Wednesday, November 28, 2007

மலேசியா கிருஷ்ணர்

குழந்தைகள் விளையாட்டை ரசிப்பது என்பது எவ்வளவு விலை கொடுத்தாலும் கிடைக்காதது.

நான் பல தடவை வெளியில் சுற்றும் போது பேருந்து அல்லது ரயிலில் போகும் போது குழந்தகளையே ரசித்து பார்த்துக்கொண்டிருப்பேன். என்னதான் அவர்கள் உலகம் தனி என்றாலும் நம்மையும் சேர்த்துக்கொள்ள மாட்டார்களா? என்ற ஆதங்கம் தாம் வரும்.பெரும்பாலான சமயங்களில் நம்மை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.அப்படிப்பட்ட சமயங்களில் தூர நின்றுகொண்டு அவர்கள் நடை உடை,சிரிப்பு & அழுகையை ரசித்துக்கொண்டு இருப்பேன்.

இப்படியெல்லாம் ரசிக்கும் குழந்தையை இப்படி பார்க்க நேர்ந்தால்.......

கொடுமை தான். இது நடந்தது மலேசியாவாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது.இதை வீடியோ எடுக்க முன்னேற்பாட்டுடன் வந்தார்களா? அல்லது சும்ம்மா எடுத்தார்களா? என்று அவர்கள் தான் விளக்கவேண்டும்.

Tuesday, November 27, 2007

வாசிப்பை நேசிப்போம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கையில் தமிழ் வாசிப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊக்கப்படுத்த வேண்டி கல்வி அமைச்சு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த்திருந்தார்கள்.

அதை தமிழ் செய்தியில் ஒளிபரப்பிய போது பிடித்தது.

பார்த்து மகிழுங்கள்.

அடுத்த ஐஸ்வரியா சிங்கையில் இருந்தா??நன்றி: வசந்தம் சென்ரல்

சிங்கை வடிவேலு

உலகத்தில் நகைச்சுவை நடிகை/நடிகர்களுக்கு எப்பவுமே மவுசு தான்.

தமிழ்நாட்டில் இப்போது கொடி கட்டி பறக்கும் திரு வடிவேலு/திரு விவேக் மாதிரி இங்கும் சிலர் இருக்கின்றனர்.தமிழில் அவ்வப்போது வந்து கிசு கிசு மூட்டும் வடிவேலன் மற்றும் சிலர் இருந்தாலும் ஆங்கில தொலைக்காட்சியில் இவரை அடிச்சிக்க ஆள் இல்லை என்று தான் நினைக்கிறேன்.

இவர் தொலைக்காட்சியில் வர ஆரம்பிக்கும் போது ஒரு நிகழ்ச்சியை நடத்தச்சொன்னார்களாம் அதை நடத்தும் போதே தான் நடத்துவது பிடிக்காமல் தயாரிப்பாளிடரிடம் போய் இதை வேறு யாராவது நடத்தினால் நன்றாக இருக்கும் என்று சொல்லி தப்பிக்க பார்த்திருக்கிறார்.தயாரிப்பாளார் விடாமல் தொடர்ந்து நடத்தச்சொல்லி ஒரு நல்ல நகைச்சுவை நடிகரை அடையாளம் காட்டியுள்ளார்.

இவருடைய இயர் பெயர் குர்மீட் சிங்,சிங்கையில் இவ்ரை போ சு காங் என்றால் எல்லா மத்ததினருக்கும் தெரியும்.போ சு காங் என்ற தொடரில் இவர் ஒரு கட்டுமான நிறுவனத்தின் முதலாளியாக வருகிறார் அதுவும் ஸ்பெசல் உடை/காலணி என்று.சலனப்படத்தை பார்க்கவும்.உள்ளூர் மொழி பேச்சு வழக்கில் பேசுவதால் எல்லோருக்கும் பிடித்துப்போய்விட்டது.

எந்த அளவுக்கு.. என்றால் பிரதம மந்திரியே தேசிய நாள் பேச்சின் போது சொல்லும் வரைக்கும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த சலனப்படம்.

நன்றி: மீடியா கார்ப் தொலைக்காட்சி.

Sunday, November 25, 2007

இந்திய பாக்கிஸ்தான் கிரிக்கெட்

முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டம் பற்றி சன் செய்திகளில்..

உங்கள் பார்வைக்காக.நன்றி: சன் தொலைக்காட்சி.

Friday, November 23, 2007

கண் புரை(றை)?

