Wednesday, April 23, 2008

தோள் காணேன்... (கத்திப்பாரா பாலம்)

15ம் தேதி ஏப்ரல் டைகர் விமானச்சேவை மூலம் சிங்கையில் இருந்து புறப்பட்டேன் சென்னைக்கு.கிளம்பும் நேரத்துக்கு சற்று முன்பே எடுத்துவிட்டார்கள்.விமானம் முழுவதுமாக நிரம்பவில்லை.இது விழாக்காலம் அல்லது பள்ளி விடுமுறை காலம் இல்லை என்பதால் கூட்டம் நிரம்பி வழியவில்லை போலும்.

ஒவ்வொருவருக்கும் 15 கிலோ எடை என்பதால் வெகு சிலரே அதனை தாண்டி அங்கிருந்தவர்களுடன் பேரம் நடத்திக்கொண்டு இருந்தார்கள்.என்னுடைய போட்டிகளை டேக் போட்டவுடன் பக்கத்தில் உள்ள கன்வேயர் மூலம் நாமே அனுப்பிவைக்கவேண்டும் அதற்கு ஏதுவாக காலால் அழுத்தி அந்த கன்வேயரை இயக்கும்படி வைத்திருந்தார்கள்.


விமானம் சரியான நேரத்துக்கு கிளம்பியிருந்ததால சென்னைக்கு உரிய நேரத்துக்கு 15 நிமிடம் முன்பே தரையிரங்கியது.

இந்திய ரூபாய் இல்லாததால் விமான நிலையத்தில் இருக்கும் பண மாற்று நிலையத்தில் மாற்றி வைத்துக்கொண்டேன்.இங்கு மாற்றுவிகிதம் மிக மிக குறைவு அதனால் தேவைக்கு அதிகமாக இங்கு மாற்றாமல் இருப்பதே நலம்.

As usual... நான் வருவது யாருக்கும் முன்னறிவிப்பு செய்யாததால் அங்கிருக்கும் கட்டண ஊர்திக்கு முன்பதிவு செய்துகொண்டேன்.

குளிரூட்டப்பட்ட வண்டியில் உட்கார்ந்து சென்னையின் அழகை ரசித்துக்கொண்டு வரும் போது திடிரென்று வண்டி ஒரு மேம்பாலத்தின் மீது போனது. ஒவ்வொரு லேன் மார்க்கிங்க்கும் சிகப்பு ஒளி உமிழ்வான் பதித்து அட்டகாசமாக இருந்தது.சாலையின் பக்க தடுப்புச்சுவரில் சுழலும் சிகப்பு ஒளிஉமிழ்வான்களை பயன்படுத்தியிருந்தார்கள்.கையில் உடனடியாக கேமிரா இல்லாத்தால் படம் எடுக்கமுடியவில்லை.பிறகு தான் புரிந்தது அது சமீபத்தில் திறந்த "கத்திப்பாரா" மேம்பாலம் என்று.

இப்படி பார்த்துக்கொண்டு வரும் போதே ஏதோ ஒன்று சரியில்லாததை உள்ளுணர்வு உணர்த்தியை என்னவென்று ஆராய்ந்துகொண்டிருக்கும் போதே சடாரென்று புரிந்தது.

அது என்ன?

கீழே உள்ள படத்தை பாருங்கள்.இது சிங்கப்பூரின் விரைவுச்சாலையில் ஒரு பகுதி.இதில் முக்கியமான ஒரு பகுதி... சாலையில் இரு பக்கங்களிலும் இருக்கும் "தோள்" என்ற Shoulder பகுதியாகும்.இதை அவசரகாலத்திலும் மற்றும் வாகனங்களை பழுதுபார்பதற்காகவும் தேவைப்படும் பகுதி அது.சாதாரண போக்குவரத்து நேரங்களில் இதை உபயோகப்படுத்துவது குற்றமாகும்.

சரி,இப்போது நம் கத்திப்பாரா மேம்பாலத்துக்கு வருவோம்.என்னதான் இரவில் பயணிக்கும் போது பார்த்தாலும் நான் பார்த்தது சரியா இல்லையா என்பதை காலை வேளையில் பார்த்து முடிவு செய்து இதை பதிவிடலாம் என்று நினைத்து முந்தா நாள் அந்த பக்கமாக போனேன்.

அப்போது எடுத்த சில படங்கள் கீழே....


பாருங்கள் அந்த "தோள்" பகுதியே இல்லாமல் ஒரு மேம்பாலம்!!

