தான். வேலை கிடைக்குதே! அதுவே அதிசியம் தான்.

கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது.

ஆனால் அந்த வேலையும் 1 வருட காலத்துக்குள் முடிந்து மீண்டும் உளைச்சலை அதிகப்படுத்தியது.

இந்த சமயத்தில் என்னை மாதிரி 1997 சமயத்தில்தான் வீடு வாங்கி விற்கமுடியாமல்,அடி மாட்டு விலைக்கு கொடுத்தவர்கள் கதை நாளிதழ்களில் வரத்தொடங்கியது.

Photobucket - Video and Image Hosting

சரி இதை வாங்கிய "வீவக"விடமே கொடுக்கமுடியாதா?

அது அடுத்த பதிவில்.

Friday, November 10, 2006

ஜாக்கிரதை.. வீடு (வாங்குபவர்களுக்கு)

முந்தைய பதிவுகள் ஒன்று
இரண்டு

சரி என்று சொன்னவுடன் வேலைகள் ஜரூராக நடக்கத்தொடங்கியது.

தேவையான விவரங்கள் அனுப்பப்பட்டு அதற்கான தேதிகள் குறிக்கப்பட்டன.

வாங்குவது,விற்பது என்று முடிவானவுடன்,எங்கள் கையெழுத்து தாங்கிய படிவங்கள் "வீட்டு வசதி கழகம்" இடம் சமர்பிக்கப்படும்.அவரவர் தகுதியை செக் செய்துவிட்டு முதல் சந்திப்புக்கு கடிதம் அனுப்புவார்கள்.

விற்பவராக இருந்தால், இந்த முதல் சந்திப்புக்கு முன்பு "வீவக"( வீட்டு வசதி கழகம்)விலிருந்து ஒரு அலுவலகர் வந்து ஒரு நிமிடத்துக்கும் குறைவாக வீட்டை சுற்றிப்பார்த்து "இவர்கள் வேறு எந்த விதமான அனுமதி பெறாத மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவில்லை" என்று சான்றிதழ் கொடுக்க வேண்டும்.

அதற்கும் கடிதம் வரும்.

வாங்குபவற்கு இப்போது அவ்வளவு வேலையில்லை,பணத்தை ரெடி பண்ணுவதை தவிர.

எனக்கு ஒரு 15K குறைந்த போது அப்போது வேலை பார்த்துக்கொண்டிருந்த அலுவலகத்தின் கதவுகளை தட்டினேன்.

நல்ல வேளை திறந்து உதவினார்கள்.மாதம் 1000 வெள்ளி திருப்பி கட்டவேண்டும் என்று வட்டியில்லாத கடனாக கொடுத்தார்கள்.

முதல் சந்திப்பின் போது "வீவக" அலுவலகர் நாங்கள் ஒத்துக்கொண்டது மற்றும் பல விஷயங்களை விவரிப்பார்.

வாங்கும் விலையை சொல்லி பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும்.இங்கு அது கட்டாயம்.பொய் சொல்லி மாட்டிக்கொண்டால் சரியான தண்டனை கிடைக்கும்.இதுல் பொய் சொல்லி என்ன வம்பாகப்போவது? என்று கேட்கிறீர்களா?நிறைய இருக்கு..

அது வேணாம் நமக்கு.

கையெழுத்து போட்டுவிட்டு வீடு கைக்கு வருவதற்கு அப்படி இப்படி என்று 3 மாதங்கள் ஆகிவிடும்.இது கூளிங் கால கட்டமாக வைத்துக்கொள்ளலாம்.

இரண்டாவது சந்திப்பில் தான் வீட்டு சாவி கைக்கு கிடைக்கும்.

அது நடக்கும் முன்பே இப்போது நடந்து கொண்டிருக்கும் வேலைக்கு பிறகு வேறு வேலை இல்லை என்ற செய்தி வந்தது.முதல் இடி.

Recession வந்ததாக சொன்னார்கள்.அப்படி என்னவென்றே தெரியாத எனக்கு அதன் வீச்சு எவ்வளவு கோரமானது என்று தெரியவந்தது.

வீடு வாங்க கையெழுத்து போட்டுவிட்டோம் இப்போது ஒன்றும் செய்வதிற்கில்லை என்பதால் கடைசி நாட்களை நோக்கி போய்கொண்டிருந்தேன்.

கம்பெனி நல்லதாக இருந்ததால்,ஏதோ சின்ன சின்ன வேலைகளை கொடுத்து வைத்துக்கொண்டிருந்தார்கள்.

வாழ்கையில் Recession என்றால் என்ன என்று அப்போது தான் தெரிந்தது.

கிட்டத்தட்ட 2 மாதங்கள் கழித்து டிசம்பர் 1997ம் ஆண்டு வீடு கைக்கு வந்தது.வீட்டை சரியாக கிளியர் பண்ணாமல் கொடுத்ததால் மனைவிக்கு செம வேலை.

எப்படியோ வீட்டை வாங்கிட்டோம்,பையனுக்கும் பக்கத்து பள்ளியில் இடம் கிடைத்தது.

கொஞ்சம் கொஞ்சமாக சாமான்களை சேர்க்க ஆரம்பித்தோம்.

வீடு வாங்கி,பழைய கம்பெனியில் சுமார் 10 மாதங்கள் தொங்கிக்கொண்டிருந்த போது வேலை காலியானது.

அடுத்த அடி

இன்னும் இருக்கு

Thursday, November 09, 2006

மின்தூக்கி மேம்பாடு (8)

போன பதிவு

தூக்கிவைக்கவேண்டிய சுவர் டிரைலரில் வந்து கீழே இறக்கிவைத்தவுடன் பாரம் தூக்கியை ஒரு முறை எல்லாவற்றையும் சோதித்துவிட்டு அந்த சுவரை மேலே தூக்க ஆயத்த வேலைகளில் இறங்குவார்கள்.

இந்த படத்தில் உள்ள சிவப்பு வார் தொங்கிக்கொண்டிருக்கும் இரும்புக்கு பேர் "Strong Back".

Photobucket - Video and Image Hosting

Erection வேலையில் இதன் பங்கு மிக அதிகம்.பாரம் தூக்குவதற்கென்று கான்கிரீட்டில் ஊக்கு வைத்திருப்பார்கள்.அதன் மூலம் தான் தூக்கவேண்டும்.தக்க பொறியாளர் உதவியுடன் இதன் இடத்தையும்,அந்த கம்பியின் தடிமனையும் நிர்மானித்திருப்பார்கள்.

ஆமாம் இந்த Strong Backயின் பணி என்ன?

நீங்கள் தூக்கும் பாரத்தையும் பாரம் தூக்கிக்கும் ஒரே ஒயரை போட்டால் அதன் கோணம் குறுகியதாக இருக்கும், அது கான்கிரீட்டில் உள்ள கம்பிக்கு அதிக லோடை கொடுக்கும்.அதை குறைக்கவே இந்த Strong Back.

தூக்க தயாராக இருக்கிறது.இங்கும் பாதுகாப்பு குறைவு.
ஏற இறங்க வழி எங்கே??(May be hidden)

Photobucket - Video and Image Hosting

லேசா தூக்கி

Photobucket - Video and Image Hosting

இன்னும் கொஞ்சம் மேலே தூக்கி

Photobucket - Video and Image Hosting

அதற்குள்.இது வைக்கவேண்டிய இடத்துக்கு கண்டோலா போய் பாதுக்காப்பை உறுதிசெய்கிறார்கள்

Photobucket - Video and Image Hosting

இன்னும் கொஞ்சம்தான் பாக்கியிருக்கு.

