Sunday, December 09, 2007

S.Ve சேகரோட பணமா?

போன திங்கட்கிழமை அரை நாள் விடுப்பு போட்டு ஒரு முக்கியமான வேலை பார்க்க வேண்டியிருந்தது.அதற்கு முதல் நாளே, மறுநாள் நிச்சயம் மருத்துவரை பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.திங்கட்கிழமை செய்ய வேண்டிய வேலை சீக்கிரமே முடிந்துவிட்டது, அதற்கு பிறகு மாலையில் சென்று பார்க்கவேண்டிய மருத்துவர் வேலை என்ன காரணத்தினால் சுத்தமாக மறந்துவிட்டது.அன்று இரவு வெளியில் செல்லும் போது தான் ஞாபகம் வந்தது.சரி நாளை செவ்வாய்கிழமை செல்லலாம் என்று முடிவு செய்துகொண்டேன்.

செவ்வாய் அலுவலகம் சென்று வந்து அன்றிரவுக்கு வேண்டியவற்றை தயாரித்தபிறகு மருத்துவரிடம் சென்றேன். நல்ல வேளை என்னுடைய நம்பர் இரண்டாம் இடத்தில் இருந்தது.சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்தபின் மருத்துவரிடம் சென்று தேவையான விபரங்கள் வாங்கிக்கொண்டு வெளியில் வந்து மருந்துகள் வாங்க காத்திருந்தேன். இந்த கிளினிக்கில் மருந்துகொடுக்கவே 15 நிமிடங்களுக்கு மேல் ஆகும் என்பதால் சில மளிகை மற்றும் பால் சாமான்கள் வாங்க NTUC (இங்குள்ள சிறிய அங்காடி) போய்வந்துவிடலாம் என்று நினைத்து கிளினிக்கில் உள்ள பெண்ணிடம் சொல்லிவிட்டு சென்றேன்.

படிக்கும் போது அவ்வளவு பாக்கெட் பைசா இல்லாததால் பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லாதிருந்தது அடுத்து வேலைக்கு வந்த போது சென்னையில் பர்ஸ் வைத்திருப்பவர்கள் எளிதாக பிக்பாக்கெட்டிடம் பணம் பறிகொடுக்கிறார்கள் என்பதால் அந்த எண்ணத்தையே விட்டுவிட்டேன்.அதே பழக்கம் இங்கும் தொற்றிக்கொண்டுவிட்டது.இங்கு தேவையும் இல்லை.

இந்த நிலையில் பையில் சுமார் 70 வெள்ளி வைத்துக்கொண்டு அந்த கடைத்தொகுதியில் தேவையானதை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்கும் இடத்துக்கு வந்து பில் போடும் போது அதை செய்பவர் நான் வாங்கிய தக்காளி பாக்கெட்டில் விலை வில்லை இல்லை வேறு எடுத்துவாருங்கள் என்றார்.இந்த மாதிரி சமயங்களில் அங்கேயே எடைபோடும் இயந்திரம் இருக்கும் அதனால் நம்மை திருப்பி அனுப்பமாட்டார்கள்.அன்று அது இல்லை என்பதால் நான் போய் எடுத்துவரவேண்டியிருந்தது.திரும்ப வரிசையில் நின்று பணத்தை கட்டிவிட்டு கிளினிக் பக்கம் வந்தேன்.அப்போதும் மருந்து தயாராகவில்லை.கொஞ்ச நேரம் அங்குள்ள தொலைக்காட்சியை பார்த்துவிட்டு மருந்து வாங்கிக்கொண்டேன். பில் வந்தது 77 வெள்ளி என்றார்கள்.பையில் காசு குறைவாக இருந்ததால் வங்கி அட்டையை கொடுத்து கழித்துக்கொள்ளச்சொன்னேன்.

மேலே சொன்னது நடந்தது செவ்வாய்கிழமை.புதன் வேலைக்கு போய்விட்டு சாயங்காலம் வீடு திரும்பி Exercise செய்ய போகலாம் அப்படியே ஏதேனும் பழம் வாங்கிவரலாம் என்று நினைத்து பணத்தை தேடினால்... "காணும்!!". காக்கா ஊ ஊ தூக்கிட்டு போயிடுத்து.

கடந்த 2 நாட்களாக தேடாத இடம் இல்லை ,ஹூகும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சரி,நாம் தான் பணம் எடுக்கும் போது தவற விட்டுவிடோம் என்று இன்று காலை தான் மனதை தேற்றிக்கொண்டேன்.

இன்று மெனுப்படி காலை நீச்சல் போய்வந்தாகிவிட்டது மாலை நூலகம் போகனும்.காலையில் இருந்தே மழை விட்டு விட்டு பெய்துகொண்டிருக்கிறது. மிதிவண்டியில் நூலகம் போகமுடியுமா என்று யோசித்து சுமார் 2.30 மணிக்கு தூரல் சற்று நின்றிருக்கும் சமயம் பார்த்து கிளம்பி நூலகம் சென்றேன்.

திரும்பக்கொடுக்க போன வாரம் வாங்கிய ஒரு கவிதை புத்தகமும் & நாடக புத்தகமும் இருந்தது.இங்கு நூலகத்தில் எடுத்த புத்தகத்தை திரும்பச் செலுத்த ஒரு வாய் போன்ற அமைப்பில் ஒவ்வொரு புத்தகமாக போடவேண்டும்.ஒவ்வொரு புத்தகம் போடும் போது அதன் மீது உள்ள கணினி கோடு மூலம் நம் கணக்கில் இருந்து கழித்துவிடும்.இப்படி போட எததனிக்கும் போது அந்த நாடக புத்தகத்தில் போனவார நூலக ரசீது இருந்தது.அதயும் ஏன் போட வேண்டும் என்று நினைத்து அதை எடுக்கும் போது மற்றொரு பக்கம் குப் என்று வீங்கி இருந்தது.

என்ன? இது இப்படி இருக்கே என்று அங்கு பார்த்தால் நான் காணாமற்போய்விட்டதாக எண்ணிய அத்தனை பணமும் அங்கு இருந்தது.இது எப்படி இங்கு வந்தது என்று யோசிக்கும் போது ஞாபகம் வந்தது.மீதி பணத்தை அன்று அலுவலக பையில் போட்டு இருக்கேன் அது அப்படியே நம்து S.Ve சேகர் எழுதிய புத்தகத்தில் உள்ளே உட்கார்ந்துவிட்டது.அந்த புத்தகம் படித்து முடித்துவிட்டதால் எடுத்து வேறு இடத்தில் வைத்துவிட்டேன்.பணமும் காணாமற்போய்விட்டது.

இதை படிக்க நேர்ந்தால் அந்த பணத்தை திரு.சேகர் கேட்கமாட்டார் என்று நம்புகிறேன். :-))

3 comments:

காட்டாறு said...

S.Ve சேகருக்கும் வேண்டாம்; உங்களுக்கும் வேண்டாம். எங்கிட்ட கொடுத்துருங்க. :-)

வடுவூர் குமார் said...

சரி,அனுப்பிவிடுகிறேன்.
இந்தாங்க $70.
:-))

cheena (சீனா) said...

நல்ல அனுபவம் - மறதி என்பது எல்லோருக்கும் உள்ளது தானே