Sunday, June 28, 2009

தரம்.

எப்போதோ திரு அப்துல் கலாம் பேசிய பேச்சு ஞாபகத்துக்கு வந்து போகுது.. ஆதாவது வெளிநாட்டவர்கள் கூட இந்தியாவில் தான் பொருட்களை வாங்க வேண்டும் அதன் மூலம் நம்மவர்களை ஊக்கப்படுத்தலாம் என்று.

நம்மூர் தயாரிப்பு இப்படி இருந்தால் இனி அதே மாதிரி செய்யலாம் என்ற எண்ணத்தையும் மிக மிக பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்துக்கு வரவேண்டியது தான்.மேலே படியுங்கள்.

இம்முறை சென்னை போன போது இங்குள்ள வீட்டு முதலாளி அம்மா ஒரு Non-Stick Pan வாங்கி வர முடியுமா? என்றார்.அங்கிருந்து வரும் போது அவ்வளவு எடை பிரச்சனை இருக்காது என்பதால் தயக்கம் இல்லாமல் ஒத்துக்கொண்டேன்.

இங்கு வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் Big Bazzar போன போது இது கண்ணில் பட்டவுடன் வாங்கிக்கொண்டு வந்து விட்டேன்.சுமார் 670 ரூபாய் ஆனது.





சிங்கை வந்ததும் அவர்களிடம் கொடுத்துவிட்டு அதைப்பற்றி மறந்துவிட்டேன் அவர்களும் இரண்டு நாள் கழித்து பிரித்து பார்த்துவிட்டு என்னை கூப்பிட்டார்கள்.என்ன தம்பி! இந்த நடுவில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை எடுத்தவுடன் அதனுடன் அந்த Taflon ம் வந்துவிட்டதே என்று காண்பித்தார்கள்.இந்த மாதிரி சட்டிகளின் முக்கியத்துவமே அந்த கோட்டிங் தான் அதில் ஓட்டை விழுந்தால் “ஓசோன்” ஓட்டை மாதிரி தான்.இனி அச்சட்டியை உபயோகப்படுத்த முடியாது.




ஊரில் இருந்தால் திரும்பக்கொண்டு கொடுக்கலாம் இங்கு வந்த பிறகு அதுவும் முடியாது.So,waste of money.

பல நூறு தயாரிக்கும் போது இப்படி ஒன்றிரண்டு போகக்கூடும் என்று எனக்கு தெரியும், இருந்தாலும் ஸ்டிக்கருடன் ஒட்டிக்கொண்டு வரும் அளவுக்கு Taflon பூச்சு இருந்தால் நாம் சமைக்கும் போதே அதனுடன் கலக்க வாய்ப்பு இருக்குமல்லவா?
என்ன சொல்லி என்ன - இந்தியாவின் தரம் இவர்களிடம் பல் இளிக்க ஆரம்பித்துவிட்டது.ஏற்றுமதிக்கு ஆகும் பொருளில் இப்படிப்பட்ட தரக்குறைபாடு மிக கடினமாக பார்க்கப்படும்,உள்ளூர் உபயோகம் என்பதால் அதையெல்லாம் காற்றில் விட்டு விட்டார்களா என்று தெரியவில்லை.

அடுத்த முறை நீங்கள் வாங்கும் போது அந்த ஸ்டிக்கரை பிய்த்துவிட்டு வாங்கவும்,மறுபடி அலையும் பிரச்சனை இருக்காதல்லவா?

Tuesday, June 23, 2009

கொடைக்கானல் படங்கள்.

போன வாரம் பொழுது போக்க சில நாட்கள் கொடைக்கானல் போன போது எடுத்த சில படங்கள் கீழே...
சுமார் முழு 2 நாட்கள் போதும் என்றாலும் சிங்கார சென்னையில் வெப்பத்தை தவிர்க்க கூட ஒரு நாள் அதிகமாக தங்கியது Dolphin Point பார்க்க உதவியாக இருந்தது.

மேலே ஏறும் பேருந்து



குரங்கை படம் பிடிக்கும் சுற்றுப்பயணிகள்.



நான் தங்கிய ஹோட்டல்



ஹோட்டல் நிர்வாகம் ஏற்படுத்தியிருக்கும் பூங்காவின் ஒரு பகுதி.






மழை காடு.இது இயற்கையாக ஏற்படுத்தப்படவில்லை என்பது மரங்களின் இடைவெளி தூரங்கள் சொல்லுது.




கொடைக்கானலின் சில பகுதிகள்.









செட்டியார் பூங்காவின் ஒரு பகுதி.



பேரிக்காய்



டால்பின் நோஸ்.இதை அடைய 1 மணி நேரம் ஆகும் அதில் அரை மணி நேரம் மிகவும் கடினமான மலைப் பாதை.எங்களுக்காக உள்ளூர் தபால் வினியோகிப்பவர் வந்தார்.கையில் சாப்பாட்டுப்பொருள் எதுவும் இல்லாமல் இருப்பது நலம் ஏனென்றால் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக இருக்கு.

இந்த கடினமான பாறைகளில் நடக்க செருப்பு கூட வாடகைக்கு கிடைக்கிறது.










மேலே உள்ள இடத்தில் இருந்து புகைப்படம் எடுத்து அங்கேயே பிரிண்டும் எடுத்துக்கொடுக்கிறார்கள்.