ஏதோ ஒரு சமயத்தில் விபத்தோ அல்லது வாகன நெரிசலோ ஏற்பட்டால அவசரகால உதவிக்கு தேவையான ஆட்பலமோ அல்லது வாகனங்களோ செல்ல எந்த வழியும் என் கண்ணுக்கு தெரியவில்லை.இல்லை இதை பராமரிப்பவர்கள் வேறு ஏதாவது வழிவைத்துள்ளார்களா என்பதும் தெரியவில்லை.

பொது மக்கள் அப்படியே பாலத்தின் மீதிருந்து கீழே குதிக்க ஏதுவாக ஏதாவது செய்வார்களோ என்னவோ??!!!அடுத்த குத்தகைக்கு தயாராக இருக்கவும்.

இது வடபழநியில் இருந்து விமானநிலையத்துக்கு நுழையும் இடம்.தோள் எங்கே????

கீழே உள்ள படங்கள் கிண்டி பக்கம் வரவிருக்கும் மேம்பால இணைப்புகள்..


கைப்பிடி பகுதியில் காணப்படும் பாதுகாப்பு குறைபாடுகளை பாருங்கள். கீழே ஏதோ பற்றவைப்பு வேலைகள் நடைபெருகின்றன போலும்...

கீழே உள்ள படம்,விமான நிலயைத்தை நோக்கி உள்ள சாலை மற்ற சாலையுடன் இணையும் இடம். அம்புக்குறி மற்றும் அறிவிப்பு விளக்குகள் இல்லாவிட்டால் விபத்து நடக்க மிகச்சிறந்த இடமாக ஆகக்கூடிய வாய்ப்புள்ளது.இதைப்போல் வழித்தடங்களுக்கு மத்தியில் தேவையான தடுப்பு வேலிகள் இருக்க வேண்டும்,அதுவும் இங்கு இல்லை.தறிகெட்டு ஓடும் வாகனங்கள் எதிர் திசையில் செல்லாமல் தடுக்கவும் இது உதவும்.

இன்றைய செய்தியில் மேலும் சில பால வேலைகள் முடியும் நாட்களை கொடுத்துள்ளார்கள்,அப்படியே இந்த மாதிரி விஷயங்களையும் பார்த்து கவனத்தில் கொண்டால் நல்லது.

லக்கிலுக், முடிந்தால் ஏதாவது பண்ணுங்கள் அல்லது என்னுடைய புரிதலில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

23 comments:

 1. //பொது மக்கள் அப்படியே பாலத்தின் மீதிருந்து கீழே குதிக்க ஏதுவாக ஏதாவது செய்வார்களோ என்னவோ??!!!அடுத்த குத்தகைக்கு தயாராக இருக்கவும்.//
  :)

  கட்சி ஊர்வலங்கள் , சாதி ஊர்வலங்கள் அந்த பாலம் வழியாக போனால் ஜெகஜோதியாக இருக்குமே !
  :)

  //லக்கிலுக், முடிந்தால் ஏதாவது பண்ணுங்கள் அல்லது என்னுடைய புரிதலில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.//

  லக்கிலுக் பாலம் ஒப்பந்தம் எடுத்து இருக்காரா ? அவரும் சொல்லவே இல்லையே !
  :)

  ReplyDelete
 2. ஆஹா!!
  கோவியாரே.. மாட்டிவிட்டுடீங்களே!! :-))
  அவரும் இந்த பாலத்தைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார்.ஏதாவது செய்தால் நல்லது.

  ReplyDelete
 3. நீங்க சொல்லுற தோள் பகுதி வெளிநாட்டில் சாதாரணமா பயன்படுத்த மாட்டாங்க!!
  ஏதாவது அவசரமா இருந்தாதான் பயன்படுத்துவாங்க.
  ஆனா இங்கே கிடைத்த கேப்பில் எல்லாம் வண்டியை நுழைத்துவிடுவார்களே அதனால இந்த தோள் கான்செப்ட் நடைமுறையில் செயல்படுமா என்று தெரியவில்லை!!
  மிக நல்ல பதிவு!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. Even in the United States, It is extremely unusual to see shoulders on bridges. For example, the most famous bridges in California, the bay bridge and the golden gate bridge don't have shoulder. However for some longer bridges, there might be an emergency pullover zone every 1/4 mile or so. So, IMHO, blaming about the unavailability of shoulder on Kathipara bridge looks too much.

  ReplyDelete
 5. வாங்க CVR
  அது ஒரு காரணமாக இருக்குமா?? :-))

  ReplyDelete
 6. வாங்க prk
  நல்ல விபரங்கள் கொடுத்துள்ளீர்கள்.
  இப்போது நான் சொல்லும் விஷயம் கொஞ்சம் டூ ம்ச்சாக தெரிந்தாலும் வரப்போகும் அவஸ்தையை நோக்கினால் மாட்டிப்போமோ என்று என் இதயம் பயப்படுகிறது.
  பார்ப்போம்... என்ன நடக்கிறது.
  அதென்ன சில பாலத்துக்கு இருக்கு சிலவற்றுக்கு இல்லை??
  என்ன விதிமுறைகளை கடைபிடிக்கிறார்கள்?