சற்று நேரத்துக்கு முன்பு யூ டியூபில் இந்த சலனப்படம் பார்த்தேன்.. அது உங்கள் பார்வைக்கு

கண்ணில் உள்ள புரையை எப்படி எடுக்கிறார்கள் என்று காண்பிக்கிறார்கள்.படத்தெளிவுக்காகவே பார்க்கலாம்.

Monday, November 19, 2007

இந்தியா-பாகிஸ்தான்.

இது நான்காவது ஒரு நாள் போட்டியின் சில காட்சிகள்.
டெண்டுல்கர் ஆட்டமும் யுவராஜ் ஆட்டமும் அருமையாக இருந்தது.நன்றி: மக்கள் தொலைகாட்சி

கத்திப்பாரா பாலம்.

நேற்று இரவு ஊருக்கு கிளம்பும் முன்பு மனைவிவீட்டாரிடம் சொல்லிவிட்டு பெற்றோர் இருக்கும் இடம் பார்த்து வண்டி ஓட்டிக்கொண்டு இருந்தேன்.

போரூரில் இருந்து வந்தாலும் அல்லது வடபழனியில் இருந்து வந்தாலும் சரி இந்த கத்திப்பாரா சந்திப்பு வந்தால் ஒரு அழற்சி வந்துவிடுகிறது.எந்த வண்டி எங்கு திரும்புமோ நாம் யார் மீது வண்டியை மோதப்போகிறமோ என்ற பயத்துடன் சந்திக்கவேண்டிய சந்திப்பு இது.இப்படிப்பட்ட சந்திப்பில் இவ்வளவு நாள் விபத்து இல்லாமல் இருக்கிறது ஒரு அறிவிப்பு பலகை போட்டு நெடுஞ்சாலைத்துறை காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.

சென்னையில் வண்டியுடன் வண்டி முத்தமிட்டுக்கொண்டால் ஒருவர் மற்றொருவருக்கு கை அசைத்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் போய்கொண்டிருக்கிறார்கள்.அந்த அளவுக்கு மக்களிடையே ஒத்திசைவு.இல்லாவிட்டால் இந்த மாதிரி ஒரு சந்திப்பில் போக்குவரத்து விளக்குகள் இல்லாமலேயே அவரவர் பாதையில் வேகமாக போகமுடிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

வெளிநாட்டில் வண்டி ஓட்டிவிட்டு இங்கு யாராவது வண்டி ஓட்ட முயன்றால் நிச்சயமாக மாரடைப்பு வருவது நிச்சயம் அல்லது ஓராயிரம் S*** இல்லை வசவுகள் பலவும் சகஜமாக வந்து விழும்.

மேலே சொன்ன அத்தனையும் ஓரளவு குறைய வேண்டுமானல் கீழே உள்ள பால வேலை முடியவேண்டும்.

ஆறு மாதத்திற்கு பிறகு பார்க்கிறேன் ஓரளவு முன்னேற்றம் தெரிகிறது.விமானநிலையம் அருகிலும் பணி கொஞ்சம் துரிதமாக நடைபெருவது போல் தோன்றுகிறது.

பழைய தொழிற்நுட்பத்தை கடைபிடிப்பதால் ஆறு மாத காலத்துக்கு இவ்வளவு தான் காட்டமுடியும்.

படத்தை பார்த்தாவது ஆறுதல் அடையுங்கள்.மேலே உள்ள கார் என்னுடையது அல்ல.ரோட்டின் நடுவே இப்படி காரை நிறுத்தி நம்மூரில் படம் எடுக்க முடியுமா? முடியும் என்றே எனக்கு தோன்றுகிறது. :-)மேலே உள்ள படத்தில் பாருங்கள் யாரோ கட்சிக்கார அம்மணி நின்று வேலை நிலையை ஆராய்கிறார் போலும்.

இதெல்லாம் இருக்கட்டும்... எப்ப நாங்க இதன் மேல் வண்டி ஓட்டுவது????

இப்போது இதை கட்டிக்கொண்டிருக்கும் குத்தகைகாரர்க்கு அடுத்த வேலை கிடைத்தவுடன். :-))

Saturday, November 17, 2007

முட்டி வலியா? கொசுவா?

நேற்று இரவு சென்னையில் தொலைக்காட்சி நிகழ்சிகளை பார்த்துக்கொண்டு இருக்கும் போது கமல்,பாலசுப்பிரமணியம் மற்றும் ரமேஷ் அரவிந்த் சேர்ந்து நிகழ்த்தும் ஒரு நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் நடைப்பெற்றது.

