இந்த புத்தகம் கண்ணில் பட்டதும் இதை படிப்பதா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்துடன் இருந்தேன். தெரிந்த கதை ஏற்கனவே பல புத்தகங்களில் படித்தது நிறைய கதாகாலட்ஷேபத்தில் கேட்டதையே திரும்பவும் படிக்கனுமா என்ற நிலையில் பொழுது போக்குவதற்காக படித்தேன்.
தலைக்கு வைத்தால் நிச்சயம் தலைகாணி தேவைப்படாது என்பது போன்ற அளவு நிச்சயம் தூங்கத்தான் போகிறோம்(தூங்காம இருக்கத்தான் இந்த படிக்கும் வேலையே!!) என்று நினைத்தேன்.
படிக்கப்படிக்க ஒவ்வொரு பக்கமும் ஒரு சரித்திரமாக இருக்கு.புரிதல்கள் மற்றும் விளக்கங்களும் கணக்கிடமுடியாத காலகட்டத்தில் என்ன மாதிரி எண்ணங்கள் இருந்திருக்கின்றன என்று யோசிக்கும் போது வியக்காமல் இருக்கமுடியவில்லை.
ஆத்திகர்/நாத்திகர் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒரு முறையாவது படித்து பயன்பெற வேண்டும்/சுயசோதனை செய்துகொள்ளவேண்டிய அவசியம்.
சோ, மொட்டை தலையன், சொட்டை தலையன்,பார்பன அடிவருடி என்ற எண்ணத்துடன் படித்தால் இழப்பு அவருக்கல்ல.
20 comments:
`துக்ளக்'கில் தொடராக வெளிவந்தபோது (ஆண்டு நினைவில்லை; எழுபதுகளாக இருக்கலாம்) படித்திருக்கிறேன்.
அடிக்கடி எடுத்துப் படிக்கவேண்டிய நூல்.
வாய்ப்பு கிடைக்கும் போது படி??துப்பார்க்கிறேன்
துக்ளக் ல் தொடராக வந்தபோது ஆர்வத்துடன் படித்தது. (DDல் மகாபாரதம் புரியறதுக்காக...)
மகாபாரதத்தின் வெவ்வேறு புத்தகங்களைப் பற்றிய தேடல் ஆரம்பித்துள்ள இந்த நேரத்தில் மிகச்சரியா இந்தப் பதிவு வந்துருக்கு.
அடுத்தமுறை இந்தியப் பயணத்தில் வாங்கிவரவேண்டிய புத்தக லிஸ்டில் சேர்த்தாச்சு.
வாங்க அ.நம்பி
நானும் சில தொடர்கள் துக்ளக்கில் படித்தேன் ஆனாலும் இப்புத்தகத்தை படிக்கும் போது அதன் வீச்சே தனியாக இருக்கு.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி.
சின்ன அம்மினி
நிச்சயம் படிக்க முயலுங்கள்,நேரவிரயம் அல்ல என்று தைரியமாக சொல்லமுடியும்.
வாங்க தென்றல்
850 ரூபாய் தானாம்,வாங்கி போட்டுவைங்க எப்பாவாவது உதவும்.
வாங்க துளசி
நிச்சயம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய புத்தகம்.
இப்போது இருக்கும் வீட்டில் இப்புத்தகம் வாங்கிய மாதிரி பக்கங்கள் கலையாமல் இருந்ததை பார்த்த போது வருத்தப்படமட்டுமே முடிந்தது.
சந்தேகமே இல்லாமல் இது ஒரு பொக்கீஷம் தான்.என்ன கொஞ்சம் எடை அதிகமாக இருக்கும்,2 பாகங்கள் சுமார் 1300 பக்கங்கள்.
Hi..வடுவூர் குமார் Sir,
Here is the Podcast related to your post.. I found on net
http://www.podbazaar.com/show/mahab
http://englishtamil.blogspot.com/
வாங்க தமிழ்நெஞ்சமே
அருமையான சுட்டி கொடுத்து இந்த பதிவை முழுமை செய்திருக்கிறீர்கள்.மிக்க நன்றி.
இரண்டாவது சுட்டி - மிக மிக அருமை.
ஆழ்ந்துபடிக்கவேண்டும்.
தமிழ்நெஞ்சம்,
ரொம்ப நன்றி உங்க சுட்டிக்கு. முதல்முறையாக் கேட்டு ரசிச்சுக்கிட்டு இருக்கேன்.
குமார்,
http://www.podbazaar.com/view/144115188075856100
இது கேட்டுப் பார்த்தேன். ரொம்ப நல்லாச் சொல்றார் சுரேஷ்.
இந்த கணினியில் ஸ்பீக்கர் இல்லை,வேறு இடத்தில் கேட்கனும்.
மிக்க நன்றி - துளசி.
/சோ, மொட்டை தலையன், சொட்டை தலையன்,பார்பன அடிவருடி என்ற எண்ணத்துடன் படித்தால் இழப்பு அவருக்கல்ல./
சோ ஒரு நல்ல எழுத்தாளர். அவரை திட்டுபவர்கள் கூட படிக்கிறார்கள் ஆனால் வெளியில் சொல்லிக்கொள்வதில்லை.
வடுவூர் ஏரிக்கரை ஞாபகம் வருதா உங்களுக்கு இப்பெல்லாம்
வாங்க குடுகுடுப்பை
ஏரிக்கரை ஞாபகம் அவ்வப்போது வருகிறது,என்ன செய்வது?ஒருவேளை ஓய்வுக்காலத்திலாவது போக வாய்ப்புகிடைக்குதா என்று பார்ப்போம்.
?்குமார்,
மகாபாரதம் படிக்க வேண்டிய நேரம? ??ன் ஈஇது.
நன்றி.
வாங்க வல்லிசிம்ஹன்
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சிங்கத்திரம் கொடுக்கலாமா?:-)) ஆனா ஒரு முறையாவது படிச்சிடுங்க.
சமயங்களில் சோ அவர்களின் கருத்துகள் சற்று biased ஆக இருப்பது உண்மைதான் என்றாலும் அவருடைய எழுத்துக்களில் ஒரு தனி வசீகரம் உண்டு. நிச்சயமாக என்ஜாய் பண்ண முடியும். அவர் என்ன எழுதினாலும் படிக்க விரும்பும் ஒரு ரசிகன் நான்.
வாங்க Maximum India
அவரின் எங்கே பிராமணன் என்ற புத்தகம் தான் என்னை உசுப்பிப்போட்டது,அதிலிருந்து எப்போதாவது கிடைத்தால் படிப்பேன்.சுமார் 1300 பக்கங்கள் என்ற மொழிபெயர்பை இவ்வளவு சுவாரஸ்யமாக கொடுப்பது என்பது மிகப்பெரிய வேலை அதுவும் நம் முன்னோர்களின் வாழ்கைமுறை கொள்கைகள் நிறை/குறை என்பதை அப்படியே கொடுத்திருப்பது இதை எங்கோ இழுத்துப்போகிறது.
unmai than..
Post a Comment