முந்தைய பதிவுகள் ஒன்று
இரண்டு
சரி என்று சொன்னவுடன் வேலைகள் ஜரூராக நடக்கத்தொடங்கியது.
தேவையான விவரங்கள் அனுப்பப்பட்டு அதற்கான தேதிகள் குறிக்கப்பட்டன.
வாங்குவது,விற்பது என்று முடிவானவுடன்,எங்கள் கையெழுத்து தாங்கிய படிவங்கள் "வீட்டு வசதி கழகம்" இடம் சமர்பிக்கப்படும்.அவரவர் தகுதியை செக் செய்துவிட்டு முதல் சந்திப்புக்கு கடிதம் அனுப்புவார்கள்.
விற்பவராக இருந்தால், இந்த முதல் சந்திப்புக்கு முன்பு "வீவக"( வீட்டு வசதி கழகம்)விலிருந்து ஒரு அலுவலகர் வந்து ஒரு நிமிடத்துக்கும் குறைவாக வீட்டை சுற்றிப்பார்த்து "இவர்கள் வேறு எந்த விதமான அனுமதி பெறாத மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவில்லை" என்று சான்றிதழ் கொடுக்க வேண்டும்.
அதற்கும் கடிதம் வரும்.
வாங்குபவற்கு இப்போது அவ்வளவு வேலையில்லை,பணத்தை ரெடி பண்ணுவதை தவிர.
எனக்கு ஒரு 15K குறைந்த போது அப்போது வேலை பார்த்துக்கொண்டிருந்த அலுவலகத்தின் கதவுகளை தட்டினேன்.
நல்ல வேளை திறந்து உதவினார்கள்.மாதம் 1000 வெள்ளி திருப்பி கட்டவேண்டும் என்று வட்டியில்லாத கடனாக கொடுத்தார்கள்.
முதல் சந்திப்பின் போது "வீவக" அலுவலகர் நாங்கள் ஒத்துக்கொண்டது மற்றும் பல விஷயங்களை விவரிப்பார்.
வாங்கும் விலையை சொல்லி பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும்.இங்கு அது கட்டாயம்.பொய் சொல்லி மாட்டிக்கொண்டால் சரியான தண்டனை கிடைக்கும்.இதுல் பொய் சொல்லி என்ன வம்பாகப்போவது? என்று கேட்கிறீர்களா?நிறைய இருக்கு..
அது வேணாம் நமக்கு.
கையெழுத்து போட்டுவிட்டு வீடு கைக்கு வருவதற்கு அப்படி இப்படி என்று 3 மாதங்கள் ஆகிவிடும்.இது கூளிங் கால கட்டமாக வைத்துக்கொள்ளலாம்.
இரண்டாவது சந்திப்பில் தான் வீட்டு சாவி கைக்கு கிடைக்கும்.
அது நடக்கும் முன்பே இப்போது நடந்து கொண்டிருக்கும் வேலைக்கு பிறகு வேறு வேலை இல்லை என்ற செய்தி வந்தது.முதல் இடி.
Recession வந்ததாக சொன்னார்கள்.அப்படி என்னவென்றே தெரியாத எனக்கு அதன் வீச்சு எவ்வளவு கோரமானது என்று தெரியவந்தது.
வீடு வாங்க கையெழுத்து போட்டுவிட்டோம் இப்போது ஒன்றும் செய்வதிற்கில்லை என்பதால் கடைசி நாட்களை நோக்கி போய்கொண்டிருந்தேன்.
கம்பெனி நல்லதாக இருந்ததால்,ஏதோ சின்ன சின்ன வேலைகளை கொடுத்து வைத்துக்கொண்டிருந்தார்கள்.
வாழ்கையில் Recession என்றால் என்ன என்று அப்போது தான் தெரிந்தது.
கிட்டத்தட்ட 2 மாதங்கள் கழித்து டிசம்பர் 1997ம் ஆண்டு வீடு கைக்கு வந்தது.வீட்டை சரியாக கிளியர் பண்ணாமல் கொடுத்ததால் மனைவிக்கு செம வேலை.
