Saturday, October 20, 2007

நவராத்திரி விழா- சிங்கப்பூர்

நேற்று காலை நம்ம KRS பதிவை படித்தவுடன் தான் சிங்கையில் இருக்கும் துர்கா வீணை வாசிக்கப்போது எனக்கு தெரிந்தது. அப்போது அவர் கூகிள் டாக்கில் இருந்ததால் எங்கு என்ற விபரம் கேட்டு தெரிந்துகொண்டு,அதன் பிறகு வரைப்படம் மூலம் எங்கிருந்து போனால்
சுலபமாக இருக்கும் என்று பார்த்து முடிவு செய்தேன்.

பேசிக்கொண்டிருக்கும் போதே டீச்சரிடம் இருந்து மெயில்.. அப்பா நண்பர்களே நம்மில் ஒருவர் வீணை வாசிக்கிறார் போய் புகைப்படம் எடுத்து போடுங்கள் என்று.என்னிடம் கேமிரா உள்ளது..ஆனால் விடியோ கேமிரா இல்லை. கோவியார் வந்தால் அவரை படம் எடுக்கச்சொல்லலாம் என்று நினைத்திருந்தேன்.திடிரென்று ஒரு யோஜனை அலுவலகத்தில் உள்ள வீடியோ கேமிரா தூங்கிக்கொண்டு தானே இருக்கிறது அதை எடுத்துப்போகலாம் என்று முடிவு செய்து அதன் மின்கலங்களை மின்னேற்றம் செய்து வைக்க ஆரம்பித்தேன்.

நான் வேலை செய்யும் இடத்தில் இருந்தே நேரடி பேருந்து சேவை இருந்தும் நிறைய கால அவகாசம் இருப்பதால் வீட்டுக்குப் போய் அங்கிருந்து ரயில்/பேருந்து வழி போகலாம் என்று வீட்டுக்குப் போய்விட்டேன்.இதற்கிடையில் கோவியார் கூப்பிட்டு அவரால் வரமுடியாததை சொன்னார்.

சுமார் 7.20 க்கு கிளம்பி உட்லேண்ட்ஸ் போய் தடம் 178 மூலம் போய் சேர்ந்தேன்.சாலையில் கார்கள் வரிசை பிடித்து நிற்கும் போதே தெரிந்தது இங்கு தான் ஏதோ நிகழ்ச்சி என்று.நுழைவாயிலில் போகும் போதே குழந்தைகள் அழகழகான ஆடைகளுடன் முன் வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள்.நேராக போய் சாமி கும்பிட்டுவிட்டு மேடை பக்கம் வரவும் நிகழ்ச்சி ஆரம்பித்தது.

முதல் படம்இரண்டுமூன்றாவதுநான்காவதுஐந்தாவதுஆறாவது (தலைச்சுட்டி) அம்மாக்களுக்கு செம வேலை இருந்திருக்கும்.எல்லாம் ஒவ்வொரு "பூ".ஏழாவதுஎட்டாவதுபல சமயம் 2 கேமிராக்களை வைத்து படம் எடுக்க முடியாததால் படங்கள் அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது.ஏதோ பார்த்து வையுங்கள்.

something is better nothing.

யோவ்! இதுல யாருயா துர்கா? அதைப்போடாமல் என்ன போட்டோ பதிவு எல்லாம்? என்று கேட்கிறீர்களா?

அவுங்க என்று நான் நினைத்திருக்கும் படங்களை அவருக்கு அனுப்பியுள்ளேன்.இஷ்டப்பட்டால் அவர் ஏற்றுவார்.

பின் குறிப்பு: குழந்தைகளை வரிசைகிரமமாக மேடைக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணி கேட்டார்... உங்கள் குழந்தை இங்கு பாடுகிறதா? என்று.அதற்கு நான்,எனக்கு தெரிந்தவர் ஒருவர் வீணை வாசிக்கிறார் அதை வீடியோ எடுக்க வந்துள்ளேன் என்றேன்.
என்னுடைய வீடியோவில் இருக்கும் LCD மூலம் என் பின்னால் இருந்து பார்த்துக்கொண்டிருப்பார் போலும்.

ஓரளவு துர்காவை அனுமானிக்க முடிந்தாலும்.பொது இடத்தில் பேச வேண்டாம் என்பதால் அவரை சந்திக்கவில்லை.அதனால் அவர் அப்பா/சகோதர்களை சந்திக்கும் வாய்ப்பையும் இழந்தேன்.

இன்னொரு வாய்ப்பு கிடைக்காமலா போகும்?

