பல விளையாட்டுகளுக்கு உலகக்கோப்பை இருக்கும் போது வாலிபாலுக்கு மட்டும் என்ன குறைச்சல்? அதுவும் நடந்துகொன்டிருக்கிறது ஆனால் வெளிச்சம் தான் கிடைக்கவில்லை.
நான் இருந்த நாகை மடவிளாகத்தில் கோடை விடுமுறையில் தெருவின் குறுக்கே வலை கட்டி எங்கள் சீனியர்கள் இந்த விளையாட்டை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.விவரமாக பின்னொரு பதிவில் சொல்கிறேன்.
அப்போது நாங்கள் ஆடிய ஆட்டத்துக்கும் இப்போது ஆடடுகிற ஆட்டத்துக்கும் நிறைய முன்னேற்றம் வந்துவிட்டது. சர்வீஸ் ஒன்றே போதும் .கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்.
ஒரு காலத்தில் நாகையில் இருந்து "சலீம்" என்பவர் தமிழகத்துக்காக இவ்விளையாட்டில் ஒரு முத்திரை பதித்தவர்.
நன்றி: வச்ந்தம் சென்ரல்
2 comments:
நான் கூட ஒரு காலத்தில் வாலி பால் பயித்தியம்... ஸ்டேட் வரை சென்று தோத்திருக்கிறேன். அதனால district playerன்னு சொல்லலாம். ;-)
அட காட்டாறு! மாநில பிளேயர் என்றே சொல்லலாமே!
வருகைக்கு நன்றி.
Post a Comment