Friday, April 06, 2007

எனக்கு கிடைத்தது.

நண்பர்களே!!
இத்துனை நாள் என் பதிவுகளை படித்து எனக்கு அவ்வப்போது ஊக்கம் கொடுத்த பல நண்பர்களுக்கு என் நன்றி.
நான் தமிழ்மணத்தில் இணைந்த போது அவ்வப்போது பலர் இங்கிருந்து வெளியேறிக்கொண்டிருப்பதை அதிசியமாக பார்த்தேன்,அதுவே இன்று எனக்கு வந்து விட்டது.
நான் பிறவி எழுத்தாளன் அல்ல.. எனக்கு தெரிந்த சில கட்டுமானத்துறை நிகழ்வுகளை பதிவு செய்யவே வந்தேன்.

இங்கு நிலவும் ஜாதி மற்றும் தனிமனித தாக்குதல் அதற்குள் குடும்பத்தை இழுப்பதும் மிக சாதாரணமாக நடந்து வருகிறது.

கீழே படத்தை பார்க்கவும்.இந்த படத்தை கூட ஏற்றுவதில் எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை இருந்தாலும் அதன் வீரியம் என்னவென்று தெரியவே செய்கிறேன்.

மன்னிக்கவும்.

குழலி வேண்டுகொளுக்கு இணங்கி இங்கு போடப்பட்ட படம் தூக்கப்பட்டது.

எதற்கு இங்கு வரவேண்டும்,இப்படி வாங்கிக்கட்டிக்கொள்ளவேண்டும்?தேவையா என்ற கேள்வி பல காலமாக ஓடிக்கொண்டிருந்தது.இன்று அதற்கு முடிவு வந்து விட்டது.
இது தான் என்னுடைய கடைசி பதிவு.

எனக்கு என்னுடைய பணிகள் அதிகம் இருப்பதால் இதில் என் நேரத்தை இங்கு விணடிக்க விரும்பவில்லை. பயந்து ஓடுவதாக நினைக்கவேண்டும்.எங்கள் பெயர் வரும் இடம் சுத்தமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.அவ்வளவு தான்.

நாளையே தரமாக எழுதும் களம் அமைந்தால் அங்கு எழுதுவேன்.

கட்டுமானத்துறையில் சந்தேகம் இருந்தால் கேட்பவர்களுக்கு தனி மெயிலில் பதிலளிக்கிறேன்.

தமிழ்மணம் தயவு செய்து என் பதிவுகளை நீக்கிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.தனி மெயிலிலும் அவ்வழைப்பை தெரிவிக்கிறேன்.

பல நல்ல பதிவர்களை அறிமுகபடுத்தியதற்கு தமிழ்மனத்துக்கு நன்றி.

35 comments:

 1. உண்மைத்தமிழன்
  நன்றி

  ReplyDelete
 2. Anonymous4:18 PM

  Where is the picture????????????????????????????????

  ReplyDelete
 3. குமார். தமிழ்மணத்தில் இருந்து மட்டும் தானே விலகிக் கொள்கிறீர்கள்? உங்கள் பதிவுகளில் தொடர்ந்து எழுதுங்கள். பலர் கூகுள் ரீடர், மற்ற திரட்டிகள் மூலமாகப் படிப்பார்கள். உங்கள் அனுபவங்களைப் பதிவதை நிறுத்த வேண்டாம்.

  ReplyDelete
 4. வருத்தமான விசயம். நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்திய அதே தமிழ்மணம் நல்ல பதிவர்களை ஏன் இழக்கிறது என்பது தமிழ்மண நிர்வாகிகள் தங்கள் மனசாட்சியை கேட்க வேண்டிய கேள்வி. பாரதியின் பாடலை கூட மதரீதியாக பார்ப்பது என மகாகவியை அவமானப்படுத்திய பூங்காவை நடத்தும் சாதிய வெறியர்களிடம் மனசாட்சி இருக்கும் என்கிறீர்கள்?

  ReplyDelete
 5. வேண்டாம் குமார். இதை எல்லாம் பார்த்து நீங்க போனாதான் அந்த தப்பு செய்யறவங்க்ளுக்கு என்கரேஜ்மெண்ட். ரோட்டில் எதாவது அசிங்கத்தை மிதிச்சா காலை கழுவிக்கிட்டு போயிகிட்டே இருக்கோம். அதுக்காக ரோட்டில் போகாமலா இருக்கோம்?

  இங்கு எத்தனையோ பெண்கள் கூட இதையெல்லாம் மீறி இங்கு இருக்காங்க பாருங்க. நீங்களும் இருக்க வேண்டும். இங்கு உங்களுக்குக் கிடைத்த நல்ல நட்புகளுக்காகவாவது.