கமலின் நகைச்சுவையும் பாலாவின் கலாய்ப்பும் & ரமேஷின் பங்களிப்பும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டுபோய் கொண்டிருக்கும் வேளையில் கமலில் கை கால் பக்கம் போய் "பிடில்" வாசிக்க தொடங்கியதை தொலைக்காட்சியில் காணும் போது என்னவோ செய்தது.ஸ்டுடியோவில் கொசு தொல்லை தாங்க முடியவில்லை போலும் அடுத்து நமது S.P.Balasubramaniam யும் தொடங்கினார்.ஏனோ ரமேஷையை மட்டும் கொசு தொடவே இல்லை அல்லது நமக்கு தெரியவில்லையா என்று தெரியவில்லை.

பல லட்சக்கணமான மக்கள் பார்க்கும் ஒரு தொலைக்காட்சி அரங்கில் இவ்வளவு கொசு தொல்லையா? அதை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்று தெரியவில்லை.வரப்போகும் நிகழ்சிகளிலாவது இம்மாதிரி சொறியலை காண்பிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

கீழே இருக்கும் சலனப்படத்தை பாருங்கள் அதில் ஒரு துளி உங்கள் பார்வைக்காக...நன்றி: ஜெயா தொலைக்காட்சி

அதிருதில்ல..!!

தலைப்பு பழையதாகி போனாலும் கீழே உள்ள படத்தை பார்க்கும் போது இப்படித்தான் தோனுகிறது.

இந்திய விஞ்ஞானிகளின் உழைப்பை பாராட்டுவோம்.

கூடியவிரைவில் திரு ஜெயபாரதன் விரிவாக இதைப்பற்றி பதிவு போடுவார் என்று எதிர்பார்க்கலாம்.நன்றி:தினமலர்.

கட்டுமானத்துறை நிலவரம்.

இன்று காலை தி ஹிண்டு பத்திரிக்கையில் வந்த கட்டுமானத்துறையில் நிலவும் விலைப் பட்டியல்கள் உங்கள் பார்வைக்கு.

உள்ளூர்/வெளி நாட்டு மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வழக்கம் போல் படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி பார்த்துக்கொள்ளவும்.நன்றி : தி ஹிண்டு.

இதெப்படி சாத்தியமாகிறது?

இன்று காலை தினமலர் பத்திரிக்கையை படித்துக்கொண்டு இருக்கும் போது கண்ணில்பட்டது...
உங்கள் பார்வைக்காக.

நன்றி: தினமலர்.

Wednesday, November 14, 2007

படத்தை பார்க்காதே

இந்த படம் நேற்று மதியம் வின் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருக்கும் போது எடுத்தது.

நம்ம தலைவர் MGR ம் கே.ஆர்.விஜயாவும் பாட்டுக்கு ஆடிக்கொண்டு இருந்தார்கள்.

இது மேட்டர் இல்லை...

படத்துக்கு கீழே ஓடும் பிளாஸ் நியூஸ் சொல்லும் செய்தியை படிக்கவும்.

இரண்டாவது ஒரு நாள்

சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்திய பாக்கிஸ்தானுக்கு இடையே நடந்த இரண்டாவது ஒரு நாள் பந்தயத்தின் முக்கியமான நிகழ்வுகளை செய்தியில் போடும் போது பிடித்தவை.

உங்கள் பார்வைக்காக...நன்றி: சன் தொலைக்காட்சி

Saturday, November 10, 2007

தோட்டப் பூச்சிகள்.

கையில் புகைப்பட கருவியை வைத்துக்கொண்டு தோட்டத்தில் அலைந்து கொண்டி இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

இவையெல்லாம் சென்னை பூச்சிகள்.

Friday, November 09, 2007

இந்திய மருத்துவர்களின் சாதனை

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சன் தொலைக்காட்சியிலும் மற்ற தொலைக்காட்சியிலும் இந்த செய்தி ஒளிபரப்பப்பட்டது.

ஆதாவது பீஹாரில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்த குழந்தைக்கு நான்கு கைகளும் நான்கு கால்களும் இருந்தன.

கருப்பையில் இருந்திருக்கும் காலத்தில் உடன் பிறந்திருக்கவேண்டிய இன்னொரு சிசு ஏதோ காரணத்தினால் வளராமல் பாதியுடன் நின்று போய் மற்ற குழந்தையுடன் ஒட்டிக்கொண்டு இருந்துவிட்டதால் வந்த வினை இது.