கூகர் நடைப்பாதையில் இருந்து..



பெரியகுளம் பகுதி



குறிஞ்சி ஆண்டவர் கோவில்



இப்பகுதியில் இருந்து பார்த்தால் பழனி மலை கூட தெரியுமாம் ஆனால் அன்று சற்று மேக மூட்டமாக இருந்தால் அவ்விடத்தை சரியாக பார்க்கமுடியவில்லை.

Saturday, June 20, 2009

சென்னை பதிவர் சந்திப்பு( 20.06.09)

நேற்று கோவி கண்ணன் அழைத்து நமது அமெரிக்க மருத்துவர் VSK ஐயா சென்னையில் இருப்பதாகவும் அவரை தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணையும் கொடுத்தார்.

சிறிது நேரம் கழித்து அழைத்து அளவளாவியது போது இன்று மெரினாவில் காந்தி சிலை அருகே மாலை 5 மணியில் இருந்து 7 மணி வரை சிலரை அழைத்துள்ளதாகவும் முடிந்தால் வரவும் என்றார்.இன்று முடிய வேண்டிய வேலைகள் நினைத்ததை காட்டிலும் முன்னமே முடிந்துவிட்டதால் மனைவியையும் அழைத்துக்கொண்டு மெரினாவிற்கு சென்றேன்.நம் பதிவர்களுக்காக வீட்டில் தயாரித்த ரவா உருண்டையும் கொண்டு சென்றேன்.

நான் போன போது VSK , திரு அதியமான் மற்றும் ஒரு பெண் பதிவர்(கவிதாயினி?) மட்டுமே இருந்தனர்.நேரம் நெருங்க நெருங்க ஒவ்வொருவராக கூடி முடிவில் 15 பேருக்கும் அதிகமாகி இருந்தனர்.

அங்கு எடுத்த சில படங்கள் கீழே,மற்ற படங்களை “விழியன்” வலை ஏற்றுவார் என்று நினைக்கிறேன்.





Wednesday, June 17, 2009

கொடைக்கானல் பயங்கரம்!!

சென்னை வெய்யில் மண்டையை பிளக்கும் நேரத்தில் வீட்டுக்காரம்மா எங்கேயாவது போய்வரலாம் என்று “பிளான்” போட்டு ஒரு மலைவாசஸ்தலம் போய் வந்தோம்.இங்கிருந்து ரயிலில் மதுரை பிறகு அங்கிருந்து வாடகை மகிழுந்தில் கொடைக்கானல்.கொடைக்கானலை நெருங்கும் நேரத்தில் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள எல்லோரும் நிற்கும் இடம் தான் “டும் டும் பாறை”.இங்கிருந்து பார்த்தால் எலி வால் நீர் வீழ்ச்சி தண்ணீர் இல்லாமல் தெரிகிறது.

படங்களை பெரிதுபடுத்தி பார்க்க அதன் மீது சொடுக்கவும்.





இப்படி பார்க்கும் அழகை இன்னும் உயரத்திலிருந்து பார்த்தால் அழகாக இருக்கும் அத்துடன் சுற்றுப்பயணிகளை கவற முடியும் என்ற நோக்கத்துடன் ஒரு பார்வை கோபுரம் அமைத்துள்ளார்கள்.



கீழிருந்து படங்கள் எடுத்துவிட்டு அந்த கோபுரத்தின் மேல் ஏறும் போது சிறிய ஆட்டம் எனக்கு மட்டும் உணரப்பட்டது.ஒருவேளை காற்றின் சீற்றத்தில் அப்படி நேருகிறதோ என்ற எண்ணத்துடன் படங்களை எடுத்து கீழ்வந்தவுடன் கட்டுமானத்துறை அறிவு விழித்துகொண்டது.கட்டிட்டத்தை சுற்றி வந்தவுடன் பார்த்து அசந்துவிட்டேன்.கட்டிடம் சரியாமல் இருக்க கொடுக்கப்பட்டுள்ள பக்கவாட்டு முட்டு கான்கிரீட் பெயர்ந்து அதன் கம்பிகள் வெளியில் தெரிய அதோடு அதன் நிலையில் இல்லாமல் வளைந்தும் காணப்பட்டது,ஆதாவது அந்த முட்டின் மீது அளவு அதிகமாக வெயிட் ஏறி அதன் நிலையை குலைத்துள்ளது.





இந்த நிலமை இப்படியே நீடித்தால் கொடைக்கானலில் என்றோ ஒரு நாள் இது இடிந்து விழ மிக அதிக வாய்ப்புள்ளது.சுற்றுப்பயணிகள் இதன் மீது ஏறி பருந்துப்பார்வை பார்பதை தவிர்க்கவும்.இதை அங்குள்ள நகராட்சியிடம் தெரிவிக்கலாம் என்றிருந்தேன் கால நேரம் சரிவர அமையாததால் முடியவில்லை.

இதை படிப்பவர்கள் அங்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லிவிடவும்.

கட்டிடங்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதிக்க வேண்டும் என்ற நியதி இருக்கையில் இது எப்படி அரசாட்சியின் கண்களில் இருந்து தப்பியது என்று தெரியவில்லை.சீக்கிரமே சரி செய்யப்படவில்லை என்றால் சில உயிர்களை தானம் செய்யவேண்டியிருக்கும்.