Photobucket - Video and Image Hosting

ரொம்ப நீளமாக போயிடுத்து.

வாங்க அடுத்த பதிவுக்கு.

Wednesday, November 08, 2006

சொந்தவீடு-(2)

"சரி,எந்த இடத்தில் வீடு பார்க்கிறீர்கள்" என்றார் முகவர்

சுத்தமாக ஒரு வித முன்னேற்பாடு இல்லாததால்,"எங்கிருந்தாலும்,பள்ளிக்கூடம் பக்கத்தில் இருந்தால் சரி" என்றோம்.

சில மூவரை வீடுகள் பார்த்தோம்,ஒன்றும் சரி வரவில்லை.விலை அதிகமாக இருந்தது.

அப்போது இருந்த நிலையில் வீட்டின் விலைக்கு மேல் "கைகாசு" கொடுக்கும் முறை இருந்தது.இது அவரவர் வீட்டில் செய்திருக்கும் வீட்டுப்பணிக்காக கொடுப்பது போல்.இந்த முறை வாங்குவர் மற்றும் விற்பவருக்கு இடையில் ஏற்படும் ஒப்பந்தம் என்பதால் "HDB" தலையிடாது.ஆனால் எவ்வளவு என்று பிரமாணம் செய்யவேண்டும்.

ஒரு நாள் சாயங்காலம் 6 மணிக்கு முகவர் கூப்பிட்டு ஈசூனில் ஒரு வீடு இருக்கிறது,9 மணிக்கு தான் ஓனர் வருவார்,போகலாமா என்றார்?

வேறு வழி??

போகும் போது எங்களை அவர் காரிலேயே கூட்டிப்போனார்.

வீட்டின் ஒனர் விவாகரத்து வாங்கிக்கொண்டு விட்டதால் இந்த வீட்டை விற்பதாகவும் சொன்னார்.

3 அறைகள் ஒரு ஹால்- கொஞ்சம் பெரிதாக இருந்தது.வீட்டு விலை 207K என்றும் அதற்கு மேல் கைகாசு 20K என்று சொல்லியிருந்தார்கள்.

பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன், முகவர் "வேறு வீடுகளும் பார்த்துவிட்டு,முடிவு செய்யலாம் என்றார்" நாங்களும் சரி என்று சொல்லிவிட்டு பழைய வீட்டுக்கு வரும் போது இரவு மணி 11.

நல்ல அசதி என்பதால் உடனே தூங்கிவிட்டோம்.

பாதி தூக்கத்தில், தொலைபேசி மணி அடித்தது.

அதனூடே எடுத்து "ஹலோ" என்றேன்.

முகவர் தான்

"மன்னிக்கவேண்டும்"- இப்போது தான் அந்த வீட்டுக்காரர் பேசினார். வீட்டு விலைக்கு மேல் கேட்ட 20K குறைத்து 11K கொடுப்பதாகவும் சொல்லியுள்ளார்.
முடித்துவிடலாமா? என்றார்.முகவர்களுக்கு தேவையான விபரங்கள்,பொய்கள் எல்லாம் என்னிடமும் கொட்டப்பட்டது.

ஏதோ ஒரு வித சலிப்பு,எவ்வளவு வீடு பார்ப்பது என்று, அதுவும் பாதி தூக்கத்தில் அவர் சொல்வதை கேட்க பிடிக்காமல்..

"சரி"- முடிச்சிடுங்க என்று சொன்னேன்.

இந்த "சரி" என்னை எப்படியெல்லாம் துரத்தியது என்பது, வரும் பாகங்களில்.

Tuesday, November 07, 2006

மின்தூக்கி மேம்பாடு (7)

போன பதிவு

இந்த பதிவில் மின்தூக்கியின் சுற்றுச்சுவர்கள் Pre-cast முறையில் வேறு இடத்தில் இதை உருவாக்கி டிரைலர் மூலம் கொண்டுவரப்பட்டு..

Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting

கீழே இறக்கி வைத்து..

Photobucket - Video and Image Hosting

கான்கிரீட் முனைகள் உடையாமல் இருக்க உட்காரும் இடத்தில் சிறிது தண்ணீர் அடிக்கிறார்கள்.இந்த மாதிரி சின்னச்சின்ன விஷயங்களை இப்படித்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.இதெல்லாம் கல்லூரியில் கற்றுக்கொள்ளமுடியாது.

Photobucket - Video and Image Hosting

பாருங்கள், இங்கு பாதுக்காப்பு முறை கொஞ்சம் மீறப்படுகிறது. எந்தவித சாமான்கள் தொங்கிக்கொண்டிருக்கும் போது கீழே போகக்கூடாது என்ற விதி இருக்கிறது.

இப்படி செய்வது தவறு என்று வேலைசெய்யும் தொழிலாளிக்கும் தெரியும்.இருந்தும் மீறப்படுவது தான் கட்டுமானத்துறையில் நடக்கும் தினசரி நிகழ்ச்சி.இதைப்பற்றி தனி ஒரு பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Friday, November 03, 2006

சொந்த வீடு (1)

இது வாடகை வீடு தொடரின் தொடர்ச்சி..

முந்தைய பதிப்புகள்
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து

பழைய வீட்டு ஓனர் சொன்னது இது தான்.

"உங்களுக்கு என்று தனி வீடு வாங்காத வரை இந்த மாதிரியான பிரச்சனை இருந்துகொண்டு தான் இருக்கும்" என்றார்.

நான் வீடு வாங்கிய பிறகு,எனக்கு மேல் மாடியில் உள்ளவர்களுக்கு வயசாகி சாப்பாட்டை வெளியில் தூக்கி அடித்தால் அப்போது என்ன பண்ணுவது?

விதியை தான் நம்பவேண்டும்.

வீடு வாங்குவதற்கான வழி முறைகளை நான் தேர்ந்தெடுத்த முகவர் ஒரு பட்டியல் போட்டு கொடுத்தார்.

வங்கியில் இருப்பு கொஞ்சம் ஏறவும்,CPF எனப்படும் மத்திய சேமநிதியில் கொஞ்சம் பணம் சேர்த்தவுடன் கணக்கு போட்டால் கிட்டத்தட்ட சுமார் 15K உதைத்தது.

இதன் உள்ளே போவதற்கு முன்பு..

இதை பார்த்திடுவோம்.

வெளிநாட்டு பிரஜைகள் இங்கு எப்படி வீடு வாங்குகிறார்கள்?

மேலோட்டமாக பார்ப்போம்.

இரண்டுவிதமான வீடுகள்

1.HDB (Housing Development Board) -பலர் வாங்குவது இதைத்தான்.

2.தரை வீடு

3.தனியார் பேட்டைகள் (Condominiums)

இரண்டும் மூன்றும் என் நிலையில் இல்லாததால்(இதன் உள் விஷயங்கள் எனக்கு அவ்வளவாக தெரியாது) முதலில் உள்ளதை மாத்திரம் பார்ப்போம்.

இந்த HDB வீட்டை யார் யார் வாங்க முடியும்?

இங்கே தட்டவும்

சிங்கை குடியுறிமை பெற்றவர்கள் மற்றும் நிரந்தரவாசிகள்

சிங்கைவாசிகள் (Citizen) வாங்குவது மற்றும் அதன் தொடர்பான விஷயங்கள் நமக்கு சம்பந்தம் இல்லாததால் அதை தள்ளிவிடுவோம்.

