Wednesday, December 06, 2006

கதாவிலாசம்

எஸ்.ராமகிருஷ்ணன்.

இவரை, தமிழ் எழுத்துலகம் அதுவும் ஆனந்தவிகடன் புத்தகம் படிக்கும் பலருக்கும் தெரிந்திருக்கும் & பரிச்சயமானவர்.இவருடைய தேசாந்திரி தொடர் படிப்பவர்களுக்கு இவருடைய எழுத்தைப்பற்றி தெரிந்திருக்கும்.

முதலில் நானும் இந்த தொடரை பார்த்தபோது,அதில் வரும் படங்கள் அவ்வளவாக பிடிக்காததால் "பாஸ்" செய்துகொண்டிருந்த போது ஒரு நாள் ஏதோ கோயில் படம் போட்டு எழுதியிருந்தார்.சும்மா அட்டகாசமாக இருந்தது.அதிலிருந்து அவரையும் படிக்க ஆரம்பித்தேன்.
கடந்த வாரம் நூலகம் போனபோது தற்செயலாக அவர் எழுதி "விகடனார்" வெளியிட்ட "கதாவிலாசம்" என்ற புத்தகம் கிடைத்தது.

சும்மா அட்டகாசமான"லே அவுட்" உடன் வந்திருக்கிறது.ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு எழுத்தாளருடன் பின்னிப்பிணைந்திருக்கிறார்.

தமிழ்மணத்தில் வரும் பல பதிவுகளை ஒன்று திரட்டிப்போட்டது போல் உள்ளது சில நிகழ்வுகள்.

இவருடைய பல நிகழ்வுகளை ஆனந்தவிகடன் மூலம் படித்திருந்ததால் அதையெல்லாம் மேலோட்டமாக பார்த்துவிட்டு படிக்காதது மட்டும் படித்தேன்.

ஊர் சுற்றுவதில் உள்ள சுகம்,ஒரு எழுத்தாளனை சந்திக்கும் போது என்ன நேர்கிறது என்று ஒரு சின்ன உலகத்தையே படைத்திருக்கிறார்.

நம் சக வலைபதிவாளர்களுக்காக அட்டைப்படம் இங்கே.

Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image Hosting

பெண் சுதந்திரம்,அவர்களின் வலி,குடும்ப கட்டுக்கோப்பு,போலீஸ்காரரின் விநாயகர் கண்ணாடி என்று ஒரு வரைமுறைக்குள் கொண்டுவரமுடியாதபடி எழுதியுள்ளார்.

பலரும் படித்து பயனைடைய வேண்டிய நூல் என்பதால் இந்த பதிவு.

அதுவும் இளம் எழுத்தாளர்களுக்கு.

ஆமாம் இதென்ன கடைசியில் பாரதியார்?
Photobucket - Video and Image Hosting

இதை படித்தால் யாரவது பிரொபைல் ஞாபகத்துக்கு வருதா?

எனக்கு வந்தது.

கண்டுபிடிச்சுக்குங்க.

ஒரே ஒரு க்குளு- இவர் சென்னையில் இருப்பவர்.

படங்கள்:நன்றி:விகடனார் அவர்களே.

13 comments:

 1. இந்தப் பெயரைக் கண்டால் கடந்துபோக முடியாதபடி இவருடைய எழுத்துக்களால் கவரப்பட்டவள் நான். கதாவிலாசம் மற்றும் துணையெழுத்து இரண்டையும் பல தடவைகள் வாசித்திருக்கிறேன். வீட்டிற்கு வந்து தங்கும் யாராவது வாசிக்க ஏதாவது வேண்டுமெனக் கேட்டால் சிறிதும் தயக்கமின்றி இந்தப் புத்தகங்களை எடுத்துக்கொடுப்பதுண்டு. விழித்திருப்பவனின் இரவு, உறுபசி இவைகூட நல்ல வாசிப்பனுபவங்கள். தேசாந்திரி நிறைவுபெற்றுவிட்டதென்று நினைக்கிறேன். எஸ்.ராமகிருஸ்ணனின் நெடுங்குருதி நாவலின் உள்ளே போகமுடியவில்லை. மிதமிஞ்சிய வாசிக்க முடியாத அளவு வெறுமையைத் தூண்டும் ஒரு நாவல். அதுவே அதன் சிறப்பும். ஒரு தடவை நேரில் சந்தித்திருக்கிறேன். மிக எளிமையான மனிதர். அவருடைய எழுத்துக்களைப் போலவே ஆழமானவரும்கூட. சமீபத்தில் ஏதாவது எழுதியிருக்கிறாரா என்று தெரியவில்லை. நியூ புக் லான்ஸ் பக்கம் போய் நாளாயிற்று.

