Monday, December 18, 2006

இணைய வலை (2)

நமது நண்பர் அன்று உபயோகப்படுத்திய விபரம்.
19.11.06 விடியற்காலை 3.49 வரை உபயோகப்படுத்தியுள்ளார்.
கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

Photobucket - Video and Image Hosting

வீட்டு ஓனர் பேசிய தொனியில் இருந்தே பிரச்சனை கொஞ்சம் பெரிது என்று கண்டுகொண்டேன்.

கொஞ்சம் படபடப்பு மனிதர் என்பதால் அவர் சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தேன்.இந்த மாதிரி படபடப்பு ஆசாமிகளிடம் பழகும் போது அவர்கள் சொல்வதை முழுவதும் கேட்டபிறகு,ஆதாவது அவர்களை டிரைன் அவுட் செய்தபிறகு நீங்கள் சொன்னீர்கள் என்றால் கேட்பார்கள்.அவர்கள் படும் அவசரத்துடன் நீங்களும் சேர்ந்துகொண்டால் நீங்கள் சொல்வது அங்கு சுத்தமாக கேட்கப்படாது.வீணான பிரச்சனை தான் வரும்.

ஏங்க நீங்க 19ம் தேதி அமெரிக்காவுக்கு தொலைபேசினார்களா?

இல்லீங்களே,எனக்கு தெரிந்து என்னுடைய உறவினர்களோ,நண்பர்களோ இல்லையே என்றேன்.எத்தனை மணிக்கு என்று போட்டிருக்கா?

விடியல் காலை 4 மணிக்கு.

என்னது! விடியல் காலை 4 மணிக்கா? நான் நன்றாக தூங்கிக்கொண்டிருந்திருப்பேன்.அந்த சமயத்தில் நான் பண்ணவில்லையே,என்றேன்.

19ம் தேதி என்ன கிழமை வருகிறது? என்றார்.

பார்த்தால் ""ஞாயிற்றுக்கிழமை"

கொஞ்ச நேரத்தில் புரிந்தது நமது நண்பருக்கு இரவல் கொடுத்த இணைய இணைப்பின் மகிமை என்று.

அதைச்சொன்னவுடன் அவருக்கு இன்னும் கோபம் அதிகமாகியது.என்னிடம் கேட்காமல் ஏன் கொடுத்தீர்கள்.பிறகாவது என்னிடம் சொல்லியிருக்க வேண்டாமா? என்றார்.

சட்டென புரிந்தது,நமது நண்பர் என் காலை வாரிவிட்டது.

வீட்டு ஓனரிடம் நான் சொல்லச்சொன்னதையும் அவர் சொல்லாததையும் சொல்லி மன்னிப்பு கேட்டேன்.சரி அதனால் என்ன பிரச்சனை என்றேன்.

அவருடைய டெலிபோன் பில்லுக்கு 93 வெள்ளி அதிகமாக வந்திருந்ததால் தொலைபேசி கம்பெனியே வெளிநாட்டு அழைப்புகளை நிறுத்திவிட்டனர்.இதன் காரணமாகத்தான் அவரால் ஆஸ்திரேலியாவுக்கு அழைக்கமுடியவில்லை.இந்த மாதிரி தொல்லைகள் இணையம் ஆரம்பித்த காலங்களில் தேவையில்லாத இடங்களுக்கு போய் தட்டிக்கொண்டிருந்தவர்கள் இழந்ததால் பட்டென்று கட் செய்துவிட்டார்கள்.

இப்போது புரிந்தது அன்று நான் சொல்லியும் நமது நண்பர் நான் சொல்லியும் தொலைபேசி கேபிளை திரும்ப இணைக்காமல் விட்டார் என்று.

ஓனரை ஓரளவு சாமாதானப்படுத்தி நான் வீட்டுக்கு வந்தபிறகு அந்த பில்லை பார்த்து முடிவுசெய்யலாம்,அப்படி அந்த பையன் பண்ணவில்லை என்றால் நான் செய்த தவறுக்கு நானே அந்த பணத்தை கொடுக்கிறேன் என்றேன்.

அதில் கொஞ்சம் சமாதானம் அடைந்தார்.

வீட்டுக்கு போய் பில்லை பார்த்தேன்.

எல்லாமே விடிகாலை அழைப்புகள்.

அன்று இரவு நமது நண்பர் வெகுநேரம் கழித்து வந்ததால் பேச முடியவில்லை.
மறு நாள் காலை அலுவலகம் கிளம்பும் முன் வெளியே வந்த போது இது பற்றி கேட்ட போது தனக்கு எதுவும் தெரியாது என்றும்.நான் விடியற்காலை 4 மணிவரை இணையத்தை உபயோகித்தேன் என்றார்.

அப்படி என்றால் யார் 4 மணிக்கு அமெரிக்காவிற்கு தொலைபேசியது? இது ஓனர்.
சில சமயம் இணையத்திருடர்கள் இந்த மாதிரி செய்வார்கள் என்று சால்ஜாப்புகள் சொல்ல ஆரம்பித்தான்.

