இந்த பதிவை போடுவதா? வேண்டாமா? என்ற குழப்பம் கடந்த 3 நாட்களாக,அதற்கு காரணம் கீழே கொடுத்துள்ள சுட்டி.
பிரபலமான ஒருவரைப்பற்றி நல்லதும் கெட்டதும் வருபவை சகஜம் தான் என்றாலும்,அது கொஞ்சம் மோசமானதாகவே இருக்கிறது.
இதை படிக்கும் மக்களே,தயவு செய்து ஒரு மூன்றாம் மனிதனின் நோக்கத்துடன் படிக்கவும்.
புட்டபர்த்தியில் நான் வேலை நிமித்தம் இருந்த சுமார் 2 வருடகாலங்களில் நான் கேட்ட அனுபவங்களை இங்கு தொகுத்துள்ளேன்.
1.இது நான் வருவதற்கு சில மாதங்கள் முன்பு நடந்தது.அப்போது ஆயுத பூஜை காரணமாக ஆசிரம் உள்ளேயே ஒரு கூடாரம் போட்டு,பெரிய அலங்காரங்கள் செய்து அதற்கு சுவாமிகளையும் அழைத்திருந்தார்களாம்.அவர் வந்து கொஞ்ச நேரத்தில் பூஜைகள் ஆரம்பித்தன.எல்லாவற்றையும் பார்த்துவிட்டு புறப்படும் நேரம் அந்த சைட்டின் ரெசிடென்ட் இஞ்சினியரை கூப்பிட்டு ஒரு வைர மோதிரத்தை பரிசாக கொடுத்தாராம்.பிற்காலத்தில் அதை நானும் வாங்கிப்பார்த்தேன்.மதிப்பு சுமார் 1L என்று கேள்விப்பட்டேன்.
2.இது என் மேல் மேல் அதிகாரிக்கு நடந்தது.இங்கு வேலை நடந்துகொண்டிருக்கும் போது பெரிய தலைகள் வந்து போய் கொண்டிருப்பார்கள்.ஒரு தடவை எங்கள் மேலதிகாரி வந்தபோது அவரை சந்தித்திருக்கிறார்.சந்தித்து முடித்தவுடன்,அவரையும் அழைத்துக்கொண்டு ஒரு கல்யாணத்திற்கு பாபா போனார்.கல்யாணத்தில் தாலிக்கு பதிலாக வெறும் கையில் ஒரு 5 பவுன் சங்கிலியை வரவழைத்து மணமகனிடம் கொடுத்தாராம்.
3.ஒரு நாள் ஒரு பழைய கோபுரம் இடிந்து விழுந்ததில் 3வர் மரணமடைந்தார்கள். அதில் ஒருவர் வெளிநாட்டவர்.அந்தூர் வழக்கப்படி போலீஸ் வழக்கு பதிவு செய்த்தது.வெளிநாட்டவரின் வீட்டுக்கு விஷயம் போய் அவர்கள் இங்கு வந்த பிறகு,போலீஸ் அவர்களிடம் நாங்கள் இந்த மாதிரி வழக்கு பதிவு செய்துள்ளோம்,உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்கள் பெயரை சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்.அதற்கு அவர்கள் எங்கள் மகன் இங்கு இறந்ததில் மிகவும் சந்தோஷப்படுகிறோம்,அதனால் எந்த Complaint தேவையில்லை என்று சொல்லி போய்விட்டார்களாம்.அவன் இங்கு சாக கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று சொல்லிச்சென்றார்களாம்.
4.எங்கள் கம்பெனியின் சில உயரதிகாரிகளுக்கு தனிப்பட்ட சந்திப்பில் மோதிரம் போன்ற பொருட்களை கொடுத்ததாக கேள்வி.
5.இது என்னுடைய நண்பர்,பல இடங்களில் ஒன்றாக வேலை பார்த்தவர் வீட்டில் நடந்தது.இதையே அவர் பலரிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார்.
நடந்தது இது தான்.
