Saturday, November 17, 2007

முட்டி வலியா? கொசுவா?

நேற்று இரவு சென்னையில் தொலைக்காட்சி நிகழ்சிகளை பார்த்துக்கொண்டு இருக்கும் போது கமல்,பாலசுப்பிரமணியம் மற்றும் ரமேஷ் அரவிந்த் சேர்ந்து நிகழ்த்தும் ஒரு நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் நடைப்பெற்றது.

கமலின் நகைச்சுவையும் பாலாவின் கலாய்ப்பும் & ரமேஷின் பங்களிப்பும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டுபோய் கொண்டிருக்கும் வேளையில் கமலில் கை கால் பக்கம் போய் "பிடில்" வாசிக்க தொடங்கியதை தொலைக்காட்சியில் காணும் போது என்னவோ செய்தது.ஸ்டுடியோவில் கொசு தொல்லை தாங்க முடியவில்லை போலும் அடுத்து நமது S.P.Balasubramaniam யும் தொடங்கினார்.ஏனோ ரமேஷையை மட்டும் கொசு தொடவே இல்லை அல்லது நமக்கு தெரியவில்லையா என்று தெரியவில்லை.

பல லட்சக்கணமான மக்கள் பார்க்கும் ஒரு தொலைக்காட்சி அரங்கில் இவ்வளவு கொசு தொல்லையா? அதை எப்படி நிர்வகிக்கிறார்கள் என்று தெரியவில்லை.வரப்போகும் நிகழ்சிகளிலாவது இம்மாதிரி சொறியலை காண்பிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

கீழே இருக்கும் சலனப்படத்தை பாருங்கள் அதில் ஒரு துளி உங்கள் பார்வைக்காக...



நன்றி: ஜெயா தொலைக்காட்சி

2 comments:

நாகை சிவா said...

குமார் அண்ணனே!

இந்த நிகழ்ச்சி இரண்டு வருடங்களுக்கு முன்பே வந்த நிகழ்ச்சி என்று நினைக்குறேன். அதாவது வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். வந்த போது.... பார்த்த மாதிரி ஒரு ஞாபகம். ஆனால் மீண்டும் பாக்கலாம், அந்த அளவுக்கு அருமையான நிகழ்ச்சி.

வடுவூர் குமார் said...

அப்படியா சிவா?
முதன் முறையாக பார்ப்பதால் புதிதோ என்று நினைத்தேன்.
பிடில் வாசிப்பதை வேறு சமயத்தில் காண்பித்தார்கள்.அதை போடவில்லை.