நீ இல்லை என்றால் நான் இன்றே காவல்நிலையத்தில் புகார் செய்வேன் என்றார். தவறு உன் பக்கத்தில் இருந்தால் உன் நிரந்தரவாசத்தகுதியை கூட இழக்க நேரிடும் என்றார்.
இதற்கு எப்படி நான் மட்டும் பொறுப்பாக முடியும்?என்னை காண்பித்து, இவரும் தான் உபயோகிக்கிறார் அதனால் 50- 50 பகிர்ந்துகொள்ளலாம் என்றான்.

எனக்கோ செம கோபம் வந்தது."வேலியில் போற ஓணானை.."

அதற்குள் ஓனர் "அவர் 5 நாட்களாக உபயோகிக்கிறார்,அப்போதெல்லாம் வராத பிரச்சனை நீ உபயோகிக்கும் போது ஏன் வந்தது?" என்றார்.

பதில் சொல்ல முடியாத கேள்வி,அதற்குள் எனக்கு வேலைக்கு நேரமானதால் கிளம்பிவிட்டேன்.

கடைசியாக வேறு வழியில்லாமல் முழு பணத்தையும் தருவதாகச்சொல்லி அப்போதே தந்துவிட்டான்.

அவன் எங்கு போனான்?,எதை தட்டினான்?,எதைப்பார்த்தான்?எதுவும் எனக்கு தெரியாது.

அவனால் நான் இழந்தது வீட்டு ஓனர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை.
நண்மை செய்யப்போய் மாட்டிக்கொண்டேன்.

டையல் அப்பில் இருக்கும் நண்பர்களே உங்களுக்கே தெரியாமல் எதையும் கவனிக்காமல் எண்டர் பட்டனை அமுக்கிக்கொண்டிருந்தால் இந்த மாதிரி கஷ்டத்தில் மாட்டிக்கொள்ளலாம்.

இங்குள்ள தொலைபேசி நிறுவனம் முன்கூட்டியே தெரிந்துகொண்டு இந்த மாதிரி அழைப்புகள் நேரும் போது துண்டித்துவிட்டு அந்தந்த நபரிடம் தெரிவிக்கிறார்கள்.இதுவே சிறுவர்கள் செய்து அப்படியே விட்டுவிட்டார்கள் என்றால் அவர்களது தொலைப்பேசி கட்டணம் எகிறியிருக்கும்.

ஜாக்கிரதை!!

இனி வரும் பதிவுகள் கொஞ்ச நாட்களுக்கு முன்பு மேட்டூர் வரை வந்து, விட்டதில் இருந்து தொடங்கும்.

8 comments:

 1. //படபடப்பு ஆசாமிகளிடம் பழகும் போது அவர்கள் சொல்வதை முழுவதும் கேட்டபிறகு,ஆதாவது அவர்களை டிரைன் அவுட் செய்தபிறகு நீங்கள் சொன்னீர்கள் என்றால் கேட்பார்கள்//

  அருமையாச் சொன்னீங்க குமார் சார்.
  Lend your ear and then he will lend his hand என்பார்கள்!

  உங்கள் அனுபவங்களின் ஊடே, இது போல சிந்தனைத் துளிகள் தருகிறீர்கள்! நன்றி!!

  ReplyDelete
 2. Anonymous10:04 AM

  இதைப் போல் நண்பர்களால் சிலப் பிரச்சனைகள் வந்தாலும், அவர்களிடம் தகுந்தவாறு பேசினால் பிரச்சனைகள் வருவதற்க்கு வாய்ப்புகள் குறைந்து விடும்.

  ReplyDelete
 3. வாங்க ஜி
  இந்த நண்பர் நடவடிக்கை அப்பாவித்தனமாக இருந்தாலும்,என்னை போட்டுப்பார்த்துவிட்டான்.
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 4. வாங்க கண்ணபிரான்,
  என்னுடைய தொழிலில் இந்த மாதிரி மனிதர்கள் தான் அதிகம்.அடிபட்டு தெரிந்து தெளிந்தேன்.
  நன்றி

  ReplyDelete
 5. குமார் நல்ல மனசு மட்டும் போதாது.விழிப்பும் வேணும்னு புரிஞ்சுது.
  சாமி !! காப்பாத்து:-(

  ReplyDelete
 6. வாங்க வல்லிசிம்ஹன்
  சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள்.
  என்ன பண்ணுவது சிலர் இப்படியும் இருக்காங்க.
  கருத்துகளுக்கு நன்றி

  ReplyDelete
 7. குமார்,

  நீங்க எழுதியிருக்கிறது முற்றும் உண்மை. நண்பன் என்று நினைத்து உதவப் போய் நானும் வம்பில் மாட்டிக் கொள்ளப் போயிருக்கிறேன். நல்ல வேளை கடைசி நேரத்தில் மற்றொருவர் சொல்லித் தப்பித்தேன். சும்மாவா சொன்னாங்க "பாத்திரம் அறிந்து பிச்சையிடு" அப்படின்னு.

  ரங்கா.

  ReplyDelete
 8. என்னங்க பண்ணுகிறது ரங்கா?
  பிச்சையிட்ட பிறகு தான் தெரிகிறது.
  எல்லாம் அனுபவம் தான்.
  நன்றி

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?