நண்பருடைய மனைவி தினமும் காலையும் மாலையும் பஜன்/தரிசனத்துக்கு போய் வருவார்.அப்படி ஒரு நாள் போன போது அவருக்கு முதல் வரிசையில் உட்கார இடம் கிடைத்தது.பாபாவும் வந்தார்,கடிதங்களை வாங்கினார்,சிலருக்கு விபூதி கொடுத்தார்.அப்படி வந்துகொண்டிருக்கும் போது நண்பருடைய மனைவி உட்கார்ந்திருக்கும் பக்கம் வந்து அவருக்கு 2 பேர் தள்ளி உட்கார்ந்திருக்கும் பெண்ணுக்கு விபூதி வரவழைத்துக்கொடுத்தார்.இதை பார்த்ததும் நண்பருடைய மனைவிக்கு வருத்தம் வந்தது.செ! நமக்கு கிடைக்கவில்லையே என்று.
சிறிது நேரத்தில் நடந்ததை மறந்துவிட்டு வீட்டுக்கு வந்து சமையல் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.கொஞ்ச நேரம் கழித்து ஏதோ வேலையாக பூஜை அறைக்கு போனால் அங்கு இருக்கும் பாபா படத்தில் இருந்து விபூதி விழுந்து கிடந்தது.அவருக்கு ஆச்சிரியமான ஆச்சரியம்,.நம் மனதில் நினைத்தை எப்படியோ கண்டுகொண்டு வீட்டுக்கே வந்து கொடுத்துவிட்டார் என வியந்தார்.
இத்தனைக்கும் அவர்கள் இருவரும் பெரிய பக்தர்கள் கிடையாது.நான் பாபாவை விமர்சித்த போது, முழுவதும் தெரியாமல் யாரையும் குறை சொல்லாதே என்று என்னை திருத்திய நண்பன் அவன்.இதே கதை உலகில் பல இடங்களில் பல மாதிரி நடைபெற்றுள்ளது.
இந்த உலகத்தில் நடக்கும் சில இந்த மாதிரி விஷயங்கள் பாபாவை போட்டிக்கு அழைத்த கோவூர் கண்ணன் மற்றும் பலரும் விளக்கம் சொல்லாமல் விட்டு விட்டார்கள். இல்லை என் கண்ணில் படவில்லையோ என்னவோ??
மொத்தத்தில் நாம் புரிந்துகொள்ள நிறைய இருக்கு இந்த உலகத்தில் என்று மட்டும் தெரிகிறது.
இது நான் கேள்விப்பட்டது தான்,இணையத்தில் பார்த்தால் வெவ்வேறு தேசங்களில் உள்ளவர்கள் ஏதேதோ எழுதியிருக்கிறார்கள்.நம்புவதும் நம்பாமல் இருப்பதும் தனி மனித உரிமை.
நம்ப மாட்டேன் சொல்பவர்களை நம்ப வைப்பது என்னுடைய வேலையில்லை,ஆனால் நம்பிக்கை உள்ளவர்களை ஏளனம் செய்வதற்கு நமக்கு உரிமை இல்லை என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விழைகிறேன்.
உன்னால் YouTubeஐ நம்பமுடிகிறது என்றால் அவர்களால் பாபாவை நம்பமுடிகிறது.சிம்பிள் லாஜிக்.
நம்மில் சில வலைப்பதிவர்கள் அவர் கொலைகாரர் என்று இங்கு நீதி கொடுத்திருப்பதை பார்க்கவும்.
அது ஒரு பக்கம்,மற்றொருவரின் பக்கம் இங்கே!! கொஞ்சம் மோசமானது.
மேல் கொடுத்த சுட்டியில் சொல்லிய மாதிரி நான் வேலை செய்யும் போதே கேள்விப்பட்டேன்.
இது மற்றொருவரின் நம்பிக்கை.
நம்பவும் முடியவில்லை,நம்பாமலும் இருக்க முடியவில்லை.
சரி,இதையெல்லாம்,அவரவர் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
இங்கு என்னுடைய பணி முடிவடையும் நேரத்தில் அடுத்த வேலை இடத்துக்கான ஊகங்கள் வர ஆரம்பித்தன.
ஊகங்கள் வரத்தொடங்கினாலும் எதுவும் முடிவாகத நிலையில் சென்னை அலுவலகத்திக்கு போகுமாறு பணிக்கப்பட்டேன்.
அடுத்த பதிவை சென்னையில் தொடங்குவோம்.
No comments:
Post a Comment