Sunday, April 01, 2007

அன்கலேஷ்வர்

போன பதிவில் புட்டபர்த்தி வேலை முடிந்ததும்,சென்னைக்கு வரச்சொல்லியதையும் எழுதியிருந்தேன்.
அங்கிருக்கும் போதே என்னுடைய பெயர் மலேசியாவில் அப்போது நடந்துகொண்டிருக்கும் பாலம் கட்டும் பணிகளில் இருப்பதை தொட்டும் தொடாமலும் கசியவிட்டிருந்தார்கள்.
அப்போதெல்லாம் எங்கள் கம்பெனி வெகு சில வெளிநாட்டு வேலைகளே செய்து வந்தார்கள்.அதனால் அங்கு போவதற்கு தேர்ந்தெடுக்கபடுபவர்கள் Hand Pic ஆக இருப்பார்கள்.சில சமயம் தெரிந்தவர்கள் என்ற போர்வையுடன் செல்பவர்களும் இருந்தார்கள்.என்னிடம் நேரடியாக சொல்லாததால் நான் அதைப்பற்றி அவ்வளவாக கவலைப்படவில்லை.முதலில் ஒரு தடவை ரஷ்யா வில் வேலை நடக்கும் போது கேட்டு நிராகரிக்கப்பட்டேன்.வந்தால் வருது,வரவிட்டால் போகுது என்ற மன நிலையில் இருந்தேன்.ரஷ்யா போகலாம் என்ற எண்ணத்தை வீட்டில் சொல்லிய உடன் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டார்கள். இப்போது என்ன நடக்கும்? என்ற பயத்தில் அவர்களிடம் சொல்லவில்லை.

சென்னை வந்து மனிதவள துறைக்கு போன போது தான் விபரங்கள் முடிவானது.கடவுச்சீட்டு மற்றும் ECNR ஐ வாங்கி வைக்குமாறு பணிக்கப்பட்டேன்.அதெல்லாம் ரெடியாக்க ஒரு வாரம் ஆனது.அப்படியும் கிளம்பும் தேதி முடிவாகாகதால் தினமும் அலுவலகம் வந்து போய்கொண்டிருந்தேன்.

ஒரு நாள்,அலுவலகம் போன போது மலேசியா போவதற்கான தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது என்றும் அதற்குள் முக்கியமான ஒரு வேலை சூரத் பக்கத்தில் உள்ள ஒரு சைட்டில் இருக்கிறது,ஒரு 15 நாள்,முடித்து விட்டு வா என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.அந்த இடம் தான் "அங்கலேஷ்வர்".

அங்கு போவதற்கு முன்பே அதன் தொடர்பில் உள்ள வரைப்படங்களை கொடுத்து படிக்கச்சொன்னார்கள்.இது நான் முன்பே காக்கிநாடா வில் பண்ணியிருந்த சிமினி போன்ற அமைப்பில் இருந்த்து.

காகிநாடாவில் வேலை செய்யும் போதே அதன் சிஸ்டத்தை மேம்படுத்த முடியும் என்று கணக்கு போட்டுவைத்திருந்தேன். இந்த மாதிரி வேலை இனிமேல் எங்கு செய்யப்போகிறோம் என்ற எண்ணத்தினால்,அதை யாரிடமும் சொல்லவில்லை.

இப்போது அதற்கு அடித்தது சான்ஸ்.

வரைபடத்தை பார்த்ததும்,என்னுடைய எண்ணத்தை அந்த சிஸ்டத்தின் முதன்மை அதிகாரி,திரு.நடராஜனிடம் சொன்னேன்.அவரும் அதை அக்கக்காக ஆராய்ந்துவிட்டு,சரி முயற்சிக்கலாம் என்றார்.

இது ஒரு Float Glass தொழிற்சாலை,இதில் ஒரு சிமினி வேலை ஆரம்பித்து போய் கொண்டிருக்கிறது.அது போகும் வேகத்தை பார்த்தால் அது மொத்த பிராஜக்ட்டை கிழே இழுத்துவிடும் போல் இருக்கிறது என்றும் அதன் பொறியாளருக்கு முன் அனுபவம் இல்லாத்தால் வேலை போவதில் சுணக்கம் என்று சொல்லி என்னை அனுப்பிவிட்டார்கள்.

வண்டி ஏறி அங்கலேஷ்வர் வந்தேன்.அறை வசதியில்லாத்தால் பக்கத்தில் உள்ள லாட்ஜில் வாசம்.

முதல் நாள் அப்படி இப்படி என்று ஓடியது.மறுநாள் காலை எழுந்த போது....

