Wednesday, April 22, 2009

Mall of Emirates

என்னுடன் வேலை பார்க்கும் பாக்கிஸ்தானி ஓட்டுனர் இதைப் பற்றி பிரமாதமாக சொன்னதால் இருக்கும் கொஞ்ச காலத்துக்குள் அதையும் போய் பார்த்துவிட்டு வரலாம் என்று முடிவெடுத்தேன்.இதே இடத்தில் தான் SKI Dubai என்று சொல்லப்படுகிற பனி சறுக்கு விளையாட்டு மைதானம் உள்ளது என்பது கூடுதல் தகவல்.

என்னிடம் தான் நினைத்தவுடன் போகக்கூடிய மகிழுந்து இல்லை என்பதால் ஓரிடம் செல்லவேண்டும் என்றால் பலரிடம் தகவல்கள் பெற்று பொதுப்பேருந்து இருக்கிறது என்று தகவல் இருந்தால் மட்டுமே செல்ல வேண்டிய கட்டாயம்.இங்கு செல்ல தடம் எண் 10 இருக்கிறது என்று பொதுபோக்கு வரத்து கழகத்தின் தகவல் அட்டை சொன்னாலும் நான் Al Quoz சென்று திரும்பிய போது எப்படி இவ்விடம் என் கண்ணில் படாமல் போனது என்று குழம்பியிருந்தேன்,அதையும் அந்த பாக்கிஸ்தானி ஓட்டுனரே நிறைவு செய்தார்.ஆதாவது தடம் எண் 10 Al Quaz சென்று திரும்பும் வழியைச்சொல்லி அதில் எத்தனையாவது நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்று சொன்னார்.அது அவ்வளவு திருப்தியாக பட்சத்தில் கூகிள் Earth மூலம் அவ்விடத்தை மனதில் நிறுத்திக்கொண்டேன்.

வீட்டுக்கு பக்கத்திலேயே அந்த 10ம் எண் பேருந்து வருகிறது.வெள்ளி மதிய உணவுக்கு பிறகு கூரையில்லாத Muragabath Police Station நிறுத்தத்தில் அடுத்த 10 நிமிடத்தில் அந்த பேருந்து கிடைத்தது.சுமார் 40 நிமிடத்தில் Al Quoz வந்துசேர்ந்தது.Al Quoz தொழிலாளர்கள் தங்கும் இடம் என்பதால் ஒவ்வொரு பேருந்துக்கும் பலர் அடித்துப்பிடித்து ஏற முயற்சிப்பார்கள் அது என் பேருந்திலும் நடந்தது.அங்கிருந்து கிளம்பி கொஞ்ச தூரம் வந்ததும் பேருந்துவில் இருந்தவரிடம் ஹிந்தியில் மால் ஆப் எமிரேட்க்கு எங்கு இறங்கனும் என்று கேட்ட போது நான் முழிப்பதை விட அவர் அதிகமாக முழித்தார்.நான் சரியான நிறுத்ததில் இறங்காவிட்டால் வெகு தூரத்தில் இருக்கும் அடுத்த நிறுத்ததில் இறங்கவேண்டி வரும் திரும்ப இந்த இடத்துக்கு வரவேண்டும் என்றால் தலையை சுற்றி மூக்கை தொடுவது போல் தொடவேண்டும்.இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று நினைத்து ஓட்டுனரிடமே கேட்டேன் “அடுத்த நிறுத்தம் தான் அது என்றார்”,கூடவே Public Announce Systemயில் சொன்னார்.

நிறுத்தத்தில் இறங்கியவுடன் ஒரு பிலிபினோகாரரிடம் இந்த கடைத்தொகுதி எங்கு இருக்கிறது என்று வினவினேன்.சாலையின் எதிர் திசையில் கையை காட்டி ஒரு பெரிய கட்டிடத்தை அடையாளம் சொல்லி அதனருகில் இருப்பதாக சொன்னார்.இந்த சாலை என்பது ஏதோ 2 சாரி மட்டும் இருக்கும் என்று கற்பனை பண்ணிவிடாதீர்கள்.ஒவ்வொரு பக்கமும் ஐந்து தடங்கள்.மகிழுந்துகளின் வேகம் 120 கி.மீட்டர்.மாட்டினா சதுர் தேங்காய் தான்.ஒரு நல்ல கடைத்தொகுதியை அடைய பாதசாரிகளுக்கு தகுந்த வழியில்லாதது அங்குள்ளவர்களின் வாழ்கை முறையை காண்பித்தது.அங்குள்ள வழிகள் ஒன்று கார் Parking ஐ நோக்கியோ அல்லது வாடகை மகிழுந்து வரும் வழியில் தான் இருக்கு.பாத சாரிகளுக்கு என்று பிரத்யோக வழி கிடையாது.

கடைதொகுதியை நோக்கி நடக்கும் போதே உலகத்தின் 7 ஸ்டார் தகுதியுடன் உள்ள ஹோட்டல் தூசி மூட்டத்தின் ஊடே தெரிந்தது.படத்தின் மீது சொடுக்கி பெரிது பண்ணி பார்க்கவும்.

இன்னும் அருமையான படங்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

4 comments:

 1. அந்த mall of emirates ஐ , கட்டும் பொழுது எப்படி அந்த பெரிய சறுக்கு மரம் போல் உள்ள, அந்த கூரையை எப்படி மேல் ஏற்றினார்கள் என்று, discovery chanell ல் , ஒரு படம் உண்டு , அதை நான் எமிரேட்ஸ் விமானத்தில் பார்த்ததுண்டு. அதில் ஒரு தமழர் தான் பெரிய lift ஆப்பரேட்டர். அந்த வேலையை தொடங்கும் முன்பு, தேங்காய் உடைத்து, ஊதுவத்தி கொள்ளுத்தி, கற்பூரம் காமித்து , பூஜைக்கு பிறகு தான் தொடங்குவார்கள். வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.

  ReplyDelete
 2. தகவலுக்கு நன்றி “அது ஒரு கனாக்காலம்”- தேடிப்பார்க்கிறேன்.

  ReplyDelete
 3. //ஸ்டார் தகுதியுடன் உள்ள ஹோட்டல் தூசி மூட்டத்தின் ஊடே தெரிந்தது//

  அங்கு தூசி அதிகமாக இருக்குமா? (மணல் பகுதி என்பதால்)

  //இன்னும் அருமையான படங்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்//

  படம் கொஞ்சம் அதிகமாக போடுங்க :-)

  ReplyDelete
 4. வாங்க கிரி,பல சமயங்களில் இந்த தூசிப் புயல் வரும், அம்மாதிரி சமயங்களில் பார்க்கும் தூரம் குறையும்.
  படம் தானே போடுகிறேன்,எழுதவதை விட அது எனக்கு சுலபம் தான்.

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?