  ReplyDelete
 6. Anonymous5:33 PM

  நண்பரே, நீர் எடுத்த முடிவு நல்ல முடிவு.நானும் உம்மை தொடர்கிறேன்.

  //எதற்கு இங்கு வரவேண்டும்,இப்படி வாங்கிக்கட்டிக்கொள்ளவேண்டும்?தேவையா என்ற கேள்வி பல காலமாக ஓடிக்கொண்டிருந்தது.இன்று அதற்கு முடிவு வந்து விட்டது.
  இது தான் என்னுடைய கடைசி பதிவு.//
  எண்டா வந்தோம் என்றும் கவலை.
  நல்ல சில உள்ளங்களை விட்டுப் பிரிவதும் கவலை

  ReplyDelete
 7. குமார், என்ன ஆச்சு?

  உண்மையா எனக்கு ஒண்ணும் புரியலை.
  நீங்க எழுத வேண்டாமா?
  யோசிங்கோ

  ReplyDelete
 8. வாங்க குமரன்
  அப்படி ஒரு வழி இருக்கிறதா?
  நல்லது தான்.
  தொடருவேன் ஆனால் தமிழ்மனத்துக்கு அனுப்பும் எண்ணம் இல்லை.
  மற்றொரு நல்ல திரட்டி வரும் போது அங்கு சந்திக்கலாம்.
  பல மோசமான பதிவுகளுக்கிடையில் என் பெயர் வருவது கஷ்டமாக இருக்கிறது.

  ReplyDelete
 9. வாங்க அரவிந்தன்
  நமது சக பதிவாளர்,சொம்புநக்கி(பெயரை எழுதுவதற்கே கஷ்டமாக இருக்கு)தயவுசெய்து என்று கேட்டும்..
  என்ன மாதிரியான பதில்கள் வருகின்றன என்று பாருங்கள்?
  என்னைவிட உங்களுக்கு பாதிப்புகள் அதிகம் என்று தெரியும்.
  இந்த சின்ன காயத்துடன் விலகுவது நல்லது தான் சரி என்று தோனுகிறது.
  மனசாட்சி பற்றியெல்லாம் இங்கு என்னவிலை என்று கேட்கப்படும்.
  நான் விலகுவதால் எனக்கும் எந்த இழப்பும் இல்லை,தமிழ்மணத்துக்கும் ஒரு பதிவு திரட்டப்படுகிற செலவும் மிச்சம்.:-))

  ReplyDelete
 10. வாங்க அனானி
  அந்த படம் மிக மோசமாக இருப்பதாகவும் குழலியின் பெயரை எவனோ உபயோகித்திருப்பதாலும்,அவர் வேண்டுகோளுக்கு இணங்க எடுத்துவிட்டேன்.
  வேண்டும் எனில் தங்கள் முகவரி கொடுங்கள் அனுப்பிவைக்கிறேன்.

  ReplyDelete
 11. இ.கொத்னார்..
  நானும் இப்படித்தான் நினைத்தேன்.
  "டை" கட்டிக்கொண்ட படத்தை போட்டுக்கொண்டு,என் பெயரை போட்டு,தராதரம் இல்லாமல் எழுதுவோர், எழுத்து, எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த ஆசிரியரோ,என் பெற்றோர் மற்றும் உறவினர் கண்ணில் பட்டால்??!!!
  எவ்வளவு பேருக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கமுடியும்?
  நான் இங்கு வந்ததே கட்டுமானத்துறையை படித்துவிட்டு வரும் மாணவர்களுக்கு இங்குள்ள சூழ்நிலையை விளக்கி ஏதாவது செய்ய வேண்டும் என்று தான்...அது தமிழ்மண்த்தின் மூலம் நடக்காது போல் உள்ளது.எனினும் என்னுடைய பதிவில் தொடரும்.
  தப்பு செய்கிறவர்களுக்கு என்கரேஜாக மையும் என்றால் அது தமிழ்மணத்தின் முடிவின் தொடக்ககாலமாக கூட இருக்கலாம்.
  அப்போது முகப்பு பக்கத்தில் பாப்பானை தூற்றி 10 பதிவு,ஜாதி துவேஷம் பற்றி 10 பதிவு.கால் இடுக்கில் பார்பதற்கு 4 பதிவு.மீதி இதே சம்பத்துடன் எழுதிய மீள் பதிவுகள்.
  சுய கட்டுப்பாடு ஒரு பக்கம் என்றாலும்,நான் வெறும் திரட்டி தான் என்று சொல்லிக்கொள்வது ஒரு எஸ்கேபிசம் போல் எனக்கு தோன்றுகிறது.
  நாளை தமிழ்மணம்,விளம்பரங்களை நாடி தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முனையும் போது பல நல்ல பதிவர்கள் விலகி போயிருப்பார்கள் என்பது நிதர்சனம்.
  இத்தனை நாள் தமிழ்மணத்தை உபயோகப்டுத்திவிட்டு இன்று தூற்றுகிறாயே என்று யோசித்தால்,பதில் இது தான்.
  நான் தூற்றவில்லை,பல அசிங்கத்துக்கு நடுவில் நான் இருக்க விரும்பவில்லை.
  இதை விட நல்ல திரட்டி வந்தால் அங்கு செல்வேன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி இ.கொத்தனார்.

