Monday, February 04, 2008

தேவ மொழி

எழுத்து....
அது எப்படி இருக்கனும் என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அபிப்பிராயம் இருக்கும்.ஒருவருக்கு பிடிக்கும் எழுத்தாளர்களை மற்றவர்களுக்கு பிடிப்பதில்லை.சாப்பாட்டில் எப்படி சுவை பேத அபிப்பிராயங்கள் இருக்குமோ அதே மாதிரி தான் எழுத்தாளர்களின் எழுத்து நடையும்.

ஒரு எழுத்தாளருக்கு எது தேவை என்பதை கீழ்கண்டவாறு ஒரு எழுத்தாளர் அதுவும் முதல் பக்கத்திலேயே கொடுத்துள்ளார்!!! முதல் பக்கத்திலேயே “குபுக்” என்று சிரிப்பை வரவழைத்துவிடுகிறார்.



யார் இவர்?

படித்தவர்களுக்கு தெரியும் அல்லது அவருடைய எழுத்து நடையில் இருந்து அனுமானிக்கலாம்.முடிகிறதா பாருங்கள்.

சி.குறிப்பு: இலவசகொத்தனாருக்கு பிடித்த எழுத்தாளர்.

6 comments:

இலவசக்கொத்தனார் said...

அதான் தலைப்பிலேயே சொல்லியாச்சே!! அப்புறம் என்ன தனியா சி.கு. :))

தலைவர் இப்போ இருந்தா வலைப்பதிவுகளில் கலக்கி இருப்பாரு இல்ல?! :)))

துளசி கோபால் said...

எங்கே அவன்?

சீக்கிரம் இங்கே அனுப்பி வைக்கவும்,

கடவுளைத்தான்

வடுவூர் குமார் said...

ஆமாங்க இ.கொத்தனார்,இன்றைக்கு இருந்திருந்தால் தினமும் வேலைக்கு போகும் முன்பு ஒரு பக்கத்தையாவது படித்துவிட்டு வேலைக்கு வரலாம்.கொஞ்சம் ரிலேக்ஸாக இருக்க உதவும்.

வடுவூர் குமார் said...

துளசி
உங்கள் பக்கதிலேயே இருக்கிறார். :-)
கடவுளை சொன்னேன்.

திவாண்ணா said...

சென்னை அல்லயன்ஸ் அவருடைய புத்தகங்களை நிறைய வெளியிட்டு இருக்கிறார்கள். எல்லாத்தையும் வாங்கியாச்சு இல்ல?

வடுவூர் குமார் said...

அப்படியா திவா?
இங்கு அவரின் பல புத்தகங்கள் புது பொலிவுடன் நூலகத்தில் கிடைக்கிறது இப்போது.
திரு தேவனின் புத்தகங்கள்/எழுத்துக்கள் காலத்தை கடந்தாலும் அப்படியே இழுத்துக்கொண்டு போய்விடுகிறது.