17 comments:

 1. கானா பிரபா7:48 AM

  படங்களுக்கும், சுடச்சுடச் செய்திக்கும் நன்றி,

  நம்ம தங்கை வீணை வாசிச்சாங்களா?
  லகலககலக்கியிருப்பாங்களே ;)

  ReplyDelete
 2. கலக்கிட்டாங்க கானா பிரபா.
  அவர் பதிவுக்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 3. குமார்,

  நிகழ்ச்சியை அழகாக எழுத்திலும் படம் பிடித்திருக்கிறீர்கள்,

  எனக்கு கொடுப்பினை இல்லை.

  அடுத்த முறை நிச்சயம் செல்லனும் !

  ReplyDelete
 4. இன்னொரு நிகழ்ச்சி இருக்கும் என்றே நினைக்கிறேன்.

  ReplyDelete
 5. Anonymous12:20 PM

  //நம்ம தங்கை வீணை வாசிச்சாங்களா?
  லகலககலக்கியிருப்பாங்களே ;)///

  lesa nervous aagi naan thana kalangi ponnen.hehe...

  ReplyDelete
 6. Anonymous12:23 PM

  //வடுவூர் குமார் said...
  கலக்கிட்டாங்க கானா பிரபா.
  அவர் பதிவுக்காக காத்திருக்கிறேன்.
  ///

  :) muthalil ungaluku thanks .Neega varuvinga nu ninaikala.vanthu paarthu escape aagitinga vera.videos,pictures nu naan ethirparkave illa.thanks anna.

  ReplyDelete
 7. Anonymous12:25 PM

  //கோவி.கண்ணன் said...
  குமார்,

  நிகழ்ச்சியை அழகாக எழுத்திலும் படம் பிடித்திருக்கிறீர்கள்,

  எனக்கு கொடுப்பினை இல்லை.

  அடுத்த முறை நிச்சயம் செல்லனும் !
  //

  no worries anna.enga music school la varusa varusam neeraiya performance irruku.Next time vantha I will update you all.

  ReplyDelete
 8. \\கானா பிரபா said...
  படங்களுக்கும், சுடச்சுடச் செய்திக்கும் நன்றி,

  நம்ம தங்கை வீணை வாசிச்சாங்களா?
  லகலககலக்கியிருப்பாங்களே ;)
  \\

  வேற வழியில்ல ரீப்பிட்டேய்....

  ReplyDelete
 9. கோபிநாத் & துர்கா
  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 10. //அவுங்க என்று நான் நினைத்திருக்கும் படங்களை அவருக்கு அனுப்பியுள்ளேன்//

  ஹிஹி...
  அவங்க-ன்னு நினைச்சி வேற யாரையும் படம் புடிக்கலையே!

  //நம்ம தங்கை வீணை வாசிச்சாங்களா?
  லகலககலக்கியிருப்பாங்களே ;)//

  லக லக லக லக..... :-))

  மிக்க நன்றி குமார் சார்!
  இங்கு இருந்து கொண்டு,சிங்கையில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தைத் தீர்த்து வைத்தீர்கள்!

  கலக்கிட்டீங்க ஜிஸ்டர்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. வருகைக்கு நன்றி KRS

  ReplyDelete
 12. சூப்பர்.. தங்கச்சி கலக்கிட்டா..

  அதை படம் பிடிச்ச அண்ணா வடுவூர் குமாருக்கும் ஒரு சபாஷ். :-)

  ReplyDelete
 13. வாங்க மை ஃபிரண்ட்
  நன்றி

  ReplyDelete
 14. Anonymous10:50 AM

  Hi Kumar,

  I could not see the photos. I think I visited the temple once when I lived in singapore. I lived in block 603 to Admirality station) for two years. Then I moved to Choa Chu Kang. I was looking for the photo to confirm that it is the same temple.
  From Durga's blog, I guess her college is close to the temple.

  Sorry I could not type it in Tamil, may be next time i will try to do it.

  Currently I live in New Delhi.

  Regads
  Arasu

  ReplyDelete
 15. Hi Mr Arasu
  Thanks for coming.
  Its actually a link to photobucket photos.
  I think photobucket temp. down hence I could not see the photos too.
  If time permits pl visit later.
  The temple is under renovation.Front side has two big statue. As light fell b4 I reached there,I could not take the front view of the temple.
  Pl see the videos in the recent blogs..may be u can figure it out.

  ReplyDelete
 16. :) நல்லா இருக்கு அண்ணாத்த...

  படங்கள், வீடியோ எல்லாம் ஏற்கனவே துர்கா ஆர்குட்ல பார்த்தேன்....

  ReplyDelete
 17. வாங்க சிவா,
  இங்க போட்டுட்டு அங்க கொடுத்தேன்.
  என் பதிவு பொது இடத்தில் தெரியாததால்,அவரிடம் கொடுத்தேன்.
  நன்றி

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?