சிங்கையில் இருந்து சென்னைக்கு மலிவுச்சேவை பயணம் ஆரம்பித்தவுடனே இந்த தீபாவளிக்கு இவ்வகை விமானத்தில் இப்பயணம் மேற்கொள்ளலாம் என்று நினைத்து சுமார் 2 மாதங்களுக்கு முன்பு டைகர் விமானச்சேவை மூலம் முன்பதிவு செய்துக்கொண்டேன்.இணையம் மூலம் செய்வது சுலபமாக இருந்ததால் போன 2ம் தேதி இரவுப்பயணத்துக்கு முன் பதிவு செய்துக்கொண்டேன்.
ஆரம்ப கட்டணம் என்னவோ குறைவாக இருந்தாலும் வரி/சேவை/பயண இருக்கை/காப்பீடு என்று பல வைகளில் டாலர் மேல் டாலர் போட்டு 586 வெள்ளியில் வந்து முடிந்தது.(போக வர)
இப்படி முன் பதிவு செய்த போதே கோவியாரிடம் சாட் செய்துகொண்டிருக்கும் போது சொன்னேன் அதற்கு அவர் பயணத்தின் போது ஒரு பாட்டில் தண்ணீர் கூட கொடுக்கமாட்டார்கள்,எல்லாவற்றிற்க்கும் பணம் வசூலிப்பார்கள் என்றார்.
நான் நம்பவில்லை அவர் பயணம் செய்யும் நேரம் குறைவாக இருந்திருக்கும் அதனால் மலிவு விலை விமானங்களில் அப்படி சேவை இருந்திருக்கலாம் என்று நினைத்திருந்தேன்.
கிளம்பும் நாள் வந்தது.இப்போது தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளரே தன்னுடைய வண்டியின் மூலம் என்னை பட்ஜெட் விமான முனையத்துக்கு சுமார் 40 நிமிடங்களில் கொண்டு வந்து விட்டார்.
புதிய முனையம்,இன்னும் அதிகமாக உபயோகப்படுத்தப்படவில்லை என்பது அனைத்திலும் தெரிந்தது.குளிர் வசதி கொஞ்சம் தேவைக்கு அதிகமாகவே இருந்து நடுங்கவைத்தது.நுழைவாயிலிலேயே எடை பார்க்க ஒரு மிஷின் வைக்கப்பட்டிருந்தது. வந்திருந்த பலரும் தங்கள் பேக்கேஜின் எடைகளை பார்த்து பெரு மூச்சுடன் எப்படி சமாளிக்கப்போகிறோம்? என்ற நினைப்புடன் வரிசையில் நிற்க ஆரம்பித்தேன்.
இந்நிலையை முன்னமே எதிர்பார்த்து கொடுக்கப்பட்டிருந்த 15 கிலோ எடைக்கு மேல் இன்னும் ஒரு 5 கிலோவுக்கு பணம் கட்டி டிக்கெட் எடுத்த்திருந்தேன்.அதெல்லாம் எந்த மூலைக்கு எனபது போல் மேலும் 5 கிலோ அதிகமாக இருந்தது.வருவது வரட்டும் என்று வரிசை பிடித்து நின்றிருந்தேன்.எனக்கு பின்னால் நின்ற ஒருவர் என்னிடம் 20 கிலோ அதிகம் என்றார்.எப்படித்தான் இவ்வளவு ஏறுகிறதோ என்ற அங்கலாய்ப்புடன் எல்லோரும் நகர்ந்தோம்.
என் நிலை வந்தபோது விமான சிப்பந்தி எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் Tag போட்டு அனுப்பிவிட்டார்,எனக்கு பின்னால் வந்தவர்களுக்கும் இதே நிலை தான்.புதிதாக விமானச்சேவை துவங்கியிருப்பதால் அவ்வளவு கட்டுப்பாடு காட்டாமல் அனுப்பிவிட்டிருந்தார்கள்.இது போதாதா நம் மக்களுக்கு!!!
அவர்கள் கொண்டுவந்த Hand Luggage ஐ பார்த்து விமான கேப்டனே எச்சரிக்கை விடுத்து சிலருடைய பைகளை வலுக்கட்டாயமாக இறக்கி பைகள் இருக்கும் அறைக்கு மாற்றினார்.இதனால் சுமார் 30 நிமிடங்கள் கால தாமதமாக விமானம் கிளம்ப ஆரம்பித்தது.
