Monday, December 01, 2008

கட்டுமானத்துறையில் சரிவு??

போன மாதம் முதல் வாரத்தில் இருந்தே இங்குள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்களை அவரவர் ஊருக்கு நீண்ட விடுமுறையில் அனுப்பப்போவதாக செய்தி கசிந்துக்கொண்டிருந்தது அது இன்று உறுதிப்படுத்தப்பட்டது.இங்கு நான் வேலை செய்யும் சைட்டின் குத்தகைகாரர் அமீரகத்தில் ஒரு பெரிய ஆள் தான், இருந்தாலும் இப்போது வந்துள்ள நிதி நெருக்கடி அவரையும் விட்டுவைக்கவில்லை போலும்,வந்து சில மாதங்களே ஆன பொறியாளரை நீண்ட விடுமுறையில் போகச்சொல்லிவிட்டர்கள்.

இதே போல் பல நிறுவனங்களும் தங்கள் ஆட்குறைப்பு வேலைகளை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.இதில் சூடுபடப்போகிறவர்கள் எல்லோருமே என்றாலும் குடும்பம்,குழந்தை அவர்களின் படிப்பு என்று இங்கு காலை ஊன நினைத்துள்ள பலரின் நிலமை கவலை அளிக்கிறது.இவர்களின் வேலை போனால் அதோடு விசாவும் ஒரு மாத அவகாசத்தில் காலாவதியாகிவிடும் என்பதால் பலவகை கடன்கள்,வீடு மற்றும் பொருட்களை என்ன செய்வது போன்ற கவலைகளும் தலைக்கு மேல் ஓட காத்துக்கொண்டிருக்கும்.

தீர்வுகள் கண்ணுக்கு புலப்படாத நிலையில் முதலாளிகள் பலரும் தங்கள் இடுப்புவாரை இறுக்கிக்கொள்ளவே முயல்வார்கள்.

என்ன தான் நிலமை மோசமாக இருந்தாலும் வீட்டு விலை மற்றும் வாடகை மட்டும் குறைந்தபாடில்லை,இன்னும் எவ்வளவு மாதங்களுக்கு தாங்கிப்பிடிப்பார்கள் என்று தெரியவில்லை.

குளிர்காலம் ஆரம்பித்திருந்தாலும் நிதி நிலமை சூடு இன்னும் அதிகமாகி பலரை சுடப்போகிறது என்றே தோனுகிறது.

4 comments:

துளசி கோபால் said...

ரிசெஷன் காரணம் உலகம் பூராவும் இப்பச் சரிவுதான் எல்லா வேலைகளிலும்.

நியூஸியிலும் பல இடங்களில் ஆள் குறைப்பு நடந்துக்கிட்டு இருக்கு.
இதைச் சாக்கா வச்சுக்கிட்டு, நம்ம ஆளையும் சேர்த்துக்கிட்டா ஏர்லி ரிட்டயர்மெண்ட் ஆகிக்கலாமுன்னு பார்த்தா...... கம்பெனிக்குக் கட்டுப்படி ஆகாதாம்.

கடைசியாச் சேர்ந்தவர்களில் இருந்து ஆரம்பிச்சு இருக்காங்க.

ஆனா....ஆஸ்தராலியாவில் மட்டும் ரோடு வேலைகள் முழுவீச்சில் நடந்துக்கிட்டு இருக்கு. எங்கே பார்த்தாலும் புதுசா ரோடுகளும், மோட்டர்வேக்களும்......

(மூணு நாளைக்கு முன்னால் ஒரு சின்ன ட்ரிப் போயிட்டுவந்தேன்)

Anonymous said...

என்ன குமார். வந்தவுடனே சிக்கலா?

அந்த இடத்தின் பெயர் 'ஹோ அர் அல்ன்ஸ்' இல்லை. அது 'ஹோர் அல் அன்ஸ்' - பொருள்: ஆட்டுத்தொட்டி
அன்புடன் சுல்தான்

வடுவூர் குமார் said...

வாங்க சுல்தான் பாய்
"ஆட்டுத்தொட்டியா?இதுவரை யாரிடமும் கேட்கவில்லை,தகவலுக்கு நன்றி.
நேரிடையாக எனக்கு பிரச்சனையில்லை என்றாலும் வந்த 7 மாதத்திற்கு பிறகு 4 மாதம் வீட்டுக்கு போ! என்றால் கொடுமையாக இருக்காது?
திரும்ப வரமுடியுமா அல்லது அங்கேயே வேறு வேலைபார்க்கலாமா? என்ற பல கேள்விகள் அப்படியே தொங்கியபடியே நிற்கும்.

வடுவூர் குமார் said...

துளசி
வெறும் 3000 திராமில் வேலை செய்யும் பொறியாளர்கள் பெறும் எதிர்பார்ப்புடன் வந்து இங்கு இறங்கிய சில மாதங்களில் இப்படி ஒரு அடி என்பது கொடுமயாக இருக்கு பேச்சிலரை விட குடும்பஸ்தர்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது.
ஆஸ்திரேலியா போன முறை வந்த சுணக்கத்தின் போதும் அவ்வளவாக பாதிக்கபடவில்லை என்றே நினைக்கிறேன்.