  ReplyDelete
 12. வல்லி சிம்ஹன்
  நீங்கள் பார்க்கும் முன்பு அந்த (மோசமான) புகைப்படம் எடுத்துவிட்டேன்.
  பார்க்காமல் இருப்பதே நல்லது.
  அதனால் அவ்வளவாக புரியவில்லை என்று நினைக்கிறேன்.
  நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
  அவ்வப்போது வந்து போகிறேன்.

  ReplyDelete
 13. என்ன ஆகி விட்டது இப்போது? ஏன் இவ்வளவு ஓவர் ரியேக்ஷன்? நான் பார்க்காத திட்டுக்களா?

  போடா ஜாட்டான் என போய்க் கொண்டிருப்பதை விட்டு ஏன் இவ்வளவு அதைரியம்?

  இதை நான் கூற எல்லா தகுதியும் எனக்கு உண்டு என்பதை நீங்களும் அறிவீர்கள்.

  நீங்கள் மைதானத்திலிருந்து விலகினால் உங்களுக்குத்தான் நஷ்டம்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 14. செல்லி
  நன்றி. நிச்சயம் தொடர்பு கொள்கிறேன்.

  ReplyDelete
 15. துரதிர்ஷடவசமான முடிவு.....

  தமிழ்மணத்தை ஏன் கோவிக்கிறீர்கள் என புரியவில்லை....

  லினக்ஸ் பற்றி உங்கள் மூலமாய் நிறைய தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன்.....

  தொடர்ந்து எழுதிட வேண்டுகிறேன்....

  ReplyDelete
 16. வாங்க டோண்டு சார்
  நான் வாங்குவது ஈ குச்சி என்றால் நீங்கள் வாங்கியது மரக்கிளையால்.
  நன்றாகவே தெரியும்.
  அப்படி வாங்கி இங்கு ஏன் எழுத வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.
  தமிழுக்கு சேவை??
  அதை இங்கு போடாமலே செய்யமுடியுமே!!
  கேள்விகள் தான் அதிகமாகிறது.
  உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

  ReplyDelete
 17. தமிழ்மணம் தற்போதுதான் ஒரு சார்பின்றி,நடுநிலையாய் செயல்படுகிறது.

  கடந்த காலத்தில் செய்த தவறுகளை தமிழ்மணம் திருத்திக்கொண்டிருக்கிறது, மேலும் நேர்மையான ஆலோசனைகளை அங்கீகரிக்கிறது என்பது என்னுடைய அனுபவம்..

  தமிழ்மணத்தின் மீதுதான் உங்கள் கோவம் என்றால் அதை நீங்கள் சபையில் விவாதிக்கலாம்......நிச்சயமாக ஆரோக்கியமான தீர்வினை பெறமுடியுமென நம்புகிறேன்......

  தனிப்பட்ட ஆபாச தாக்குதல் வலிய வருவதில்லை...அத்தகைய சூழலை உருவாக்குவதில் நமது பங்களிப்பும் கணிசமாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்....

  ReplyDelete
 18. வாங்க பங்காளி
  லினக்ஸ் என் பதிவு மூலம் தெரிந்துகொண்டதற்கு நன்றி.
  தனிப்பட்ட ஆபாச தாக்குதல் வலிய வருவதில்லை...அத்தகைய சூழலை உருவாக்குவதில் நமது பங்களிப்பும் கணிசமாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்...
  ஒரு தடவை திரு பத்ரி,திரு டோண்டு சார் பதிவுக்குப்போய் பின்னூட்டம் போட்டுவிட்டு திரும்புவதற்குள் உங்கள் குடும்பம் முழுவதும் இணையத்துக்கு வந்து விடும்.அவர்கள் பதிவில் பின்னூட்டம் இடக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரமில்லை.
  கருத்துச்சுதந்திரம் என்பது எழுதுபவர்கள் கையில் தான் இருக்கிறது,இருந்தாலும் அதை திரட்டிப்போடும் போது பல பதிவுகள் தரக்குறைவாக இருப்பதாக நான் எண்ணுகிறேன்,அதற்கிடையில் என் பெயர் வருவதை நான் விரும்பவில்லை.
  எனினும் உங்கள் கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 19. முடிவை மறுபரிசீலனை செய்யுங்க குமார்.

