Monday, July 24, 2017

ACT connection with Mi -3C

ரொம்ப நாளாகவே இணைய வேகம் ACT சொல்லிய படி 75 Mbbs இல்லையே என்ற குறை இருந்தது. அதற்கான காரணம் நான் உபயோகித்த Belkin Router தான், பழைய மாடல் என்பதால் மிக அதிகமாக 30 - 40 Mbbs  கிடைக்கும் என்றார்கள்.

சரி, அடுத்த வருடாந்தர சந்தா கட்டும் போது இலவச ரவுட்டர் கேட்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சந்தா கட்டும் நேரம் வந்த போது அதே மாதிரி “எனக்கு இலவச ரவுட்டர் கொடுத்தால் தொடர்கிறேன் இல்லாவிட்டால் வேறு இடம் பார்க்கிறேன்” என்றேன்.

வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரி சிறிது நேரம் எடுத்துக்கொண்டு “சார், அந்த மாதிரி இப்போது கொடுப்பதில்லை இருந்தாலும் நீங்கள் பழைய வாடிக்கையாளர் என்பதால் 1 வருடத்துக்கு சந்தா கட்டினால் 2 மாதத்துக்கு பதிலாக 3 மாதம் இலவசமாக கொடுக்கிறேன்” என்றார்.எப்படியோ ஒரு மாதம், கிட்டத்தட்ட ரூ 1000 இலவசமாக கிடைத்தது.

அந்த இலவச ஆயிரம் ரூபாயை   வைத்து ஏதாவது ஆஃபர் வரும் போது புது ரவுட்டர் வாங்கலாம் என்றிருந்த போது தான் இந்த Mi Router 3C மாடல் ரூ 1199 க்கு போட்டிருந்தார்கள். மிகுந்த யோஜனைக்கு பிறகு போன  வெள்ளி க்கிழமை அமேசானில் வாங்கினேன். வாங்கும் போது 5 நாட்கள் கழித்து தான் வரும் என்று சொன்னவர்கள் நேற்றே கொண்டு வந்து கொடுத்துவிட்டார்கள்.

உடனே பிரித்து இணைத்து முயலும் போது ஏதோ ஒன்று சரியாக வரவில்லை அதனால் இணைப்பு ஏற்படுத்துவதில் பிரச்சனை வந்தது. இரவு நேரமானதால் அப்படியே மூடிவிட்டு தூங்கிவிட்டேன்.

முடியாத வேலை என்றால் மண்டைக்குள் அரிப்பு இருந்துகொண்டே இருக்கும். Mi - Wifi App ஐ கைப்பேசியில் தரவிறக்கி நிறுவிய பிறகு ரவுட்டரை கண்டு கொண்டது ஆனால் அது ppp_ope என்று ஏதோ சொல்லி அதற்கான User name & Password கேட்டது. அதெல்லாம் கைவசம் இல்லை, இணையம் இல்லாததால் மெயிலில் இருந்தும் எடுக்க முடியவில்லை.ACT வாடிக்கையாளர் மையத்தை கூப்பிட்டிருக்கலாம் அதை விட முடிந்த வரை முயலுவோம் அதன் பிறகு தேவைப்பட்டால் கூப்பிடுவோம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

கைப்பேசி App மூலம் நிறுவும் போது இந்த மாதிரி நிலை ஏற்படும் என்றால் அதற்காக ஒரு எளிய வழியையும் சொல்லியிருந்தார்கள் ஆதாவது பழைய ரவிட்டரில் உள்ள Wan ஐயும் புது ரவுட்டரில் உள்ள Lan ஐயும் Network Cable மூலம் இணைத்து எல்லா செட்டிங்கையும் பழைய ரவுட்டரில் இருந்து புதிய ரவுட்டருக்கு Import செய்துவிடலாம். Import செய்தவுடன் அந்த விவரங்களையும் தொலைபேசியில் காண்பித்துவிடுகிறது. எல்லாம் முடிந்துவிட்டது.

இந்த புது ரவுட்டர் தாராளமாக 75 Mbbs வேகம் காண்பிக்கிறது.