வெளிநாட்டவர்கள்: நிரந்தரவாசிகள்,குடும்ப அமைப்புடன் இருப்பவர்கள் மட்டும் தான் வாங்க முடியும்.

முதலில், வீட்டின் விலையில் 20%ஐ(இப்போது 10% ஆக உள்ளது) வாங்கும் போது கட்டவேண்டும்.மிச்சத்தை மாதத்தவணையில் கட்டவேண்டும்.நான் வாங்கும் போது அவர்களே இந்த கடன் வசதியை கொடுத்தார்கள்.இப்போது வாங்கப்படும் வீடுகளின் கடனை வங்கிகள் கவனித்துக்கொள்கின்றன.என்ன வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.தற்போது வட்டிவிகிதம் 3.82% ~ 4.5% க இருக்கிறது.

இந்த வட்டிவிகிதத்திலும் சில பிரிவுகள் இருப்பதால் எல்லாவற்றிலும் நுழையாமல் மேலே போவோம்.

அடுத்து வீடு பார்க்கவேண்டும்.

வீடுகளிலும் பல விதங்கள் இருக்கின்றன

3 ரூம் (சுமார் 70 சதுர மீட்டர்கள் இருக்கும்)

4 ரூம்- அதாவது 3 ரூம் 1 ஹால். இதுவும் சுமார் 95 சதுர மீட்டர்கள் இருக்கும்.

5 ரூம்

Executive Type

Studio Apartment ( இது வயதானவர்களுக்காக)

வசதி குறைந்தவர்களுக்கான ஓரறை வீடுகளும் உள்ளன.

என்னுடைய சம்பளம்,வயது,நிதிகையிருப்பு இதையெல்லாம் வைத்துப்பார்த்து மூவறை அல்லது நாலறை வீடு வாங்கலாம் என்றார்கள்.

அதன்படி தேடல் தொடங்கியது.

அடுத்தது இங்கே..

மின் தூக்கி மேம்பாடு (6)

ஒன்று

ஃபவுன்டேசன் முடிந்த கையோடு..

அதன் மேல் ஒரு சிறிய உயரத்துக்கு சுவர் போடுவார்கள்.இதன் உயரம் இடத்துக்கு இடம் மாறும்.

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

குட்டை சுவர் போட்டு முடித்தவுடன்,பழைய கட்டிடத்துக்கும், வரப்போகும் கட்டிடத்துக்கும் பிடிப்பு ஏற்படுத்த தேவையான கம்பிகள் மற்றும் பிளேட்டுகள் வைப்பார்கள்.இவையாவும் ஹில்டி என்ற கம்பெனியின் கெமிகல் அல்லது ஆங்கர் முறையில் உள்ள போல்ட்டை பயன்படுத்தி முடுக்குவார்கள்.

Photobucket - Video and Image Hosting

கன்டோலாவில் வேலை

Photobucket - Video and Image Hosting

இதன் மேல் தான்,சுற்றுச்சுவர்- Pre-Cast என்ற வகையில் வேறெங்கோ கான்கிரீட் போடப்பட்டு இங்கு எடுத்துவந்து வைக்கப்படும்.

அதன் படங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Thursday, November 02, 2006

வாடகை வீடு - 5

முதல் வீட்டில் இருந்து தப்பித்தால் போதும் என்ற மனத்துடன் அடுத்த வீடு பார்க்க முகவர் கூப்பிட்டதும் மகிழ்சியாக போனேன்.

தனிவீடு என்று தான் பேர்-1 ரூம்,1 வரவேற்பரை & 1 கழிவரை அவ்வளவு தான்.மோசமான பொருட்கள்.

வாடகை 700 வெள்ளி.

இப்போது இருக்கும் இடத்தை காலி பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருந்ததால்.அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ள ஒத்துக்கொண்டேன்.அதோடு மட்டும்மல்லாமல் பையன் படிக்கும் பள்ளி பக்கத்தில் இருந்ததும் காரணம்.

1 மாத வாடகை,1 மாத முன்பணம் மற்றும் முகவருக்கு அரை மாத வாடகை சேர்த்து கொடுக்க வேண்டும்.

கொடுத்தேன்.

இதிலும் என்ன கொடுமை என்றால் இந்த வீட்டை ஒரு தமிழர் அரசாங்கத்திடம் இருந்து வெறும் 40 வெள்ளிக்கு வாங்கி எங்களுக்கு 700 வெள்ளிக்கு வாடகைக்கு விட்டார்.இது பிற்பாடு பக்கத்துவீட்டில் உள்ளவர் மூலம் எனக்கு தெரிந்தது.

அதற்கு தேவையான தண்டனையை அனுபவித்திருப்பார் என்று நினைக்கிறேன்.

இந்த புது வீட்டுக்கு வந்த பிறகு தான் இங்குள்ள பிரச்சனைகள் தெரிய வந்தது.தனிவீடு என்றாலும் அந்த கட்டிடத்தில் உள்ள பலர் வயதானவர்கள் இருந்தார்கள் போலும்.

துணியை துவைத்து வெளியில் காயப்போட்டிருந்தால் சில மணி நேரங்களில் அதில் சகலவிதமான குப்பைகள் சாப்பாட்டு மிச்சம் என்று விழுந்து கிடக்கும்.திரும்ப துவைக்க வேண்டும்.

காரணம் என்ன என்று பார்த்தால், வயதானவர்கள் குப்பை போடக்கூடிய அந்த மூடியை திறக்க குனியமுடியாததால் அப்படியே ஜன்னலுக்கு வெளியே வீசிவிடுகிறார்கள்.பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் எங்கள் துணி பாழாவது அவர்களுக்கு தெரியாது.

இப்படி நடப்பது தினசரி வழக்காகிவிட்டது.

இங்கு துணி காயவைப்பது ஒரு விதம்.

பெரும்பாலும் சமையல் அறைக்கு பக்கத்தில் உள்ள ஜன்னலில் மூங்கில் கம்பு சொருகி கிளிப் போட்டு காயவைக்கவேண்டும்.

படத்தை பார்க்கவும்

Photobucket - Video and Image Hosting

புதிதாக வரும் நம் ஆட்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் போகப்போக சரியாகிவிடும்.

இந்த வீட்டில் இருந்து தப்பிக்க வழி பார்க்கையில் பழைய வீட்டின் முதலாளி கூப்பிட்டு நலம் விஜாரித்துகொண்டிருந்தார்.

நமக்கு தான் நம்ம கஷ்டத்தை அடுத்தவர்களிடம் சொல்லாவிட்டால் தலைவலி வந்திடுமே!!

அவுங்க் சொன்ன பதிலில் மீண்டும் பூதம் கிளம்பியது.

அப்போது..

அடுத்தது இங்கே..

இலவச உடம்பு பிடிப்பு

விமான டிக்கெட்டின் தொடர்ச்சி

இரவு 12.50 க்கு கிளம்ப வேண்டிய விமானத்துக்கு 12.30 மணிக்கு தான் அனுமதித்தார்கள்.கிளம்பும் போது 1 மணியை கடந்திருக்கும் என நினைக்கிறேன்.

இரவு குழி ஆப்பமும் தொட்டுக்க சாம்பார்,பிரட் சாலட்டுடன்,ஏதோ ஒரு இனிப்பு வந்தது.

