Monday, November 19, 2007

கத்திப்பாரா பாலம்.

நேற்று இரவு ஊருக்கு கிளம்பும் முன்பு மனைவிவீட்டாரிடம் சொல்லிவிட்டு பெற்றோர் இருக்கும் இடம் பார்த்து வண்டி ஓட்டிக்கொண்டு இருந்தேன்.

போரூரில் இருந்து வந்தாலும் அல்லது வடபழனியில் இருந்து வந்தாலும் சரி இந்த கத்திப்பாரா சந்திப்பு வந்தால் ஒரு அழற்சி வந்துவிடுகிறது.எந்த வண்டி எங்கு திரும்புமோ நாம் யார் மீது வண்டியை மோதப்போகிறமோ என்ற பயத்துடன் சந்திக்கவேண்டிய சந்திப்பு இது.இப்படிப்பட்ட சந்திப்பில் இவ்வளவு நாள் விபத்து இல்லாமல் இருக்கிறது ஒரு அறிவிப்பு பலகை போட்டு நெடுஞ்சாலைத்துறை காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.

சென்னையில் வண்டியுடன் வண்டி முத்தமிட்டுக்கொண்டால் ஒருவர் மற்றொருவருக்கு கை அசைத்துவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் போய்கொண்டிருக்கிறார்கள்.அந்த அளவுக்கு மக்களிடையே ஒத்திசைவு.இல்லாவிட்டால் இந்த மாதிரி ஒரு சந்திப்பில் போக்குவரத்து விளக்குகள் இல்லாமலேயே அவரவர் பாதையில் வேகமாக போகமுடிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

வெளிநாட்டில் வண்டி ஓட்டிவிட்டு இங்கு யாராவது வண்டி ஓட்ட முயன்றால் நிச்சயமாக மாரடைப்பு வருவது நிச்சயம் அல்லது ஓராயிரம் S*** இல்லை வசவுகள் பலவும் சகஜமாக வந்து விழும்.

மேலே சொன்ன அத்தனையும் ஓரளவு குறைய வேண்டுமானல் கீழே உள்ள பால வேலை முடியவேண்டும்.

ஆறு மாதத்திற்கு பிறகு பார்க்கிறேன் ஓரளவு முன்னேற்றம் தெரிகிறது.விமானநிலையம் அருகிலும் பணி கொஞ்சம் துரிதமாக நடைபெருவது போல் தோன்றுகிறது.

பழைய தொழிற்நுட்பத்தை கடைபிடிப்பதால் ஆறு மாத காலத்துக்கு இவ்வளவு தான் காட்டமுடியும்.

படத்தை பார்த்தாவது ஆறுதல் அடையுங்கள்.



மேலே உள்ள கார் என்னுடையது அல்ல.ரோட்டின் நடுவே இப்படி காரை நிறுத்தி நம்மூரில் படம் எடுக்க முடியுமா? முடியும் என்றே எனக்கு தோன்றுகிறது. :-)







மேலே உள்ள படத்தில் பாருங்கள் யாரோ கட்சிக்கார அம்மணி நின்று வேலை நிலையை ஆராய்கிறார் போலும்.

இதெல்லாம் இருக்கட்டும்... எப்ப நாங்க இதன் மேல் வண்டி ஓட்டுவது????

இப்போது இதை கட்டிக்கொண்டிருக்கும் குத்தகைகாரர்க்கு அடுத்த வேலை கிடைத்தவுடன். :-))

4 comments:

வெங்கட்ராமன் said...

இப்போது இதை கட்டிக்கொண்டிருக்கும் குத்தகைகாரர்க்கு அடுத்த வேலை கிடைத்தவுடன். :-))

அப்படி இல்ல

சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சொந்தமாக கட்டிக்கொண்டிருக்கும் கட்டிடங்கள் முடிந்தவுடன்.

நாகை சிவா said...

:)

இது நீங்க கடைசியா சொன்னதுக்கு...

எனக்கு ஒரே ஒரு டவுட் தான்.. ஒரு திட்டம் போடும் போதே முடிவடையும் காலம் என்று ஒன்னும் அந்த திட்டத்தில் வருமே... கொஞ்ச முன்ன பின்ன வந்தா சரி அதை விட்ட திட்ட காலமே இரண்டு, மூன்று மடங்காக ஆவுதே... ஹும்... என்னிக்கு தான் மாற போறோமோ ...

வடுவூர் குமார் said...

வாங்க வெங்கட்ராமன்...அப்படி கூட இருக்கலாம். :-)

வடுவூர் குமார் said...

வாங்க சிவா,வடபழனி சாலை கத்திப்பாரா சேரும் இடத்தில் உள்ள சாலையை படம் எடுத்தால் போட்டியில் பரிசு நிச்சயம். :-(