சிங்கை- சென்னைக்கு 3.5 மணி நேரம் போதுமானது என்றாலும் இவர்கள் 4 மணி நேரம் ஆகும் என்று முதலில் சொல்லியிருந்தார்கள்.அதனால் MD Player மூலம் பாடல்களை கேட்டுக்கொண்டு பொழுது போக்கினேன்.முதலில் சாப்பாட்டுக்கான ஆர்டர்களை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.மரக்கறி உணவுக்கு 16 வெள்ளியாம்.விமானத்தில் கொடுக்கப்படடவதால் சுமார் 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக தோன்றியது.அதற்குப் பிறகு Duty Free சாமான்கள் விற்பனை தொடங்கியது.இப்படியே சுமார் 2.5 மணித்துளிகள் ஓடிவிட்டன.பிரகாசமான விளக்குகளால் சரியாக தூங்கமுடியாத நிலை.கடைசி ஒரு மணி நேரம் தான் விளக்குகள் அணைக்கப்பட்டன.
சென்னையை அடைய இன்னும் 15~ 20 நிமிடங்கள் இருக்கும் போதே இன்னும் சில நிமிடங்களில் தரை இறங்கப்போகிறோம் என்று சொன்னது ஏன் என்று தெரியவில்லை.ஜன்னல் பக்க இருக்கை என்பதால் சென்னையை நெருங்குகிறோம் என்று தெரியும் ஆரஞ்சு விளக்குகள் மூலம் தெரிந்தாலும் மிக மிக மெதுவாக விமானம் சென்னையை வலம் வர தொடங்கியது.அப்படியே அதில் ஒரு 20 நிமிடம் ஓடியது. தரையில் இட பற்றாக்குறையோ என்னவோ? இறங்க சிறிது நேரம் ஆனது.கடைசியாக தரை இறங்கி திரும்பி நிற்கும் போது பார்த்தால் இறங்குவதற்கு தயராக 2 விமானங்களின் வெளிச்சம் தெரிந்த்து.விமான போக்குவரத்து அதிகமானதின் காரனமாகவே எங்கள் விமானம் தரை இறங்க முடியாமல் போயிருப்பது தெளிவானது.
இந்த முறை குடியேற்றத்தில் நிறைய அலுவலர்கள் இருந்ததால் 10 நிமிடங்களுக்கு முன்பாகவே immigration வேலை முடிந்தது.போன தடவை வந்திருந்த போது போட்டுக்கொண்டிருந்த தரை வேலைகள் முடிந்து நன்றாக இருந்தது ஆனால் அந்த வழ வழப்பு தான் இன்னும் உருத்திக்கொண்டி இருக்கிறது.வழுக்கி விழ அதிகமாகவே வாய்ப்புகள் உள்ளது.
Baggage Collection- மிகப்பெரிய மாற்றங்கள் இங்கு தெரிவது கண்கூடு.பழைய டயர் மாடல் கன்வேயர்கள் போய் இரும்போ/அலுமினியமோ போன்ற பொருளில் 45 degree சாய்வில் நமது பெட்டிகள் அழகாக வருகின்றன.பெட்டிகள் பல முறை வலம் வருகின்றன.யாரும் கீழே எடுத்து வைப்பதில்லை எனபது ஒரு நல்ல செயலாகப் பட்டது.
என்னுடைய பெட்டிகளுக்காக சுமார் 20 நிமிடம் மட்டுமே காத்திருந்தேன்.
விமான நிலையம் உள்ளே மாத்திரம் அன்றி வெளியிலும் நல்ல மேம்பாடு கண்டுள்ளது.மக்கள் நின்று பார்க்க பெரிதாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நான் வருவது இம்முறையும் யாருக்கும் தெரியாது என்பதால் வெளியில் இருக்கும் டாக்ஸியை பிடித்து வீட்டுக்கு வரும் போது இரவு 12.30.
6 comments:
Air India Express must be cheape then. cost around 540 to 570
வாங்க அனானி
இருக்கலாம்,இது விழாக்காலம் என்பதால் அங்கும் அதிகமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஆமாம் குமார் அண்ணனே! வர வர சென்னையில் விமான போக்குவரத்து ரொம்பவே அதிகம் மாச்சு... அதிலும் இரவு நேரங்களில் ஏகப்பட்ட விமானங்கள் இருப்பதால் வானிலே 30 மணி துளிகள் ஆவது சுற்றும் படி தான் பெரும்பாலும் உள்ளது.
என் பேக்கெஜ் காக நான் 45 நிமிடம் காத்து இருந்தேன் சென்னையில் :(
வாங்க சிவா..
இந்த பேக்கேஜ் சில சமயங்களில் காலை வாரிவிடுகிறது.
இரண்டு கன்வேயரில் எதில் வரும் என்ற நிலை போய் இங்கு தான் வரும் என்ற அளவுக்கு முன்னேறியுள்ளோமே!!
சந்தோஷப்படுவோம்.
How was the airport tax in Chennai and Singapore???
D the Dreamer
since, its included in the ticket,i didn't looked at it.
Post a Comment