Wednesday, July 07, 2010

பெரிய மசூதி

மஸ்கட் சுற்றிப்பார்க்க வந்தால் தவறாமல் பலர் செல்லும் இடம் இந்த மசூதி.அவ்வப்போது விமான நிலையத்தை நோக்கி போகும் போது அல்லது அங்கிருந்து வரும் போதோ கண்ணை கவரக்கூடிய கட்டிடம் இது.கிட்டத்தட்ட 7 மாதம் ஆகிவிட்டாலும் உள்ளே போய் பார்க்கனும் என்று தோன்றவில்லை.சமீபத்தில் குடும்பம் கோடை விடுமுறைக்கு வந்திருந்தார்கள்,மஸ்கட் சுற்றி பார்க்கும் இடங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டதால் அதைப்பார்க்க கிளம்பினோம்.அதற்கு முன்பு இணையத்தில் அங்கு போவதற்கு விபரங்கள் தேடிய போது இஸ்லாம் மதத்தில் இல்லாதவர்களுக்கு சுற்றிப்பார்க்க சனி முதல் புதன் வரை தான் போட்டிருந்தது,அங்கு போன போது வியாழன் அன்றும் பார்க்கலாம் என்று போட்டிருந்தது.மிக முக்கியமாக பெண்கள் கை,கால் முதலியவற்றை மூடிக்கொள்ளவேண்டும் அப்படி இல்லாதவர்களுக்கு பக்கத்தில் உள்ள கடையில் பிரத்யோக உடை 4 ரியாலுக்கு கொடுக்கிறார்கள்.
கட்டிடம் வெளிப்புறம் முழுவதும் மரங்களை வைத்து ஒரு தோட்டம் மாதிரி செய்துள்ளார்கள்.
மீதி விபரங்கள் படமே சொல்லும்.20 comments:

 1. ஹைய்ய்ய்ய்ய்ய் இந்த மசூதிக்கு நான் போன வருசம் டிசம்பர்ல லீவுக்கு அங்கே வந்தப்ப போயிருக்கேனே! :)

  மசூதியின் உள்புறம் அழகான கலை நுணுக்கங்களுடன் கூட வேலைப்பாடு வியக்கவைத்தது! & எவ்ளோஓஓஓஓஓஓஓ பெரிய மசூதி

  ReplyDelete
 2. வாங்க ஆயில்யன்,நலமா?
  போன டிசம்பரா? சொலியிருந்தா ஒரு பதிவர் மீட்டிங் போட்டிருக்கலாமே!!

  ReplyDelete
 3. அழகா இருக்கு .

  ReplyDelete
 4. நன்றி ஜெய்லானி.

  ReplyDelete
 5. அழ‌கா இருக்கு... வாய்ப்பு கிடைக்கிற‌தா பார்ப்போம்...

  ReplyDelete
 6. வாங்க வாங்க, நல்ல ஊர் தான் ஆனா பொழுது போகத்தான் கஷ்டம்.

  ReplyDelete
 7. அடுத்த தடவை தோஹாவுக்கு செல்லும்பொழுது மஸ்கட் வழியே வந்தால்
  இங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 8. வாங்க வாங்க சூரி அய்யா.
  செப்டம்பர் 14 வரை தான் இங்கு இருப்பேன் என்று நினைக்கிறேன்,அதற்குள் வந்தால் சொல்லுங்கள்.

  ReplyDelete
 9. சாண்டிலியர்களும் கலை அழகும் கண்ணைப் பறிக்கின்றன! புகைப்படங்களெல்லாமே அழகு! 2004-ல் மஸ்கட்டை சுற்றிப் பார்க்க என் மகனுடன் வந்தேன். சாப்பிட இடம் தேடி, சரியாகச் சொல்வார் யாருமில்லாமல் அலைந்து ஒரு வழியாக ‘ சரவண பவனைக் ’ கண்டு பிடித்தது நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
 10. வாங்க‌ ம‌னோ சாமிநாத‌ன்,ரூவி போயிருந்தாலே போதுமே ப‌ல‌த‌ர‌ப்ப‌ட்ட‌ உண‌வ‌க‌ங்க‌ள் இருக்கு.முத‌ல் முறை என்ப‌தால் ச‌ரியான‌ விப‌ர‌ம் கிடைக்காம‌ல் இருந்திருக்கும்.டூரிஸ‌ம் என்ப‌தே ப‌ண‌ம் கொழிக்கும் இட‌ம் என்ப‌து இப்போது தான் தெரிந்துகொள்ள‌ ஆர‌ம்பித்துள்ளார்க‌ள் இருந்தாலும் க‌ட‌ற்க‌ரை ம‌ற்றும் குன்றைவிட்டால் இங்கு எதுவும் இல்லை.

  ReplyDelete
 11. அருமையான் பதிவு..மஸ்கட் என்னை மிகவும் கவர்ந்த இடம்.ஒரு சின்ன இந்தியாவில் இருப்பதைப்போல் உனர்ந்தேன்.ரூவியில் தான் ஒரு ஓடலில் தங்கினோம்..கனவரின் ஆபிஷியல் ட்ரிப் அதனால் சுட்றிப்பார்க்க இயலவில்லை.அங்கே சரவனா பவன் தான் காபற்றியது.மஸ்கெட்டின் மழை என்னை மிகவும் கவர்ந்தது..நன்றி..

  ReplyDelete
 12. ஓ! அப்ப‌டியா? இங்கு ம‌ழை அபூர்வ‌ம் தான்.
  முத‌ல் வ‌ருகைக்கு ந‌ன்றி.காய்த்ரி

  ReplyDelete
 13. மசூதியும் படங்களும் நல்லா இருக்கு. . .

  ReplyDelete
 14. ந‌ன்றி வெங்க‌ட்ராம‌ன்.ரொம்ப‌ நாளாக‌ பார்க்க‌முடிய‌வில்லையே!!

  ReplyDelete
 15. அழகான கட்டுமானத்திற்கு அசத்தலான உதாரணம்.
  சலாலாவிற்கு வாங்க..சீசன் இப்போது..

  ReplyDelete
 16. நேரம் சரியாக அமைந்தால் வருகிறேன்...மின்னல்.அழைப்புக்கு நன்றி.

  ReplyDelete
 17. நல்ல படங்கள்,உங்க பதிவுகளை தமிழிஷில் இணையுங்கள்,நிறைய பேருக்கு சென்று சேரும்.விரைவில் ஒரு ஓட்டுபட்டையை வையுங்க

  ReplyDelete
 18. நன்றி கீதப்பிரியன்.

  ReplyDelete
 19. படங்கள் நன்றாக இருக்கின்றன.

  ReplyDelete
 20. நன்றி முகமது ஃபாய்க்கு

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?