பக்கத்து சீட்காரர் தனக்கு வந்த pack வேண்டுமா என்றார்.எனக்கு வந்ததே அதிகமாக இருந்ததால் வேண்டாம் என்றேன்.

காலை 7.25 க்கு உள்ளூர் நேரப்படி இறங்க வேண்டிய விமானம் 7.45 க்கு இறங்கியது.இறங்குவதற்கு முன்பே காதில் வலி ஆரம்பித்துவிட்டது.இது 2வது முறையாக வருவதால் அப்படியே உடம்பை 90 டிகிரிக்கு ஒடித்து காதை பொத்திக்கொண்டு வாயை அகலமாக திறந்து அழுத்தத்தை சமநிலை படுத்த முயன்று தோற்றேன்.

இறங்கிய சில நிமிடங்களில் சரியாகிவிட்டது.

குடியேற்ற பகுதிக்கு வந்தபோது சிங்கை வாசிகளுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருந்த இடம் மாறி வலது பக்கம் இருந்தது.

திடீரென்று தோன்றிய அதிகாரி சிலரின் கடவுச்சீட்டை பார்த்து அவர்களை வேறு க்யூவுக்கு அனுப்பிவிட்டு, சத்தமாக "இது சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் மட்டும் என்று உரக்கச்சொன்னார்"

அங்கிருந்த நிசப்தத்தில் அவருடைய சத்தம் நாராசமாக இருந்தது.

எனக்கு தான் அப்படியா? என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது என்னுடைய Turn வந்து என்னுடைய கடவுச்சீட்டை பரிசோதித்த அதிகாரியும், திரும்பி அவரை பார்த்தார்.அந்த இளம் அதிகாரி கூடிய சீக்கிரம் தெரிந்துகொள்வார்.

கொஞ்ச தூரம் நடந்து baggage ஐ எடுக்க போகும் முன்பு ஏதேச்சையாக கடிகாரம் கண்ணில் பட 8.05 என்று காண்பித்தது.ஆபிஸில் இருக்க வேண்டிய நான் விமானநிலையத்தில் இருந்தேன்.

பக்கத்தில் உள்ள "Free Local Call" பூத்தில் இருந்து அலுவலகத்துக்கு தொலைபேசி போட்டு சற்று தாமதமாக வருகிறேன் என்று சொல்லிவைத்தேன்.

சூட்கேஸ் 10 நிமிடத்தில் வந்ததும் 8.15க்கு Taxi பிடித்து "yishun Ring Road,pl" என்று சொன்னேன்.

வயது முதிர்ந்த ஓட்டுனர்.

சற்று நேர அமைதிக்கு பிறகு..

இப்போது தான் வேலையை ஆரம்பிக்கிறீர்களா? என்றேன்.

ஆமாம் என்றார்.

பொதுவாக Taxi ஓட்டுனர்கள் தங்கள் கார்களை 12 மணி நேர விகிதத்தில் மாற்றி மாற்றி மற்றொருவருடன் பகிர்ந்துகொள்வார்கள்.இந்த மாதிரி சமயங்களில் காலை 4 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வரை ஓட்டுவார்கள்.சில பேர் காலை 4 மணிக்கு அவ்வளவு பேர் இருக்கமாட்டார்கள் என்பதால் 6 மணிக்கு எடுப்பார்கள்.இவர் 6 மணிக்கு வேலையை ஆரம்பித்தவர்.

ஏன் நீங்கள் 4 மணிக்கு வேலை ஆரம்பிக்கவில்லை என்று கேட்டேன்

"அப்படி ஓடி ஓடி சம்பாத்திக்க வேண்டிய அவசியம் இல்லை.ஒவ்வொரு நாளும் வேலை செய்து 80 வெள்ளி சம்பாத்திதால் போதும்" என்றார்.

பிறகு பேச்சு சாதரணமாக போய்கொண்டிருந்த போது "உடல் பிடிப்பு" பற்றி எழுந்தது.

தான் 2 வாரத்துக்கு ஒரு முறை "தன்ஜோங் பினாங்" என்ற இடத்துக்கு போய் மசாஜ் செய்துகொள்வாராம்.மசாஜ் செய்பவர்கள் எல்லோரும் வயது முதிர்ந்தவர்கள்.

பெண்கள் மூலம் செய்வது "ஹராம்" என்பதால் அதை அவர்கள் அனுமதிப்பதில்லையாம்.

இங்கு செய்துகொள்பவர்கள் யாரிடமும் பணம் கேட்டுப்பெறுவதில்லையாம்.அவர்களாக பிரியப்பட்டு கொடுக்கும் பணத்தில் ஒரு பங்கு மசூதிக்கும்,இன்னொரு பங்கு ஏழை பிரிவினருக்கும் மற்றும் ஒரு பங்கு வேறெதெற்கோ சொன்னார் நினைவில் இல்லை.

கடைசியாக தனக்கு என்று ஒரு பங்கு எடுத்துக்கொள்வார்களாம்.

டாக்டர்கள் கைவிரித்த பல நபர்களை இவர்கள் குணப்படுத்தியதாகவும் சொன்னார்.

பல விஷயங்கள் பேசி முடிக்க முடியாத நிலையில் வீடு வந்துவிட S$ 22.20 கட்டணம் கட்டி மேலேறி வீட்டுக்குள் நுழையும் போது மணி 8.50.

அவசரம் அவசரமாக சென்னையில் எல்லோருக்கும் வந்து சேர்ந்ததை சொல்லிவிட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவேண்டியதை வைத்துவிட்டு வேலைக்கு கிளம்பி 10.10க்கு அலுவலகம் சென்றேன்.

கட்டுமானத்துறையில் இருப்பதால் இப்படி போவதெல்லாம் சகஜம்.கண்டுக்கமாட்டாங்க.

ஓட வேன்டிய நேரம் வந்துவிட்டது.பார்க்கலாம் அப்புறம்.

Wednesday, November 01, 2006

விமான டிக்கெட்

கிட்டத்தட்ட 15 நாட்கள் சென்னையில் பொழுது போனதே தெரியவில்லை.சில Functions, சில இறப்புகள் என்று விஷயங்கள் நகர்ந்துகொண்டிருந்தது.மழையை காரணம் காட்டி நாகை போக இருந்த பயணம் தள்ளிப்போடபட்டது.

போன முறை சூடு பட்டுக்கொண்டதால் இந்த தடவை திரும்ப வரும் பயணத்தை தொலைபேசியில் Confirm பண்ணாமல் நேரிடையாக பண்ணலாம் என்று "இந்தியன்" பயணாளர் உதவி எண்ணை கூப்பிட்டபோது நிஜமான துள்ளலான ஆண் குரல் கேட்டது.என்னுடைய தேவையை கொஞ்சம் மாற்றிக்கேட்டு "எங்கே" எனது பயணத்தை உறுதிபடுத்த வேண்டும் என்று கேட்டேன்.

நீங்கள் நகரம் பக்கத்தில் இருக்கும் பட்சத்தில் எழும்பூர் பக்கத்தில் எங்கள் அலுவலகத்துக்கு பக்கத்தில் வரலாம் இல்லாவிட்டால் விமான நிலையத்திலும் பண்ணலாம் என்றார்.

நன்றி என்று சொல்லிவிட்டு விமான நிலையத்துக்கு மனைவியுடன் போனேன்.

உள்ளூர் விமான சேவைக்கு பக்கத்தில் அலுவலகம் இருந்தது.

