Friday, January 29, 2010

படியில் ஒரு நிலா.

வியாழக்கிழமை விடுமுறையை எப்படியோ டிவி மற்றும் கடற்கரைக்கு போய் ஓட்டியாகிவிட்டது.காலை 10 மணிக்கு பார்த்த அதே டெண்டுல்கர் மாலை 4 மணிக்கு வந்து வெறுப்பேத்தினார்.டேப்பை நேரத்து Programme பண்ணிவிட்டு விட்டு போய்விடுவார்கள் போலும்.
மாலை 4.30 மணிக்கு கிளம்பி கடற்கரை பக்கம் போனேன்.வழக்கத்து மாறாக அலை அதிகமாக இருந்தது தெரிந்தது அதோடு ஏறு அலையாக இருந்ததால் தண்ணீரும் கரை வரை வரும் போல் இருந்தது.



மறு நாள் வெள்ளி, சாயங்காலம் வரை வீட்டிலேயே பொழுது போக்கிவிட்டு வெளியில் போனால் சூரிய பகவான் இப்படி வரவேற்றார்.



அப்படியே மெதுவாக Qurm பூங்கா வரை போய்விட்டு அங்கிருந்து பார்த்தால் நம் சந்திர பகவான் அழகாக மேலெழும்பி காட்சி தந்தார்.அதை பார்த்ததும் இளையராஜா,வைரமுத்து மற்றும் ரகுமானும் வந்து போனார்கள்.



அப்படியே மேலும் கொஞ்ச தூரம் சுற்றிவிட்டு அங்கிருக்கும் அரங்கத்து படிகளில் ஏறினால் நிலா பெண் இப்படி காட்சி கொடுத்தாள்.நல்ல கேமிராவாக இருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.

2 comments:

Unknown said...

இங்கு ஒமனில் வார விடுமுறையை கழிப்பது ரொம்ப கஷ்டம் தான். நான் முழுவதும் இனையம் தான்

வடுவூர் குமார் said...

ஆமாங்க மின்னல்,நேரத்தை போக்குவது சிரமாகத்தான் இருக்கு.குடும்பத்துடன் இருப்பவர்கள் பாடு இன்னும் கஷ்டம் தான்.