சப்தம்-சங்கீதம்,இது இசையாகவும் இருக்கலாம் இரைச்சலாகவும் இருக்கலாம்.இதைத்தான் இளையராஜா சொல்லப்போய்
தவறாக புரிந்துகொள்ளப்பட்டது.
இப்ப அது மேட்டர் அல்ல.
இங்கு, சிங்கப்பூரில் வெளிப்புறத்தை மட்டும் சுத்தமாக வைக்க முயலவில்லை எங்கெங்கு உலக நியதிக்கு மாறுபட்டு இருக்கோ அங்கெல்லாம்
சரி செய்துகொண்டு இருக்கிறார்கள்.அதில் ஒன்று தான் இந்த சத்தம் சார்ந்த பிரச்சனை.பெரும்பாலும் இது கட்டுமானத்துரையில் இருந்து
தான் வருகிறது.அதுவும் ஏதாவது கட்டுமான வேலை நடந்துகொண்டிருக்கும் இடத்துக்கு பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள்
பெரும் தொல்லைக்கு ஆளாவர்கள்.காலை நேரத்தில் பலர் வேலைக்கு சென்றுவிடுவதால் இந்த பிரச்சனையை பலர் உணர்வதில்லை.
மாலை இரவு நேரங்களில் பாரம் தூக்கி,வைபிரேட்டர்,கான்கிரீட் மற்றும் சாரம் அடிக்கும் வேலைகள் மூலம் பெரும் சத்தம் உருவாகிறது.
இதை கட்டுப்படுத்துவது சற்று சிரமமான காரியம் என்றாலும் மக்கள் நலன் என்று வரும் போது அதை செயற்படுத்த தயங்குவதில்லை.இந்தந்த
நேரங்களில் இவ்வளவு தான் இருக்கவேண்டும் என்று சட்டம் போட்டுள்ளது இங்குள்ள அரசாங்கம்.ஏற்கனவே இருந்தது அதன் அளவு கொஞ்சம் அதிகமாக இருந்ததால் அதை மாற்றி
திருத்தியுள்ளார்கள்
எவ்வளவு இருக்க வேண்டும்?
சின்ன பட்டியல் இங்கு
வார நாட்களில் (இரவு 10- 7 காலை)
முன்பு 60 dBa இப்போது 55 dBa தான் இருக்க வேண்டுமாம்.
விடுமுறை நாட்களில் (காலை 7-இரவு 7)
முன்பு 90 இப்போது 75 தான்.
இரவு 7 மணியில் இருந்து 10 மணிவரை
முன்பு 70 இப்போது 65 dBa தான் இருக்கனுமா?
ஆமாம் இதெல்லாம் எப்படி கண்டுபிடிப்பார்கள்.கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கும் போதே 150 மீட்டர் சுற்றில் உள்ள
சில கட்டிடங்களில் ஒரு சிறிய இயந்திரத்தை நிறுவிவிடுவார்கள்.பிறகு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அதை எடுத்து அதில் பதிவானதை உரிய அலுவலகத்துக்கு
அனுப்பவேண்டும். மீறினால் தண்டனை உண்டு. எவ்வளவு?
முதலில் 10000 வெள்ளியாக இருந்தது போன அக்டோபரில் இருந்து அது 40000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அதே தவறை மறுபடியும் செய்பவர்களுக்கு
500-1000 வெள்ளி வரை அபராதம் ஏறிக்கொண்டே இருக்கும்.
சரி,இதை குறை கூறி அழைப்பு எப்பாவது வந்திருக்கா?
2005 ஆம் ஆண்டு 4953
2006 ஆம் ஆண்டு 6160
இதில் சுமார் 90 விழுக்காடு அழைப்புகள் சரியானவையில்லை என்ரு நிரூபணமாகியிருக்கிறதாம்.ஆமாம் இதெல்லாம் எங்கிருக்கிறது என்கிறீர்களா?
இங்கு.
4 comments:
இங்கே நம்மூரு பக்கம் கல்யாண வீட்டுல பாட்டை அலறா விடுவாங்களே அதுக்கெல்லாம் ஒரு சட்டம் வராதுங்களா?
வாங்க காட்டாறு
மக்கள் நலன் முன்னிருத்தும் அரசாங்கம் இருந்தால்.. எங்கிருந்தாலும் சட்டம் பாயும்.
இதெல்லாம் இந்தியாவில் சாத்தியமில்லை
சீனா
அந்த வருத்தம் எனக்கும் இருக்கு.
Post a Comment