Monday, December 31, 2007

சிங்கையில் புத்தாண்டு

இன்னும் சில மணித்துளிகளில் பிறக்கப்போகும் புத்தாண்டுக்காக மெரினா பேயில் தயாராக இருக்கும் மக்களும் அவர்கள் பேட்டியும்.

சிங்கை அழகையும் கண்டுகளியுங்கள் மக்களே.இன்னும் இங்கு வராதவர்களுக்கு இது கொஞ்சம் ஆறுதல்.நன்றி:வசந்தம் சென்ரல்.

ஜீவன் பேட்டி

சற்று முன் தொலைக்காட்சியில் இங்கு காண்பிக்கப்பட்டது,அது உங்கள் பார்வைக்காக.

வளர்ந்து வரும் இளம் கலைஞருக்கு நம் வாழ்த்துக்கள்.நன்றி:வசந்தம் சென்ரல்.

ஐம்பது வெள்ளி லஞ்சம்

இதன் தலைப்பை "இது தான்டா சிங்கப்பூர்" என்று வைக்கலாம் என்று நினைத்தேன் பிறகு மாற்றிவிட்டேன்.

கீழே படத்தில் உள்ள மாதிரி செய்தி அடிக்கடி வராவிட்டாலும் அவ்வப்போது தலைக்காட்டும் அதுவும் நேர்மையான போலீஸ் அதிகாரியை உற்சாகப்படுத்துவதற்காக மட்டும் அல்லாமல் இனி கொடுக்க நினைக்கும் ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கும்.

இந்த ஓட்டுனர் கொடுக்க நினைத்த 50 வெள்ளி அவரை ஆறு வாரம் சிறையில் போடவைத்துவிட்டது.

அப்படி என்றால் எல்லா அதிகாரியும் புணிதரா? என்றால் இல்லை என்று தான் பதில் வரும் ஏனென்றால் அங்கொன்றும் இங்கொன்றுமாம் தவறு செய்து மாட்டிக்கொண்டவர்களை பற்றியும் அவ்வப்போது செய்தி வரும்.அது எதுக்கு நமக்கு?? நல்லதை பார்ப்போம்/பாராட்டுவோம்.

நன்றி: சனிக்கிழமை டுடே.

Saturday, December 29, 2007

மிமிக்ரி

இந்த அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் அவ்வப்போது சிலரின் படைப்புகள் அட போட வைக்கும் அந்த வரிசையில் இவரை பாருங்கள்.

தன் குரலை பல நடிகர்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி அவர்கள் உடலசைப்பையும் வைத்து அசத்துகிறார்.

திரு.சத்தியராஜ்;திரு.உசிலை மணி:திரு.பாக்கியராஜ்:
நன்றி: சன் தொலைக்காட்சி.

பட்டம் விடும் கப்பல்

இயற்கையின் உதவி நமக்கு பல விதங்களில் தேவைப்படுகிறது.ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்துக்கு போக மின்சாரம்,எண்ணை & காற்று போன்றவைகளை உபயோகப்படுத்துகிறோம்.

பழைய காலத்தில் பல் வேறு இடங்களை கடக்க காற்றை உபயோகிக்கும் பாய்மரக்கப்பல்களை உபயோகப்படுத்தியிருக்கோம்.கீழே உள்ள சலனப்படத்தை பார்க்கவும்,பட்டத்தை உபயோகித்து ஓரளவு எண்ணை உபயோகிப்பதை குறைக்க முயன்றிருக்கிறார்கள்.


நன்றி: வசந்தம் சென்ரல்.

Thursday, December 27, 2007

கண்ணா கருமை நிறக்கண்ணா..

சில நாட்களுக்கு முன்பு கண்ணன் பாட்டுப்பதிவில் கோவியாரை பார்த்ததும் ஆச்சரியப்பட்டேன்.அவர் இளவயதில் பாடியதும் அதை விளக்கியதும் அருமையாக இருந்தது.