  ReplyDelete
 7. //லக்கிலுக், முடிந்தால் ஏதாவது பண்ணுங்கள் அல்லது என்னுடைய புரிதலில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.//

  வடுவூர் அண்ணே!

  இந்தப் பதிவை அண்ணன் டி.ஆர். பாலு பார்ப்பாரா என்று தெரியாது. எனவே, பனகல் காவல்நிலையம் அருகில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய அமைச்சருமான அண்ணன் டி.ஆர்.பாலுவின் அலுவலகம் இருக்கிறது. ஒரு நடை நேரில் போய் பார்த்து இந்த விவரங்களை விளக்கி விடுங்களேன். அமைச்சர் இல்லாவிட்டாலும் கூட அவரது உதவியாளர் கண்டிப்பாக உங்கள் குரலுக்கு செவிமடுப்பார். யாரும் எளிதிலும் அணுகக்கூடிய அமைச்சர் தான் நமக்கு கிடைத்திருக்கிறார்!!!

  அப்புறம், இந்தியாவின் மற்ற சாலைகளுக்கு இந்த “தோள்” உண்டா? கத்திப்பாரா பாலத்தில் மட்டும் தான் இந்த குறைபாடு இருக்கிறதா? என்றும் ஒரு பதிவு போட்டு சொல்லவும்!!!

  ReplyDelete
 8. S m i t h a11:39 AM

  People don't even understand and adhere to the concept of lanes.. forget about shoulders.
  My two cents, government needs to stop blaming and do something.. make the process of getting a driving license more stringent.. 50% denial of applications over the next 5 years will see increase in public transport and decrease in bikes/cars. Then the road engineers will have to step in and implement some foreign road like rules... lanes, shoulders, sidewalk, left-only right-only lanes at signals, traffic tickets etc..
  I doubt people will turn revolutionaries over strict traffic rules.

  ReplyDelete
 9. லக்கி லுக்
  ஓகே! பார்த்திடுவோம்.
  நன்றி.

  ReplyDelete
 10. மறுபடி உங்க பெட்டி வேலை செய்யலை:-) அடுத்தமுறை அதை சென்னைக்கு அனுப்பிருங்க:-))))

  =====================================

  பாலம் திறந்தாச்சா
  ?

  மெய்யாலுமா சொல்றீங்க
  ? :-))))

  திட்டம் போடும்போதே ஷோல்டர் பகுதிக்கு இடம் விட்டுருக்கணும்
  . இப்ப என்ன செய்வாங்க? எப்படியும் ரெண்டு லேன் ட்ராபிக்குன்னா ஒரே சமயம் ரெண்டுவண்டிங்க வர்றதா இருந்து ஒண்ணு ஸ்லோ ஒண்ணு ஃபாஸ்ட் லேன்னு தனித்தனியா லேன்லே வரணுமுல்லே. நம்மூர்லேதான் ஒரு ஏழெட்டுவண்டிங்க ரெண்டு லேன்லேயும் பரவலா ஒரே வரிசையில் நிக்குமே. அதுக்கு என்ன பண்ணுவீங்க?


  என்னங்க துளசி? உங்களுக்கு முன்பு பலர் போட்டிருக்காங்களே??
  என்ன பிரச்சனையோ!!

  ReplyDelete
 11. வாங்க ஸ்மித்தா
  நீங்கள் சொல்லிய முறை ஓரளவு நேர்ப்படுத்தும் என்றாலும் எவ்வளவு தூரம் எடுபடும் என்று தெரியவில்லை.எங்கிருந்தாவது ஆரம்பிக்கனும் தான்...அது எங்கிருந்து தான் என்று தெரியவில்லை.
  2050 யில் மேம்பட வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கு.

  ReplyDelete
 12. Anonymous5:19 AM

  அண்ணா வணக்கம். எல்லாம் சரி.
  புகைப்படம் எடுக்கும்போது எனத் "தோளில்" நின்னு படம் எடுத்தீரோ?
  முதலில் ஊருக்கு ஆலோசனை சொல்லுவதற்கு முன் "தனி மனித ஒழுக்கம்" வேண்டும். அப்போதான் நாடு திருந்தும். குற்றம் கண்டுபிடித்தே...

  ReplyDelete
 13. இங்கே மலேசியாவில், நெடுஞ்சாலைகளில், அந்த தோள் இடத்தில் தான் இரு சக்கர இ.வாகணங்கள் போகும். பெரிய சாலைகளில் போகக்கூடாது. போனா, சிக்கி சின்னப்பின்னமாகிடுவாங்க..

