Friday, January 03, 2014

DVD Tray திறக்கவில்லையா?

நான் ஒரு DIY (Do It Yourself) ஆசாமி என்று ஒரு சில பதிவுகளில் சொல்லியுள்ளேன் அப்படி முயற்சித்து வெற்றிகண்ட ஒரு நிகழ்வைதான் இப்போது சொல்லப்போகிறேன்.இதற்கு முன்பு முயற்சித்தது இங்கே.

நான் முயற்சித்த பல விஷயங்கள் வெற்றி/ தோல்வியில் முடிந்திருந்தாலும் வெற்றி அடையும் போது கிடைக்கும் ஒரு மகிழ்ச்சி அளப்பரில்லாதது தான்.

வீட்டில் ஒரு டிவிடி ரெக்கார்டர்-பிலிப்ஸ் மாடல் சுமார் 6 வருடங்களுக்கு முன்பு வாங்கியது இருக்கிறது.இதை வாங்கும் போது ரெக்கார்டிங் கட்டுப்பாடு எதுவும் இல்லாதிருந்த காரணத்தினாலும் மற்றும் VHS Tapes வழக்கொழிந்து போகும் நிலையில் இருந்ததால் அதற்கு மாற்றாக இருக்கட்டுமே என்று வாங்கினேன்.ஆனால் சமீபகாலத்தில் ரெக்கார்டிங்(கேபிள்) மட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாலும்,நிகழ்வுகளை சேமித்து பிறகு பார்க்ககூடிய அளவில் கால அவகாசம் இல்லாத்தால் இதை உபயோகிப்பதும் மிகவும் குறைந்துவிட்ட நிலையில் இதை DVD Player ஆக உபயோகித்து வந்தேன். சமீபகாலங்களில் DVD மூலம் படம்/நிகழ்வுகள் பார்பதும் அரிதாகிவிட்டதால் ஆண்டுக்கு ஒரு சில முறைகளே உபயோகித்துவந்தேன்.இப்படிப்பட்ட நிலையில் திடிரென்று DVD Tray வெளியே வருவதில் பிரச்சனை வந்தது.

கூகிளாரிடம் தேடிய போது யுரோப்பில் உள்ள பலருக்கும் இப்பிரச்சனை இருப்பதும் அதற்காக Hard Reset செய்தும் வேறு சில ஆலோசனைகளையும் முன் வைத்தார்கள் அதில் ஒன்றிரண்டை உபயோகித்து சில நாட்கள் வரை உபயோகித்துவந்தேன்.சில முறை பேபர் கட்டர் பிளேடை Tray க்கு கீழே உள்ள இடைவெளியில் விட்டு உள்ளே உள்ள லாகை விடுவித்து Tray ஐ வெளியே கொண்டுவந்தேன்.Tray க்கு கயறையெல்லாம் கட்டி இழுத்து ஓட்டிக்கொண்டிருந்தேன்.:-)

DVD Recorder யின் உள் அமைப்பு.இப்பிரச்சனை முதல் முறையாக தலைகாட்டிய போதே DVD Recorder ஐ முழுவதுமாக பிரிக்க முயற்சித்தேன்.சரியான Screw Driver கிடைக்காமல் பிறகு கிடைத்து எல்லாம் பிரித்து பார்த்த போது DVD Player Set ஐ வெளியே எடுக்கமுடியாத படி Tray முகப்பு மாட்டப்பட்டிருந்தது. தோல்வியில் முடிந்த இந்த முயற்சிக்கு பிறகு அப்படியே திறந்த ஸ்குருவை போட்டு மூடிவைத்துவிட்டேன்.இப்படி திறந்த போதே இதன் ஸ்விச் மற்றும் இயக்கமுறையை ஓரளவு மனதில் நிருத்தியிருந்தேன் அதனால் இப்போது திறந்த போது அவ்வளவு பிரச்சனை வரவில்லை ஆனாலும் டிரேயின் முகப்பு மட்டும் எப்படி கழ்ற்றுவது என்பது பிடிபடாமல் இருந்தது.இதற்கிடையில் இந்த DVD Tray வரக்கூடிய பிரச்சனை அதனை எப்படி சமாளிப்பது போன்ற முறைகளை இணையத்தில் இருந்து தெரிந்துகொண்டேன் அதில் ஒவ்வொன்றாக செயல்படுத்தி பார்ப்போம் என்று தொடர்ந்தேன்.Tray யின் முகப்பு கீழிருந்து மேல் தூக்கினால் வெளியே வந்துவிடுக்கிறது அது கூட அகஸ்மாத்தாகத்தான் கண்டுபிடித்தேன்.