அந்த சமயத்தில் எனக்கும் ஒரு கண்ணன் பாட்டு ஞாபகம் வந்தது அது கீழேரொம்ப நாட்களாக தேடிக்கொண்டு இருந்த போது இன்று யூ டியூபில் கிடைத்த ஒரே பாடல் உங்கள் பார்வைக்காக இங்கு.

என்னை கவர்ந்த பல பழைய பாடல்களில் இதுவும் ஒன்று. இதில் உள்ள சோகம் அப்படியே என்னை அழுத்திவிடும்.

Monday, December 24, 2007

வைரமுத்து

இரண்டு நாட்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் பேனியன் அமைப்புக்காக ஒரு நிகழ்ச்சியை இதில் ஒளிபரப்பினார்கள்.இது புது நிகழ்ச்சியா? பழைய நிகழ்ச்சியா? என்று தெரியாது.பார்க்க நேர்ந்த போது பிடித்து வைத்தது.

இதில் கலந்துகொண்ட பல திரைப்பட நடிகர்களில் கமலஹாசனை பெருமைப்படுத்தும் நிகழ்ச்சியாக போய்விட்டதை அவரே சொல்லியிருந்தார்.அப்போது திரு.வைரமுத்துவின் ஒரு கவிதைக்கு இசை அமைத்து அனைவரும் பாடினார்கள்.அதற்கு முன் அவர் பேசிய சலனப்படத்தை கீழே பாருங்கள்.

எனக்கென்னவோ விவேக்கின் "வெள்ளை தான் எனக்கு பிடிச்ச கலர்" என்ற பாட்டை அவரே பாடியது வெகுவாக கவர்ந்தது.நன்றி: விஜய் தொலைக்காட்சி.

ரோபோட்

வரும் காலங்களில் இந்த ரோபோக்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் போல் என்பதற்கான ஆதாரம் கீழே.

வீட்டின் உள்ளே நுழையும் முன்பே கட்டளைகளை பெற்று நமக்கு வேண்டியதை தயார் பண்ணி வைத்துவிடும் போல் இருக்கு.இன்னும் என்னென்ன செய்யப்போகிறதோ??

கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்,எவ்வளவு அழகாக வயலின் வாசிக்கிறது.யார் வயலினில் என்ன பாட்டு வேணும் என்று நிரல் ஏற்றிவிட்டால் போதும் போல் இருக்கிறது.

என்ன வேண்டுமானால் பண்ணிக்கொள்ளட்டு ஆனால் நேரில் வரும் மனிதனின் எண்ணங்களுக்கு ஏற்ற மாதிரி செயல்படாமல் இருந்தால் போதும். :-))நன்றி: வசந்தம் சென்ரல்

Saturday, December 22, 2007

தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு

கீழே உள்ள சலனப்படம் சிங்கை தொலைக்காட்சியில் சில நாட்களுக்கு முன்பு வந்தது.

தமிழ் எழுத்தாளர்களை சிங்கை அரசாங்கம் எப்படி ஊக்குவிக்கிறது என்பதை பற்றியும் தங்கப்பேனா விருதை வித்தியாசமான முறையில் தேர்ந்தெடுப்பதைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள்.

திரு லேனா தமிழ்வாணன் அவர்களின் சிறப்புரையும் கருத்தும் இருக்கிறது, பாருங்கள்.

நன்றி: வசந்தம் சென்ரல்.

இவர் ஞாபகம் இப்படி!!

சில நாட்களுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் "அசத்தப்போவது யாரு?" என்ற நிகழ்ச்சியில் சிவகங்கை சிவக்குமார் என்பவர் அசத்தியதின் ஒரு பகுதி கீழே உள்ளது. எனக்குப்பிடித்திருந்தது,உங்களுக்கு?

அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவரும் இவர் தான் .பார்க்காதவர்களுக்காக...