  தங்கள் பிரச்சினை எதுவென்று தெரியவில்லை. இருந்தாலும் சொல்கிறேன்.

  தாக்குதல் பின்புறமாக இருந்து வருவதை புறந்தள்ளி விடுங்கள். முகம் காட்டாத கோழைகள் செய்யும் ஈனச்செயல்களுக்கு நீங்கள் ஏன் திரட்டியில் இருந்து விலக வேண்டும்?
  நீங்கள் விலகினீர்கள் என்றால் எதிரிகளை ஊக்குவிப்பது போலாகும் கொத்தனார் சொல்வது போல.

  வழக்கம்போல உங்கள் பதிவுகளை இடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 20. திரட்டிக்கு அனுப்பாவிட்டாலும் தொடர்ந்து எழுதுவீர்கள் அள்ளவா??
  தங்களை போன்ற ஒரு நல்ல பதிவர் எழுதுவதை நிறுத்தக்கூடாது

  பின் எங்களை போன்றோர் இங்கு எழுதுவதற்கு அர்த்தமே இருக்காது!!

  ReplyDelete
 21. குமார், எனக்கும் இது போன்று ஆபாச பின்னூட்டங்கள் வந்ததுண்டு.. கொத்ஸ், சொல்வது போல நாம் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் செல்ல வேண்டும். விடாமல் எழுதுங்கள். நாங்கள் துணையிருக்கிறோம் குமார்..

  அதற்காக எழுதுவதை நிறுத்த வேண்டாம் குமார்

  ReplyDelete
 22. வடுவூர் குமார், லினக்ஸ் குறித்த உங்கள் பதிவுகள் நினைவில் இருக்கின்றன. ஆபாசத் தாக்குதல் பலருக்கும் வருகிறது. ஆனால், அதற்காக எழுதுவதையே நிறுத்தத் தேவை இல்லை. உங்கள் பதிவில் நீங்கள் தொடர்ந்து எழுதினால் கூகுள், கில்லி போன்ற பிற சேவைகள் மூலம் உங்களை வாசகர்கள் வந்தடைவார்கள். குறைந்தபட்சம் உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பவர்கள் தொடர்ந்து வருவார்கள். நான் கூட உங்கள் பதிவை கூகுள் ரீடரில் வைத்திருக்கிறேன். அதனால், ஒரு திரட்டி, சில பதிவர் மேல் உள்ள அதிருப்திக்காக எழுதுவதையே நிறுத்தத் தேவை இல்லை என்பது என் கருத்து.

  ReplyDelete
 23. CVR
  வருகைக்கு நன்றி.
  தமிழ்மணத்தின் மூலம் கிடைத்த பல நண்பர்களில் நீங்களும் ஒருவர்.
  தொடருவேன்,என்னுடைய பதிவில் மட்டும்.

  ReplyDelete
 24. மு.கார்த்திகேயன்
  நீங்கள் முதன் முதலில் பதிய ஆரம்பித்த போது உங்களுக்கு ஊக்கம் கொடுத்தது இன்னும் பசுமையாக ஞாபகம் உள்ளது.
  சுற்றுப்புறம் சற்றும் புழங்காத நிலைக்கு போகும் போது அங்கிருந்து விலகுவது தான் சரி என்று தோனுகிறது.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 25. அன்பின் குமார்

  வணக்கம்.

  வலைப்பதிவு என்பது ஒரு பொழுதுபோக்கு. இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 'மடற்குழுக்கள்' வலைப்பதிவுகளுக்கு முன் பயனுள்ள பொ.போக்காக இயங்கி பின் வலிவிழந்தன.யாருக்கும் இழப்பு பெரிதாக இல்லை. மண்டைக்குள் சிரங்கு உள்ளவர்களால் என்றுமே தொல்லைதான.மற்றும் சகதி வீசுவோர் அனைத்து தரப்புகளிலும் உள்ளார்கள். இதில் மாட்டுச்சாணமென்றால் என்ன, மனித சாணமென்றால் என்ன, பன்றி சாணமென்றாலென்ன .. சமமான தவறுகள்தான்.