  பிரி லெப்ட் விடுவதற்கு, சற்று முன்னதாகவே சாலை பிரிவது, திருப்பங்களுக்கு பாதை பிரிவது என்று மலேசியா, சிங்கையில் சாலைகள் அம்சமாகவே இருக்கிறது. உலகத்திற்கே கோவில் கட்டித் தரும் நாம், ஒரு சாலையில் அடிப்படை தேவைகளை புரியாமல், ஒப்பந்தக்காரரிடம் கொடுத்தால் இது தான் நடக்கும்.

  (This comment form is very difficult for typing..do something abt this...)

  ReplyDelete
 14. வாங்க tbcd
  இந்த பின்னூட்டப்பெட்டி கஷ்டமாக இருக்கா?அடக்கடவுளே பழையதுக்கு மாறலாம் என்று பார்த்தால் அதை எங்கு சேமித்து வைத்திருக்கேனோ? தெரியவில்லை.முயலுகிறேன்.
  முதல் வருகைக்கு நன்றி.
  என்னை பொருத்த வரை "தோள்" பகுதி மிக அவசியம்.என்னுடைய ஆதங்கம் எல்லாம் லேன் மார்க்கிங்கில் சிகப்பு ஒளிப்பான் வைத்து நிறம் ஊட்ட முயன்ற அளவுக்கு பாதுக்காப்புக்கு முதலிடம் கொடுக்கவில்லையோ என்று தோனுகிறது. :-(
  இடப்பற்றாக்குறை உள்ள சிங்கையிலே இதை கொடுத்துள்ளார்கள் என்றால் பல நாடுகளில் நடந்திருக்கும் விபத்து மற்றும் மீட்புப்பணிகளில் ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டே அமைத்திருப்பார்கள்.
  விஷயம் தெரிந்தவர்கள் யாராவது சொன்னால் தெளிவடையலாம் இல்லாவிட்டால் விபத்து நடந்து அதில் பலரை பலி கொடுத்த பிறகு பாடம் கற்றுக்கொள்ளலாம்.

  ReplyDelete
 15. வாங்க அனானி

  புகைப்படம் எடுக்கும்போது எனத் "தோளில்" நின்னு படம் எடுத்தீரோ?

  முடியாதா? முயன்று பாருங்கள்.உங்களுக்கு என்னை திட்டனும் என்று ஆசை போலும் நடத்துங்க அல்லது ஒரு கேமிராவை எடுத்து ஓடும் வண்டியில் இருந்து எடுத்துட்டு அப்புறம் சொல்லுங்க...

  ReplyDelete
 16. குமார்,
  இந்தியாவில் தோள்னு ஒரு concept இருக்கா என்ன? இந்த ஊருக்கு வரும் நண்பர்களுக்கு வண்டி ஓட்டுவதன் அடிப்படைகள் பற்றிப் பேசும் போது அவங்க முதலில் கேட்கும் கேள்வி, 'shoulderஆ? அப்படீன்னா என்ன?' என்கிறது தான்..

  ReplyDelete
 17. வாங்க பூர்ணிமா
  எனக்கு தெரிந்தவரை shoulder கான்செப்டே நம்மூரில் காணமுடிவதில்லை.
  இந்த மாதிரி புதிய சாலைப்பணிகள் மேற்கொள்ளும் போது அதை முறைப்படுத்தியிருக்கலாம்.

  ReplyDelete
 18. தோள் ?்கண?டார் தோளே கண்?்டா?ர்னு அப்டீனூ போடலியோ

  ReplyDelete
 19. வாங்க வல்லிசிம்ஹன்
  முதலில் வைத்த தலைப்பே வேற.. விவகாரமாகிடபோகுதே என்று மாத்திட்டேன்.

  ReplyDelete
 20. Anonymous10:46 AM

  Today it is shoulder, tomorrow it may be Body ie.,Lanes. Six lane road. No end. Let us appreciate the effort taken to elevate Chennai.

  ReplyDelete
 21. sure Anony,we will appreciate that they made this bridge but at the same time we comment their mistakes too(atleast in my point of view.
  இதே பாலம் இன்னும் 10 வருடங்களுக்குள் பாருங்கள்....பொங்கி வழியப்போகிறது.

  ReplyDelete
 22. Anonymous8:45 PM

  hey crack. thats an expressway and this is a flyover. Get to maduravoyal bypass and ull see the service lane... useless dumbo

  ReplyDelete
 23. Thanks Anony.I may be wrong and u may be correct but try to teach people in polite way. I hope you may not born with full knowledge.
  Just explain me... no need, you are very useful to the community.

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?