டிக்கட் மற்றும் விபரங்கள் சொன்னதும் கொஞ்ச நேரம் கணினியில் தட்டியபிறகு..

"உங்கள் விபரம் Confirm கிவிட்டது" என்று சொல்லி டிக்கெட்டை திருப்பித்தந்தார்கள்.

சரி என்று கிளம்பும் முன் டிக்கெட்டை பார்த்தபோது அதில் அவர்கள் check செய்தற்கான எந்த விதமான உத்திரவாதம் இல்லாமல் இருந்தது.மனைவியும், திரும்ப போய் Sticker / Chop" போடச்சொல்வோம் என்றார்.

அதற்குள் வேறொருவர் வந்துவிட்டதால் கொஞ்ச நேரம் காத்திருக்கும்படி ஆகிவிட்டது.கடைசியாக அவரும் ஸ்டிக்கர் ஓட்டச்ச்சொல்லி கேட்டபிறகு தான் செய்துகொடுத்ததை பார்த்தேன்.

என் முறை வந்தவுடன் முன்னவர் சொன்னமாதிரி செய்யச்சொன்னவுடன் ஒரு சிறிய சலிப்பு அந்த பெண்ணின் முகத்தில் தெரிந்த மாதிரி இருந்தது.போன முறை பட்ட அனுபவத்தை சொன்னவுடன் டிக்கட்டில் ஒரு குத்துவிட்டு கொடுத்தார்.

கிளம்பும் நாளும் வந்தது. 29 ம் தேதி இரவு 12.50 மணிக்கு பயணம்.வீட்டைவிட்டு 9.45க்கு கிளம்பினேன்.மச்சினர் வாடகை கார் எடுத்து வீட்டிற்கு வந்திருந்தார்.எல்லோரும் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.

என்னை விமானநிலையத்தில் கொண்டுவிட்டு விட்டு அவர் போவதாக பிளான்.

மழை தூரல்களுக்கிடையே கிளம்பி சில குளங்களை கடந்து கோயம்பேடு பஸ் நிலையத்தை தாண்டி வண்டி ஓடிக்கொண்டிருந்தது.

ஹாரன் தேவைப்படும் போது மட்டும் அடிக்கவேண்டும் என்ற நியதியெல்லாம் கிடையாது.சும்மா போகும் போது ஒரு அடி அடித்தால் கொஞ்சம் சந்தோஷம் வரும் என்ற பாணியில் பலர் காதின் பலத்தை சோதித்துகொண்டிருந்தார்கள்.

உலகத்தில் ஏதேனும் மோட்டார் தங்கள் கார் தரக்கட்டுப்பாட்டை சோதிக்கவேண்டும் என்றால் சென்னை அதுவும் மழைகாலம் சரியான நேரம் / இடம்.ஒரு மாதத்தில் தெரிந்து விடும் அவர்கள் design தேறுமா தேறாதா என்று.

சுமார் 45 நிமிடங்கள் பயணம், விமான நிலையம் வந்துசேர்ந்தோம்.

மழையும் பிடித்துக்கொண்டது.

கூட்டம் அதிகமாக இருந்ததால் மெதுவாக நழுவி புறப்பாடு வாயிலை அடைந்தேன்.

வந்திருந்தவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு உள்ளே போனால் லு·தான்சா மற்றும் இந்தியனுக்கும் ஒரே வாயிலை போட்டு நெருக்கடி ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

xray முடிந்து பெட்டிக்கு கயறு போட்டு கட்டி அனுப்பிவைத்தார்கள்.

அடுத்து Boarding Pass வாங்கச்சென்றேன்.

கடவுச்சீட்டையும் டிக்கெட்டையும் கொடுக்கும் போது "முடிந்தால் ஜன்னல் இருக்கை" கொடுங்கள் என்றேன்.அவர் கவனித்தமாதிரி தெரியவில்லை.நம்ம தான் அடிக்கடி போகிறோமே..கவலைப்படவில்லை.அதே மாதிரி கிடைக்கவும் இல்லை.

அங்கு இருந்தவர் என்னுடைய டிக்கெட்டை பார்த்துவிட்டு கொஞ்சநேரம் கணினியில் ஊர்ந்தார்,பிறகு

பக்கத்துக்கு பக்கத்தில் உள்ள இன்னொரு சக ஆபிஸரிடம்

"என்ன சார் வெங்கடேசன் "Already Boarding" போட்டு கொடுத்திட்டீங்க்??

அவர் முழிக்க

அப்புறம் அவர்களுக்கே விளங்கக்கூடிய தலையாட்டலுக்குப்பிறகு எனக்கு சீட் போட்டுக்கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே பக்கத்து மேஜையில் ஒரு ஆனும் பெண்ணும்..
அவர்கள் தங்கள் திரும்ப போகும் பயணத்தை நேரிடையாக confirm செய்யவில்லை போலும்.ஒருவருக்கு தான் Confirm ஆகியுள்ளதாக அந்த ஆபிஸர் சொல்லிக்கொண்டிருக்க அங்கு உஷ்ண நிலை அதிகமாகிக்கொண்டிருந்தது.

பிறகு எப்படியோ, அவர்களை ஒன்றாக விமானத்தில் பார்க்கமுடிந்தது.

இந்தியன் - FAQ வில் இதை போட்டால் பல புது பயணிகளுக்கு செளகரியமாக இருக்கும்.

போனில் விஜாரித்து Confirm செய்து PNR வாங்கி அதற்கு பிறகு அப்படி இப்படி என்று அலைக்கழிப்பது "இந்தியனுக்கு" உகந்தது அல்ல.சீக்கிரம் திருத்துங்கள்.

பின் குறிப்பு: இந்தியன் ஏர் லயன்ஸ் = இந்தியன். (என்ன பெயர் மாற்றமோ)

மீதி அடுத்த பதிவில்

Monday, October 30, 2006

மின்தூக்கி மேம்பாடு 5

Piling முடிந்தபிறகு அது நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு எடையை தாங்குமா என்று பார்க்கவேண்டும்.அதற்காக ஒரு Foundation யில் 10 Pile இருந்தால் அத்தனையும் இவ்வாறு Test செய்யவேண்டிய அவசியம் இல்லை.பொறியாளரை கலந்தாலோசித்து செயல்படலாம்.

இந்த Pile Testing ஐ இங்கு பாருங்கள்.இந்த jackக்கு கீழே உள்ளது தான் "pile" என்பது.சிறிய கட்டிடம் என்பதால் அளவில் சிறியதாக குச்சி குச்சியாக இருக்கும்.

Photobucket - Video and Image Hosting

Piling முடிந்தவுடன்,தேவையான அளவுக்கு மண்ணை தோண்டி,அனாவசியாமான Piling உயரத்தை அளந்து வெட்டிவிடுவார்கள்.
பிறகு Foundation கம்பி கட்டுவதற்காக தரம் கம்மியான கான்கிரீட் ஒன்றை போட்டு,அதன் மீது கம்பி கட்டி,சாரம் அடித்து திரும்ப Foundation கான்கிரீட் போடுவார்கள்.

Photobucket - Video and Image Hosting


கீழே உள்ளது மற்றொறு கோணத்தில் Pile டெஸ்ட்.