இது ஊர் தானா? இங்கு எப்படி மக்கள் வாழிறார்கள் என்று தோனிற்று.

மீதி அடுத்த பதிவில்.

12 comments:

 1. //ரஷ்யா போகலாம் என்ற எண்ணத்தை வீட்டில் சொல்லிய உடன் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டார்கள். //

  :-))))))))))))))

  நம்ம மருத்துவரும் இதுக்குத்தான் ரெண்டாம் முறையும் ரஷ்யா போறென்னு போயிருக்கார். பாவம் அவர் வீட்டுலே கண்டுக்கலை:-)

  ReplyDelete
 2. Anonymous10:26 AM

  படிப்பதற்கு சுவாரசியமாய் உள்ளது உங்கள் கட்டுரை. தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் பணியில் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
  ஜகன், கத்தார்.

  ReplyDelete
 3. //ரஷ்யா போகலாம் என்ற எண்ணத்தை வீட்டில் சொல்லிய உடன் கல்யாணம் பண்ணி வைத்துவிட்டார்கள். இப்போது என்ன நடக்கும்? என்ற பயத்தில் அவர்களிடம் சொல்லவில்லை.//

  நல்ல தமாஷ்!

  :))

  ReplyDelete
 4. வாங்க துளசி
  பெற்றோர்கள்..
  வாழ்கையில் இந்த ஒரு மிரட்டலுக்கு பிறகு வேறு எதுவும் பிரயோஜனம் இல்லை என்று முடிவு செய்துவிட்டார்கள் போலும்.அதான் கண்டுகவே இல்லை.
  :-))

  ReplyDelete
 5. வாங்க ஜகன்
  முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 6. வாங்க VSK
  எல்லார் வீட்டிலும் இதே தமாஷ்தான் நடக்குது போல்.

  ReplyDelete
 7. vanakam Mr.Kumar... sry no tamil fonts... v were in that project... hubby's name T.S.Anantha Kumar... i was under that impression that in any site v wud hv cum across! anyways nice to know!

  ReplyDelete
 8. ஆர்வத்தை அழகாக கிளப்பி விட்டிருக்கிறீர்கள்.அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்!! :-)
  வாழ்த்துக்கள்!! :-)

  ReplyDelete
 9. வாங்க நிர்மலா,
  பரவாயில்லை.உங்களை மாதிரி பின்னூட்டம் இடுபவர்களுக்கு தகுந்த பெட்டி கூடியவிரைவில் சேர்த்துவிடுகிறேன்.
  நான் அங்கு இருந்தது வெரும் 2 மாதங்கள் தான்.அதனால் பலரை அறிமுகம் செய்துகொள்ளவில்லை.
  இந்த சிமினியின் மேற்பார்வையாளர் திரு.அய்யர் (முழு பெயர் ஞாபகம் இல்லை)
  உங்கள் கணவரை பார்த்திருக்கலாம்.இதற்கு முன்பு உள்ள பதிவுகளில் என் புகைப்படம் இருக்கிறது,பார்த்தால் ஒரு வேளை அடையாளம் தெரியலாம்.
  அது சரி,இன்னும் உங்கள் கணவர் ECC யில் தான் வேலை செய்கிறாரா?

  ReplyDelete
 10. வாங்க CVR
  அந்த ஊர்,இன்றும் அப்படித்தான் இருக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் இருக்கிறேன்.
  பிரச்சனையின் ஆழம் அவ்வாறு.

  ReplyDelete
 11. Ya the chimney in charge was Mr.Dhakshinamoorthy... n told TSA abt an eccite writing in blog.. u know the work pressure... ntg temptates him!

  v r still with ECC, now in SVBTC, Kolkata.

  ReplyDelete
 12. நன்றி நிர்மலா.
  அவர் பெயரை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.முடிந்தால் தொடர்பு கொள்ளச்சொல்லுங்கள்.
  அந்த காலத்தில் ஈ மெயில் இல்லாததால் பலரின் தொடர்புகள் அப்படியே அறுந்து போய்விட்டது.
  இப்படி எழுதுவதன் மூலமாவது தொடர்பு கிடைத்தால் சரி.
  கொல்கத்தா தலைமை அலுவலகத்தில் T.S.வெங்கடேசன் என்பவர் Accounts பகுதியில் இருந்தார்.இன்னும் அங்கு தான் இருக்கிறாரா? என்று TSA விடம் முடிந்தால் கேட்டுச்சொல்லவும்.உங்களை தொந்தரவு செய்யாமல் இருக்க ஈமெயில் அட்ரஸ் கிடைத்தால் சௌகரியமாக இருக்கும்.

  ReplyDelete