உலகத்தில் நகைச்சுவை நடிகை/நடிகர்களுக்கு எப்பவுமே மவுசு தான்.
தமிழ்நாட்டில் இப்போது கொடி கட்டி பறக்கும் திரு வடிவேலு/திரு விவேக் மாதிரி இங்கும் சிலர் இருக்கின்றனர்.தமிழில் அவ்வப்போது வந்து கிசு கிசு மூட்டும் வடிவேலன் மற்றும் சிலர் இருந்தாலும் ஆங்கில தொலைக்காட்சியில் இவரை அடிச்சிக்க ஆள் இல்லை என்று தான் நினைக்கிறேன்.
இவர் தொலைக்காட்சியில் வர ஆரம்பிக்கும் போது ஒரு நிகழ்ச்சியை நடத்தச்சொன்னார்களாம் அதை நடத்தும் போதே தான் நடத்துவது பிடிக்காமல் தயாரிப்பாளிடரிடம் போய் இதை வேறு யாராவது நடத்தினால் நன்றாக இருக்கும் என்று சொல்லி தப்பிக்க பார்த்திருக்கிறார்.தயாரிப்பாளார் விடாமல் தொடர்ந்து நடத்தச்சொல்லி ஒரு நல்ல நகைச்சுவை நடிகரை அடையாளம் காட்டியுள்ளார்.
இவருடைய இயர் பெயர் குர்மீட் சிங்,சிங்கையில் இவ்ரை போ சு காங் என்றால் எல்லா மத்ததினருக்கும் தெரியும்.போ சு காங் என்ற தொடரில் இவர் ஒரு கட்டுமான நிறுவனத்தின் முதலாளியாக வருகிறார் அதுவும் ஸ்பெசல் உடை/காலணி என்று.சலனப்படத்தை பார்க்கவும்.உள்ளூர் மொழி பேச்சு வழக்கில் பேசுவதால் எல்லோருக்கும் பிடித்துப்போய்விட்டது.
எந்த அளவுக்கு.. என்றால் பிரதம மந்திரியே தேசிய நாள் பேச்சின் போது சொல்லும் வரைக்கும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு எடுத்த சலனப்படம்.
நன்றி: மீடியா கார்ப் தொலைக்காட்சி.
4 comments:
அண்ணாத்த!
We're sorry, this video is no longer avaiable னு வருது :(
சிவா
எனக்கு வருதே!!
வீடியோவை ஏற்றியவுடன் பார்த்தால் எனக்கும் அப்படி தான் வந்தது,கொஞ்ச நேரம் கழித்து பார்க்கும் போது வருகிறது.
யூ டியூபின் சர்வர் பிரச்சனை என்று நினைக்கிறேன்.
கூகிளில் இதைவிட மோசம்.
இப்பொழுது வருகிறது.
ரசித்தேன் :)
Thanks,siva
Post a Comment