Sunday, November 02, 2008

கத்திப்பாரா அழகு.

கத்திப்பாரா பாலம் - அனைத்து கிளைகளும் திறக்கப்பட்ட பிறகு
(படங்கள் என் மனைவி எடுத்தது)




என்னையா இது பாலத்தை இவ்வளவு செலவு பண்ணி கட்டிவிட்டு பெயர் பலகையை இப்படியா வைப்பது அதுவும் புயல் வரும் சென்னையில்.சரியான அரைவேக்காட்டுத்தனமா தெரியுது.



என்ன தான் சொல்லுங்க,பார்ப்பதற்கு கொஞ்சம் அழகு கூடிய மாதிரி தான் இருக்கு.சாலை மார்க்கிங்கை அடிக்கடி போடுங்கப்பா!

மேம்பால பகுதியிலும் POT HOLES வராம இருக்கனும்.

10 comments:

jeevagv said...

படங்கள் அருமையா இருந்தது, குமார் சார்!
//(படங்கள் என் மனைவி எடுத்தது)//
அதானே பார்த்தேன், அங்கே துபாய், இங்கே சென்னையா!

வெங்கட்ராமன் said...

"POT HOLES" அப்படீன்னா?
கட்டுமானம் சம்பந்தமானதா ?

துளசி கோபால் said...

கத்திபாரா பாலம் எல்லாப் பகுதியும் திறந்துட்டாங்களா?

நெசமாவாச் சொல்றீங்க!!!!!

வடுவூர் குமார் said...

வாங்க ஜீவா
பிலிம் செலவு தான் இல்லையல்லவா,சுட்டுத்தள்ளுகிறார்.

வடுவூர் குமார் said...

வாங்க வெங்கட்ராமன்
பாட் ஹோல் - ரோட்டில் அவ்வப்போது குழி விழும் அல்லவா அது தான் பாட் ஹோல் அது பெரும்பாலும் தரை மீது போடப்படும் சாலைகளில் அதுவும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் இடங்களில் சகஜமாக ஏற்படும் ஒன்று.அந்த மாதிரி பாலத்தின் மீது ஏற்படாமல் இருக்கவேண்டும்.அப்படி ஏற்பட்டால் அது உலக அதிசியமாகக் கூட கருதப்படலாம். :-))
அதைப் பற்றிய பதிவு தனியாக போடுகிறேன்.

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
ஆமாம் முழுவதுமாக திறந்துவிட்டார்களாம்.மக்கள் நடமாட (சாலை ஓரத்தில்)வசதியில்லை என்று செய்தித்தாளில் குறை சொல்லியிருந்ததாக கேள்விப்படுகிறேன்.இதற்கு முன்பு எழுதிய..
தோள் காணேன் பதிவு ஞாபகத்துக்கு வந்தது.

துளசி கோபால் said...

மேம்பாலத்துலே நடைபாதை பாதசாரிகளுக்காக வைக்கும் வழக்கம் இங்கே இல்லை.

அதெப்படி மேம்பாலத்துலே......

வடுவூர் குமார் said...

இங்கே கேட்டிருக்கார்களாம்,முழு விபரம் தெரியவில்லை.
பாதசாரிக்கு, அதுவும் இந்த மாதிரி பாலங்களில் இடம் ஒதுக்குவதில்லை.

நாகை சிவா said...

பாலத்தை பாத்தவுடன் அப்பாடானு என்று இருந்தது.... (ஒரு வழியா முடித்தார்களே என்று தான் )

வடுவூர் குமார் said...

வாங்க சிவா,நலமா?
இன்னும் வேலையிருக்கும் என்றே தோன்றுகிறது.பொதுவாக எல்லா வழியையும் திறந்துவிட்டிருக்கார்கள்.