  ReplyDelete
 2. வாங்க தமிழ்நதி
  முதல் முறையாக வந்து இருக்கிறீர்கள்.
  என்னோட பதிவில் பின்னூட்டம் வேலை செய்கிறது என்பதை உங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.
  :-))

  ReplyDelete
 3. Anonymous8:16 PM

  நான் அவருடைய விகடன் தொடர்கள் மூலமே அவருடைய எழுத்துக்களை தெரிந்துகொண்டேன்.வலைபதிவுகளை பற்றி அறிந்தபோது கூகிள் மூலம் எனக்கு அவரின் தமிழோவியத்தின் அட்சரம் எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துலகம் தளத்தை பார்த்தேன்.அருமையான எழுத்துக்கள் அவருடையது.

  ReplyDelete
 4. Anonymous2:55 AM

  aanandha vikatan is always super.
  ramakrishnan parri therindhu kondaen. postukku nanri

  ReplyDelete
 5. வாங்க லக்ஷ்மி
  சிலருடைய புத்தகங்கள் & எழுத்துக்கள் இந்த மாதிரி திடிரென்று மனதுக்கு பிடித்துப்போய்விடும்.அதில் இவரும் ஒருவர்.
  இனிமேல் தான் தேடிப்பிடித்து படிக்கவேண்டும்.
  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 6. வாங்க கிட்டு
  ஆனந்தவிகடன் எப்பவுமே சூப்பர் தான்.படைக்கும் விதத்தில் வித்தியாசம் காட்டுவதால்.சமீப காலங்கலாக மற்றவர்களோடு போட்டி போட,காலத்துக்கு தகுந்த மாதிரி காட்டிக்கொள்ள வேண்டிய அவசியத்தில் "தாவணி இழந்த பெண்கள் மற்றும் இறுக்கமாக உடை அணிந்த பெண்களோட" படங்கள் எங்களை மாதிரி கொஞ்சம் வயசான ஆட்கள் கண்ணை கஷ்டப்படுத்துகிறது.
  நல்லவற்றை மாத்திரம் படித்துவிட்டு மீதிக்கு ஜூட் விடவேண்டியது தான்.

  ReplyDelete
 7. // இதை படித்தால் யாரவது பிரொபைல் ஞாபகத்துக்கு வருதா?

  எனக்கு வந்தது.

  கண்டுபிடிச்சுக்குங்க.

  ஒரே ஒரு க்குளு- இவர் சென்னையில் இருப்பவர்.//

  எனக்கு நினைவில் வந்தது எங்க ஊர்க்காரர் நம்பி.பா (பதிவின் பெயர் வைகறை வானம்) தற்போது இருப்பது கலிஃபோர்னியா ஆரஞ்சு நகரில் என்று பதிவில் எழுதியிருக்கிறார்.
  http://vaigaraivaanam.blogspot.com/2006/11/blog-post.html

  ReplyDelete
 8. வாங்க பாலராஜன் கீதா.
  நல்ல பதிவுக்கு சுட்டி கொடுத்தது பற்றி சந்தோஷம்.
  இதே வார்த்தைகளை கொஞ்சம் இளக்கி இங்கே போட்டிருக்கார் பாருங்க.
  எனக்கு இவர் ஞாபகம் தான் வந்தது.

  ReplyDelete
 9. அருமையானவர்...நிறைய படிக்க தூண்டிவிட்டீங்க...

  ReplyDelete
 10. Anonymous4:29 PM

  மிக நல்ல எழுத்தாளர். கதாவிலாசம் வாசித்திருந்தாலும், "உபபாண்டவம்" எனக்கு மிகவும் பிடித்தது.

  இவரின் எழுத்துக்களில்,வர்ணனைகள் மற்றும் உருவகங்கள் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும்.

  ReplyDelete
 11. ஆமாங்க ஹரி
  உருவங்கள் தூக்கலாக இருந்தாலும் அவர் எழுதும் பாணியில் எல்லாம் மறைந்து விடுகிறது.
  முதல் முறையாக வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
  நன்றி

  ReplyDelete
 12. குமார்

  நல்ல பதிவு!

  நல்ல விசயத்தை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 13. வாங்க சிவபாலன்.
  வருகைக்கு நன்றி

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?