லென்ஸ் & டிரே.DVD Recorder யின் பின் தோற்றம்.
வட்டை படிப்பதில் பிரச்ச்னையில்லை என்பதால் உள்ளிருக்கும் லென்ஸும் அதை சார்ந்த வன்/மென்பொருள் பக்கம் போகவேண்டியதில்லை என்பதை முடிவுசெய்தேன்,அப்படியென்றால் டிரே வெளியே தள்ளக்கூடிய இரு சமாச்சாரங்கள் மட்டுமே இதற்கு பிரச்சனை கொடுக்கிறது என்றும் அது இதற்குரிய மோட்டார் அல்லது இதை நகர்தக்கூடிய பெல்ட்.மோட்டர் போயிருந்தால் என்னால் அதை சரிசெய்ய முடியாது ஏனென்றால் அதற்கான அறிவு என்னிடம் இல்லை மற்றது இந்த பெல்ட்.இந்த பெல்ட் பல காலம் உபயோகத்தில் இல்லாவிட்டால் அதன் விரைப்புத் தன்மை போய் இளகிவிடும்.பழைய டேப் ரெக்கார்டரில் அவ்வப்போது இப்பிரச்சனையை பார்த்திருந்தால் இதை மாற்றிப்பார்பது என்று முடிவு செய்தேன்.

Belt Close up picture below.வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஒரு கடையில் போய் அந்த பெல்டை காண்பித்து கேட்ட போது அது இங்கு கிடைக்காது என்றும் விருகம்பாகம் மார்கெட் அல்லது மெர்சி-வடபழனி கடையில் கேட்கவும் என்றார்கள்.மெர்சி கடை வடபழனியில் பிரபலம் என்றாலும் எனக்கு தேவையான விபரங்கள் கிடைக்கவில்லை,திரும்பும் வழியில் விருகம்பாக்கம் மார்கெட் பக்கத்தில் உள்ள கடையில் கேட்ட போதும் அவர்களிடமும் “இல்லை” என்று பதில் வந்தது.வேறு எங்காவது கிடைக்குமா என்று கேட்ட போது,ஆழ்வார்திருநகரில் ICICI வங்கிக்கு அருகில் உள்ள கடையில் கிடைக்கும் என்றார்கள்.அந்த கடைக்கு போய் கேட்ட போது,இதை முயற்சித்து பாருங்கள் சரியாக இருக்கும் என்றார்கள். விலை???- பதிவின் கடைசியில்.

இந்த பெல்டை போடுவது கொஞ்சம் சிரமான வேலை.சில முறை முயற்சித்து போட்டு உள்ளே பொருத்தினேன்.எல்லாம் முடிந்த பிறகு Eject Button ஐ அழுத்திய போது அழகாக திறந்தது.இதையே கடைகளில் கொடுத்திருந்தால் நிச்சயம் Rs 1000 தீட்டியிருப்பார்கள் என நினைக்கிறேன்.நேரமும்,ஆராயனும் என்ற முயற்சி இருந்ததால் இதை என்னால் புரிந்துகொண்டு சரி செய்யமுடிந்தது.

இவ்வளவு பெரிய கம்பெனி சாமான்,அதுவும் இந்த மாதிரி டிரே மாட்டிக்கிட்டா உள்ளே திறக்கிற மாதிரியா வைப்பார்கள்? நிச்சயமாக இல்லை, ஆனால் இதற்கான எளிமையான வழியை எங்கும் சொல்லாமல் வைத்திருக்கிறார்கள்.பிளேயரின் கீழே சிறிய நீள்வட்ட ஓட்டை உள்ளது அதனுள் வெள்ளை நிற பிளாடிக் லீவர் போல் ஒன்று உள்ளது அதை ஒருபக்கமாக நகர்த்தினால் டிரே வெளியே வந்துவிடும்.இது கிட்டத்தட்ட நமது கணினியில் இருக்கும் DVD/CD Player பக்கத்தில் இருக்கும் சிறு துளை இருக்கும் அதன் பணி போன்றதே.படம் கீழே.


வெற்றி வெற்றி...

ஆமாம், அந்த பெல்டின் விலை? - ரூபாய் மூன்று மட்டுமே.

பின்குறிப்பு:இது என்னுடைய அறிவு சார்ந்த அனுபவும்,இதைவைத்து எங்காவது எதையாவது விட்டு ஷாக் வாங்காதீர்கள்.அதற்கு நான் பொருப்பல்ல.