Wednesday, November 19, 2008

புர்ஜ் துபாய் கட்டிடம்

இதைப் பற்றி பலரும் படம் போட்டு அருமை பெருமையெல்லாம் எழுதிட்டாங்க அதனால் வேறு ஒன்றும் சொல்ல இல்லை.

இங்கு வந்த நாள் முதலாக பக்கத்தில் போய் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் மட்டும் உறுத்திக்கொண்டு இருந்தது அது இன்று (19/11/08) மதியம் நிறைவேறியது அதுவும் எதிர்பாராமல்.

காலை 11 மணிக்கு தலை கூப்பிட்டு இன்னிக்கு ஒரு மெட்டிரீயல் டெஸ்ட் இருக்கு குத்தகைக்காரர் அழைத்துப்போவார் போய் வா என்றார், அத்தோடு இங்கிருந்து அங்கு போக வாகன நெரிசலில் 1 மணி நேரம் ஆகும் என்றார்.சரி,இங்கு சும்மா இருப்பதற்கு போய் வரலாம் என்று 12.30 க்கு கிளம்பினோம்.போகும் சாலையில் இக்கட்டிடம் தென்பட்டதும் அதை செல்பேசியில் பதிந்தேன் இதை பார்த்துக்கொண்டிருந்த நண்பர் அதன் கட்டிட விபரங்களை சொல்லி நாங்கள் அதன் அருகில் தான் வேலை பார்த்தோம் வேண்டுமென்றால் திரும்ப வரும் போது அங்கு போகலாம் என்றார்.



சுமார் 2.10க்கு அந்த வேலையை முடித்துவிட்டு திரும்பும் போது குத்தகைக்காரர் புர்ஜ் துபாய் பக்கம் போய் வரலா என்றார். அவர் சொல்லி முடிக்கும் முன்பே சரி என்றேன்.என்ன ஒரு 1 கி.மீட்டர் தள்ளி நிற்க வைத்து காண்பிப்பார் என்று பார்த்தால் அந்த கட்டிடத்துக்கு அருகிலேயே கொண்டுவிட்டு அதிசியப்படுத்திவிட்டார்.



கட்டுமானத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் படத்தின் மீது சொடுக்கி பல விபரங்களை காணலாம்.வேலை செய்பவர்கள் எப்படி மேலே போகிறார்கள்,கட்டிடம் கட்டும் சாமான்கள் எப்படி மேலே போகின்றன் என்ற விபரங்கள் அருமையாக தெரியும்.

இந்த கட்டிடம் பைல் (PILE) எனப்படும் தாங்கும் தூண்களில் நிற்கிறது, அது 1500 விட்டம் என்றும் தரைக்கு கீழே சுமார் 45 மீட்டர் ஆழம் வரை தோண்டி போட்டுள்ளார்களாம்.167 மாடி வரை கான்கிரீட்டாலும் அதற்கு மேல் ஸ்டீலாலும் கட்டிடம் அமைந்திருப்பதாக சொன்னார்கள்.இப்போது ஸ்டீல் கட்டுமானம் நடந்துகொண்டிருக்கிறது.



அராப் டெக் மற்றும் சாம்சங் நிறுவனமும் கூட்டு சேர்ந்து கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.எம்மார் என்னும் நிறுவனம் தான் இந்த கட்டிடத்தின் உரிமையாளர்.

மறக்காமல் படத்தின் மீது சொடுக்கிப்பாருங்கள்.

11 comments:

துளசி கோபால் said...

ஹைய்யோ.....
பிரமிப்பா இருக்கு!!!!

கிஷோர் said...

அடேங்கப்பா அட்டகாசமா இருக்குது.
நேற்றுதான் நானும் என் நண்பனும் இதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

நாகை சிவா said...

உள்ளே செல்வதற்கே 500 திராம் மாமே.... தள்ளி நின்று பாத்ததோடு சரி

வடுவூர் குமார் said...

துளசி- நேரில் பார்க்கனும் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும்.

வடுவூர் குமார் said...

வாங்க கிஷோர்
அட! அப்படியா?

வடுவூர் குமார் said...

வாங்க நாகை சிவா
உள்ளே போக இப்போது அனுமதிக்கிறார்களா? என்று தெரியவில்லை.ஆனாலும் 500 திராம் மிக மிக அதிகம்.

Tech Shankar said...

அருமைங்க.. படங்களும், பதிவும்

வடுவூர் குமார் said...

நன்றி தமிழ்நெஞ்சம்

கணினி தேசம் said...

நல்ல புகைப்படங்கள்.

திருப்புவிழாவிற்காக காத்திருக்கிறேன். Should try to visit the Highest Obervatory suppose to be opened above 100 floors.

வடுவூர் குமார் said...

வாங்க கணினிதேசம்

தூசிமூட்டம் இல்லாத நாளாக பார்த்து 100 மாடிக்கு மேல் போய் பார்க்கனும்.எனக்கு இதெல்லாம் வேலைசெய்யும் போதே பழக்கமாகிவிட்டதால் அவ்வளவு உயரத்துக்கு போய் பார்க்கும் ஆசையெல்லாம் இல்லை.
முழு உயரத்துக்கு போய் நின்றால் பனை மரத்தின் மேல் நிற்பது போல் சிறிது ஆட்டம் இருக்கும் அதை ரசிக்கனும்.

கணினி தேசம் said...

தைவானில் இருந்தபோது "Taipei 101" கட்டிமுடித்தார்கள், நான் இருக்கும்வரை.. Tower' க்கு கிழே அமைந்துள்ள வணிக வளாகம் மட்டுமே திறக்கப்பட்டது.

அதனால் தான் இக்கட்டிடத்தின் மேலேரிப்பார்க்க சிறிய ஆசை.

//முழு உயரத்துக்கு போய் நின்றால் பனை மரத்தின் மேல் நிற்பது போல் சிறிது ஆட்டம் இருக்கும் அதை ரசிக்கனும்.// நான் பார்த்தது நிலநடுக்கத்தால் ஆடிய ஆட்டம்தான். :-)))