மதிப்பீட்டார்கள் வந்து மதிப்பீடு செய்து முடித்து சுமார் 2 வார காலத்துக்குள் அவர்களின் report வந்துவிடும்.மொத்தமே 5 அல்லது 6 பக்கங்களுக்குள் அடங்கிவிடகூடிய சிறிய புத்தகமாக இருக்கும்.வீட்டில் எடுத்த படங்கள் அதனுள் பொருத்தப்பட்டு இருக்கும்.படங்களை பார்க்கும் போது இது நமது வீடு தானா என்று சந்தேகமாக இருக்கும்.
3 மாதத்தில் காலாவதியாகக்கூடிய report உங்கள் கைக்கு வரும் போதே 15 நாட்கள் காலியாகிவிடும்.அதற்குப்பிறகு முகவர் அவரிடம் மற்றும் நண்பர்களிடம் விஜாரித்து பலரை கூட்டி வருவார்கள்.சிலருக்கு வீட்டை சுற்றி பார்க்க 5 நிமிடம் ஆகும், சிலர் மறுமுறை வந்துகூட பார்ப்பார்கள்.வீட்டை திறந்துவிட்டு விட்டு நம்வேலையை பார்க்க ஆரம்பிக்கலாம்.பேச்சு வார்த்தைகள் அனைத்தும் முகவருக்கும் அவர்களுக்கும் இடையே தான்.
வந்த அனைவரும் "ஏன் வீட்டை விற்கிறீர்கள்?" என்ற கேள்வியை கேட்காமல் இருப்பது இல்லை.எவ்வளவு பேர் உண்மையை சொல்வார்கள் என்று தெரியவில்லை.
வீட்டின் விலை மீது பேச்சுவார்த்தை நடத்தும் போது தான் வீட்டின் உரிமையாளர் நுழைவார்.
என் வீட்டை பார்க்க கிட்டத்தட்ட 25 பேர் வந்தார்கள்.பலர் 5 நிமிடங்களுக்கும் குறைவாக பார்த்துவிட்டு போனார்கள்
வீட்டை விற்க முடிவெடுத்த சமயத்தில் வீட்டின் மேல் 10K வைத்து விற்பனை செய்யுமாறு முகவரை பணித்திருந்தேன்.நான் கேட்பது இப்போது உள்ள நிலமையில் அதிகம் என்று தெரிந்தே சொன்னேன்.அப்போது தான் கொஞ்சமாவது கொடுப்பார்கள் என்று நினைதேன்.நான் இந்த வீட்டை வாங்கும் போது 20K சொல்லிவிட்டு 11K க்கு வந்தார்கள்.
மாதம் ஆக ஆக என்னுடைய எதிர்பார்ப்பை குறைத்துக்கொண்டு கடைசியில் 2K வில் வந்து நின்றேன்.
இதற்கிடையில் 3 மாதங்கள் கடந்தது, எனக்கும் முகவருக்கும் இருந்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில்,பயம் தொற்றிக்கொண்டது.சேற்றில் காலைவிட்ட கதையாகிவிட்டதே என்று நினைத்துகொண்டிருந்தேன்.பேசாமல் நம்முடைய குடியுரிமையை மாற்றிவிடலாமா? என்ற எண்ணம் வந்தது.
குடியுரிமையை மாற்றினால் வீட்டின் விலையில் சுமார் 35K தள்ளுபடி கிடைக்கும்.மின் தூக்கிக்காக சுமார் 1K (மாதத்திற்கு 11 வெள்ளி) கட்டினால் போதும்.வேலை பிரச்சனையும் ஒரளவு தீரும்.
இவ்வளவு சலுகைகள் இருந்தாலும்,பணத்துக்காக குடியுரிமையை மாற்றவேண்டுமா? பிறகு எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தையே எதிர்பார்க்கும் எண்ணம் வந்துவிடுமோ என்ற எண்ணத்தில் இருந்தேன்.
குடியுரிமை மாற்ற நமது தேசத்துக்கு 31 வெள்ளி கொடுத்தால் போதும்.:-((
ஒப்பந்தம் முடிந்தபிறகு அந்த முகவரே வந்து மீண்டும் நம் ஒப்பந்தத்தை புதுப்பிக்கலாமா? என்றார்.
வேண்டாம் என்று சொல்லிவிட்டு,வேண்டுமானால் உங்களிடம் வாங்குபவர்கள் யாரும் வந்தால் அழைத்து வாருங்கள்,பேரம் படிந்தால் ஒப்பந்தம் இல்லாமல் முடித்துக்கொள்ளலாம் என்றேன்.
அவரும் சரி என்று பார்க்கத்தொடங்கினார்.
இதற்கிடையில் இன்னும் சில முகவரை அழைத்து இந்த மாதிரி வீடு விற்பனைக்கு உள்ளது வேண்டுமானல் வாங்குபவர்களை அழைத்துவாங்கள்-ஒப்பந்தம் வேண்டாம் என்றேன்.