  தமிழ்மணம் எனும் வலைப்பதிவுகள் திரட்டி எனக்குத் தெரிந்தவரை லாப நோக்கில் நடத்தப்படுவதில்லை. நடத்துனர்கள் பல பொறுப்புகளுக்கு நடுவே நேரமெடுத்து செய்வதாகத்தான் இருக்ககூடும். ஒவ்வொரு வலைப்பதிவையும், பதிவரையும் சரிபடுத்துவது இயலாத காரியம். மற்றும், பூங்கா என்ற வலையிதழை விமரிசிக்கும் போக்கு எனக்கு வேடிக்கையாகத்தான் உள்ளது. பிடிக்காவிட்டால் படிக்க கூடாது. அல்லது பூங்காவுக்கு மாற்று கருத்தாக புல்வெளி அல்லது கடற்கரை என ஒரு வலைப்பூ இதழை ஆரம்பித்து கருத்தாடலாம்.

  எப்படியிருப்பினும் முடிந்த போதெல்லாம் உங்கள் பதிவை போய் படிப்பேன். எங்களூர் மாப்பிள்ளை மனம் வருந்துகிறாரே என்பது சங்கடமாகத்தான் உள்ளது.

  ReplyDelete
 26. //பயந்து ஓடுவதாக நினைக்கவேண்டும்//

  ஏன்? எதுக்காக ?

  ReplyDelete
 27. ரவிசங்கர்
  உங்கள் கருத்துக்கு நன்றி.
  புதிய சுட்டி பிறகு தருகிறேன்.

  ReplyDelete
 28. துளசி
  படம் உங்கள் கண்ணில் படவில்லை,சந்தோஷப்படுங்கள்.
  அதில் உங்கள் பெயரும் இருந்தது.:-((

  ReplyDelete
 29. வாசன் உங்கள் கருத்து ஏற்கக்கூடியது தான்.

  புதிய சுட்டியை பிறகு தருகிறேன்.

  ReplyDelete
 30. வந்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.
  வணக்கம்.

  ReplyDelete
 31. இப்போ தான் இந்த பதிவை வாசிச்சேன். ரொம்ப நாளா உங்க கிட்ட இருந்து பதிவு இல்லையே; என்னோட பதிவுக்கு தவறாம வந்து பின்னோட்டமிடுவீங்களே.... அதுவுமில்லையேன்னு... இப்போ தானுங்க பதிவுகள நான் மிஸ் பண்ணியது ஏதாச்சும் இருக்கான்னு பாத்தா.... என்னங்க நீங்க... என்ன பிரச்சனை என்றாலும் நின்னு எதிர் கொள்ளம....

  சரி நான் சொல்லுறதுக்கு இல்ல... ஆனா, கட்டாயம் பதிவுகள் எழுதுங்க. நான் உங்களை என்னுடைய கூகிள் ரீடர்ல சேர்த்து இருக்கிறேன்.

  எனக்கு ஊக்கம் தந்து தொடர்ந்து எழுத சொன்னதுக்கு நன்றி!

  ReplyDelete
 32. நன்றி காட்டாறு
  உங்கள் பதிவில் என்னுடைய புதிய வலைப்பூ முகவரி கொடுக்கிறேன்.இனிமேல் இங்கு எழுத மாட்டேன்.

  ReplyDelete
 33. வலைப்பூ முகவரியைத் தெரியத்தாருங்கள்.நன்றி.

  ReplyDelete
 34. எனக்கு முதன் முதலில் பின்னூட்டம் அளித்து ஊக்கப் படுத்துயது தாங்கள் தான்.

  ///////////////////////////////////////////////
  "டை" கட்டிக்கொண்ட படத்தை போட்டுக்கொண்டு,என் பெயரை போட்டு,தராதரம் இல்லாமல் எழுதுவோர், எழுத்து, எனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த ஆசிரியரோ,என் பெற்றோர் மற்றும் உறவினர் கண்ணில் பட்டால்??!!!
  எவ்வளவு பேருக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கமுடியும்?
  ///////////////////////////////////////////////

  உங்கள் நிலை புரிகிறது, தொடர்ந்து எழுதுங்கள் இருக்கவே இருக்கிறது Google Reader.

  நான் வீடு கட்டும் போது, உங்களிடம் ஆலோசனை கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

  ReplyDelete
 35. வாங்க வெங்கட்ராமன்,
  வீடு கட்டும் போது சொல்லுங்க தேவைப்படும் போது கேளுங்கள்,எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.
  சென்னையில் இருப்பதால் பதில் சொல்ல கால தாமதம் ஆகிவிட்டது.

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?