Photobucket - Video and Image Hosting

Foundation கான்கிரீட் முடிந்தபிறகு அதன் மீது மின்தூக்கியின் சுவர் ஒரு குறிப்பிட்ட அளவு கட்டுவார்கள்.இதற்கு மேல்தான் முன்னமே தயாரிக்கப்பட்ட (Pre-Cast) சுற்றுச்சுவரை அடுக்குவார்கள்.

Photobucket - Video and Image Hosting

பவுண்டேசன் முதல் கட்ட பணி முடிந்திருக்கும் படம்

Photobucket - Video and Image Hosting

இன்னும் இருக்கு..

Sunday, October 29, 2006

வீடு கட்டனுமா?

சென்னையில் வீடு கட்டனுமா?
(விஷயம்)தெரிந்த குத்தகையாளர் கண்ணில் படவில்லையா?
மேலே படிங்க..
இவரிடம் பேசுங்க பிடித்தால் வேலையை கொடுங்கள்.இதில் என் பங்கு எதுவும் இல்லாததால் உங்கள் முடிவே இறுதியானது.

நம்மக்களுக்காக ஒரு நல்ல குத்தகையாளரை அடையாளம் காட்டுவதே என் வேலை.

வீடு வீடு

பல மக்களின் கனவுக்கோட்டை (Ultimate) இது.அதுவும் நடுத்தர வர்கத்தின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றும் கூட.
பல பேர் நில பிரச்சனை ஏதும் வேண்டாம் அடுக்கு மாடி குடியிறுப்பு போதும் என்று அதை விரும்புவர்கள் பலர்.அதிலும் தில்லு முல்லுகள் நாலொறு மேனியாக பத்திரிக்கையில் வந்துகொண்டிருப்பதை பார்த்து வீடு வாங்கவே பயப்படுபவர்கள் பலவிதம்.
பயந்துகொண்டிருந்தால் கரையிலேயே நிற்கவேண்டியது தான்.
இன்னும் சிலர் நிலத்தை வைத்துக்கொண்டு சரியான குத்தகைக்காரரை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பார்கள் அல்லது முடிவெடுக்கமுடியாமல் தடுமாறிக்கொண்டிருப்பார்கள்.எவ்வளவு செலவாகுமோ என்று ? இவர்களால் கட்டிடம் நல்ல முறையில் கட்டித்தரமுடியுமா? என்று பல வித சந்தேகங்களுடன் இருப்பவர்களும் நம்மிடையே உண்டு
அவர்களுக்கு உதவும் விதமாக,எனக்கு தெரிந்தவர்,நண்பர் வீடு கட்டும் தொழிலை சென்னையில் நடத்தி வருகிறார்.அவருடைய கம்பெனி அட்டையை இங்கு வெளியிட்டுள்ளேன்.
தேவையானவர்கள் அவரிடம் தொடர்பு கொள்ளலாம்.

Photobucket - Video and Image Hosting

இவரின் ஈ மெயில் முகவரி :radhaconstruction@gmail.com


இவரை ஏன் நான் விளம்பரப்படுத்துகிறேன் என்ற நியாயமான கேள்வி பலருக்கு வரும்.

இவர் என்னுடன் 2 வருட காலங்கள் ஒரே இடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர் என்பதாலும் அவரின் வேலை திறமையை பார்த்ததாலும் இதைச் செய்கிறேன்.
வேலையின் தரத்திற்காக குறுக்கு வழியில் போகாத குணம் மற்றும் சொன்ன சொல்லில் நிற்பது.வேலையில் நல்ல தரமான வேலையை செய்வது இப்படி பல.இவை அனைத்தையும் L&T-ECC யில் வேலை பார்த்தபோது நான் பார்த்த குணங்கள்.ஆதாவது அடுத்தவருக்க்காக வேலை செய்யும் போதே தன்னுடைய கம்பெனி போல் செயல்பட்டவர்.

அதுவும் (கடந்த 8 வருடங்களாக) இப்போது இவர் தனி கம்பெனி ஆரம்பித்து பல வேலைகள் செய்து வருகிறார்.இது தான் அவர் கம்பெனி பற்றி இனையத்தில் வருகிற விஷயம்.எந்தவித விளம்பரம் இல்லாமல் தன்னிடம் வருபவர்களுக்காக மட்டும் வேலை செய்து கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

என்னென்ன எதிர்பார்க்கலாம் இவரிடம்.

கட்டிட வேலைக்கான Design ( நல்ல தரமான கம்பெனி இன்ஜீனியர் மூலம்)

வரைகலை படங்கள்(Architectural Drawings)

வீடு கட்டும் செலவு விவரம்(Estimate)

இவர் செய்த சில வேலைகளின் படங்கள் கீழே உள்ளன.

Saturday, October 28, 2006

சுதேசி இயக்கம்

நம் நாட்டில் தயாரிக்கும் பொருட்களை வாங்குவதில் ஏன் எல்லோரும் சுணக்கம் காட்டுகிறார்கள்,இப்படியே போனால் நம்முடைய உற்பத்தி உற்பத்தியில் உருவாகும் பொருட்களை யார் வாங்குவார்கள்?
வாங்க வைக்க என்ன செய்யவேண்டும்?
உண்மையில் பிரச்சனை எங்குள்ளது?
எப்படி களைவது?
இதையெல்லாம் முடி நரைத்த வயதில் திண்ணையில் உட்கார்ந்து பேசுவதனாலும்,பஸ்ஸில் போகும் போது பக்கத்து சீட்டில் உட்கார்ந்து இருப்பவரிடம் பேசுவதனாலும் ஏற்படும் பலன் மிக குறைவாகவே இருக்கும்.இதையே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனோ / மாணவியியோ சிந்தித்து பலர் கூடும் இடத்தில் பேசினால்? அதன் விளைவு ஒரு வருங்கால சமூகத்திலேயே தாக்கத்தை உண்டுபண்ணக்கூடும்.அப்படித்தான் இந்த மாணவி பேசி பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.இத்தனைக்கும் இவர் படிப்பது திருச்சியில்.நம் தேசத்தைப்பற்றி விழிப்புணர்வு பல இளைஞர்களிடம் காண்கிறேன்.நம் காலை இழுக்கும் முதலைகளை அடையாளம் காணத்தொடங்கியுள்ளார்கள்.இதுவே மகிழ்ச்சிகுரிய அடையாளம் தான்.

இது ஆங்கிலத்தில் இருந்ததால் அப்படியே போடுகிறேன்.போடுங்க உங்களுக்கு தோனியதையும்.