சிலர் ஒத்துக்கொண்டு பிறகு ஒன்றும் செய்யவில்லை.பலர் தொலைபேசியில் பேசியதோடு சரி.
பலரில் ஒருவர் மாத்திரம் சிலரை கூட்டி வந்தார்.சிலர் இஷ்டப்பட்டாலும் அவர்கள் தங்கள் வீட்டை விற்காமல் இதை வாங்கமுடியாது என்பதால் கை நழுவிப்போனது.
இப்படியாக செப்டம்பர் 2005 இல் ஆரம்பித்து செப்டம்பர் 2006 வரை இழுத்துக்கொண்டிருந்தது.கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழக்க ஆரம்பித்த நேரத்தில்,ஒரு நாள் இரவு, வீடு பார்க்க கணவனும் மனைவியுமாக இருவர் வந்திருந்தார்கள்.வரவேற்று விட்டு கணினியில் ஏதோ நிறுவிக்கொண்டிருந்ததால் அங்கு போய்விட்டேன்.
கொஞ்ச நேரம் சுற்றிப்பார்த்துவிட்டு போய்விட்டார்கள்.பிறகு கொஞ்ச நேரத்தில் என் முகவர் என்னிடம் வந்து,அவர்களுக்கு வீடு பிடித்துள்ளதாகவும் ஆனால் மதிப்பீட்டுக்கு மேல் எதுவும் காசு கொடுக்கமுடியாது என்றார்கள்.
நான் என் இடத்தில் இருந்து இறங்க முடியாமல், விலைக்கு மேல் 2K கொடுத்தால் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன்.
அப்போது இருந்த மதிப்பீடு கீழே படத்துடன்.
மறு நாள் திரும்பவும் முகவரிடம் இருந்து அழைப்பு.திரும்பவும் அதே கதை தான்.
இத்தனை மாதங்களாக இழுத்தடித்த வேதனை,பலத்த சேதாரத்துடன் விற்கும் நிலமை என்று எல்லாம் சேர்ந்தது.
இதற்கு மேலும் இதை தொடரக்கூடாது என்ற எண்ணத்தில் முகவரிடம் மேற்கொண்டு ஆக வேண்டிய பணிகளை தொடருமாறு கூறினேன்.
அன்று இரவே வீட்டைவாங்குபவரும், வீட்டைவாங்குபவர்களின் முகவரும்,என் முகவரும் வந்தார்கள்.
மேற்கொண்டு நடந்ததை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
6 comments:
வீடு வாங்குறது ஒரு கஷ்டமுன்னா விக்கறதும் ஒரு கஷ்டம்தான்.
இப்ப, ஒரு 3 வருஷமா எங்க ஊர்லே வீட்டுவிலையெல்லாம் தாறுமாறா
ஏறிக்கிடக்கு. அரசாங்க மதிப்பீடுக்கு மதிப்பே இல்லை. அது ச்சும்மா ஒரு
கைடு லைன்தான். அதுக்குமேலே கூசாம 75% ஏத்திக்கேக்கறாங்க.
வாங்க துளசி
என்னது அரசாங்க மதிப்பீடு எல்லாம் ஒரு அளவுகோல் தானா?
அரசாங்கம் இன்னும் முழிச்சுகலியா இல்லை வேண்டாம் என்று விட்டுவிட்டார்களா?
75% அதிகமாகவா?கேட்கவே அம்மாடியோவ் என்று இருக்கு.
நீங்க என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே!
சிங்கையில் ஒரு வீடு வாங்கலாம் என நினைத்துக் கொண்டிருந்தேன்!
வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்!
ஸ்K ஐயா,
நிச்சயமாக.
வெளிநாட்டவற்கு இந்த வீவக வீடு கொடுக்கப்படுவதில்லை,ஆதாவது நிரந்தரவாசத்தகுதியுடன் குடும்பசகிதமாக உள்ளவர்கள் மட்டுமே இந்த வீவக வீடு வாங்கமுடியும்.மற்றவர்களுக்கு கன்டோமினியம் தான்.
நன்கு விஜாரித்து சொல்கிறேன்.
கிழக்கு பக்கம் போனால் விலை கூட.ஈசூன் பக்கம் தான் விலை மலிவு.ஏன் என்ற காரணம் இதுவரை புரியவில்லை.எல்லாவித வசதிகள் இருந்தும் நான் வீடு வாங்கியதிலிருந்து விற்கும் வரை இதே நிலை தான்.
http://www.etheni.com தளத்திற்கு சென்ற வந்தமைக்கு நன்றி குமார். அவசியம் http://forum.etheni.com http://wiki.etheni.com பகுதிகளில் சேர்ந்து பங்களிப்புகளை தாருங்கள்.
நிச்சயமாக லியோ மோகன்.
Post a Comment