Thursday, April 17, 2008

தி.நகர் அபாயம்!!

இன்று மதியம் தி.நகர் பக்கம் போக வேண்டிய வேலை வந்தது.பழவந்தாங்களில் இருந்து மின் வண்டி மூலம் மாம்பலம் வந்துசேர்ந்தேன்.மாடிப்படி மூலம் கீழிறங்கி ரங்கநாதன் சாலையில் கால வைத்தவுடன் காண நேர்ந்த காட்சி தான் கீழே உள்ள படங்கள்.



கட்டுமானத்துறையில் இருப்பவர்கள் இந்த மாதிரி காட்சியை காண நேர்ந்தால் அங்கு நடக்கும் மக்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் இருக்க முடியாது.



இந்த படங்களை எடுத்துக்கொண்டு இருக்கும் போது ஒரு சத்தம்,திரும்பினால் நான் எதிர்பார்த்தது போல் ஒருவர் நடந்துகொண்டு இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் கால் இடறி விழ,நீட்டிக்கொண்டு இருந்த கம்பி கையை பதம் பார்க்க ரத்தத்தை சுவைத்தது.பக்கத்தில் நடந்துகொண்டிருந்தவர்கள் கை கொடுக்க சிறிது நேரத்தில் ஒன்றும் நடக்காது போல் மக்கள் வெள்ளம் நடந்துகொண்டு இருந்தது.

இன்னும் எவ்வளவு மக்கள் ரத்தத்தை சுவைக்க காத்திருக்கோ!!!

இது இப்படிப்பட்ட கொடுமை என்றால் உஸ்மான் சாலை பக்கம், பால வேலை நடந்துகொண்டிருக்கும் இடத்தில் இதை விட மோசமான நிலமை.இங்கும் நமக்கு தெரியாமல் தினம் தினம் விபத்து நடக்கக்கூடிய சாத்தியங்கள் நிறைந்த இடம்.

5 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தற்போது தமிழகத்திலா இருக்கிறீகள்?

அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

வடுவூர் குமார் said...

ஆமாங்க ஜோதிபாரதி.
ஒரு 2 வார விடுமுறை.

வடுவூர் குமார் said...

எப்படி இவ்வளவு கவனமே இல்லாம இருக்காங்கன்னு நினைச்சா
......

மக்கள் தொகை அதிகமுன்னு சொன்னா இப்படியாவது கொஞ்சம் போய்த் தொலையட்டுமேன்னு நினைக்குதா அரசு
?

எந்த மாதிரி மனப்பான்மை இந்த வேலையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுக்கு
?

என்றும் அன்புடன்,
துளசி

வாங்க துளசி..
ஹூம் இது என்ன(பின்னூட்ட பெட்டி) பிரச்சனையோ!! ஜோதி பாரதி கூட சொன்னார்.
அதுவே வருது அப்புறம் காணாமல் போகுது.
ரெங்கநாதன் தெருவை வயதானவர்கள் தவிர்த்தல் நல்லது.

வெங்கட்ராமன் said...

/****************************************
கட்டுமானத்துறையில் இருப்பவர்கள் இந்த மாதிரி காட்சியை காண நேர்ந்தால் அங்கு நடக்கும் மக்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் இருக்க முடியாது.
****************************************/

அப்படீன்னா, இத செய்தவங்க கட்டுமானத்துறைய சேர்ந்தவங்க இல்லையா. . .?

வடுவூர் குமார் said...

வாங்க வெங்கட்ராமன்
நிச்சயமாக இருக்கமுடியாது இல்லா கண்டும் காணாமல் இருக்க பழகியிருக்கும் குணம் கொண்டவர்களாகவும் இருக்கக்கூடும்.
ஒரு மாநில தலைநகரில் அதுவும் சில ஆயிரம் மக்கள் உபயோகப்படுத்தும் ஒரு சாலையில் இப்படியா ஒரு வேலையை செய்வார்கள்? தலைக்குணிவு.