Friday, November 03, 2006

சொந்த வீடு (1)

இது வாடகை வீடு தொடரின் தொடர்ச்சி..

முந்தைய பதிப்புகள்
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து

பழைய வீட்டு ஓனர் சொன்னது இது தான்.

"உங்களுக்கு என்று தனி வீடு வாங்காத வரை இந்த மாதிரியான பிரச்சனை இருந்துகொண்டு தான் இருக்கும்" என்றார்.

நான் வீடு வாங்கிய பிறகு,எனக்கு மேல் மாடியில் உள்ளவர்களுக்கு வயசாகி சாப்பாட்டை வெளியில் தூக்கி அடித்தால் அப்போது என்ன பண்ணுவது?

விதியை தான் நம்பவேண்டும்.

வீடு வாங்குவதற்கான வழி முறைகளை நான் தேர்ந்தெடுத்த முகவர் ஒரு பட்டியல் போட்டு கொடுத்தார்.

வங்கியில் இருப்பு கொஞ்சம் ஏறவும்,CPF எனப்படும் மத்திய சேமநிதியில் கொஞ்சம் பணம் சேர்த்தவுடன் கணக்கு போட்டால் கிட்டத்தட்ட சுமார் 15K உதைத்தது.

இதன் உள்ளே போவதற்கு முன்பு..

இதை பார்த்திடுவோம்.

வெளிநாட்டு பிரஜைகள் இங்கு எப்படி வீடு வாங்குகிறார்கள்?

மேலோட்டமாக பார்ப்போம்.

இரண்டுவிதமான வீடுகள்

1.HDB (Housing Development Board) -பலர் வாங்குவது இதைத்தான்.

2.தரை வீடு

3.தனியார் பேட்டைகள் (Condominiums)

இரண்டும் மூன்றும் என் நிலையில் இல்லாததால்(இதன் உள் விஷயங்கள் எனக்கு அவ்வளவாக தெரியாது) முதலில் உள்ளதை மாத்திரம் பார்ப்போம்.

இந்த HDB வீட்டை யார் யார் வாங்க முடியும்?

இங்கே தட்டவும்

சிங்கை குடியுறிமை பெற்றவர்கள் மற்றும் நிரந்தரவாசிகள்

சிங்கைவாசிகள் (Citizen) வாங்குவது மற்றும் அதன் தொடர்பான விஷயங்கள் நமக்கு சம்பந்தம் இல்லாததால் அதை தள்ளிவிடுவோம்.

வெளிநாட்டவர்கள்: நிரந்தரவாசிகள்,குடும்ப அமைப்புடன் இருப்பவர்கள் மட்டும் தான் வாங்க முடியும்.

முதலில், வீட்டின் விலையில் 20%ஐ(இப்போது 10% ஆக உள்ளது) வாங்கும் போது கட்டவேண்டும்.மிச்சத்தை மாதத்தவணையில் கட்டவேண்டும்.நான் வாங்கும் போது அவர்களே இந்த கடன் வசதியை கொடுத்தார்கள்.இப்போது வாங்கப்படும் வீடுகளின் கடனை வங்கிகள் கவனித்துக்கொள்கின்றன.என்ன வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.தற்போது வட்டிவிகிதம் 3.82% ~ 4.5% க இருக்கிறது.

இந்த வட்டிவிகிதத்திலும் சில பிரிவுகள் இருப்பதால் எல்லாவற்றிலும் நுழையாமல் மேலே போவோம்.

அடுத்து வீடு பார்க்கவேண்டும்.

வீடுகளிலும் பல விதங்கள் இருக்கின்றன

3 ரூம் (சுமார் 70 சதுர மீட்டர்கள் இருக்கும்)

4 ரூம்- அதாவது 3 ரூம் 1 ஹால். இதுவும் சுமார் 95 சதுர மீட்டர்கள் இருக்கும்.

5 ரூம்

Executive Type

Studio Apartment ( இது வயதானவர்களுக்காக)

வசதி குறைந்தவர்களுக்கான ஓரறை வீடுகளும் உள்ளன.

என்னுடைய சம்பளம்,வயது,நிதிகையிருப்பு இதையெல்லாம் வைத்துப்பார்த்து மூவறை அல்லது நாலறை வீடு வாங்கலாம் என்றார்கள்.

அதன்படி தேடல் தொடங்கியது.

அடுத்தது இங்கே..

4 comments:

ராவணன் said...

"3 ரூம் (சுமார் 70 சதுர அடிகள் இருக்கும்)

4 ரூம்- அதாவது 3 ரூம் 1 ஹால். இதுவும் சுமார் 95 சதுர அடிகள் இருக்கும்"


சதுர அடிகள் இல்லை,சதுர மீட்டர்கள்

வடுவூர் குமார் said...

ராவணன் சரியாகச்சொன்னீங்க்.
தவறை திருத்தியதற்க்கு நன்றி.

துளசி கோபால் said...

என்ன குமார்,

வட்டி இவ்வளொ குறைவா இருக்கே. இதைப்போய் அதிகமுன்னு சொல்லிட்டீங்க!

இங்கே நியூஸியிலே 7.95% முதல் 8.2 % வரை இருக்கு. இதுவும் எங்களுக்கு
எவ்வளவோ பரவாயில்லைன்னுதான் இருக்கு. ஏன்னா, நாங்க வாங்குன முதல் வீட்டுக்கு
வட்டி, (மயக்கம் வந்துரும்) 18%. ஆனா அப்ப வீடு விலை குறைச்சல். இப்ப எல்லாம்
ஆறேழுமடங்கு ஆகிப்போச்சு(-:

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
பொத்... ZZZZZZZZZZZZZ
மயக்கம் போட்டுட்டேன்.
18%ஆஆஆ
நல்ல வேளை அங்கு வீடு வாங்க ஆசைப்படவில்லை.