இதை கேள்வியுற்ற இந்திய மருத்துவர்கள் துணிகரமான முயற்சியை மேற்கொண்டு அக்குழந்தையை காப்பாற்றியுள்ளார்கள்.

அதை தொலைக்காட்சியில் காட்டி விவரித்ததை உங்கள் பார்வைக்காக கீழே..

நன்றி: சன் தொலைக்காட்சி.

நம் மருத்துவர்களின் இச்சாதனையை மனமார வாழ்த்துவோம்.

Tuesday, November 06, 2007

இந்தியா வெற்றி

நடந்து முடிந்த ஒருநாள் பந்தயத்தை காணமுடியாதவர்களுக்காக கீழே சலனப்படம் இணைத்துள்ளேன்.

பார்த்து மகிழுங்கள்.நன்றி: சன் டிவி.

Monday, November 05, 2007

சென்னை விஜயம்

சிங்கையில் இருந்து சென்னைக்கு மலிவுச்சேவை பயணம் ஆரம்பித்தவுடனே இந்த தீபாவளிக்கு இவ்வகை விமானத்தில் இப்பயணம் மேற்கொள்ளலாம் என்று நினைத்து சுமார் 2 மாதங்களுக்கு முன்பு டைகர் விமானச்சேவை மூலம் முன்பதிவு செய்துக்கொண்டேன்.இணையம் மூலம் செய்வது சுலபமாக இருந்ததால் போன 2ம் தேதி இரவுப்பயணத்துக்கு முன் பதிவு செய்துக்கொண்டேன்.

ஆரம்ப கட்டணம் என்னவோ குறைவாக இருந்தாலும் வரி/சேவை/பயண இருக்கை/காப்பீடு என்று பல வைகளில் டாலர் மேல் டாலர் போட்டு 586 வெள்ளியில் வந்து முடிந்தது.(போக வர)

இப்படி முன் பதிவு செய்த போதே கோவியாரிடம் சாட் செய்துகொண்டிருக்கும் போது சொன்னேன் அதற்கு அவர் பயணத்தின் போது ஒரு பாட்டில் தண்ணீர் கூட கொடுக்கமாட்டார்கள்,எல்லாவற்றிற்க்கும் பணம் வசூலிப்பார்கள் என்றார்.
நான் நம்பவில்லை அவர் பயணம் செய்யும் நேரம் குறைவாக இருந்திருக்கும் அதனால் மலிவு விலை விமானங்களில் அப்படி சேவை இருந்திருக்கலாம் என்று நினைத்திருந்தேன்.

கிளம்பும் நாள் வந்தது.இப்போது தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளரே தன்னுடைய வண்டியின் மூலம் என்னை பட்ஜெட் விமான முனையத்துக்கு சுமார் 40 நிமிடங்களில் கொண்டு வந்து விட்டார்.

புதிய முனையம்,இன்னும் அதிகமாக உபயோகப்படுத்தப்படவில்லை என்பது அனைத்திலும் தெரிந்தது.குளிர் வசதி கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே இருந்து நடுங்கவைத்தது.நுழைவாயிலிலேயே எடை பார்க்க ஒரு மிஷின் வைக்கப்பட்டிருந்தது. வந்திருந்த பலரும் தங்கள் பேக்கேஜின் எடைகளை பார்த்து பெரு மூச்சுடன் எப்படி சமாளிக்கப்போகிறோம்? என்ற நினைப்புடன் வரிசையில் நிற்க ஆரம்பித்தேன்.

இந்நிலையை முன்னமே எதிர்பார்த்து கொடுக்கப்பட்டிருந்த 15 கிலோ எடைக்கு மேல் இன்னும் ஒரு 5 கிலோவுக்கு பணம் கட்டி டிக்கெட் எடுத்த்திருந்தேன்.அதெல்லாம் எந்த மூலைக்கு எனபது போல் மேலும் 5 கிலோ அதிகமாக இருந்தது.வருவது வரட்டும் என்று வரிசை பிடித்து நின்றிருந்தேன்.எனக்கு பின்னால் நின்ற ஒருவர் என்னிடம் 20 கிலோ அதிகம் என்றார்.எப்படித்தான் இவ்வளவு ஏறுகிறதோ என்ற அங்கலாய்ப்புடன் எல்லோரும் நகர்ந்தோம்.