DO WE NEED ANOTHER SWADESHI MOVEMENT?
(An essay by Miss.Bhargavi, XII- A,TGHSS/Srirangam)
To be frank, a Big – No: we do not need any other 'Swadeshi movement' in the interest of our Nation.Such movement was necessary during the period of pre-independence as the political and economic situation of India was entirely different. But in the present era of Information Technology(IT) such movement is 'obsolete'.
Let we visualize the status of our country before independence,after independence and the present scenario in the IT era.
Status of India before Independence
India was under the colonial rule of Europeans.Political and economic life of our country was controlled primarily by British. Industrial revolution in western nations led to neo-imperialism due to which industrially advanced countries started to exploit the regions which were rich in raw materials.
India is one such region with abundant natural resources. Our resources were 'exported' to Britain,the finished products were 'imported' and 'marketed' back to us by the rulers. Also surplus goods in the foreign countries were dumped in India for business. Thus our nation was kept economically backward by the British for the benefit of their mother Nation. Broad area of our country,linguistic differences among neighbor regions, inadequate communication,illiteracy and lack of unity among Indians were taken advantage by the rulers.
Such selfish move was understood gradually by Indians which led to initiation of Swadeshi movement especially after Bengal Partition during the year1905. The movement was intensified during Gandhian Era from the year 1919 by our great leaders who fought for Independence. Use of videshi goods was discouraged and swadeshi Indian made goods were encouraged by us. Non-violence movement through Satyagraha by Mahatma Gandhiji agitated the rulers. We were forced to face the wrath of the rulers by violence pelted on us during other movements for freedom struggle.
Status of India after Independence
India got independence from British rulers with 'major injury' of partitioning a portion to Pakistan. Violence erupted between the body and soul of Hindus and Muslims. Non-violence movement was ridiculed and father of our nation was killed by the hardliners. Political selfishness among leaders led to terrorism in border statess like Kashmir. Inter states refused to co-operate themselves and with the centre. Our unity among diversity was challenged before the other nations.
The period of chaos immediately after independence was settled gradually by timely bold action plans by our leaders. But in spite of peace by linguistic division of states, Powerful Constitution, Panch-sheel with other nations and five year plans for the economic development, the growth of India was 'slow'. The might of the 'brain power' of Indians were not exposed to other nations till the era of Information Technology (IT) after 1990s.
Swadeshi movement in the above period 'slowed down' due to tremendous growth of global communication, standard of living, availability of quality products from other nations at competitive rates.'Brain drain' created by the intellectuals in selfish-need of money also became a challenge for the development of our nation. Lack of moral ethics and commitment to produce quality products by the Indian traders also forced the Indian consumers to opt for a product of their choice.
Present era of Information Technology (IT)
The present era of communication and information technology encourages 'globalization' by integrating the international markets for goods and services,technology,finance and labour. The intellectual part of the Indians in development of the above concept among the countries in the globe is considerable. The rate of 'Brain drain' is slowing down due to growing money-making potentials in our nation itself. Tremendous development of E-Commerce (EC),E-Data Exchange (EDI) and E-Funds Transfer (EFT) were a boon to domestic and international trade and industries. Realisation among countries is taking place to integrate their country with the world economy.Foreign direct Investment (FDI) is encouraged to augment the domestic investable resources and also stimulates exports.
The Indian traders are now realizing the need for 'Total Quality Management (TQM)' to produce quality products for the survival among global war of competition. They are forced to spend for R & D for the development of innovative skills and new products to compete with MNCs established in India.
Future India – vision 2020
Certain demerits due to globalization and admission of MNCs like retarding growth of employment for home nations, monopoly powers and profit maximization can be effectively controlled by strict government policies. The transport power of our nation by way of road, rail, water, air and containerization should be fully utilized keeping in mind the welfare of the Indians rather than to others in India for business.
With right thinking and right political move at right time India will stand in a commanding position as a 'Global Leader' making us a proud member of our Nation. As visualized by our President Dr.A.P.J.Abdul Kalam India will command peace and prosperity among other nations before the year 2020!
Conclusion
Due to the above reasoning we do not need another Swadeshi movement. The concept itself is obsolete and meaningless as there is no videshi to compete with. Videshis and Swadeshis are one and the same in the present world scenario. There only one concept called 'Win-Win',only one thinking called 'Positive thinking' and only one move towards 'SUCCESS'!
இவர் பரிசு வாங்கிய புகைப்படம் கைவசம் இல்லாததால் போடமுடியவில்லை.கிடைத்தவுடன் போடுகிறேன்.
வருங்கால சமூகம் வளர உதவுவோம்,வாழ்த்துவோம்.

Friday, October 27, 2006

துணி துவைக்கும் இயந்திரம் (2)

அடுத்தக் கடை:சரவணா ஸ்டோர்

சென்னை வந்துவிட்டு ரெங்கநாதன் தெருவை மிதிக்காவிட்டால் எப்படி?

மதிய நேரமானதால் மக்கள் கூட்டம் சிறிது மந்தமாக இருந்ததாலும் “சரவணா ஸ்டோர்ஸ்” கடைக்கு முன் சுலபமாக போக முடிந்தது.வாசலிலேயே வெளியில் வாங்கிய பொருட்களை அவர்கள் ஒரு நெகிழிப்பையில் போட்டு வாயை மூடி கொடுக்கிறார்கள்

திரும்ப மின்தூக்கி..

ஆனால் இந்த முறை 5 வது மாடி

கண்டெயின்ர் நடுவே நடந்தால் எப்படியிருக்கும் அப்படி இருந்தது இந்த இடத்தில்.ஆதாவது டிவி,பிரிட்ச் மற்றும் வாஷிங் மிசின் பெட்டிகள் கிட்டத்தட்ட 2 ஆள் உயரத்துக்கு அடிக்கி வைக்கப்பட்டிருந்தது.

நுழைந்தவுடனே கடைச்சிப்பந்தி ஒருவர் வந்து “சார் என்ன பாக்கிரீங்க?” என்றார்.

வாஷிங் மிசினா? LG,Samsung மற்றும் whirlpool இருக்கிறது என்றார்.

Photobucket - Video and Image Hosting


என்ன கலர் இருக்கிறது?

ஒரே கலர் தான் உள்ளது (half white)

இது ஏன் என்று தெரியவில்லை. நம்மாளுங்க என்ன கலர் குறைபாடுள்ளவர்களா என்ன?

சரி 6kg உள்ள மிஷினை திறந்து காட்ட முடியுமா?

(எல்லா மிஷின்களும் அட்டை பெட்டியுடன் பத்திரமாக மூடப்பட்டிருந்தன)Display set கூட வைக்கவில்லை.

அப்படியில்லை சார்.உங்களுக்கு வேனா catalogue காட்டுகிறேன்.

என்னப்பா இது! மாட்டை தண்ணியில் போட்டு விலை பேசுவது மாதிரி?? என்று சொல்லிவிட்டு ஏமாற்றத்துடன் அடுத்த கடையை தேடினோம்.

அங்கிருந்து மாடிப்படியில் கீழே இறங்கும் போது கடை ஒலிப்பானில் இருந்து ஒரு அறிவிப்பு

வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து சேவை செய்யும் ஒரே நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ்” :-))

மனைவி தேர்ந்தெடுத்த அடுத்த இடம்

வசந்த் அன்டு கோ- T.Nagar பஸ் நிலையம் அருகில் உள்ளது.

உள்ளே போனதுமே திரு ஆனந்த் எங்களை அழைத்து என்ன பார்க்க வேண்டும் என்றார்.

தேவையை சொன்னதும்.4 அல்லது 5 மிஷின்கள் உள்ள ஒரு சிறிய இடத்துக்கு கூட்டிப்போய் எங்கள் தேவைக்கு ஏற்ற மிஷினை காண்பித்து அதில் உள்ள சாதக பாதகங்களை கூறினார்.

அவரிடம் இருந்ததும் ஒரே ஒரு கலர் தான்.ஏன் என்று கேட்டத்திற்கு மற்ற கலர்கள் விலைகள் ரூபாய் 15000 மேல் போகும் என்றார்.இந்த பதில் பல கடைகளில் கிடைக்கவில்லை.ஆதாவது பல கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களை ஒரு வட்டத்துக்குள் பார்க்கிறார்கள் என்று தோன்றுகிறது.

நாங்கள் பார்த்த ஒரு இயந்திரம் தற்போது இருப்பில் இல்லாததல் நாங்கள் முதலில் ரூபாய் 1000 கட்டினால் வரும் திங்களன்று வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என்றார்.