ஒரு சில பகுதி wife(o)logy கொடுத்த நம் பதிவர் "பினாத்தல் சுரேஷ்" க்கு சமர்ப்பணம்.

நன்றி: சன் தொலைக்காட்சி

Friday, December 21, 2007

இப்படி ஒரு அர்த்தமா?

கொஞ்ச நாட்களுக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு? என்ற நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது.அதில் சீனுவும் மகேஷும் அசத்தியது பார்க்க நன்றாக இருந்தது.

இரு பாடல்களை எவ்வளவு வித்தியாசமாக சிந்தித்திருக்கிறார்கள் பாருங்கள்.

எது உண்மையோ பொய்யோ,அந்த பாடலை எழுதியவர்களே இந்த மாதிரி சிந்தித்து பார்த்திருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.நன்றி: சன் தொலைக்காட்சி.

Tuesday, December 18, 2007

சத்தம்

சப்தம்-சங்கீதம்,இது இசையாகவும் இருக்கலாம் இரைச்சலாகவும் இருக்கலாம்.இதைத்தான் இளையராஜா சொல்லப்போய்
தவறாக புரிந்துகொள்ளப்பட்டது.

இப்ப அது மேட்டர் அல்ல.

இங்கு, சிங்கப்பூரில் வெளிப்புறத்தை மட்டும் சுத்தமாக வைக்க முயலவில்லை எங்கெங்கு உலக நியதிக்கு மாறுபட்டு இருக்கோ அங்கெல்லாம்
சரி செய்துகொண்டு இருக்கிறார்கள்.அதில் ஒன்று தான் இந்த சத்தம் சார்ந்த பிரச்சனை.பெரும்பாலும் இது கட்டுமானத்துரையில் இருந்து
தான் வருகிறது.அதுவும் ஏதாவது கட்டுமான வேலை நடந்துகொண்டிருக்கும் இடத்துக்கு பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள்
பெரும் தொல்லைக்கு ஆளாவர்கள்.காலை நேரத்தில் பலர் வேலைக்கு சென்றுவிடுவதால் இந்த பிரச்சனையை பலர் உணர்வதில்லை.
மாலை இரவு நேரங்களில் பாரம் தூக்கி,வைபிரேட்டர்,கான்கிரீட் மற்றும் சாரம் அடிக்கும் வேலைகள் மூலம் பெரும் சத்தம் உருவாகிறது.
இதை கட்டுப்படுத்துவது சற்று சிரமமான காரியம் என்றாலும் மக்கள் நலன் என்று வரும் போது அதை செயற்படுத்த தயங்குவதில்லை.இந்தந்த
நேரங்களில் இவ்வளவு தான் இருக்கவேண்டும் என்று சட்டம் போட்டுள்ளது இங்குள்ள அரசாங்கம்.ஏற்கனவே இருந்தது அதன் அளவு கொஞ்சம் அதிகமாக இருந்ததால் அதை மாற்றி
திருத்தியுள்ளார்கள்

எவ்வளவு இருக்க வேண்டும்?

சின்ன பட்டியல் இங்கு

வார நாட்களில் (இரவு 10- 7 காலை)

முன்பு 60 dBa இப்போது 55 dBa தான் இருக்க வேண்டுமாம்.

விடுமுறை நாட்களில் (காலை 7-இரவு 7)

முன்பு 90 இப்போது 75 தான்.

இரவு 7 மணியில் இருந்து 10 மணிவரை

முன்பு 70 இப்போது 65 dBa தான் இருக்கனுமா?

ஆமாம் இதெல்லாம் எப்படி கண்டுபிடிப்பார்கள்.கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கும் போதே 150 மீட்டர் சுற்றில் உள்ள
சில கட்டிடங்களில் ஒரு சிறிய இயந்திரத்தை நிறுவிவிடுவார்கள்.பிறகு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அதை எடுத்து அதில் பதிவானதை உரிய அலுவலகத்துக்கு
அனுப்பவேண்டும். மீறினால் தண்டனை உண்டு. எவ்வளவு?

