சிங்கப்பூரில் கிரிக்கெட் ஆர்வலர்கள் குறைவு என்றாலும் சில பள்ளிகளிலும் இந்த ஆட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.அவ்வப்போது சில திடல்களில் நம்மூர் ஆட்கள் டென்னிஸ் பந்து கொண்டு ஆடுவார்கள்.கையும் காலும் ஊறும்,என்ன பண்ணுவது?
இப்படிப்பட்ட ஊரில் 20-20 ஐ ஆடவைக்கப்போகிறார்களாம்.ஹாங்காங்கில் இருந்தும் ஒரு குழு வருகிறதாம்
20-20 கிரிக்கெட் வெறும் 3 மணி நேரத்துக்குள் ஆட்டம் முடிந்துவிடும் என்பதால் பலரிடம் புகழ்பெற்று விளங்கும் இந்த ஆட்டத்தை சிங்கப்பூரில் அறிமுகம் செய்கிறார்களாம்.
மேல் விபரங்களுக்கு சலனப்படத்தை பார்க்கவும்.
நன்றி: வசந்தம் சென்ரல்.
2 comments:
வடுவூர் குமார் அவர்களுக்கு வணக்கம்.
இந்த கிரிக்கெட் 20=20 ஓவர் விளையாட்டு ஒரு வகையான ஃபாஸ்ட் ஃபுட் (அவசர உணவு) . கிரிக்கெட்டின்
நுணுக்கங்களை திறன்களை அறிந்து முறைப்படி பேட் செய்யும் அக்காலத்து உம்ரிகர், மன்காட், பேரிங்க்டன்,
முதலியோர் இந்த ஆட்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலுமா என்பது சந்தேகமே. எது எவ்வாறாயினும்
இதில் ஒரு த்ரில் இருக்கிறது. மறுக்கமுடியாதது.
ஒரு வேளை இன்னும் 10 வருடத்தில் 20 ஓவர் என்பது 20 பந்துகளானாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
இது ஒரு அவசர யுகம்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
பி.கு: தாங்கள் எனது வலைப்பதிவுக்கு வருகை தந்ததற்கு நன்றி.
எளிமையான தியான முயற்சி செய்ய,
http://pureaanmeekam.blogspot.com
வாருங்கள்.
வணக்கம் ஐயா.
நீங்கள் சொல்லியுள்ளது உண்மை தான்,என்ன செய்வது? காலத்துக்கு ஏற்ற மாதிரி மாற/மாற்ற வேண்டியுள்ளதே!
அந்த
so-hum வீடியோ சுட்டிக்கு மிக்க நன்றி.தியானத்தின் முதற் படி.
Post a Comment