Wednesday, November 01, 2006

விமான டிக்கெட்

கிட்டத்தட்ட 15 நாட்கள் சென்னையில் பொழுது போனதே தெரியவில்லை.சில Functions, சில இறப்புகள் என்று விஷயங்கள் நகர்ந்துகொண்டிருந்தது.மழையை காரணம் காட்டி நாகை போக இருந்த பயணம் தள்ளிப்போடபட்டது.

போன முறை சூடு பட்டுக்கொண்டதால் இந்த தடவை திரும்ப வரும் பயணத்தை தொலைபேசியில் Confirm பண்ணாமல் நேரிடையாக பண்ணலாம் என்று "இந்தியன்" பயணாளர் உதவி எண்ணை கூப்பிட்டபோது நிஜமான துள்ளலான ஆண் குரல் கேட்டது.என்னுடைய தேவையை கொஞ்சம் மாற்றிக்கேட்டு "எங்கே" எனது பயணத்தை உறுதிபடுத்த வேண்டும் என்று கேட்டேன்.

நீங்கள் நகரம் பக்கத்தில் இருக்கும் பட்சத்தில் எழும்பூர் பக்கத்தில் எங்கள் அலுவலகத்துக்கு பக்கத்தில் வரலாம் இல்லாவிட்டால் விமான நிலையத்திலும் பண்ணலாம் என்றார்.

நன்றி என்று சொல்லிவிட்டு விமான நிலையத்துக்கு மனைவியுடன் போனேன்.

உள்ளூர் விமான சேவைக்கு பக்கத்தில் அலுவலகம் இருந்தது.

டிக்கட் மற்றும் விபரங்கள் சொன்னதும் கொஞ்ச நேரம் கணினியில் தட்டியபிறகு..

"உங்கள் விபரம் Confirm கிவிட்டது" என்று சொல்லி டிக்கெட்டை திருப்பித்தந்தார்கள்.

சரி என்று கிளம்பும் முன் டிக்கெட்டை பார்த்தபோது அதில் அவர்கள் check செய்தற்கான எந்த விதமான உத்திரவாதம் இல்லாமல் இருந்தது.மனைவியும், திரும்ப போய் Sticker / Chop" போடச்சொல்வோம் என்றார்.

அதற்குள் வேறொருவர் வந்துவிட்டதால் கொஞ்ச நேரம் காத்திருக்கும்படி ஆகிவிட்டது.கடைசியாக அவரும் ஸ்டிக்கர் ஓட்டச்ச்சொல்லி கேட்டபிறகு தான் செய்துகொடுத்ததை பார்த்தேன்.

என் முறை வந்தவுடன் முன்னவர் சொன்னமாதிரி செய்யச்சொன்னவுடன் ஒரு சிறிய சலிப்பு அந்த பெண்ணின் முகத்தில் தெரிந்த மாதிரி இருந்தது.போன முறை பட்ட அனுபவத்தை சொன்னவுடன் டிக்கட்டில் ஒரு குத்துவிட்டு கொடுத்தார்.

கிளம்பும் நாளும் வந்தது. 29 ம் தேதி இரவு 12.50 மணிக்கு பயணம்.வீட்டைவிட்டு 9.45க்கு கிளம்பினேன்.மச்சினர் வாடகை கார் எடுத்து வீட்டிற்கு வந்திருந்தார்.எல்லோரும் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம்.

என்னை விமானநிலையத்தில் கொண்டுவிட்டு விட்டு அவர் போவதாக பிளான்.

மழை தூரல்களுக்கிடையே கிளம்பி சில குளங்களை கடந்து கோயம்பேடு பஸ் நிலையத்தை தாண்டி வண்டி ஓடிக்கொண்டிருந்தது.

ஹாரன் தேவைப்படும் போது மட்டும் அடிக்கவேண்டும் என்ற நியதியெல்லாம் கிடையாது.சும்மா போகும் போது ஒரு அடி அடித்தால் கொஞ்சம் சந்தோஷம் வரும் என்ற பாணியில் பலர் காதின் பலத்தை சோதித்துகொண்டிருந்தார்கள்.

உலகத்தில் ஏதேனும் மோட்டார் தங்கள் கார் தரக்கட்டுப்பாட்டை சோதிக்கவேண்டும் என்றால் சென்னை அதுவும் மழைகாலம் சரியான நேரம் / இடம்.ஒரு மாதத்தில் தெரிந்து விடும் அவர்கள் design தேறுமா தேறாதா என்று.

சுமார் 45 நிமிடங்கள் பயணம், விமான நிலையம் வந்துசேர்ந்தோம்.

மழையும் பிடித்துக்கொண்டது.