முதலில் 10000 வெள்ளியாக இருந்தது போன அக்டோபரில் இருந்து அது 40000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அதே தவறை மறுபடியும் செய்பவர்களுக்கு
500-1000 வெள்ளி வரை அபராதம் ஏறிக்கொண்டே இருக்கும்.

சரி,இதை குறை கூறி அழைப்பு எப்பாவது வந்திருக்கா?

2005 ஆம் ஆண்டு 4953
2006 ஆம் ஆண்டு 6160

இதில் சுமார் 90 விழுக்காடு அழைப்புகள் சரியானவையில்லை என்ரு நிரூபணமாகியிருக்கிறதாம்.ஆமாம் இதெல்லாம் எங்கிருக்கிறது என்கிறீர்களா?

இங்கு.

Friday, December 14, 2007

சுரங்கம்

இந்த கட்டுமானத்துறையில் நிலத்துக்கீழே வேலை செய்பவது என்பது ஒரு புது விதமான அனுபவம்.ரொம்ப சிம்பிளாக சொல்லுவது என்றால் எலி வலை தோண்டுவதை பார்த்திருக்கிறீர்களா?
அவ்வளவு தான்.
நம் வேலைகளில் மேற்படி வேலைகள் நிறைய இருக்கும்.ஒவ்வொன்றாக எழுத வேண்டும் என்றால் இந்த பதிவு இப்போது முடியாது.இந்த எண்ணத்துடன் யூடியூபில் தேடிய போது கிடைத்தது இது.

எவனோ கத்துக்குட்டி விடியோகிராபர் போலும்,ஒவ்வொரு நொடியையும் சுட்டுத்தள்ளியிருக்கிறார்.அவர் போன தூரம் பார்க்கும் போது சிஙகப்பூரில் இருந்து மலேசியா எல்லைக்கு மேற்பட்டு போகக்கூடிய தூரம் இருக்கும் போல் இருக்கு.
அவ்வப்போது சுரங்கம் உள்ளே ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சனைகளை அழகாக விளக்கியுள்ளார்கள்.

பாதுகாப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அங்கெங்கே பளிச்சிடுகிறது.

ஆர்வம் உள்ளவர்கள் பார்த்து மகிழுங்கள்.

Thursday, December 13, 2007

நீயா? நானா?

யாருக்கு ஞாபகசக்தி அதிகம் மனிதனுக்கா? குரங்குக்கா?
கீழே இருக்கும் படத்தை பாருங்க...
மானத்தை வாங்குகிறீர்களே! மக்களே!நன்றி: சன் தொலைக்காட்சி.

Monday, December 10, 2007

இதுவும் Design தான்.

இந்த இடம் சிங்கையில் சோ சு காங்க் என்ற இடத்தில் உள்ளது.தினமும் இந்த இடத்தை கடக்கும் போது எரிச்சலாக வரும்.ஏதோ ஒரு கத்துக்குட்டி கொடுத்த Design ஐ கண்ணை மூடிக்கொண்டு அமல்படுத்தியிருக்கிறார்கள்.

மிதி வண்டியை இப்போது பலர் உபயோகப்படுத்துவதால் ரயில் மற்றும் பேருந்து சேரும் இடத்திலும் அவர்களுக்கு என்று ஓரிடம் ஒதுக்கி அங்கு அதை செயின் போட்டு கட்டுவதற்கான வசதி செய்துகொடுத்திருக்கிறார்கள்.அது எப்போதும் நிரம்பி வழியும்.காலையில் முதலில் சென்றால் நிறுத்த இடம் கிடைக்கும் இல்லாவிட்டால் கஷ்டம் தான்.மேலே உள்ள படத்தை பாருங்கள்.(பெரிதாக்கி பார்க்க அதன் மேல் சொடுக்குங்கள்)

முதலில் 2 மிதிவண்டிகள் எதிரெதிரே வைக்கமுடியாது.

