நண்பர் ஒருவர் மின் அஞ்சல் மூலம் இந்த படங்களைஅனுப்பியிருந்தார்.
கட்டுமானத்துறையில் இப்போது கான்கிரீட் பயண்பாட்டை குறைத்து ஸ்டீலுக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள் அந்த விதத்தில் இந்த் ரியாக்டர் எப்படி ஆரம்பித்து எப்படி வெளியேறுகிறது என்று பாருங்கள்.
கிழே உள்ள படத்தில் உள்ள ரியாக்டர் வெல்டிங் வேலைகள் முடிந்து டெஸ்டிங்காக தயார் நிலையில் இருக்கிறது.
பூஜையை முடிச்சிடலாமா?
லார்சன் & டூப்ரோ வில் இதே மாதிரி பெரியவேலைகள் முடியும் போதும் பூஜை நடைபெறுவது வழக்கம்.
பூஜை முடிந்த பிறகு நியூமேடிக் டெஸ்டிங்
அப்பாடி நல்ல படியாக டெஸ்டிங் முடிந்தது.
அப்புறம் தூக்கிட்டு போக வேண்டியது தான்,என்ன கொஞ்சம் பெரிய வண்டியாக வேண்டும்.அதற்காக பஞ்சம் நம்மூரில்..
ரியாக்டரை இன்னும் கொஞ்சம் பக்கத்தில் காட்டய்யா!!இதோ
தண்ணீர் வழியாக கப்பலில் ஏற தயராக கொண்டுவந்திட்டாங்க..
அவ்வளவு தான் தண்ணீரில் ஏற்றிய பிறகு எங்கள் பணி முடிந்த்து என்ற பெருமூச்சுடன்..ஒரு குரூப் போட்டோ எடுத்துக்கலாமா?
கடைசியில் பாருங்கள்.
வாழ்த்துக்கள் நண்பர்களே,ரொம்ப நாள் கழித்து இந்த மாதிரி படங்களை பார்க்கும் போது திரும்ப அங்கு வேலைக்கு சேர்ந்த மாதிரி ஒரு தெம்பு கிடைக்குது.
3 comments:
Neuclear reactor என்றால் அணு உலை என்போம். இது என்ன உலை வடுவூரரே?
வாங்க ஐயா கைலாசி
தெரியலையே!! ஏதோ FCC என்று போட்டிருந்தது..
இனிமேல் தான் தேடனும்.
முதல் வருகைக்கு நன்றி.
fluidized catalytic cracking - இப்படி சொல்கிறது கூகிள்.
ஆத்தாடி என்ன இம்மாம்பெருசா கீது.. இதுக்கு உடைச்ச தேங்காய் ரொம்ப கம்மிதான் போல இருக்கு
Post a Comment