Friday, October 27, 2006

துணி துவைக்கும் இயந்திரம்

நான்கு நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டில் உள்ள துணி துவைக்கும் இயந்திரம் வேலை செய்யவில்லை என்றும், வேறு ஏதாவது புது மாடல் கிடைக்குமா? என்று பார்க்கச் சொன்னார்கள்.

அதற்கு முன்பு அந்த பழைய இயந்திரத்தை பழுது பார்க்கமுடியுமா என்று எங்கெங்கோ தேடியதில் சலிப்பு தான் மிஞ்சியது.இத்தனைக்கும் அது “Godrej” மாடல்.அதற்குப்பிறகு தான் அதை Trade-in முறையில் வெளியேற்ற முடியுமா என்று பார்த்தோம்.

சரி என்று விவேக் அன்ட் கோ - வடபழநியில் உள்ள கடைக்குப்போய் தேவையான விபரங்களை சொன்னவுடன் அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கிக்கொண்டு “ நாளை விடுமுறை என்றாலும் எங்கள் ஆட்கள் வேலை செய்வார்கள்” - அதனால் தொலை பேசிவிட்டு வந்து பார்க்கிறோம் என்றார்கள்.

பழைய இயந்திரத்தை எடுத்துக்கொண்டு புது இயந்திரம் கொடுப்பதாகச்சொன்னார்கள்.வீட்டுக்கு வந்து பழைய இயந்திரத்தை பார்த்து விலையை முடிவு செய்வோம் என்றார்கள்.

சரி என்று ஒத்துக்கொண்டாயிற்று.

இன்று வரை ஆதாவது அவர்கள் சொன்ன தேதிக்கு மேல் 2 நாட்கள் ஆகிவிட்டது ஒன்றும் நடக்கவில்லை.

ஏதோ எங்கோ தவறு நடந்திருக்கிறது என்று தெரிந்தவுடன் இனி அவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்று நேற்று திரும்ப ஒரு சுற்று வரலாம் என்று நினைத்து வண்டியை எடுத்துக்கொண்டு தி.நகருக்கு கிளம்பினோம்.

கடந்த சில நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில் அவ்வப்போது மழை பெய்து கொண்டிருந்தது.நாங்கள் வண்டியை எடுக்கும் போது லேசான தூரல் இருந்தது.

வண்டியை போதீஸ் பக்கத்தில் உள்ள சந்தில் இடம் இருந்ததால் விட்டு விட்டு கிளம்பினோம்.கொஞ்சதூரம் போனவுடன் தான் தெரிந்தது மனித நடைபாதைக்குள் இருசக்கர வாகனங்களின் நிறுத்தும் இடம் ஏற்படுத்தப்பட்டிருப்பது.

என்ன காரனமோ தெரியவில்லை பல போலீஸ்காரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.

குமரன் சில்க்ஸ்,சரவணா தங்க மாளிகை என்று தாண்டித்தாண்டி வந்து சேர்ந்தோம் இந்த கடைக்கு

முதல் இடம்: ரத்னா ஸ்டோர்

“வாஷிங் மிஷின் பார்க்கனும்”

“மூனாவது மாடிக்குப் போங்க”

கடை கோடியில் இருக்கும் மின் தூக்கிக்கு கையை காண்பித்தார்கள்.

கடையில் வேலை செய்யும் ஒருவர் அதை இயக்கியதால் பிரச்சனை ஏதும் இல்லாமல் மூன்றாவது மாடிக்கு வந்து சேர்ந்தோம்.

அந்த மாடியில் அப்போது ஒரே ஒருவர் மாத்திரம் இருந்தார்.அவர் தான் அங்கு மேற்பார்வையாளரா என்று தெரியாததால் நாங்களே தேடிக்கொண்டு துணி துவைக்கும் இயந்திரம் இருக்கும் இடத்திற்கு போய் ஒவ்வொறு மூடியையும் திறந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.

விலை பட்டியல் இல்லை.. மோசமான நெகிழி ((plastic) இயந்திரத்தின் மேல ஒட்டிக்கொண்டிருந்த்து.நாங்கள் பார்த்துகொண்டிருக்கும் போது எங்களுக்கு உதவ அந்த மனிதரும் முன்வரவில்லை.

இதற்கிடையில் வேறு ஒரு குழு வெட் கிரைண்டர் பார்க்க வந்துவிட்டதால் அவர் அவர்கள் கேள்விக்கு பதில் சொல்ல போய்விட்டார்.

இருக்கும் 8 அல்லது 9 இயந்திரத்தை எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருப்பது?

விடு ஜூட்

மீதி அடுத்த பதிவில்..

6 comments:

 1. இதுதான் க(ஷ்)ஸ்டமர் சர்வீஸ்(-:

  சில கடைகளில் வேற மாதிரி. மேலே விழுந்து பிடுங்குவாங்க.

  அதிலும் ஹெல்த் & க்ளோ கடைக்குள் காலை வச்சுப் பாருங்க.

  ReplyDelete
 2. குமார்,

  நீளமான ரம்ஜான் விடுமுறை மற்றும் உடல் நலக்குறைவில் நெட், தமிழ்மணம் பக்கம் வரவில்லை சில நாட்களாக. இன்னிக்கு வந்தால் நீங்க நட்சத்திரமாக ஜொலிக்கிறீர்கள்!

  என் வாழ்த்துக்கள். (தாமதமான)

  ReplyDelete
 3. துளசி
  க(ஷ்)ஸ்டமர் -- கஷ்ட்டத்திலும் சிரிக்க வைக்கிறீர்களே!!
  :-))

  ReplyDelete
 4. நன்றி ஹரிஹரன்.
  Get Well Soon.

  ReplyDelete
 5. வாடிக்கையாளர், வேடிக்கையாளர் ஆகட்டும், கொஞ்சம் வேடிக்கை பாக்கட்டும் என்று நினைத்திருப்பார் அந்த அலுவலர்;
  ரத்னாவில் கொஞ்சம் under staffed தான்; பல நேரங்களில் பணம் கட்டி விட்டு, பொருளை மட்டும் வாங்க ஒரு மணி நேரம் கூட ஆகியுள்ளது! 'மேல்' அதிகாரி தான் இது போன்ற தருணங்களில் துணை :-)

  ReplyDelete
 6. வாங்க கண்ணபிரான்
  அடுத்த பதிவையும் பாருங்க.
  நிறைய மாற்றங்கள் தேவை.

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?