Saturday, March 24, 2007

அலங்கார கட்டுமானம்

கட்டுமானத்துறையில் இது மாதிரி சில வேலைகள் "அட!!" போடவைக்கும்.அதில் இதுவும் ஒன்று.

கீழ் கண்ட படம் எனக்கு தனிமெயில் வந்தது.(நன்றி:ஆர்.பத்மநாபன் - இந்தோனேசியா)


இது டென்மார்க்கையும் ஸ்வீடனையும் இணைக்கிறது.

இது வரை கட்டப்பட்டு வந்த பாலங்கள் நதி/கடலை உபயோகப்படுத்தும் கப்பல்களுக்கு வழி விட கொஞ்சம் தூக்கி கட்டுவார்கள்.
இந்த படத்தில் பாருங்க,எங்க தேவையோ அங்கு அழகாக கடலுக்கு அடியில் Tunnel முறைப்படி கீழே கொண்டு போய்,இரு வழிப்பயணத்தையும் அருமையாக கையாண்டிருக்கிறார்கள்.
பார்பதற்கே எவ்வளவு அழகாக உள்ளது?


அழகாக இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்று சொல்வார்கள்.இங்கு என்ன ஆபத்து இருக்கு?
எனக்கு தெரிந்து "சுனாமி மாதிரி ஏதேனும் வந்தால்,Tunnel உள்ளேயே ஜல சமாதி தான்".
பயப்படாதீங்க... இது ஒரு அனுமானம் தான்.

இந்த மாதிரி விஷயங்களையும் ஆராய்ந்து தான் கட்டியிருப்பார்கள்.ஒரு வேளை அந்த நிலப்பரப்பில்,சுனாமி வர வாய்பில்லாமல் இருந்திருக்கும்.

வர வர, எங்கள் துறையும் பேஷன் ஷோ மாதிரி ஆகிவிட்டது.

21 comments:

 1. நன்றி துளசி,
  இதுக்கு தான் எல்லாரும் டெஸ்ட் பின்னூட்டம் இடுகிறார்களா?
  இப்பதான் புரிகிறது.
  அது எப்படி மாறியது என்று தெரியவில்லை.

  ReplyDelete
 2. check this out :

  http://www.cbbt.com/index.html

  ReplyDelete
 3. அப்பாடா. ஒரு மாதிரியா பின்னூட்டப் பெட்டியைத் திறந்தாச்சா.

  நியூயார்க் நகரையும் நியூஜெர்ஸியையூம் இணைப்பதற்காக ஹட்சன் நதியின் கீழ் பல சுரங்கப் பாதைகள் செல்கின்றன. அவற்றின் உட்பகுதி நீங்கள் போட்டு இருக்கும் புகைப்படம் போலத்தான் இருக்கும். என்ன உங்கள் பாலம் பாலமாக இருந்து பின் சுரங்கமாக மாறுகிறது. இங்கே நேராகச் சுரங்கம்தான்.

  என்ன இதை பிளான் போட்டது கிட்டத்தட்ட 100 வருஷங்களுக்கு முன்னாடி!

  http://en.wikipedia.org/wiki/Holland_Tunnel

  ReplyDelete
 4. வாங்க ரவீந்திரன் சின்னசாமி
  அட்டகாசமான ஒர் சுட்டி கொடுத்திருக்கீங்க.இது அதையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் போல் இருக்கிறது.
  முதல் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 5. ஆமாங்க இ.கொத்தனாரே,அதை நேஷனல் ஜியாகரபியில் பார்த்த ஞாபகம்.
  இந்த மாதிரி பெரிய வேலைகளில் ஈடுபடவேண்டும்.பல தொழிற்நுட்பங்களை கற்றுகொள்ளலாம்.
  நான் படித்து முடிக்கும் காலத்தில் கனடா சி.என். கோபுரத்தை ஆவென பார்த்தேன்.இப்போது அதெல்லாம் ஜுஜுபி ஆகிவிட்டது.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 6. உங்க பதிவு படம் அருமையா இருக்கு.
  நான் பார்த்த மொதல் டன்னல் ஹாங்காங் கெளலூன். அதுவும் 25 வருசம் முந்தி!

  இங்கே எங்கூர்லேயும் ஒரு டன்னல் இருக்கு. இது மலையைக் குடைஞ்சு செஞ்சது.2.4 மீட்டர் நீளம்.

  1861 லே ஆரம்பிச்சு 6 வருஷம் வேலை செஞ்சாங்களாம். 1867 லே போக்குவரத்து.
  140 வருசமாச்சு!

  ReplyDelete
 7. என்னது? 140 வருஷமா?
  மலையை குடைவதில் எனக்கு பிடித்தது மும்பாய் போகும் பொது புனே மற்றும் லோனாவாலே க்கு இடையே வரும் டணல் தான்.
  கிட்டத்தட்ட 25 இருக்கும் என நினைக்கிறேன்.
  திரு ரவீந்திரன் கொடுத்திருக்கும் சுட்டியை பாருங்கள்,இதெல்லாம் ஒன்றும் இல்லை என்று தோனும்.

  ReplyDelete
 8. என்ன இப்படிச் சொல்லிட்டீங்க! இப்ப இருக்கறதுமாதிரி அப்ப மாடர்ன் மெஷினரி ஏது?