கூட்டம் அதிகமாக இருந்ததால் மெதுவாக நழுவி புறப்பாடு வாயிலை அடைந்தேன்.

வந்திருந்தவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு உள்ளே போனால் லு·தான்சா மற்றும் இந்தியனுக்கும் ஒரே வாயிலை போட்டு நெருக்கடி ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

xray முடிந்து பெட்டிக்கு கயறு போட்டு கட்டி அனுப்பிவைத்தார்கள்.

அடுத்து Boarding Pass வாங்கச்சென்றேன்.

கடவுச்சீட்டையும் டிக்கெட்டையும் கொடுக்கும் போது "முடிந்தால் ஜன்னல் இருக்கை" கொடுங்கள் என்றேன்.அவர் கவனித்தமாதிரி தெரியவில்லை.நம்ம தான் அடிக்கடி போகிறோமே..கவலைப்படவில்லை.அதே மாதிரி கிடைக்கவும் இல்லை.

அங்கு இருந்தவர் என்னுடைய டிக்கெட்டை பார்த்துவிட்டு கொஞ்சநேரம் கணினியில் ஊர்ந்தார்,பிறகு

பக்கத்துக்கு பக்கத்தில் உள்ள இன்னொரு சக ஆபிஸரிடம்

"என்ன சார் வெங்கடேசன் "Already Boarding" போட்டு கொடுத்திட்டீங்க்??

அவர் முழிக்க

அப்புறம் அவர்களுக்கே விளங்கக்கூடிய தலையாட்டலுக்குப்பிறகு எனக்கு சீட் போட்டுக்கொடுக்கப்பட்டது.

இதற்கிடையே பக்கத்து மேஜையில் ஒரு ஆனும் பெண்ணும்..
அவர்கள் தங்கள் திரும்ப போகும் பயணத்தை நேரிடையாக confirm செய்யவில்லை போலும்.ஒருவருக்கு தான் Confirm ஆகியுள்ளதாக அந்த ஆபிஸர் சொல்லிக்கொண்டிருக்க அங்கு உஷ்ண நிலை அதிகமாகிக்கொண்டிருந்தது.

பிறகு எப்படியோ, அவர்களை ஒன்றாக விமானத்தில் பார்க்கமுடிந்தது.

இந்தியன் - FAQ வில் இதை போட்டால் பல புது பயணிகளுக்கு செளகரியமாக இருக்கும்.

போனில் விஜாரித்து Confirm செய்து PNR வாங்கி அதற்கு பிறகு அப்படி இப்படி என்று அலைக்கழிப்பது "இந்தியனுக்கு" உகந்தது அல்ல.சீக்கிரம் திருத்துங்கள்.

பின் குறிப்பு: இந்தியன் ஏர் லயன்ஸ் = இந்தியன். (என்ன பெயர் மாற்றமோ)

மீதி அடுத்த பதிவில்

2 comments:

 1. எழுதிக்கொள்வது: ஆசாத்

  குமார்ஜி,

  ரீகன்ஃபர்மேஷன் ஃபோனில் செஞ்சாலே போதுங்க. அதாவது, ஒங்க பழைய பிஎன்ஆர் புக்கிங்ல, சிங்கைலேர்ந்து வந்தப்ப, ரிடர்ன் ஆவறதுக்கு என்ன ட்ராவல் ப்ளான் இருந்துதோ அது மாறலைன்னா எந்த பிரச்சனையும் கெடையாது.

  ஒருவேளை நீங்க ரிடர்ன் ஆவற தேதிய மாத்துனீங்கன்னா ஏர்லைன்ஸ் ஆஃபீசுக்குப் போயி வேற பிரிண்ட்அவுட் எடுக்றதுதான் நல்லது.

  ஸ்டிக்கர் போட்டாலும் இப்ப பண்ண ரீகன்ஃபர்மேஷனுக்கு ஒரு பிரிண்ட்அவுட் குடும்மா ராஜான்னு செல்லமா பேசி வாங்கி வச்சுக்கணும்.

  இந்தப் பதிவப் பாத்ததும் நாமளும் ஒரு ரீகன்ஃபர்மேஷன் அனுபவங்கள்னு பதிவு போடலாமான்னு தோணுது.

  அன்புடன்
  ஆசாத்

  11.54 1.11.2006

  ReplyDelete
 2. வாங்க ஆசாத் ஜி
  அப்படியெல்லாம் முடிவெடுத்திடாதீங்க..
  போனதடவை வந்த போது எவ்வித மாற்றம் இல்லாமலே நம்மளை போட்டு பாத்திட்டாங்க.
  அதை இங்கே பார்க்க
  நன்றி
  பயணங்கள் எல்லாம் சுமூகமாக நடந்திருக்கும் என நம்புகிறேன்.

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?