இரண்டாவது எல்லா இடங்களில் மிதிவண்டி இருந்தால் உள்ளே வைத்திருக்கும் வண்டியை முதலில் வந்தால் எடுக்கமுடியாது.

Design என்பது எப்படி இருக்ககூடாது என்பதற்கான சிறந்த உதாரணம் இது.

என்ன அந்தூரிலும் இப்படியா? என்கிறீர்களா?

இங்கும் மனிதர்கள் தானே இருக்கிறார்கள்.இதை இவ்வளவு நாள் எப்படி விட்டு வைத்திருக்கிறார்கள் என்பது தான் புரியவில்லை.

தவறு என்று தெரிந்தவுடனே மாற்றுபவர்கள் இவர்கள்.

Sunday, December 09, 2007

S.Ve சேகரோட பணமா?

போன திங்கட்கிழமை அரை நாள் விடுப்பு போட்டு ஒரு முக்கியமான வேலை பார்க்க வேண்டியிருந்தது.அதற்கு முதல் நாளே, மறுநாள் நிச்சயம் மருத்துவரை பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.திங்கட்கிழமை செய்ய வேண்டிய வேலை சீக்கிரமே முடிந்துவிட்டது, அதற்கு பிறகு மாலையில் சென்று பார்க்கவேண்டிய மருத்துவர் வேலை என்ன காரணத்தினால் சுத்தமாக மறந்துவிட்டது.அன்று இரவு வெளியில் செல்லும் போது தான் ஞாபகம் வந்தது.சரி நாளை செவ்வாய்கிழமை செல்லலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.

செவ்வாய் அலுவலகம் சென்று வந்து அன்றிரவுக்கு வேண்டியவற்றை தயாரித்தபிறகு மருத்துவரிடம் சென்றேன். நல்ல வேளை என்னுடைய நம்பர் இரண்டாம் இடத்தில் இருந்தது.சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்தபின் மருத்துவரிடம் சென்று தேவையான விபரங்கள் வாங்கிக்கொண்டு வெளியில் வந்து மருந்துகள் வாங்க காத்திருந்தேன். இந்த கிளினிக்கில் மருந்துகொடுக்கவே 15 நிமிடங்களுக்கு மேல் ஆகும் என்பதால் சில மளிகை மற்றும் பால் சாமான்கள் வாங்க NTUC (இங்குள்ள சிறிய அங்காடி) போய்வந்துவிடலாம் என்று நினைத்து கிளினிக்கில் உள்ள பெண்ணிடம் சொல்லிவிட்டு சென்றேன்.

படிக்கும் போது அவ்வளவு பாக்கெட் பைசா இல்லாததால் பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லாதிருந்தது அடுத்து வேலைக்கு வந்த போது சென்னையில் பர்ஸ் வைத்திருப்பவர்கள் எளிதாக பிக்பாக்கெட்டிடம் பணம் பறிகொடுக்கிறார்கள் என்பதால் அந்த எண்ணத்தையே விட்டுவிட்டேன்.அதே பழக்கம் இங்கும் தொற்றிக்கொண்டுவிட்டது.இங்கு தேவையும் இல்லை.