என் நிலை வந்தபோது விமான சிப்பந்தி எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் Tag போட்டு அனுப்பிவிட்டார்,எனக்கு பின்னால் வந்தவர்களுக்கும் இதே நிலை தான்.புதிதாக விமானச்சேவை துவங்கியிருப்பதால் அவ்வளவு கட்டுப்பாடு காட்டாமல் அனுப்பிவிட்டிருந்தார்கள்.இது போதாதா நம் மக்களுக்கு!!!
அவர்கள் கொண்டுவந்த Hand Luggage ஐ பார்த்து விமான கேப்டனே எச்சரிக்கை விடுத்து சிலருடைய பைகளை வலுக்கட்டாயமாக இறக்கி பைகள் இருக்கும் அறைக்கு மாற்றினார்.இதனால் சுமார் 30 நிமிடங்கள் கால தாமதமாக விமானம் கிளம்ப ஆரம்பித்தது.

சிங்கை- சென்னைக்கு 3.5 மணி நேரம் போதுமானது என்றாலும் இவர்கள் 4 மணி நேரம் ஆகும் என்று முதலில் சொல்லியிருந்தார்கள்.அதனால் MD Player மூலம் பாடல்களை கேட்டுக்கொண்டு பொழுது போக்கினேன்.முதலில் சாப்பாட்டுக்கான ஆர்டர்களை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.மரக்கறி உணவுக்கு 16 வெள்ளியாம்.விமானத்தில் கொடுக்கப்படடவதால் சுமார் 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக தோன்றியது.அதற்குப் பிறகு Duty Free சாமான்கள் விற்பனை தொடங்கியது.இப்படியே சுமார் 2.5 மணித்துளிகள் ஓடிவிட்டன.பிரகாசமான விளக்குகளால் சரியாக தூங்கமுடியாத நிலை.கடைசி ஒரு மணி நேரம் தான் விளக்குகள் அணைக்கப்பட்டன.

சென்னையை அடைய இன்னும் 15~ 20 நிமிடங்கள் இருக்கும் போதே இன்னும் சில நிமிடங்களில் தரை இறங்கப்போகிறோம் என்று சொன்னது ஏன் என்று தெரியவில்லை.ஜன்னல் பக்க இருக்கை என்பதால் சென்னையை நெருங்குகிறோம் என்று தெரியும் ஆரஞ்சு விளக்குகள் மூலம் தெரிந்தாலும் மிக மிக மெதுவாக விமானம் சென்னையை வலம் வர தொடங்கியது.அப்படியே அதில் ஒரு 20 நிமிடம் ஓடியது. தரையில் இட பற்றாக்குறையோ என்னவோ? இறங்க சிறிது நேரம் ஆனது.கடைசியாக தரை இறங்கி திரும்பி நிற்கும் போது பார்த்தால் இறங்குவதற்கு தயராக 2 விமானங்களின் வெளிச்சம் தெரிந்த்து.விமான போக்குவரத்து அதிகமானதின் காரனமாகவே எங்கள் விமானம் தரை இறங்க முடியாமல் போயிருப்பது தெளிவானது.

இந்த முறை குடியேற்றத்தில் நிறைய அலுவலர்கள் இருந்ததால் 10 நிமிடங்களுக்கு முன்பாகவே immigration வேலை முடிந்தது.போன தடவை வந்திருந்த போது போட்டுக்கொண்டிருந்த தரை வேலைகள் முடிந்து நன்றாக இருந்தது ஆனால் அந்த வழ வழப்பு தான் இன்னும் உருத்திக்கொண்டி இருக்கிறது.வழுக்கி விழ அதிகமாகவே வாய்ப்புகள் உள்ளது.

Baggage Collection- மிகப்பெரிய மாற்றங்கள் இங்கு தெரிவது கண்கூடு.பழைய டயர் மாடல் கன்வேயர்கள் போய் இரும்போ/அலுமினியமோ போன்ற பொருளில் 45 degree சாய்வில் நமது பெட்டிகள் அழகாக வருகின்றன.பெட்டிகள் பல முறை வலம் வருகின்றன.யாரும் கீழே எடுத்து வைப்பதில்லை எனபது ஒரு நல்ல செயலாகப் பட்டது.

என்னுடைய பெட்டிகளுக்காக சுமார் 20 நிமிடம் மட்டுமே காத்திருந்தேன்.

விமான நிலையம் உள்ளே மாத்திரம் அன்றி வெளியிலும் நல்ல மேம்பாடு கண்டுள்ளது.மக்கள் நின்று பார்க்க பெரிதாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நான் வருவது இம்முறையும் யாருக்கும் தெரியாது என்பதால் வெளியில் இருக்கும் டாக்ஸியை பிடித்து வீட்டுக்கு வரும் போது இரவு 12.30.