6kg கொள்ளலவு கொண்ட இயந்திரம் Automatic சுமார் 11800 வரை வரும் என்றார்.

நாங்கள் பார்த்த 3 கடைகளில் கடைசியாக போன வசந்த் அன்ட் கோ தான் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து சாதக பாதகங்களை கூறி கவர்கிறார்கள்.ஆனாலும் இடம் சின்னதாக இருப்பதால் பல மாடல்களை பார்க்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

மொத்ததில் பார்கையில்

சிறந்த Display கிடையாது

வாடிக்கையாளர்களை கவர சரியான அனுகுமுறை கிடையாது. கலர் option இல்லை.

விலை-கிட்டத்தட்ட சிங்கப்பூரில் விற்க்கும் விலைக்கு ஈடாக உள்ளது.

சர்வீஸ்:மிகப்பெரிய மாற்றம் வேண்டும்.

இது அத்தனையும் ஏன் சொல்கிறேன் என்றால்..

சிங்கையில் இருந்து சென்னை வரும் போது ஓரு 19” LCD மானிட்டர், நண்பர் ஒருவருக்காக வாங்கி வந்தேன்.இது இத்தனைக்கும் சிங்கப்பூரில் மட்டுமே செல்லுபடியாகக்கூடிய உத்திரவாதத்துடன் கூடியது.வாங்குவதற்கு முன்பே அந்த நண்பரிடம் இதை விளக்கிவிட்டேன்.

அவர் சொன்ன பதில் இது தான்
“ நான் இங்கு வாங்கினால் சரியான சர்வீஸ் கிடைக்காது,பொருளும் அவ்வளவு தரத்துடன் இருக்காது மற்றும் ஒரு வருட காலம் என்பது மானிட்டரை பொருத்த வரை குறைந்த கால அளவு.சிங்கப்பூருக்காக தயாரிப்பதால் ஒரளவு தரக்கட்டுப்பாடு இருக்கும்,அதனால் அங்கிருந்து வாங்கி வருவதையே விரும்புகிறேன்” என்றார்.

சரி நாம் தயாரிக்கும் பண்டங்களை யார் உபயோகிப்பது?

அப்ப நமக்கு என்ற சுதேசி இயக்கத்தை திரும்ம ஆரம்பிக்க வேண்டுமா??

இந்த பாணியில் திருச்சியில் பள்ளியில் படிக்கும் ஒரு பெண்ணின் கருத்தை பார்க்க விருப்பமா??அதற்காக அவருக்கு விருது வழங்கி சிறப்பித்துள்ளார்கள்,அவர்கள் பள்ளியில்.

இந்த பெண் வேறு யாரும் அல்ல

எனது மனைவியின் அண்ணன் மகள்.

அவர் எழுதியதை அடுத்த பதிவில் வெளியிடுகிறேன்.

துணி துவைக்கும் இயந்திரம்

நான்கு நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டில் உள்ள துணி துவைக்கும் இயந்திரம் வேலை செய்யவில்லை என்றும், வேறு ஏதாவது புது மாடல் கிடைக்குமா? என்று பார்க்கச் சொன்னார்கள்.

அதற்கு முன்பு அந்த பழைய இயந்திரத்தை பழுது பார்க்கமுடியுமா என்று எங்கெங்கோ தேடியதில் சலிப்பு தான் மிஞ்சியது.இத்தனைக்கும் அது “Godrej” மாடல்.அதற்குப்பிறகு தான் அதை Trade-in முறையில் வெளியேற்ற முடியுமா என்று பார்த்தோம்.

சரி என்று விவேக் அன்ட் கோ - வடபழநியில் உள்ள கடைக்குப்போய் தேவையான விபரங்களை சொன்னவுடன் அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக்கொண்டு “ நாளை விடுமுறை என்றாலும் எங்கள் ஆட்கள் வேலை செய்வார்கள்” - அதனால் தொலை பேசிவிட்டு வந்து பார்க்கிறோம் என்றார்கள்.

பழைய இயந்திரத்தை எடுத்துக்கொண்டு புது இயந்திரம் கொடுப்பதாகச்சொன்னார்கள்.வீட்டுக்கு வந்து பழைய இயந்திரத்தை பார்த்து விலையை முடிவு செய்வோம் என்றார்கள்.

சரி என்று ஒத்துக்கொண்டாயிற்று.

இன்று வரை ஆதாவது அவர்கள் சொன்ன தேதிக்கு மேல் 2 நாட்கள் ஆகிவிட்டது ஒன்றும் நடக்கவில்லை.

ஏதோ எங்கோ தவறு நடந்திருக்கிறது என்று தெரிந்தவுடன் இனி அவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்று நேற்று திரும்ப ஒரு சுற்று வரலாம் என்று நினைத்து வண்டியை எடுத்துக்கொண்டு தி.நகருக்கு கிளம்பினோம்.

கடந்த சில நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில் அவ்வப்போது மழை பெய்து கொண்டிருந்தது.நாங்கள் வண்டியை எடுக்கும் போது லேசான தூரல் இருந்தது.

வண்டியை போதீஸ் பக்கத்தில் உள்ள சந்தில் இடம் இருந்ததால் விட்டு விட்டு கிளம்பினோம்.கொஞ்சதூரம் போனவுடன் தான் தெரிந்தது மனித நடைபாதைக்குள் இருசக்கர வாகனங்களின் நிறுத்தும் இடம் ஏற்படுத்தப்பட்டிருப்பது.

என்ன காரனமோ தெரியவில்லை பல போலீஸ்காரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.

குமரன் சில்க்ஸ்,சரவணா தங்க மாளிகை என்று தாண்டித்தாண்டி வந்து சேர்ந்தோம் இந்த கடைக்கு

முதல் இடம்: ரத்னா ஸ்டோர்

“வாஷிங் மிஷின் பார்க்கனும்”

“மூனாவது மாடிக்குப் போங்க”

கடை கோடியில் இருக்கும் மின் தூக்கிக்கு கையை காண்பித்தார்கள்.

கடையில் வேலை செய்யும் ஒருவர் அதை இயக்கியதால் பிரச்சனை ஏதும் இல்லாமல் மூன்றாவது மாடிக்கு வந்து சேர்ந்தோம்.

அந்த மாடியில் அப்போது ஒரே ஒருவர் மாத்திரம் இருந்தார்.அவர் தான் அங்கு மேற்பார்வையாளரா என்று தெரியாததால் நாங்களே தேடிக்கொண்டு துணி துவைக்கும் இயந்திரம் இருக்கும் இடத்திற்கு போய் ஒவ்வொறு மூடியையும் திறந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.

விலை பட்டியல் இல்லை.. மோசமான நெகிழி ((plastic) இயந்திரத்தின் மேல ஒட்டிக்கொண்டிருந்த்து.நாங்கள் பார்த்துகொண்டிருக்கும் போது எங்களுக்கு உதவ அந்த மனிதரும் முன்வரவில்லை.

இதற்கிடையில் வேறு ஒரு குழு வெட் கிரைண்டர் பார்க்க வந்துவிட்டதால் அவர் அவர்கள் கேள்விக்கு பதில் சொல்ல போய்விட்டார்.

இருக்கும் 8 அல்லது 9 இயந்திரத்தை எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருப்பது?

விடு ஜூட்

மீதி அடுத்த பதிவில்..