இந்த நிலையில் பையில் சுமார் 70 வெள்ளி வைத்துக்கொண்டு அந்த கடைத்தொகுதியில் தேவையானதை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்கும் இடத்துக்கு வந்து பில் போடும் போது அதை செய்பவர் நான் வாங்கிய தக்காளி பாக்கெட்டில் விலை வில்லை இல்லை வேறு எடுத்துவாருங்கள் என்றார்.இந்த மாதிரி சமயங்களில் அங்கேயே எடைபோடும் இயந்திரம் இருக்கும் அதனால் நம்மை திருப்பி அனுப்பமாட்டார்கள்.அன்று அது இல்லை என்பதால் நான் போய் எடுத்துவரவேண்டியிருந்தது.திரும்ப வரிசையில் நின்று பணத்தை கட்டிவிட்டு கிளினிக் பக்கம் வந்தேன்.அப்போதும் மருந்து தயாராகவில்லை.கொஞ்ச நேரம் அங்குள்ள தொலைக்காட்சியை பார்த்துவிட்டு மருந்து வாங்கிக்கொண்டேன். பில் வந்தது 77 வெள்ளி என்றார்கள்.பையில் காசு குறைவாக இருந்ததால் வங்கி அட்டையை கொடுத்து கழித்துக்கொள்ளச்சொன்னேன்.

மேலே சொன்னது நடந்தது செவ்வாய்கிழமை.புதன் வேலைக்கு போய்விட்டு சாயங்காலம் வீடு திரும்பி Exercise செய்ய போகலாம் அப்படியே ஏதேனும் பழம் வாங்கிவரலாம் என்று நினைத்து பணத்தை தேடினால்... "காணும்!!". காக்கா ஊ ஊ தூக்கிட்டு போயிடுத்து.

கடந்த 2 நாட்களாக தேடாத இடம் இல்லை ,ஹூகும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சரி,நாம் தான் பணம் எடுக்கும் போது தவற விட்டுவிடோம் என்று இன்று காலை தான் மனதை தேற்றிக்கொண்டேன்.

இன்று மெனுப்படி காலை நீச்சல் போய்வந்தாகிவிட்டது மாலை நூலகம் போகனும்.காலையில் இருந்தே மழை விட்டு விட்டு பெய்துகொண்டிருக்கிறது. மிதிவண்டியில் நூலகம் போகமுடியுமா என்று யோசித்து சுமார் 2.30 மணிக்கு தூரல் சற்று நின்றிருக்கும் சமயம் பார்த்து கிளம்பி நூலகம் சென்றேன்.

திரும்பக்கொடுக்க போன வாரம் வாங்கிய ஒரு கவிதை புத்தகமும் & நாடக புத்தகமும் இருந்தது.இங்கு நூலகத்தில் எடுத்த புத்தகத்தை திரும்பச் செலுத்த ஒரு வாய் போன்ற அமைப்பில் ஒவ்வொரு புத்தகமாக போடவேண்டும்.ஒவ்வொரு புத்தகம் போடும் போது அதன் மீது உள்ள கணினி கோடு மூலம் நம் கணக்கில் இருந்து கழித்துவிடும்.இப்படி போட எததனிக்கும் போது அந்த நாடக புத்தகத்தில் போனவார நூலக ரசீது இருந்தது.அதயும் ஏன் போட வேண்டும் என்று நினைத்து அதை எடுக்கும் போது மற்றொரு பக்கம் குப் என்று வீங்கி இருந்தது.

என்ன? இது இப்படி இருக்கே என்று அங்கு பார்த்தால் நான் காணாமற்போய்விட்டதாக எண்ணிய அத்தனை பணமும் அங்கு இருந்தது.இது எப்படி இங்கு வந்தது என்று யோசிக்கும் போது ஞாபகம் வந்தது.மீதி பணத்தை அன்று அலுவலக பையில் போட்டு இருக்கேன் அது அப்படியே நம்து S.Ve சேகர் எழுதிய புத்தகத்தில் உள்ளே உட்கார்ந்துவிட்டது.அந்த புத்தகம் படித்து முடித்துவிட்டதால் எடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டேன்.பணமும் காணாமற்போய்விட்டது.

இதை படிக்க நேர்ந்தால் அந்த பணத்தை திரு.சேகர் கேட்கமாட்டார் என்று நம்புகிறேன். :-))

Saturday, December 08, 2007

சிங்கையில் நம் கலைஞர்கள்.