எப்படியோ வீட்டை வாங்கிட்டோம்,பையனுக்கும் பக்கத்து பள்ளியில் இடம் கிடைத்தது.
கொஞ்சம் கொஞ்சமாக சாமான்களை சேர்க்க ஆரம்பித்தோம்.
வீடு வாங்கி,பழைய கம்பெனியில் சுமார் 10 மாதங்கள் தொங்கிக்கொண்டிருந்த போது வேலை காலியானது.
அடுத்த அடி
இன்னும் இருக்கு
8 comments:
குமார்,
இந்தியாவில் வீட்டைக் கட்டிப்பார் என்பதைவிட,
சிங்கையில் வீட்டைவாங்கிப்பார் என்பது மிக கடினம்.
'பட்ட காலிலே படும்'
துன்பம் மட்டும் எப்பவும் அடுக்கடுக்காய் வர்றது ஏன்?னு இன்னமும் புரியலை.
ம்.. அப்புறம் எப்படி சமாளிச்சீங்க?
சுத்தம் செய்யாம வீட்டை கொடுத்தா, உங்க ஏஜண்ட்தான் பொறுப்பு.
அவரைக் கேட்டீங்களா?
இதுவே நம்ம ஊரா இருந்தா ராசியில்லாத வீடுன்னு சொல்லி இருப்பாங்க. அப்புறம் அதை ராசியாக்க இடிச்சி கட்டி எதாவது பண்ணி இருப்பாங்க.
உங்க அனுபவம் எப்படிப் போகுதுன்னு பார்க்கலாம்.
15 வட்டியில்லா கடனா? நிறுவனம் மனித நேய மிக்க நிறுவனமாக இருக்கும் போலிருக்கே? இப்படிப்பட்ட நிறுவனத்திற்கு கஷ்டமா? வரவே கூடாதே? வீட்டு விஷயத்தை எப்படி சமாளித்தீர்கள்? தற்சமயம் கணக்கு பரிசோதனை நடந்து கொண்டிருப்பதால் தங்களை தொடர்பு கொள்ள வில்லை, அடுத்த மாதத்தில் ஒரு நாள் வீட்டிற்கு அவசியம் வர வேண்டும், பிரியாணி சாப்பிடுவீர்கள் தானே? சொந்த சமையல் தான், பரவாயில்லை தானே? நன்றி நாகூர் இஸ்மாயில்
வாங்க கோவி சார்,
உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.நீங்க எத்தனைவீடு இங்கு வாங்கினீர்களோ?
எனக்கு இது ஒன்று போதும்!
அப்பாடி! என்று இருக்கு.
வாங்க துளசி
ஏஜென்டா?
கையில் சாவி கிடைத்தவுடன்,பணத்தை வாங்கிக்கொண்டு போனவர் தான்,அவர் வந்து பார்த்து...
விடிந்துவிடும்.
வரும் பதிவுகளில் "விடிவு" தெரிந்துவிடும்.
வாங்க இலவசகொத்தனார்.
"ராசியில்லாத வீடு"- அதுவும் நடந்தேரியது. எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லாவிட்டாலும் சூழ்நிலை கொஞ்சம் அந்த பக்கமும் பார்க்கவைக்கிறது.
சாப்பிட அழைத்த நாகூர் இஸ்மாயில் அவர்களே,மிக்க நன்றி.
என்னுடைய தேவைகள் மிகவும் குருகியவை- கொஞ்சம் பழைய சோறு- 5 பச்சை வெங்காயம் இருந்தால் போதும்.பிரியாணி சாப்பிடலாம் அது மரக்கறியாக இருக்கும் பட்சத்தில்.
நிச்சயம் வருகிறேன்.
தங்கள் அன்பான அழைப்புக்கு நன்றி.
அந்த நிறுவனம் பெயர் "Tokyu Construction Pte Ltd".
இங்கேயும் சொந்த சமையல் தான்.அதனால் கவலையில்லை.
Post a Comment