  அதுவுமில்லாம அதுக்குச் செலவான காசுக்கு அப்ப toll வாங்குனாங்களாம். அதோட
  கடன் முடிஞ்சுபோச்சுன்னு இப்ப அதுக்குக் காசு கிடையாது ஃப்ரீதான். நம்மூட்டுக்கு
  யார்வந்தாலும் அதுவழியாக் கூட்டிட்டுப்போயிருவோம். எல்லாம் சைட் ஸீயிங்தான்:-)))))

  ReplyDelete
 9. நல்ல தகவல்கள் குமார் சார்.பிரமிக்க வைக்கும் படங்கள்

  இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே இம்மாதிரி ஒரு சுரங்கம் உள்ளது.ரயில்வே பயணம் மட்டுமே அதில் சாத்தியம்.

  ReplyDelete
 10. துளசி,உங்க டணலை சொல்லவில்லை.
  நான் மேலே போட்டிருக்கிற பாலத்தையும் ரவீந்திரன் சுட்டியில் கொடுத்திருந்த பாலத்தைப்பற்றி சொன்னேன்.
  ஜாக்கிரதை,மறந்து போய் யாரையேனும் இரண்டு தடவை அந்த டணலை பார்க்க கூப்பிட்டு போய் "டணல் துளசி" என்ற பட்டப்பெயர் வாங்கிக்கொள்ளப்போகிறீர்கள்.:-))

  ReplyDelete
 11. வாங்க செல்வன்,
  அந்த டணலையும் பற்றி தொலைகாட்சியில் பார்த்தேன்.
  நல்ல அருமையான வேலை.
  பூகம்பம் வந்தால் அதை எப்படி எதிர்கொள்ளும் என்று தெரியவில்லை.

  ReplyDelete
 12. குமார் சார்

  பூகம்பம் வரக்கூடிய சாத்தியக்கூறு உள்ள பகுதிகளில் இம்மாதிரி கட்டுமான அமைப்புகளை பெரும்பாலும் செய்யமாட்டார்கள்.இங்கிலாந்திலும், பிரான்சிலும் பூகம்பம் வந்து நான் கேள்விப்பட்டதே இல்லை.அதனால் தான் இம்மாதிரி கட்டுகிறார்கள் என நினைக்கிரேன்.

  (அப்புறம் பாப் அப் வடிவ பின்னூட்டம் சிலசமயங்களில் லோட் ஆக நேரம் எடுக்கலாம்.உங்கள் வசதிக்கு இடையூறு இல்லையெனில் அதை மாற்றுவது நல்லது)

  ReplyDelete
 13. செல்வன்
  பாப் அப் மாற்றிவிட்டேன்.
  இந்த மாதிரி யாராவது சொன்னாதான்,அடுத்தவங்க கஷ்டம் புரிகிறது.
  நன்றி

  ReplyDelete
 14. அமெரிக்காவிலேயே அதிக செலவு வைத்த நெடுஞ்சாலைக் கட்டுமானம், பாஸ்டன் நகரின் "Big Dig". ஊரெல்லாம் தோண்டித் தோண்டி அடியில் சுரங்கப்பாதை போட்டு, தோண்டி வைத்திருந்த காலமெல்லாம் அனைவரின் வதையையும் வாங்கிவிட்டார்கள். அதன் முக்கிய பகுதி, Ted Williams Tunnel:

  http://www.masspike.com/bigdig/index.html
  http://en.wikipedia.org/wiki/Big_Dig

  முதல் படத்திலிருக்கும் அந்த சுவீடன் tunnel பற்றி சமீபத்தில் தெரிந்துகொண்டு படங்களைப் பார்த்திருக்கிறேன். disappearing tunnel மாதிரி பிரமிக்க வைக்கிறது :-)

  ReplyDelete
 15. வாங்க சேதுக்கரசி
  சில கட்டுமானவேலைகள்,சற்று கொச்சையாக சொல்லவேண்டுமென்றால்
  "டக்கரா இருக்குபா" என்று சொல்லதோனும்.
  அவ்வளவு ஏன் தற்போது கிராண்ட் கேன்யானில் திறக்க இருக்கிற சின்ன நடைப்பாலம்...
  பொது மக்கள் அப்படியே நடந்துவிட்டு வெளியே போய்விடலாம்.கட்டுமானத்துறையில் வேலை பார்ப்பவர்கள்,சுத்தி ஒரு தடவை பார்த்துவிட்டு தான் கால் வைப்பார்கள்.:-))
  கொடுத்துள்ள சுட்டிக்கு நன்றி.

  ReplyDelete
 16. வர்ஜீனியாவின் கிழக்கில் இருக்கும் செஸபீக் பே ப்ரிட்ஜும் அழகான ஒன்று. http://www.cbbt.com/facts.html

  ரவீந்திரன் சொன்ன டன்னல்தான். அதில் பயணம் போவதே ஒரு சுற்றுலா அனுபவம். நிறைய ஜீவராசிகள் வாழும் அந்த சுற்றுப்புறத்தை காப்பாற்றுவதற்கு நிறைய முயற்சிகள் நடக்கின்றன.

  ReplyDelete
 17. வாங்க நாகு,
  ஜீவராசிகளை காப்பாற்ற நடவடிக்ககள் எடுக்கிறார்கள் என்பது "சந்தோஷமான விஷயம்".
  முதல் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 18. குமாருக்கு நன்றி. நீங்கள் ஆரம்பித்து வைத்த இந்த பகுதியிலிருந்து அநேக விஷயங்கள் அறிய முடிந்தது.

  ReplyDelete
 19. குமார்,

  அழகான படமும், அதற்கு உங்கள் அருமையான விளக்கமும் நன்றாக இருக்கிறது !

  ReplyDelete
 20. வாங்க காட்டாறு
  ஆமாங்க பலர் கொடுத்த சுட்டிகளில் அருமையான தகவல்கள் கிடைத்தது.
  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 21. நன்றி கோவியாரே.

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?