உள்ளூர் நாடகத்தில் நடிக்க நம் திரை/சின்னத்திரை நடிகர்கள் இங்கு வந்துள்ளார்கள்.
அவர்கள் திரு. டெல்லி கனேஷ் மற்றும் ஸ்ரீ மதி மனோரமா.

இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்களை பேட்டி எடுத்ததை தொலைக்காட்சியில் போட்டார்கள்,அது இங்கே.

பார்த்து மகிழுங்கள்.நன்றி: வசந்தம் சென்ரல்

Friday, December 07, 2007

இது கொடுமை

தமிழ் செய்திகள் பார்த்துக்கொண்டு இருக்கும் போது இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை போட்டார்கள்.இதை பார்த்தவுடன் சின்னக்குட்டி போட்ட கொடுமை வீடியோ தான் ஞாபகம் வந்தது.

சின்ன வேண்டுகோள்... சிறுவர்கள் இருக்கும் போது பார்க்கவேண்டாம்.
நன்றி: சன் டீவிக்கு (சொல்லமுடியவில்லை).

இப்படி செய்ய ஆயிரம் ஞாயங்கள் இருக்ககூடும் ஆனால் இது தான் ஒரே வழி அல்ல. :-(

Thursday, December 06, 2007

இயற்கையின் அதிசியம்

அவ்வப்போது தினசரி மற்றும் ஊடகங்களில் இயற்கைக்கு முரனாக நாய்,பூனை குட்டிக்கு பால் கொடுப்பது,நாயும் குரங்கும் நண்பர்களாக இருப்பது என்று நம்மை அதிசியத்தில் ஆழ்த்தும்.

அதே வரிசையில் 2 நாட்களுக்கு முன்பு செய்தியில் இந்த படத்தை போட்டிருந்தார்கள்,அது உங்கள் பார்வைக்கு.நன்றி: வசந்தம் சென்ரல்

Wednesday, December 05, 2007

துணை பிரதமர்

இங்குள்ள பல மக்களுக்கு தேநீர் கடை மற்றும் சாப்பாட்டுக்கடையில் தான் பெரும் பாலும் பார்க்க முடியும் அதுவும் வேலை முடியும்/ஆரம்பிக்கும் நேரத்துக்கு பின்பு/முன்பு.

அதானாலே என்னவோ பல நகர்பகுதியில் அந்தந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் உதவி பிரதமர் மற்றும் பிரதமர்களை பெரும்பாலும் பார்க்கமுடியும்.அதுவும் தேர்தல் சமயத்தில் ஒரு 20 பேர் சூழ ஆர்குட் மாலையுடன் பவனி வருவார்கள்.மற்றபடி எந்தவிதமான ஆடம்பரமும் இருக்காது.பக்கத்து வீட்டு ஆளுடன் பேசுவது போல் பேசலாம்.

முக்கியமாக பெண்கள் கால் மேல் கால் போட்டு அவருடன் உட்கார்ந்த நிலையில் கை குலுக்கலாம்.தேவையில்லாத மரியாதைகளை யாரும் எதிர்பார்பதில்லை.சலனப்படத்தின் கடைசியில் ஒரு மந்திரியுடன் மக்கள் எப்படி கை குலுக்குகிறார்கள் பாருங்கள்,அதற்காக அவர் பழிவாங்கப்பட மாட்டார். :-))

மிச்சம் சலனப்படத்தில்நன்றி: வசந்தம் சென்ரல்

ஜாபர் இரட்டை சதம்

நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் ஜாபரின் ஆட்டத்தை கீழே காணலாம்.
நன்றி: சன் தொலைக்காட்சி.

Tuesday, December 04, 2007

வாலிபால்

பல விளையாட்டுகளுக்கு உலகக்கோப்பை இருக்கும் போது வாலிபாலுக்கு மட்டும் என்ன குறைச்சல்? அதுவும் நடந்துகொன்டிருக்கிறது ஆனால் வெளிச்சம் தான் கிடைக்கவில்லை.

