Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

Saturday, March 08, 2008

19 வயதுக்கு கீழ்..

ஏம்ம்பா? நம் ஆட்கள் அதுவும் 19 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் தனியாக மலேசியா வந்து நம் நாட்டுக்காக கோப்பையையும் வென்றிருக்கிறார்கள்,யாராவது வீடியோ போடுவாங்க என்று பார்த்தால்.... ஒன்று கூட அகப்படவில்லையே.

சரி.. சரி ..

சின்னக்குட்டி எடுத்து போடுவதற்குள், போட்டுவிடுகிறேன்.

பார்த்து மகிழுங்கள்.




நன்றி: வசந்தம் சென்ரல்.

Saturday, February 09, 2008

சிங்கையில் 20-20

சிங்கப்பூரில் கிரிக்கெட் ஆர்வலர்கள் குறைவு என்றாலும் சில பள்ளிகளிலும் இந்த ஆட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.அவ்வப்போது சில திடல்களில் நம்மூர் ஆட்கள் டென்னிஸ் பந்து கொண்டு ஆடுவார்கள்.கையும் காலும் ஊறும்,என்ன பண்ணுவது?

இப்படிப்பட்ட ஊரில் 20-20 ஐ ஆடவைக்கப்போகிறார்களாம்.ஹாங்காங்கில் இருந்தும் ஒரு குழு வருகிறதாம்

20-20 கிரிக்கெட் வெறும் 3 மணி நேரத்துக்குள் ஆட்டம் முடிந்துவிடும் என்பதால் பலரிடம் புகழ்பெற்று விளங்கும் இந்த ஆட்டத்தை சிங்கப்பூரில் அறிமுகம் செய்கிறார்களாம்.

மேல் விபரங்களுக்கு சலனப்படத்தை பார்க்கவும்.



நன்றி: வசந்தம் சென்ரல்.

Tuesday, December 04, 2007

முரளிதரனுக்கு வாழ்த்துக்கள்

நம்ம முத்தையா முரளிதரன் இதுவரைக்கும் 710 விக்கெட் எடுத்து உலகிலேயே அதிக விக்கெட் எடுத்த பந்து வீச்சாளர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.

அவர் பந்து வீசும் முறை பல தடவை கண்டனத்துக்கு உள்ளாகி இருந்தாலும் குற்றம் நிரூபிக்க முடியாமல் போய் பலர் வயிற்றில் புளியை கரைக்கிறார்.

அப்படிப்பட்ட உலக சாதனை நிகழ்த்திய முரளிக்கு,தமிழ் வலைப்பதிவர்கள் சார்பில் வாழ்த்துக்களும் கீழே உள்ள விடியோவும் வழங்கப்படுகிறது.

கூடிய விரைவில் 1000 விக்கெட்டை எடுத்து சாதனை புரிய ஆண்டவன் அருள்புரியட்டும்.





விடியோ உதவி: வசந்தம் சென்ரல்.

Wednesday, November 14, 2007

இரண்டாவது ஒரு நாள்

சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்திய பாக்கிஸ்தானுக்கு இடையே நடந்த இரண்டாவது ஒரு நாள் பந்தயத்தின் முக்கியமான நிகழ்வுகளை செய்தியில் போடும் போது பிடித்தவை.

உங்கள் பார்வைக்காக...



நன்றி: சன் தொலைக்காட்சி

Tuesday, November 06, 2007

இந்தியா வெற்றி

நடந்து முடிந்த ஒருநாள் பந்தயத்தை காணமுடியாதவர்களுக்காக கீழே சலனப்படம் இணைத்துள்ளேன்.

பார்த்து மகிழுங்கள்.



நன்றி: சன் டிவி.