Friday, January 15, 2010

மஸ்கட்டில் இருந்து யாருமே இல்லையா?

கடந்த 4 ஆண்டுகலாக பல பதிவுகளை பல நாடுகளில் இருந்து எழுதியவர்களை படித்திருக்கேன் ஆனால் இன்று வரை மஸ்கட்டில் இருந்து வந்த எந்த பதிவையும் படித்த ஞாபகம் இல்லை.சரி இங்கு தமிழரே இல்லையோ என்னவோ என்று அபத்தமாக நினைக்கவில்லை.Ruwi பக்கம் போனால் சிங்கை சிரங்கூன் சாலை போல் தமிழ் வார்த்தைகளை கேட்கமுடியும் மற்றபடி எங்காவது கூட்டம் இருந்தால் தமிழ் வார்த்தைகளை கேட்கமுடியும்.

நேற்று பொங்கலுக்கு எங்கு போவது என்று தெரியவில்லை.MTR Ready to eat பொங்கல் வேறு அடிக்கடி கண்ணில்பட்டுக் கொண்டிருந்தது இருந்தாலும் அதை பண்ணி சாப்பிடுவதில் அவ்வளவு இஷ்டம் இல்லை.எப்படியோ சாயங்காலம் வரை வீட்டில் உட்கார்ந்து டிவி பார்த்துவிட்டு பிறகு கிளம்பி கடற்கரை பக்கம் போனேன்.வழக்கத்தை விட கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது தண்ணீரும் மேல் எழும்பி வந்துகொண்டிருந்தது.ஒவ்வொரு குடும்பமும் காற்றாடியை வைத்துக்கொண்டு அவற்றை மேலெழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

மஸ்கட்டில் பொங்கல் சிறப்பு கீழே உள்ள படம் தான்.




சூரியன் மறையும் அழகு

8 comments:

Anonymous said...

I m here in Muscat....

வடுவூர் குமார் said...

oh! got one person.
Thats good sign.Welcome Muscatboy.

சிங்கை நாதன்/SingaiNathan said...

மஸ்கட் ( வற்றாயிருப்பு ) சுந்தர் இருந்தார். ஆனா இப்போ அமெரிக்காவில் ;)

http://agaramuthala.blogspot.com/

அன்புடன்
சிங்கை நாதன்

வடுவூர் குமார் said...

Thanks Singai Nathan
Hope u r well now.May god bless you to come back normal.

வடுவூர் குமார் said...

Thanks Ramanathan,since ur phone No. is there I didn't publish.I will call u later.

Unknown said...

என்னையும் மஸ்கட் பதிவராகவே ஏற்றுகொள்ளுங்கள்.அப்புறம் www.Rithu's Dad.blogspot.com என்ற பதிவரும் மஸ்கட்டில் இருக்கிறார். நானும் ஒரு துறை சார்ந்த பதிவை இட்டுஇருக்கிறேன்.பார்த்து விட்டு சொல்லுங்கள்

வடுவூர் குமார் said...

நிச்சயமாக மின்னல்,நானென்ன ஏற்றுக்கொள்ள?என்ன ஒர் 8 மணி நேர Journey செய்யும் தூரத்தில் இருகீங்க.
அந்த சுட்டியில் பதிவு ஏதும் இல்லையே!!

Unknown said...

அந்த சுட்டியில் புது வருட வாழ்த்துக்கு பின் வேறு பதிவு இல்லை .என்ன ஆச்சு என தெரியவில்லை