இதற்கு முன்பு உள்ள பதிவுகள்
ஒன்று
இரண்டு
மூன்று
பொருளாதார சுணக்கம் வந்த பிறகு எந்த வேலையும் ஒரு வருடத்துக்கு மேல் இல்லை.இங்கு வாழ்வதில் உள்ள சிக்கல் ஓரளவு புரிந்தது.அதுவும் வீடு வாங்கிவிட்டால்,வேலை கிடைக்காத பட்சத்தில்,வெளியேற முடியாத நிலைக்கு நம்மை நாமே தள்ளிக்கொண்டது தெரிந்தது.உள்ளூர் மக்களுக்கே வேலை கிடைக்காத பட்சத்தில் வெளி ஆட்கள் வேலை தேடுவது குதிரைகொம்பாக இருந்தது.
இங்கு வரும் ஆங்கில நாளிதழ்களில்,அதுவும் சனிக்கிழமை அன்று வரும் வேலைக்கான பக்கங்கள் வெறும் 4ஆக மாறின.சாதாரணமாக 30~ 40 என்று வரும்.
சம்பளம் தடாரென்று 1000~1500 வெள்ளி வரை குறைத்து கொடுக்கப்பட்டது.வேணும் என்றால் வாங்கிக்க வேண்டாட்டி போய்கோ என்ற நிலமையில் இருந்தது.மனிதவள மேம்பாட்டு துறை மூலம் பதிந்துகொண்டு பலருக்கு வேலை தேடிக்கொடுக்கும் பணியையும் அரசாங்கம் ஏற்படுத்தியது.அப்படி எனக்கும் ஒரு வேலை தேடி வந்தது.அது பிளாஸ்டிக் இன்ஜெக்ஸன் துறையில்.கொஞ்சமும் சம்மந்தம் இல்லாததால்,வரவில்லை என்று சொல்லிவிட்டேன்.அவர்களும் புரிந்துகொண்டார்கள்.
பொருளாதார சுணக்கம் வந்து 8 மாதங்கள் அந்த கம்பெனியில் வேலை இருந்தது.
வேலை இல்லை என்று கடிதம் கொடுத்து 15 நாட்களில் எனது பெற்றோர் சிங்கப்பூரை சுற்றிப்பார்க்க வந்தார்கள்.அவர்கள் பயணம் பல நாடக்ளுக்கு முன்பே உறுதிப்படுத்திவிட்டதால் மாற்றமுடியவில்லை.வந்த கொஞ்ச நாட்களுக்கு பிறகு லேசாக கசியவிட்டேன்.
நான் சிங்கப்பூர் வருவதை விரும்பாத என் பெற்றோர்கள் வந்த போது நான் வேலையில்லாமல் வீடு வாங்கிக்கொண்டு குடும்பத்துடன் இருப்பதை பார்த்தால் எப்படியிருந்திருக்கும்?
கொடுமை தான்.
இதற்கிடையில் சில நேர்காணலுக்கு போனாலும் பலன் ஒன்றும் இல்லை.
ஒரு மாதம் வீட்டிலேயே இருந்து கொண்டு வேலை தேடிய எனக்கு கடைசி நாள் அன்று ஒரு கொரிய கம்பெனி அழைத்து மறுநாள் வேலைக்கு வரும்படி சொன்னது.
சம்பளம்..? இழப்பு தான். வேலை கிடைக்குதே! அதுவே அதிசியம் தான்.
கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது.
ஆனால் அந்த வேலையும் 1 வருட காலத்துக்குள் முடிந்து மீண்டும் உளைச்சலை அதிகப்படுத்தியது.
இந்த சமயத்தில் என்னை மாதிரி 1997 சமயத்தில்தான் வீடு வாங்கி விற்கமுடியாமல்,அடி மாட்டு விலைக்கு கொடுத்தவர்கள் கதை நாளிதழ்களில் வரத்தொடங்கியது.
சரி இதை வாங்கிய "வீவக"விடமே கொடுக்கமுடியாதா?
அது அடுத்த பதிவில்.
6 comments:
வேலை இல்லாமல் வீட்டுக்கு 'மார்த்கேஜ்' கட்டமுடியாமப்போனா இங்கே
அந்த பேங்க் அந்த வீட்டை ஏலத்துலே விட்டுட்டுக் கடன் தொகையை வசூல்
பண்ணிக்கும். அந்த மாதிரி வீடுகள் ஏலத்துலே வரும்போது அதை 'மார்ட்கேஜ் சேல்'னு
விளம்பரம் பண்ணிருவாங்க. வீட்டோட உண்மை விலைக்கும் ஏலம் போகும் விலைக்கும்
சம்பந்தமே இருக்காது. எவ்வளவு கடன் நிலுவையோ அது வந்தாப்போதுமுன்னு பாங்க்
இருக்கும். வாங்குறவங்களும் விலையை ஏத்தாம எவ்வளவு குறைவாக் கிடைக்குமுன்னே
இருப்பாங்க. கடைசியில் வீட்டு சொந்தக்காரங்க இதுவரை கட்டுன பணம், டெபாசிட் தொகை
அவ்வளவும் போயே போச்.
நண்பர் ஒருவருக்கு இது நடந்து கண்கூடாகப் பார்த்தோம்.நாம் உதவி செய்ய முடியாத அளவு
பெரிய தொகை.
கேட்கவே பாவமாக இருக்கு.
நல்ல வேளை பொருளாதார சுணக்கம்,என்னை அந்த அளவுக்கு கொண்டுபோய்விடவில்லை,ஆனால் வேறு பக்கம் போய் இழுத்துவிட்டது.
அது வரும் பதிவுகளில்.
நன்றி
சிங்கப்பூரில் இருக்கும் பிரச்சினை இந்த வீட்டு பிரச்சினை தான், அதை நானும் தற்சமயம் அனுபவித்து வருகிறேன், பெரிய தொகை தேவைப்படும், வேலையும் நிரந்தரமாக இருக்காது, மன உளைச்சல் தான், எல்லாவற்றிற்கும் இறைவன் போதுமானவன்,
அடுத்த பதிவு எப்போ?
துளசி கோபால் அவர்கள் எந்த நாட்டில் வசிக்கிறார்கள்?
நாகூர் இஸ்மாயில்
வாங்க இஸ்மாயில்
இது ஒரு மாதிரி கஷ்டம்,அவ்வளவு தான்.நிரந்தரவாசத்தகுதியுடன் தான் இருக்கப்போகிறேன் என்ற நினைப்பு இருந்தால் சில முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவேண்டும் அவ்வளவு தான்.மற்றபடி கொஞ்சம் காசு,நல்ல நிறுவனம் இருந்தால்..
நல்ல இடம்,
தூய்மையான காற்று,
இணையம்,
தமிழ் படம் உடனுக்குடன் பார்க்க,
சாமி கும்பிட,
தேசம் வாரியாக உடம்பு உடும்பு பிடி பிடிக்க..
24 மணி நேரம் குடி தண்ணீர்,மின்சாரம் உள்ள
இந்த ஊரில், நம்மூர் திண்ணையில் ஹாயாக சில பேர் இருபார்களே அதே மனநிலையில் இங்கு இருக்கலாம்.
வீடு வாங்கி அனுபவிங்க!!
பல விஷயங்கள் தெரியவருகிறது உங்கள் பதிவுகளை படிக்கும்போது.
வாங்க செந்தழல் ரவி
முடிந்தால் தொடருங்கள்..கடைசியில் இதன் மதிப்பு எவ்வளவு என்று தெரியும்.
வருகைக்கு நன்றி.
Post a Comment