நான் இருந்த நாகை மடவிளாகத்தில் கோடை விடுமுறையில் தெருவின் குறுக்கே வலை கட்டி எங்கள் சீனியர்கள் இந்த விளையாட்டை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.விவரமாக பின்னொரு பதிவில் சொல்கிறேன்.

அப்போது நாங்கள் ஆடிய ஆட்டத்துக்கும் இப்போது ஆடடுகிற ஆட்டத்துக்கும் நிறைய முன்னேற்றம் வந்துவிட்டது. சர்வீஸ் ஒன்றே போதும் .கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்.ஒரு காலத்தில் நாகையில் இருந்து "சலீம்" என்பவர் தமிழகத்துக்காக இவ்விளையாட்டில் ஒரு முத்திரை பதித்தவர்.

நன்றி: வச்ந்தம் சென்ரல்

முரளிதரனுக்கு வாழ்த்துக்கள்

நம்ம முத்தையா முரளிதரன் இதுவரைக்கும் 710 விக்கெட் எடுத்து உலகிலேயே அதிக விக்கெட் எடுத்த பந்து வீச்சாளர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.

அவர் பந்து வீசும் முறை பல தடவை கண்டனத்துக்கு உள்ளாகி இருந்தாலும் குற்றம் நிரூபிக்க முடியாமல் போய் பலர் வயிற்றில் புளியை கரைக்கிறார்.

அப்படிப்பட்ட உலக சாதனை நிகழ்த்திய முரளிக்கு,தமிழ் வலைப்பதிவர்கள் சார்பில் வாழ்த்துக்களும் கீழே உள்ள விடியோவும் வழங்கப்படுகிறது.

கூடிய விரைவில் 1000 விக்கெட்டை எடுத்து சாதனை புரிய ஆண்டவன் அருள்புரியட்டும்.

விடியோ உதவி: வசந்தம் சென்ரல்.

கலக்கல் அலுவலகம்

மேலே சொன்ன மாதிரி ஒரு விளம்பரம் விஜய் தொலைக்காட்சியில் வந்துகொண்டிருக்கிறது.
2 நாட்களுக்கு முன்பு நமது பதிவர் ஒருவர் இதில் வருபவர் "லக்கி லுக்" என்றார்.
அது யார் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை....
முடிந்தால் நீங்கள் முயற்சிக்கவும்.நன்றி: விஜய் தொலைக்காட்சி.

போன இரு பதிவுகளில் சொன்னது போல் இதிலும் குரல் இல்லை,பொருத்துக்கொள்ளவும்.

Monday, December 03, 2007

கொல்கத்தா டெஸ்ட்

தற்போது கொல்கத்தாவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போட்டியில் நம் ஆட்கள் காட்டும் கை வரிசையை பாருங்கள்.

இதிலும் கோப்பை மாற்றும் போது ஆடியோ காணாமல் போய்விட்டது.ஸ்கோர் திரையின் கீழ் வருகிறது.நன்றி: சன் தொலைக்காட்சி

விரைவுப் படகு

கடந்த வாரம் தோஹாவில் நடந்த விரைவுப்படகு போட்டியில் நடந்த விபத்து இது.
அதிரிஷ்டவசமாக சொற்ப காயங்களுடன் அதன் ஓட்டுனர்கள் தப்பித்தனர்.

படகுக்கு என்ன ஆசையோ? விமானம் போல் பறக்க ஆசைப்படுகிறது போலும்.

DVD வட்டில் இருந்து விஸ்டாவில் உள்ள மீவி எடிட்டர் மூலம் .wmv கோப்புக்கு மாற்றும் போது குரல் காணமற் போய்விட்டது.நன்றி: வசந்தம் சென்ரல் தொலைக்காட்சி